மூட்டைப்பூச்சியின்
இருப்பிடமென
ஒதுக்கப்பட்டிருந்தாலும்
கண்களுக்குள்
அலார மிரட்டலோடு
பழைய கதிரையொன்று.
சுருங்கிய முக ரேகைக்குள்
நேர்மை நிரம்பிய புன்னகை
அனுபவங்கள் அழுத்திய ஆட்சி
அந்தரத்து ஆரவாரமாய்
தாங்கிய நினைவுகள்.
நேற்றைய முடிவுகளே
நாளைய தீர்மானமாய்
வைக்கோல் நுழைந்து
உறிஞ்சும் புழுவென
வழியும் எச்சில் நேர்மை
வேண்டாம் வேண்டாம்.
நேர்மை பற்றி அறியும்
சுவர்களும்
யன்னல் சீலைகளின்
நுனிகளும்கூட இங்கு
கட்டிய வேட்டிக்குள்
சீழ்பிடித்த மனிதரும்
நுழைவார் இங்கே.
கைகாட்டும்வரை
என்னை...
அகற்றாதிருக்கட்டும்
மூட்டைப்பூச்சிகளோடு
சாட்சியாய் இங்கு நான்!!!
ஹேமா(சுவிஸ்)
இருப்பிடமென
ஒதுக்கப்பட்டிருந்தாலும்
கண்களுக்குள்
அலார மிரட்டலோடு
பழைய கதிரையொன்று.
சுருங்கிய முக ரேகைக்குள்
நேர்மை நிரம்பிய புன்னகை
அனுபவங்கள் அழுத்திய ஆட்சி
அந்தரத்து ஆரவாரமாய்
தாங்கிய நினைவுகள்.
நேற்றைய முடிவுகளே
நாளைய தீர்மானமாய்
வைக்கோல் நுழைந்து
உறிஞ்சும் புழுவென
வழியும் எச்சில் நேர்மை
வேண்டாம் வேண்டாம்.
நேர்மை பற்றி அறியும்
சுவர்களும்
யன்னல் சீலைகளின்
நுனிகளும்கூட இங்கு
கட்டிய வேட்டிக்குள்
சீழ்பிடித்த மனிதரும்
நுழைவார் இங்கே.
கைகாட்டும்வரை
என்னை...
அகற்றாதிருக்கட்டும்
மூட்டைப்பூச்சிகளோடு
சாட்சியாய் இங்கு நான்!!!
ஹேமா(சுவிஸ்)
நான் தான் முதலாவது :-)))
ReplyDeleteஅருமை ..!
ReplyDeleteNallaa irukku :-)
ReplyDeleteவழக்கம்போல.. கவிதை வீரியம் குறையாமலிருக்கிறது.
ReplyDeleteமிக அருமையான அரசியல் கவிதை ஹேமா! எங்களின் இன்றைய இருப்பு இப்படித்தான் இருக்கு! நாம் ஆட்சி செய்த “ அந்தக் கதிரையும்” இப்போது எங்கோ ஒரு மூலையில் உக்கி, உடைந்து, மூட்டைப் பூச்சிகளின் இருப்பிடமாய் இருக்கிறது!
ReplyDeleteபாருங்கள் கதிரைகளை நொருக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்! ஆனால் இன்னமும் அதே நினைவுகளோடு கதிரைகள் இருக்கின்றன - கால்கள் முறிந்தபடி.....
மிக அருமையான கவிதை ஹேமா!
ஐ...! நான்தான் ஆறாவது கமெண்ட். அருமை ஹேமா. மாத்தி யோசி மணிக்கும் நன்றி.
ReplyDeleteஹேமா உங்களிடம் நீண்ட நாட்களாக கேட்க வேணும் என நினைத்திருந்தேன்!
ReplyDeleteநாங்களும் தமிழ் தான் படித்தோம்! நீங்களும் தமிழ்தான் படித்தீர்கள்! ஆனால் எப்படி புதுசு புதுசா வார்த்தைகளை / வசனங்களைக் கோர்க்கிறீர்கள்?? இது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்!
