மொட்டுவிட்ட பூவுக்கு
நீறூற்றுதல்
உமக்கு வாழ்வியலானால்
எனக்கென்ன.
வியாபாரப் பொருளென்று
பேரம்பேச அரிதாரமிட்டு
இனி இவள்
காதல்வசப்படுவாளென்றும்
அறிவித்து
இன்னும் புதிது புதிதாய்
ஏதேதோ.
பருவத்தால்
உடல் மாற
மதத்தால்
மலர் அர்ச்சனையால்
உருமாற்றி
கடவுளின் காவல்காரர்கள்
வரலாற்று எழுத்தாளர்கள்
கலை வளர்ப்பாளர்கள்
கையில் என்னை
கற்பழிக்கக் கொடுக்க
புன்முறுவலோடு
இத்தனை
பூச்செண்டுகள் தந்தா
உங்கள் புனிதம் காப்பீர்.
என்னவோ....அது
இருந்துவிட்டுப் போகட்டுமே
எனக்கென்ன...
தொப்புள்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை
தீட்டாக இருக்கலாம்.
என்னையும்
தீட்டென்று ஒதுக்கி
துர்நாற்றக் கண்ணீரை
என் குழந்தைப் பருவமுடைத்து
ஏன் நிரப்புகிறீர்.
உமக்கென்ற சடங்குகள்
இருந்துவிட்டுப்
போகட்டுமே எனக்கென்ன...
பழமைவாதமும்
பாட்டி சொன்ன வடைக்கதையும்
புனிதமென்றால்
என் இன்றைய தெளிவும்
தேவையற்ற சம்பிரதாயச்
சடங்குகளும்
எனக்கு என்னோடு.
என் பறப்புகளுக்கு
இரு சிறகுகள் போதாதென்று
தவமிருக்கப்போகிறேன்
மண்ணுருண்டை
உடைத்து வரும்
சிற்றீசலுக்காக.
எனக்கான ஆசைகள்
கனவுகள்
சிறகு கொண்டு வரும்
ஈசலோடு
இருந்துவிட்டுப் போகிறேனே
உங்களுக்கென்ன!!!
ஹேமா(சுவிஸ்)
தெளிவான (சாட்டையடி) சிந்தனைகள்...
ReplyDeleteசாட்டை அடி வரிகள்!திருந்த இடம் எதுவும்!இல்லையே,என்ன செய்ய?
ReplyDeleteஎனக்கான ஆசைகள்
ReplyDeleteகனவுகள்
சிறகு கொண்டு வரும்
ஈசலோடு
இருந்துவிட்டுப் போகிறேனே
உங்களுக்கென்ன!!!//அப்படியே செய்யுங்கள்
எனக்கான ஆசைகள்
ReplyDeleteகனவுகள்
சிறகு கொண்டு வரும்
ஈசலோடு
இருந்துவிட்டுப் போகிறேனே
உங்களுக்கென்ன!!!
மிக மிக அருமை
புரியவேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும்
புரிய வேண்டும்
மனம் கவர்ந்த பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteயதார்த்தங்களுடாக பயணிக்கும் அழகியல் மிக அதிகமாக தாக்குகிறது மனதை.இது கவிதைக்கான வெற்றி.வாழ்த்துக்கள் அக்கா
ReplyDeleteஹப்பா! எத்தனை அழுத்தமாக கருத்தை வலியுறுத்துகிறது கவிதை- ரசனை மிகு வரிகளினூடாக! அசத்தறீஙக ஃப்ரெண்ட்!
ReplyDeleteஎன் பறப்புகளுக்கு
ReplyDeleteஇரு சிறகுகள் போதாதென்று
தவமிருக்கப்போகிறேன்
தவமாய் தவமிருந்து ஒரு கவிதை ..!
//இனி இவள்
ReplyDeleteகாதல்வசப்படுவாளென்றும்
அறிவித்து//
பெண்ணை விளம்பரப்படுத்த நினைக்கும் தமிழ் சமூகத்தின் அற்ப மனநிலையை உக்கிர கோபத்துடன் எதிர்க்கும் வரிகள். பாராட்டுக்கள். பெண்ணைப் போகப் பொருளாய் பார்க்கத் தூண்டுகிற செயற்பாடு இந்த ஆர்பாட்டத் திருவிழாவுடன் தான் ஆரம்பித்து வைக்கப் படுகிறது. பெற்றோர்களும்,சொந்தங்களுமே இதை நடத்தி வைப்பது தான் வேதனைக்குரிய வலி. அந்த தேவையற்ற சடங்கை எதிர்க்கும் பெண்ணின் குரல் அழகானது.
தெளிவான சாட்டையடி...
ReplyDeleteஅழகா சொல்லியிருக்கீங்க ஹேமா.
உமக்கென்ற சடங்குகள்
ReplyDeleteஇருந்துவிட்டுப்
போகட்டுமே எனக்கென்ன...
இப்படி சொல்லியே ஆதங்கத்தை வெளிபடுத்திக்கொள்கிறோம் உணவோர் யாரோ?
அன்பின் ஹேமா,
ReplyDeleteஉள்ளக் குமுறலும் கச்சித்தமாய் கவிபாடிவிட்டது! வாழ்த்துக்கள் தோழி.. ஒவ்வொரு பெண்ணின் உள்மனக் குமுறல்தானே இது..
அன்புடன்
பவள சங்கரி
.
ReplyDeleteஉமக்கென்ற சடங்குகள்
இருந்துவிட்டுப்
போகட்டுமே எனக்கென்ன..//
அதே அதே நமக்கென்ன..?
நல்ல கவிதை
ReplyDelete