விசும்பும் ஒற்றை ஒலி
அடுத்த அறையில்
சீரிய வரிசைக் கதிரைகள்
சிரிக்கக் கதைக்கச் சாப்பிட
குழந்தைகள் எவருமில்லை
அந்தத் தெரு
எப்போதும் போலத்தான்
கீழிருட்டில்
சிலரது அதிசய வருகைகள்
உலகம்
நீல நிறமாக மாறியிருந்தது
என்னைத் தேடும் இரவு நட்சத்திரம்
இன்னும் யன்னலில் இல்லை
சின்னக்கால நினைவுகள்
திரைவிலக்கும்
கருப்பு வெள்ளைப்படமாய்
உலகம் தொலைத்த
அமைதி எனக்குள்
வெம்மை குழைத்த
செந்நிற வண்ணமானாய் நான்
காதலை மறக்கவும் பிரார்த்தனை
காற்று மீட்டும்
தந்திக்கம்பிகளாய் மழைத்துளி
"செய்திகள் வாசிப்பது..."
அடித் தொண்டையில்
அதே அறிவிப்பாளர்
வானொலியிலும்
பூக்களின் சில
சிதறல்கள் என்னைச்சுற்றி
நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!!
ஹேமா(சுவிஸ்)
அடுத்த அறையில்
சீரிய வரிசைக் கதிரைகள்
சிரிக்கக் கதைக்கச் சாப்பிட
குழந்தைகள் எவருமில்லை
அந்தத் தெரு
எப்போதும் போலத்தான்
கீழிருட்டில்
சிலரது அதிசய வருகைகள்
உலகம்
நீல நிறமாக மாறியிருந்தது
என்னைத் தேடும் இரவு நட்சத்திரம்
இன்னும் யன்னலில் இல்லை
சின்னக்கால நினைவுகள்
திரைவிலக்கும்
கருப்பு வெள்ளைப்படமாய்
உலகம் தொலைத்த
அமைதி எனக்குள்
வெம்மை குழைத்த
செந்நிற வண்ணமானாய் நான்
காதலை மறக்கவும் பிரார்த்தனை
காற்று மீட்டும்
தந்திக்கம்பிகளாய் மழைத்துளி
"செய்திகள் வாசிப்பது..."
அடித் தொண்டையில்
அதே அறிவிப்பாளர்
வானொலியிலும்
பூக்களின் சில
சிதறல்கள் என்னைச்சுற்றி
நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!!
ஹேமா(சுவிஸ்)
நானோ...
ReplyDeleteஎன் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
/நீல நிறமாக மாறியிருந்தது
ReplyDeleteஎன்னைத் தேடும் இரவு நட்சத்திரம்
இன்னும் யன்னலில் இல்லை
சின்னக்கால நினைவுகள்
திரைவிலக்கும்
கருப்பு வெள்ளைப்படமாய்
உலகம் தொலைத்த
அமைதி எனக்குள்
வெம்மை குழைத்த
செந்நிற வண்ணமானாய் நான்/
அருமை..
நானோ...
ReplyDeleteஎன் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!! //
உங்கள் மூச்சு உங்களிடமே.
உயிரும் திரும்பிப் பார்க்கிறது
உடையவளே அகுகில் வா!
உரிமையை எனக்குத் தா!
என்னோடு இணைத்துவிடு
என்னுயிரை தந்துவிடு
என்று ?
மூச்சைத் தேடும் உங்கள் கவி அருமை...இப்படித்தான் சிலநேரங்களில் எம்மிடம் இருப்பதை நாமே அறிந்திட முடியாமல் தேடும் நிலை...
ReplyDeleteஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி...:)
சகோதரர் கவியாழி கண்ணதாசனின் கருத்துக் கவியும் அபாரம்...ரசித்தேன்.
வாழ்த்துக்கள்...சகோதரர்களே...:)
ReplyDeleteநின்று போன மூச்சைத் தேட வைக்கும் கவிதை அருமை.
சூப்பர் ஹேமா... மூச்சு = காதல..:)?... ஹா..ஹா..ஹா... யாமிருக்கப் பயமேன்...:).
ReplyDeleteஅந்தப் படம் என்னமோ செய்யுது ஹேமா... ஏன் அப்படி ஒரு படம் போட்டீங்க... வழமைபோல கவிதை... பின்னி, பெடல் எடுத்திட்டீங்க.
மூச்சுக்காற்றாய் அருமையாக பகிர்வு..
ReplyDeleteஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
அசத்தல்!
ReplyDeleteசர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்!
நானோ...
ReplyDeleteஎன் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!! // நானும்...
காற்று மீட்டும்
ReplyDeleteதந்திக்கம்பிகளாய் மழைத்துளி...
அடடா... என்ன அருமையான கற்பனை!!
சூப்பர் கவிதை.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா.
GREAT IN TAMIL.
ReplyDeleteMY DEAR MAY GOD GIVE YOU A LONG LIFE FOR TAMIL
அடடா
ReplyDeleteசூப்பர் கவிதை.