உங்களைப் புழுகி, பப்பாவில் ஏற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம்! எமது நாயன்மார்களில் ஒருவராகிய ஆண்டாள் பாடிய பாடிய பாசுரங்கள் அனைத்துமே மிக மிக சொல் / பொருள் ஆழம் கொண்டவை!
அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக மிக ஆச்சரியம் கொடுப்பவை!
“ போதுமினோ நேரிழையீர்” “ ஏராந்த கன்னி” “ கூர்வேல் கொடுந்தொழிலன்” “ஏதேனும் ஆகாள் கிடந்தாள் ” “ கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்”
என்று தமிழைக் குழைத்து வார்த்தைகள் செதுக்குவார் ஆண்டாள்!
இங்கே ஹேமாவும் அப்படியே....
“ அலார மிரட்டலோடு” “ அனுபவங்கள் அழுத்திய ஆட்சி” “ எரியும் சிதைவிட்டெழும்பி
நொந்த பெண்மை பற்றி ” “ சிறகானவன்” “ தொட்டித் தாவரங்கள்”
இப்படிச் சொல்லிக்கொண்டே பொகலாம்!
இங்கே ஆண்டாளோடு ஹேமாவை ஒப்பிடவில்லை நான்! ஆனால் ஆண்டாளை நினைவு படுத்துகிறீர்கள் என்கிறேன்!
meeeeeeee வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ....
ReplyDeleteசெல்லமே எப்புடி அம்மு இப்புடி எல்லாம் கவிதை வருது
அக்கா ஆஆஆஆஆஆஅ கவித கவித .............
ReplyDeleteஎனக்குத் தான் வியங்கலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ எங்க இருக்கீங்க ...உங்கட செல்ல மகள் கவிதை போட்டு இருக்கங்கள் பாருங்கோ ...சீக்கிரமாய் வான்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
ReplyDeleteபாருங்கள் கதிரைகளை நொருக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்! ஆனால் இன்னமும் அதே நினைவுகளோடு கதிரைகள் இருக்கின்றன - கால்கள் முறிந்தபடி.....
ReplyDeleteமிக அருமையான கவிதை ஹேமா!//
இப்போ கொஞ்சம் புரியது அக்கா ...
மணி அண்ணாவின் தெளிவுரையில் ....
“ போதுமினோ நேரிழையீர்” “ ஏராந்த கன்னி” “ கூர்வேல் கொடுந்தொழிலன்” “ஏதேனும் ஆகாள் கிடந்தாள் ” “ கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்”
ReplyDeleteஎன்று தமிழைக் குழைத்து வார்த்தைகள் செதுக்குவார் ஆண்டாள்!
///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மணி அண்ணா நீங்களா பேசுறது அழகிய அம்ம்டீஈஈஈஈ ......இத்தனை நாளா எங்க அண்ணா ஒளித்து வைத்து இருந்தீன்கள் உங்கள் புலமையை ..
அவ்வவ் அப்போ எல்லாருமே அறிவாளிகள் தாணா ..நான் மட்டும் தன் மக்குப் புள்ளையா
மதிய வணக்கம்,எல்லோருக்கும்!அந்தக் "கதிரை"க்கும் போட்டி,ஹ!ஹ!ஹா!!!!
ReplyDeleteவழியும் எச்சில் நேர்மை
ReplyDeleteவேண்டாம் வேண்டாம்.///அதெப்படி?
வணக்கம் மகளே&மருமகளே!!!நலமா?மாமா சொன்னது கேட்டிகளா?இதுலயும் மகள் தான்(FIRST) பெஸ்ட்டு!!!!!ஹ!ஹ!ஹா!!!!!!
ReplyDelete"..கட்டிய வேட்டிக்குள்
ReplyDeleteசீழ்பிடித்த மனிதரும்.." அருமை.
அலங்கார முகமூடியணிந்த நச்சு மனிதர் போல.....
மருமகளே இங்க தான் இருக்கேன்!பன்னிரண்டு மணிக்கு மேல தான கவிதை வரும்னுட்டு,சமையல் கட்டுல மாமா பூந்துட்டேன்!வந்து பாத்தா பன்னெண்டு கமெண்டு!சரி இங்க தான் பால்கோப்பி குடுக்குறதில்லையேன்னு மனச திடப்படுத்திக்கிட்டேன்!அப்புறம்,அக்கா "நேத்து வச்ச மீன் கொழம்பு என்னை இழுக்குதைய்யா"ன்னு நைட்டு அண்ணா வூட்டுல பாடினாங்களே,கேட்டீகளா?ஹ!ஹ!ஹா!!!!!!!!
