சிதைந்து கிடக்குமென்னை
நிலவின்
ஒருப்பக்க நிழலின்
துணையோடு
புனரமைக்க நினைக்கிறான்
கவிதைகளை
மொழி பெயர்ப்பவன்.
நிலவுக் குழந்தையையும்
நிர்வாணக் கோடுகளையும்
இம்சிக்கிறது
அவன் வாதங்களும்
பிடிவாதங்களும்.
சுகமும் வலியும்
ஒருசேரத் தரும்
புணர்தலை ஒத்ததாய்
சலனமற்ற வலிகள்
அவன் மொழி.
விதவையாகிவிட்ட மனதை
மறுதலித்து
மீண்டும்
சமப்படுத்துவதாய்
தோள்தொட்ட
பூத்தூவல்.
யாசிக்கும்
அவன் மொழிகளை
புரிந்துகொள்வேனோவென
உற்று நோக்கிக்கொண்டிருக்கும்
காலம்....
உச்சிமலையில்
பால்வடியும்
எருக்கமலர்களை
சேமித்துக் கோர்க்க
எச்சமிட்டுப் பறக்கிறது
ஊர்க்குருவியொன்று!!!
ஹேமா(சுவிஸ்)
வணக்கம் ஹேமா! எனக்கு நட்பு கோரிக்கை அனுப்ப ஒப்பந்தமா? இது தமிழ் காதலன் (Lakshmi Sankaran) :)
ReplyDeleteஅருமையாக முடித்துள்ளீர்கள்...
ReplyDeleteஊர்க்குருயிவின் மொழிபெயர்ப்பு அருமை.
ReplyDeleteகவிதை அழகா இருக்கு ஹேமா. அருமையா முடிச்சிருக்கீங்க!
ReplyDelete