Sunday, May 26, 2013

கடவுள் கவிதை...


கண்மூடிக்கிடக்கையில்
ஆழ்மன இருள்
ஒற்றைக் கீற்றொளி...
கடவுள் என்கிறார்கள்
ஞானிகள்
நானோ அதை
நான் என்கிறேன்
ஆக்ரோசமாக
தள்ளி விட்டு எழும்ப
என் உடம்பை அசைக்க
அந்த ஒளியே உதவுகிறது
இனியாவது
என்னை உதறி
ஒற்றையில் வாழலாமென
நினைக்காதேயென
கர்வமாய் முறைக்கிறது
அந்த ஒற்றைத் துளி ஒளி !
 
நிழல் உடைக்கும்
ஒரு கனவு
வான் துளைத்துப் பறக்கும்
சுந்தந்திர வெளியில்
ஒரு பறவை
சுட்டெரிக்கும் சூரியனால்
வெளிர்க்கும் பச்சையம்
பாரங்களைச் சுமக்கும்
வேர்கள்
வியர்த்துப் புழுங்க
மனிதம் மறந்த மனிதனுக்குள்
இரக்கம் வர
பிரத்தியேக
இயக்கமொன்று வேண்டி
எழுதிக் களைத்து
கிழித்துக்கொண்டிருக்கிறது
ஒரு கவிதை!

ஹேமா(சுவிஸ்)

11 comments:

  1. கடவுள் கவிதை சரியாகவே இருக்கிறது :)

    ReplyDelete
  2. எனக்கும் கடவுள் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு! ஆம் நமக்கு நாம் தான் கடவுள்!

    ReplyDelete
  3. ஆழமான அருமையான சிந்தனை
    சொல்லிச் சென்ற விதம்
    அதனினும் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மனம் சரியாக வசப்பட்டால் மனிதனுள்ளேதான் கடவுள் உறைகிறான் என்பது உண்மைதான். மிக அருமையான சிந்தனை!

    ReplyDelete
  5. ஒற்றையில் வாழலாமென
    நினைக்காதேயென
    கர்வமாய் முறைக்கிறது
    அந்த ஒற்றைத் துளி ஒளி !//மனம் மாறுங்கள் மணம் செய்யுங்கள் என்று உத்தரவு வந்துவிட்டதா?

    ReplyDelete
  6. கர்வமாய் முறைக்கிறது
    அந்த ஒற்றைத் துளி ஒளி !

    பிரகாசம் .மிக்கது ..!

    ReplyDelete
  7. பாரங்களைச் சுமக்கும்
    வேர்கள்
    வியர்த்துப் புழுங்க
    மனிதம் மறந்த மனிதனுக்குள்
    இரக்கம் வர
    பிரத்தியேக
    இயக்கமொன்று வேண்டி
    எழுதிக் களைத்து
    கிழித்துக்கொண்டிருக்கிறது
    ஒரு கவிதை!

    தொடரும் வரைத் தொடரட்டும் அந்நாள் விரைந்து வரும் கவிதையின் ஆளுமையைப் பொறுத்து .அருமையான சிந்தனைக் கவிதை வாழ்த்துக்கள்
    தோழி .இன்று என் வலையில் ஒரு பாடல் அரங்கேறியுள்ளது முடிந்தால் தங்கள் கருத்தினையும் எதிர்பார்கின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  8. ஹேமா நல்ல கவிதை
    நலமாக இருக்கிறீர்களா ?

    ReplyDelete
  9. //ஒற்றைத் துளி ஒளி//

    //நிழல் உடைக்கும்
    ஒரு கனவு//

    //பாரங்களைச் சுமக்கும்
    வேர்கள்//

    ஆகா...கடவுள் படைப்பு அழகு.

    ReplyDelete