ReplyDeleteஹேமா said...14 May 2012 13:12
ReplyDeleteஅந்த மீன் குழம்பு கிடந்து அழு, அழுவெண்டு அழுவுது!
////கேட்டீங்களோ,மருமகளே????ஹ!ஹ!ஹா!!!!!!!!
சூடும் உணர்ச்சியும் மிக்க நல்ல கவிதை ஃபரெண்ட். படிக்கும் போது விளங்கினதை மாத்தியோசி மணி சார் இன்னும தெளிவா விளக்கிட்டார். அவருக்கும் நன்றி.
ReplyDeleteநேர்மை பற்றி அறியும்
ReplyDeleteசுவர்களும்
யன்னல் சீலைகளின்
நுனிகளும்கூட
''இங்கு
கட்டிய வேட்டிக்குள்
சீழ்பிடித்த மனிதரும்
நுழைவார் இங்கே.''....!
ம்ம்ம் (: அருமை
அந்த மீன் குழம்பு கிடந்து அழு, அழுவெண்டு அழுவுது!
ReplyDelete////கேட்டீங்களோ,மருமகளே????ஹ!ஹ!ஹா!!!!!!!!///
பார்த்தேன் மாமா .....அவ்வ்வ்வ்வ்வ் நானும் கொஞ்சம் மீனாய் மாறிட்டேன் மாமா அக்காவின் அன்புள....
மணியின் பின்னூட்டம் கவிதையை மறக்கடித்து விட்டது.
ReplyDeleteவணக்கம் மகளே&மருமகளே!!!நலமா?மாமா சொன்னது கேட்டிகளா?இதுலயும் மகள் தான்(FIRST) பெஸ்ட்டு!!!!!ஹ!ஹ!ஹா!!!!!!.///
ReplyDeleteநான் நல்ல சுகம் மாமா
வாழ்த்துக்கள் மாமா ..கலக்குங்க....
இதுலாம் கொஞ்ச நாளைக்குத் தான் மாமா ...இருங்கோ உங்கட செல்ல மகளுக்கு போட்டியா ஒரு கருப்பு அயித்த்தானை கூட்டிட்டு வாறன் ...அப்புறம் உங்க மகள் லாஸ்ட் டு..எப்புடீஈஈஈஈஈஈஈ
உங்கள் கருத்தாழத்தைப் புரிந்து கொள்ள முடியாத முண்டமாகவே நான் இன்னும் இருக்கிறேன் ஷேமா...
ReplyDeleteஎன்னை மாதிரி புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களுக்காக கவிதையின் கீழே விளக்கத்தை உரைநடையில் நீங்களே எழுதினால் என்னைப் போன்றவர்களுக்கு விளங்கும் ஷேமா...
நன்றிங்க!
ஸாரி ஹேமாக்கா.. இந்தக் கவிதை என் மண்டைக்கு எட்டலை. மணி ஸார் தந்திருக்கற விளக்கத்தை வெச்சு புரிஞ்சுக்கிட்டேன். நல்லா இருக்கு.
ReplyDeleteஎனக்குப் புரிந்த கவிதைகளில் இதுவும் ஒன்று ஹேமா!
ReplyDelete//நாங்களும் தமிழ் தான் படித்தோம்! நீங்களும் தமிழ்தான் படித்தீர்கள்! ஆனால் எப்படி புதுசு புதுசா வார்த்தைகளை / வசனங்களைக் கோர்க்கிறீர்கள்?? இது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்! //
ReplyDelete@ மணி!என்னை மாதிரி கடைசி பெஞ்சுல உட்கார்ந்துட்டு பேச்சைப் பாரு பேச்சை:)
ஹேமா!இந்த கேள்வியை அங்கேயே கேட்க வேண்டியது இப்ப கேட்கிறேன்.
