Tuesday, January 15, 2013

விட்டுப்போன புத்தன்...

அழுவதால்
நீயோ
இல்லை
நானோ
தீட்டாகி விமாட்டோம்.

தமிழனின்
இரத்தமும் கண்ணீரும்
நனைத்த புத்தன்கூட
இன்னும்
போதி மரத்தடியில்தான்.

இலங்கையில்
இருக்கும் புத்தன்
போலியாம்
அது வேறு கதை.

தலைகள்
சிதறும் தருணத்தில்
காணாமல் போன
புத்தன் போல
நீ இப்போ.

வெள்ளரசு மரத்தடியில்
காணாமல் போன
தமிழன் வாழ்வு
தொடர்கிறது
மரணத்தோடு
அவர்களோ
சதுரங்க விளையாட்டில்.

நான்
மண்ணோடு அல்ல
மரணித்த பின்னும்
வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன்
புத்தனைப்போல.

ஆசை பட்ட பின்னல்ல
ஆசைப்பட்டபின் தானே
சித்தார்த்தனும்
புத்தனானான்!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. //தலைகள்
    சிதறும் தருணத்தில்
    காணாமல் போன
    புத்தன் போல
    நீ இப்போ// புத்தன் காணாமல் போனாலும் நம்மிடையேதான்.

    ReplyDelete
  2. //வெள்ளரசு மரத்தடியில் காணாமல் போன
    தமிழன் வாழ்வு தொடர்கிறது மரணத்தோடு//

    உண்மையிலும் உண்மை ஹேமா...வலி சுமந்த வாழ்வு தமிழனுக்கு..வரமா..சாபமா...

    ReplyDelete
  3. vali konda valikal sako...

    ReplyDelete
  4. மரணித்த பின்னும்
    வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன்

    ஆமாம் ஹேமா....
    ஆசைகள் மரணித்து விட்டு
    மனித மரமாகத் தான் வாழுகிறோம்...

    (நேற்று உங்கள் கருத்துப்பெட்டித் திறக்கவில்லை)

    ReplyDelete