Thursday, May 30, 2013

காதல் துளிகள் (7)


உன்
கூண்டுக்குள்
பிடிபட்ட
கிளிதான் நான்.
நீ.....
கிள்ளியெறியும்
நான்கு
நெல்மணிக்காகவா
சீட்டுக்களை
இழுத்துப்
போட்டுக்கொண்டிருக்கிறேன்
புரியாதவனே !


சபிக்கப்பட்ட
நாளொன்றில்
கெடு வைக்கிறான்
கொல்லவா இல்லை
கொள்ளவா
கொசுவை விட
மோசமானவன் !


பாடிக்கொண்டேயிருக்கிறேன்
யாரும்
கேட்கமாட்டார்களெனத்
தெரிந்தும்
அநாதரவற்ற
குளக்கரையோரத்தில்.....
குயிலெனச் சொன்னவன்
இப்போதெல்லாம்
கோட்டான்
என்கிறான் !


காப்பி குடிக்கிறாயா
என்று கேட்டால்
பார்சலில் அனுப்படி
என்கிறான்
நகைச்சுவைதான்
இருந்தும்
அவன் பாஷை
புரியவில்லை இன்னும் !


கனவுகள்
பலித்துக்கொண்டிருப்பதாய்
பறக்கிறான்
கனவுகளுக்கு
கால் முளைக்க
வைத்துக்கொண்டிருக்கிறேன்
நான் என்பதை அறியாதவன் !


பனிபூத்த நாளொன்றில்
நடந்த தடங்கள்
தெளிவாக
அள்ளியெடுக்க
கைச்சூடு தாங்காமல்
உருகி வழிகிறான்
திருடன்.....
இன்னும் ஊடலில்தானோ !


ஒற்றை விநாடிக்குள்
கொள்ளை போக
முடிகிறது
அன்பின்
முடிச்சுகளுக்குள்
மட்டுமே
இங்கே ஒருவன்
கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்க
என்னையே !


கொஞ்சம் கோபமா
இல்லை நானயறியாத
ஊடலா
பேச வரமறுக்கும்
என்...
மௌனங்களை மொழிபெயர்த்து
தன்...
கவிதைகளாக்கியிருப்பான்
இந்நேரம்
நாளை பிரசுரமாகுமது !

ஹேமா(சுவிஸ்)

9 comments:


  1. இங்கே ஒருவன்
    கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
    நான் பார்த்துக்கொண்டிருக்க
    என்னையே !//

    மனம் கவர்ந்த அருமையான வரிகள்
    காதலில் மட்டும்தானே இது சாத்தியம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //இங்கே ஒருவன்
    கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
    நான் பார்த்துக்கொண்டிருக்க
    என்னையே !//
    காதல் கிளிகளின் துளிகள் அழகு.

    ReplyDelete
  3. காப்பி குடிக்கிறாயா
    என்று கேட்டால்
    பார்சலில் அனுப்படி
    என்கிறான் /////

    சின்ன சின்ன துளிகள் பேச்சு வழக்குச் சொற்களையும் சேர்த்து....
    அழகு

    ReplyDelete
  4. காதல வித்தியாசமான பாணியில் சொல்வது உங்களுக்கு கைவைந்த கலை. அத்தனை வரிகளும் கவர்ந்தன

    ReplyDelete
  5. பாடிக்கொண்டேயிருக்கிறேன்
    யாரும்
    கேட்கமாட்டார்களெனத்
    தெரிந்தும்

    சோக கீதமோ ..!!

    ReplyDelete
  6. துண்டு துண்டு கவிதைகள்-காதல்
    தூண்டில் ஆன கவிதைகள்
    கொண்டு வந்த பதிவிது- இன்பம்
    கொண்டு தந்த மதுவிது
    கண்டு மகிழும் உள்ளமே - உணர்வு
    கரை கடந்த வெள்ளமே
    உண்டு களிக்க பலருமே-வலையில்
    உலவ பொழுதும் புலருமே!

    ReplyDelete
  7. காப்பி குடிக்கிறாயா
    என்று கேட்டால்
    பார்சலில் அனுப்படி
    என்கிறான்
    நகைச்சுவைதான்
    இருந்தும்
    அவன் பாஷை
    புரியவில்லை இன்னும் !

    காதல் என்றாலே புரியாத பாஷை தானே!!!

    அனைத்தும் அழகா சொல்லியிருக்கீங்க ஹேமா...

    ReplyDelete