பல்லிதான் தெரியும்!அது என்ன நச்சுப்பல்லி?
நல்ல கவிதை ஹேமா.
ReplyDeleteரெண்டு தடவை படிச்சு பாத்தேன் அப்பவும் விளங்கல... மறுபடியும் ஒரு நாலு வாட்டு படிச்சுட்டு வரேன்...
ReplyDeleteநல்ல கவிதை ஹேமா
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்மட்ம்ம்ம் சூப்பர்ர்ர்ர்ர் கவிதை அக்கா உங்கள் கவியை என்ன வார்த்தை கொண்டு புகழ சொல்லுங்கள்.....
ReplyDeleteநமக்கு இந்த பயலுகள் மாதிரி வெட்டி..?? கமண்ட் போட ஆசைதான் ஆனா நேரம்தான் இடம் கொடுக்குது இல்ல...
ReplyDeleteஉண்மையில கவிதைக்கு முதல் போட்டிருக்கும் புகைப்படத்தை தான் பார்த்தேன்...//வட்டாரம் படம் ஞாபத்துக்கு வந்தது////
ReplyDeleteஆனாலும் முன்பு போல் பலமுறை படித்தேன் எனக்கு புரிந்தா என்பது எனக்கு தெரியவில்லை....//
ReplyDeleteநான் தமிழ் வாத்தியின் மகனும் இல்லை ... தமிழ் பாடத்தில் அதிகளவு அக்கரை எடுத்தவனும் இல்லை...
அப்ப எப்புடி நமக்கு கவிதை புரியப்போகுது...???சும்மா சும்மா
பழைய நாற்காலியின் ஆதங்கமா? அல்லது அனுபவமா? எதுவாக இருந்தாலும் இது ஒன்றே வாழ்ந்த மனிதரின் சாட்சி.
ReplyDeleteகுறீயீட்டுப்படிமங்கள் ஊடாக கடந்தகால நினைவுகள் சொல்லும் மூட்டைப்பூச்சி, பழைய கதிரை !ம்ம்ம் அற்புதம் உணர்வுகள் தூண்டுகின்றது கவிதை.
ReplyDeleteஅற்புதமான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உண்மையில் ஒரு படைப்பாவது இப்படி
ReplyDeleteஉள்மனத்தைத் தாக்கிப் போகும்படி எழுதவேண்டும் என்கிற
ஆர்வத்தை இக்கவிதை மேலும் கூடுதலாக்கிப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
Tha.ma 7
ReplyDeleteஅன்பின் ஹேமா,
ReplyDeleteகருத்தாழம் மிக்க நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்.
அன்புடன்
பவள் சங்கரி
காலை வணக்கம்,மகளே!நலமா???நான் நலம்.இரவு நேரம் போய் விட்டது என்று ஓடி விட்டேன்.நான் இருந்தால் நீங்கள் எல்லோரும் அல்லவா விழித்திருக்க வேண்டும்?
ReplyDeleteஇறுதிமூச்சு வரை நேர்மை தாங்கிய அந்தக் கதிரை இற்றுப் போகும்வரையிலும் இப்படியே இருக்கட்டும்! வார்த்தைகளில் வீரியம் நுழைத்து வசையிலும் வசியம் கோர்க்கும் வித்தை அறிந்தவர் நீங்கள். பாராட்டுகள் ஹேமா.
ReplyDeleteசுருங்கிய முக ரேகைக்குள்
ReplyDeleteநேர்மை நிரம்பிய புன்னகை.
அமைதியாய் சொல்லிப்போகின்றன அழுத்தமான கருத்துக்களை.
ம்ம்ம்ம...இனிமேல் நான் சொல்ல..ஒன்றுமில்லை எல்லோரும் சொல்லிவிட்டார்களே!ஹேமா!!
ReplyDeleteநலமா கவிதாயினி...
ReplyDeleteகலக்கி விட்டீர்கள்...
அடிக்கடி மூளைக்கு வேலை கொடுத்து...இதயத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளும் உங்கள் கவிதைகள்...
இரவு வணக்கம்,மகளே!!
ReplyDeleteஇரவு வணக்கம்,கலா!///கலா said...
