நாற்பக்கக் கரும்பும்
நெய்யோடு பொங்கலும்
நாக்கோடு இனித்து நிற்க
பொங்கலோ பொங்கலென
பாடிய குரல்களும்
நினைவோடு
நெஞ்சில் நிறைய
இன்றைய பொங்கல்
விசும்புகிறது
ஏக்கங்களை நிரப்பிக்கொண்டு.
ஏமாற்றம் தாளாத
விடிகாலைச் சூரியனும்
தீயென
கண் சிவந்து
சுட்டெரிக்க
பூமிமேல்
நீர் கோர்க்கிறது மேகம்
சமாதானமாய்
பொங்கலோ பொங்கலென.
பானைகளும்
மண் அடுப்புக்களும்
முற்றங்களும்
காத்தே இருக்கும்
பொங்கலுக்காய்.
நிலாவுக்கு....
முற்றமும் கோலமும்
கரும்பும்
மண் அடுப்பும்
பொங்கலும்
இதுதானெனக் கீறிக்
காட்டிக்கொண்டிருக்கிறேன் நான்.
இன்னொருமுறை
சூரியப்பொங்கலை
யாரவது தந்து செல்லட்டும்
வாழ்நாளில்
சுவை மாறாமல்!!!
ஹேமா(சுவிஸ்)
நெய்யோடு பொங்கலும்
நாக்கோடு இனித்து நிற்க
பொங்கலோ பொங்கலென
பாடிய குரல்களும்
நினைவோடு
நெஞ்சில் நிறைய
இன்றைய பொங்கல்
விசும்புகிறது
ஏக்கங்களை நிரப்பிக்கொண்டு.
ஏமாற்றம் தாளாத
விடிகாலைச் சூரியனும்
தீயென
கண் சிவந்து
சுட்டெரிக்க
பூமிமேல்
நீர் கோர்க்கிறது மேகம்
சமாதானமாய்
பொங்கலோ பொங்கலென.
பானைகளும்
மண் அடுப்புக்களும்
முற்றங்களும்
காத்தே இருக்கும்
பொங்கலுக்காய்.
நிலாவுக்கு....
முற்றமும் கோலமும்
கரும்பும்
மண் அடுப்பும்
பொங்கலும்
இதுதானெனக் கீறிக்
காட்டிக்கொண்டிருக்கிறேன் நான்.
இன்னொருமுறை
சூரியப்பொங்கலை
யாரவது தந்து செல்லட்டும்
வாழ்நாளில்
சுவை மாறாமல்!!!
ஹேமா(சுவிஸ்)
அன்புள்ளங்கள் எல்லோருக்கும் என் தமிழர் திருநாள் வாழ்த்துகள் !
இங்கே நாங்கள் சந்தோஷப் பொங்கல் கொண்டாடும் அதே தருணத்தில் நிலாவிற்காய் பொங்கலை கீறிக் காட்டிக் கொண்டிருக்கும் உங்கள் போன்ற பலரின் நிலையை எண்ணினால் மெலிதான குற்ற உணர்வும் எழுகிறது ஃப்ரெண்ட். இன்னொரு சூரியப் பொங்கல் சந்தோஷம் மாறாமல் உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் கிடைக்க என் மனம் நிறைய வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅன்பு வாழ்த்துகள் ப்ரெண்ட்.ம்ம்....இப்பிடித்தான் இப்ப என் மனநிலை.....வாழ்த்துகள்.நல்லதே நடக்கும் நம்புவோம் !
ReplyDelete//பானைகளும்
ReplyDeleteமண் அடுப்புக்களும்
முற்றங்களும்
காத்தே இருக்கும்
பொங்கலுக்காய்.// விச்சுவும் காத்துக்கொண்டுதான் ... பொங்கலுக்காய்... பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா. உங்களுக்கும் சேர்த்து நான் கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன்...
ReplyDeleteவணக்கம்!
ஏக்கப் பொங்கல் சமைத்தனையே!
என்றன் கண்கள் அழுதனவே!
தாக்கும் கொடிய தடையுடைத்து
தமிழைத் தாங்கி உயா்ந்திடுவோம்!
