முந்தியேதும் அனுபவிக்காத
உச்சவலி
பச்சைப்புண் நடுவில்
உச்சி மயிரிலிழுத்து
விளையாட்டு யாரோ
என்னோடு.
பதறிய கண்ணோடு
அம்மா...
வேம்படி வைரவர்
வீபூதி
நிறைச்சுப் பூசி
தலை தடவி
"ஒண்டுமில்லையம்மா
கொஞ்சம் பொறுத்துக்கொள்...."
இப்போது
அதிகமாய்
வலிக்கிறது மனதில்
அம்மா...அம்மா!!!
ஹேமா(சுவிஸ்)
அன்னையர்களை வணங்குவோம்.அப்பாக்களையும் மறக்காமல்....!
உச்சவலி
பச்சைப்புண் நடுவில்
உச்சி மயிரிலிழுத்து
விளையாட்டு யாரோ
என்னோடு.
பதறிய கண்ணோடு
அம்மா...
வேம்படி வைரவர்
வீபூதி
நிறைச்சுப் பூசி
தலை தடவி
"ஒண்டுமில்லையம்மா
கொஞ்சம் பொறுத்துக்கொள்...."
இப்போது
அதிகமாய்
வலிக்கிறது மனதில்
அம்மா...அம்மா!!!
ஹேமா(சுவிஸ்)
அன்னையர்களை வணங்குவோம்.அப்பாக்களையும் மறக்காமல்....!
வலிக்கிறது மனதில்
ReplyDeleteஅம்மா...அம்மா!!!
அப்பாக்களை மறந்தாலும் அம்மாக்களை வணங்குவோம்.
ReplyDeleteவலி உடலில் மட்டுமிலை அத்தருணம்.மனதிலும்தான்.
ReplyDeleteஇனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteHappy Mothers day!
ReplyDeleteஅம்மாவிடம் வலியை சொன்னதும் அது காணாமல் போயிருக்குமே.உண்மைதான் அவள்தான் குடும்பச் சுமைதாங்கி அனைவரையும் காக்கும் இடிதாங்கி
ReplyDelete'அப்பாக்களையும் மறக்காமல்' - அதானே!
ReplyDeleteஅன்னையர்களை வணங்குவோம் அப்பாக்களையும் மறக்காமல்//
ReplyDeleteகண்டிப்பு என்ற திரையால் அன்பை மறைப்பதால் அப்பாவின் அன்பை பலர் உணர்வதில்லை
ReplyDelete//அப்பாக்களை மறந்தாலும் அம்மாக்களை வணங்குவோம்.//
வோம்...வோம்....
ஆனா
பசங்க வேணா அப்பாவை மறக்கலாம்.
ஆனா பொண்ணுங்க அப்பாவை மறக்கவே மறக்காது.
எந்த அப்பாவுக்குமே பொண்ணுங்க தான் செல்லம்.
அப்பாவை மறக்கற துரைக்கெலாம் மரக்காது.
அதுனாலெ அப்பா சொல்றதெல்லாம் கேட்காது.
அப்பாகிட்டே காசு இல்லாட்டி மதிக்காது.
அதெல்லாம் கிடக்கட்டும்.
இன்னிக்கு அன்னையர் தினம்.
அம்மாவுக்கு ஜே.
அம்மா அகிலத்தின் அம்மா ஆவது எப்படி ?
இங்கு வாருங்கள்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
அம்மா அம்மாதான் பாக்கி எல்லாமே சும்மாதான், நினைவுகளின் வலிகள் வலி நிறைந்தது இல்லையா...!
ReplyDeleteஅம்மா தவிக்க விட்டு சென்றவள்...என்றாலும் இனிக்கும் அவள் நினைவும்.
ReplyDeleteஅம்மாக்களை வணங்குவோம்.
ReplyDelete