ReplyDeleteம்ம்ம்ம...இனிமேல் நான் சொல்ல..ஒன்றுமில்லை எல்லோரும் சொல்லிவிட்டார்களே!ஹேமா!!///பொய்!!!விளங்கவில்லை/புரியவில்லை என்று சொல்ல புதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருக்கிறதாம்,ஹ!ஹ!ஹா!!!!!
பொய்!!!விளங்கவில்லை/புரியவில்லை என்று சொல்ல புதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருக்கிறதாம்,ஹ!ஹ!ஹா!!!!!\\\\\\\
ReplyDeleteஹய்யோடா.... எப்போதும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால்...??
என்னோட அவங்ககிட்டமட்டுந்தான்!அது வரும்.
ஆத்துகார அம்மாவக் கொஞ்சம் கூப்பிடுங்கோ.... இந்த இணையத்தில நீங்க அடிக்கிற லூட்டியைக் கொஞ்சம் ஊதிவிடனும்
அப்பப்பா..தாங்கல..
ம்ம்ம்ம...இனிமேல் நான் சொல்ல..ஒன்றுமில்லை எல்லோரும் சொல்லிவிட்டார்களே\\\\\
ReplyDeleteஐய்யனே..
இது எதைக்காட்டுகிறது..? என்னோட
தன்னடக்கத்தை,மற்றவர்களை எதிர்த்துப் பேசாததை,{குறிப்பாக ஆண்களை{ இது நம்ம கலாச்சாராம்ஆச்சுதுங்களே!}ரொம்ப அடங்கிய பிளளைநான்.நான்
பரமசாதுங்க என்னைப்போய் வம்புக்கு
இழுக்கலாமா? இதுமுறையா?
இதற்குமேல கேக்கபடாது நான் மெளனவிரதம்.
ம்ம்..... நேர்மையின் காத்திருப்பில் வெட்கித்தலைகுனிய வேண்டும் மனட்சாட்சி உள்ள மனிதர்கள்.
ReplyDeleteவணக்கம் அக்கா..
ReplyDeleteகவிதைக்குரிய முழுமையான கருத்துக்களை மணி சொல்லிட்டான்...
சொல்லாடல்கள் வழமை போலவே அருமை.
மூட்டைப் பூச்சிகளோடு சாட்சியாய் இங்கு நான்...
அருமையான வசன முடிவு...
எம் வாழ்க்கையும் மூட்டை போல் தான் கேவலமாகி விட்டது என்பது மட்டுமே நிஜம்.
காலை வணக்கம்,மகளே !நலமா?
ReplyDeleteகாலை வணக்கம்,கலா(பாட்டிம்மா)!/////கலா said...
ReplyDeleteபொய்!!!விளங்கவில்லை/புரியவில்லை என்று சொல்ல புதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருக்கிறதாம்,ஹ!ஹ!ஹா!!!!!\\\\\\\
ஹய்யோடா.... எப்போதும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால்...??
என்னோட அவங்ககிட்டமட்டுந்தான்!அது வரும்.
ஆத்துகார அம்மாவக் கொஞ்சம் கூப்பிடுங்கோ.... இந்த இணையத்தில நீங்க அடிக்கிற லூட்டியைக் கொஞ்சம் ஊதிவிடனும்
அப்பப்பா..தாங்கல./////பொறாம ,ஹும்!தங்கமணி இங்க வரமாட்டா!(நான் தான் சொல்லிக் குடுக்கலையே,ஹ!ஹ!ஹா!!)
இந்த அஃறிணைப் பொருளைக் குறியீடாகக் கொண்டு கவிதாயினி உணர்த்த வரும் பொருள் உண்மையாகவே விளங்கவில்லை எனக்கு.
ReplyDelete"கைகாட்டும்வரை
ReplyDeleteஎன்னை...
அகற்றாதிருக்கட்டும்
மூட்டைப்பூச்சிகளோடு.."
மிகவும் அருமை ஹேமா அவர்களே வாழ்த்துக்கள்.
மாலை வணக்கம்,ஹேமா!!!
ReplyDeleteகலைக்கு விருது கொடுத்திருக்கிறார்கள்!
ReplyDelete