கால் நனைகிறதாம்
ஒரு ஓரமாய் ஊரும்
எறும்பின் கவலை.
தவளையின் மகிழ்ச்சி.
தேனீக்கு
தன் சிறகு நனைவதாய்
குற்றச்சாட்டு.
அப்பா கை விட்டோடும்
குழந்தைக்கு
சேற்று நடனம்.
கோடைகாலக் கூடு
கட்டிமுடியாக் கெடு
பறவைகளுக்கு.
மரமுதிர்ந்த
சருகுக்கோ பாதத்திலேயே
பசளையாகும் வரம்.
தெருப்பாடகனுக்கு
நாளைய கேள்வி.
மரத்துளிர்களுக்கு
குளிர்ச்சி.
தெருவிளக்கின் கோபம்.
பனி நனைத்த புல்லுக்கோ
பட்டுத் தெறிக்கும்
மழைத்துளி வலி.
கால்வரை
வழியும் மழைநீரில்
காதலின் இடப்பெயர்வு.
நேயர் விருப்பத்தில்
எனக்கான மழைப்பாடல்.
நிகழ்ச்சி ஒன்றாய்
கோணங்கள் பலவாய்!!!
ஹேமா(சுவிஸ்)
ஒரு ஓரமாய் ஊரும்
எறும்பின் கவலை.
தவளையின் மகிழ்ச்சி.
தேனீக்கு
தன் சிறகு நனைவதாய்
குற்றச்சாட்டு.
அப்பா கை விட்டோடும்
குழந்தைக்கு
சேற்று நடனம்.
கோடைகாலக் கூடு
கட்டிமுடியாக் கெடு
பறவைகளுக்கு.
மரமுதிர்ந்த
சருகுக்கோ பாதத்திலேயே
பசளையாகும் வரம்.
தெருப்பாடகனுக்கு
நாளைய கேள்வி.
மரத்துளிர்களுக்கு
குளிர்ச்சி.
தெருவிளக்கின் கோபம்.
பனி நனைத்த புல்லுக்கோ
பட்டுத் தெறிக்கும்
மழைத்துளி வலி.
கால்வரை
வழியும் மழைநீரில்
காதலின் இடப்பெயர்வு.
நேயர் விருப்பத்தில்
எனக்கான மழைப்பாடல்.
நிகழ்ச்சி ஒன்றாய்
கோணங்கள் பலவாய்!!!
ஹேமா(சுவிஸ்)
மரத்துளிர்களுக்கு
ReplyDeleteகுளிர்ச்சி.
பல கோணங்களில் அடைமழையைப் படம் பிடித்து
அருமையான கவிதை மழையைத்தந்தமைக்குப் பாராட்டுக்கள்..
“தேனீக்கு / தன் சிறகு நனைவதாய் / குற்றச்சாட்டு” – மழையை எப்படியெல்லாம் காட்சிப்படுத்துகிறீர்கள்!
ReplyDeleteமழையைப் பற்றி எப்படியெல்லாம் யோசித்திருக்கிறீர்கள். (Y)
ReplyDeleteகப்பல்களாய் மிதக்கும் காகிதங்கள்
கரைசேர்வதட்காய் காத்திருக்க
சின்னப் பிஞ்சுகளோ மகிழ்ச்சியில்
சிறகட்டித்து சிரிக்க
அருகிலிருக்கும் கூலியாள் வீட்டு
அடுப்படியில் பூனை சோம்பல் முறிக்க
மழையின் அழகில் லயித்து
மழலையாய் மாறுகின்றேன் யானும்
அழகான சிந்தனை ரசிக்க வைத்தது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மழையும் மழைக்காலப்பாடலும் ரசனைக்குரியதே!
ReplyDeleteஹேமா...கோணங்கள் பலவற்றையும் ரசிக்கும் தங்கள் மனது கிரேட்...
ReplyDeleteஅழகிய மழைக்காலம் கவிதையாக.
ReplyDeleteஆஹா... மழை!!
ReplyDeleteஅவரவர் கவலைக்கு ஆறுதலா? இல்லை அவஸ்தையா? ஆனாலும் மழையே நன்றி
ReplyDeleteகுளிர்ச்சியான கவிதை வெயிலுக்கு இதமாய்!
ReplyDelete