ஊக்கப் பொங்கல்! தமிழ்ஒன்றே!
உண்மைப் பொங்கல் தமிழ்ஈழம்!
போக்கும் பொங்கல் போகியிலே
போடு துன்பம் எரியட்டும்!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
நன்றி விச்சு.சர்க்கரைப்பொங்கல் அனுப்பிவிடுங்கோ !
ReplyDeleteநன்றி ஐயா....ஏக்கங்கள்தான் நம்பிக்கையோடு துணை நிற்க வாழ்வு நகர்கிறது !
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமிழ் பேசும் இடமெல்லாம் இன்று
பொங்கல் திரு நாளாம்.
உங்களுக்கு என்று ஒரு நாளாம்
ஒரு நாள் வருமென்று
பொங்கலன்று ஆதவனைத்
துதிப்போம்.
வாழ்க தமிழ் உணர்வு.
வாழ்க தமிழ் இனம்.
வாழ்க தமிழ் மொழி.
சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.com
உங்களுக்காக்த்தான் நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் பொங்கலை...
ReplyDeleteவீரிய விதை எடுத்து
ReplyDeleteவீதி எல்லாம் விதைத்திடுவோம்...
விதையினின்று புறப்படும்
விருட்சத்தின் கிளைகளில்
வீடொன்று கட்டிடுவோம்
இனியும்
வீழாதிருக்க
வாழ்வாங்கு வாழ்ந்திடும்
வான்புகழ் வெய்யோனை
வாயார புகழ்ந்திடுவோம்....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...சகோதரி....
இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெருக மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு மலர வாழ்த்துகின்றேன் .
ReplyDeleteஏக்கப் பொங்கல்! சரியான தலைப்பு! இன்றைய தமிழகத்தின் நிலையே இதுதான்! கவிதையில் சோகம் பொங்கி வழிகிறது
ReplyDeleteஇனிய புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
நீங்கள் விரும்பும் அந்த இனிய பொங்கல் திருநாள் விரைவில் உங்களை வந்தடைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஹேமா.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅன்புடன்
நாடிகவிதைகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteபொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புதோழி ஹேமா...
ReplyDeleteபொங்க வேண்டு நாங்களும்
எங்களுக்கென்ற நாடதில்
எங்கும் மகிழ்வு நிறைந்திடும்
தங்கத் தமிழும் வாழ்ந்திடும்!!!
அருமையான கவிதை..எங்கள் ஏக்கங்கள் தீரும் நாள் வரும்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்!
ஹேமா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்மா.
ReplyDeleteதாக்கிய நினைவுகளின் ஏக்கப் பொங்கலை அருமையாக எழுத்துகளில் வடித்து எங்களையும் உணர வைத்துள்ளீர்கள். கணேஷ் சொன்னதுதான் எனக்கும் தோன்றியது. பொங்கும் மகிழ்ச்சியுடன் சந்தோஷப் பொங்கல்கள் இனி வரும் காலத்தில் நிறையட்டும். வாழ்த்துகள் ஹேமா உங்களுக்கும், நிலாவுக்கும்.
ReplyDeleteவருடா வருடம் பொங்கல்வரும்
ReplyDeleteவரும் வருடம் உன்ஏக்கம் தீர்ந்துவிடும்
நம்பிக்கை தான் வாழ்க்கை!
நம்புவோம் நாமும் நலமாய்
பொங்கலிடுவோம் என்று...
வாழ்த்துக்கள் ஹேமா.
ஹேமா!பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்றைய பொங்கல்
ReplyDeleteவிசும்புகிறது
ஏக்கங்களை நிரப்பிக்கொண்டு.
வாழ்நாளில்
சுவை மாறாமல்!!!
மீண்டும் இனிய பொங்கல் மலரட்டும் ..
புதிய பதிவான 'விட்டுப் போன புத்தன் பதிவில் கமெண்ட் செய்ய முடியவில்லையே...ஏனோ? அந்தப் பதிவின் கடைசி வரி மிகக் கவர்ந்தது.
ReplyDelete