பத்திரமாய்....
பாவாடை நாடாவாய்
இறுக்கிக் கட்டி வைத்தாலும்
என் அசந்த தருணங்களை
சாதகமாக்கிக் கொள்கிறது
அந்தக் குட்டிச்சாத்தான்.
அடிக்கடி
பக்கத்துத் தெருவில்
பூந்தோட்ட மர உச்சியில்
சமையலறை மேடையில்.....
பிடி...பிடியென
துரத்திப் பிடித்துத் தூக்கி
கக்கில்....
இடுக்கிக் கொள்கிறாய்
அடிக்கடி குழந்தையாகி
உன் இடுப்பில் நான்.
அம்மாவாய்...
அடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்.
அம்மாவின் தினத்தில்
அம்மாவாய் அருகில் நீ!!!
ஹேமா(சுவிஸ்)
பாவாடை நாடாவாய்
இறுக்கிக் கட்டி வைத்தாலும்
என் அசந்த தருணங்களை
சாதகமாக்கிக் கொள்கிறது
அந்தக் குட்டிச்சாத்தான்.
அடிக்கடி
பக்கத்துத் தெருவில்
பூந்தோட்ட மர உச்சியில்
சமையலறை மேடையில்.....
பிடி...பிடியென
துரத்திப் பிடித்துத் தூக்கி
கக்கில்....
இடுக்கிக் கொள்கிறாய்
அடிக்கடி குழந்தையாகி
உன் இடுப்பில் நான்.
அம்மாவாய்...
அடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்.
அம்மாவின் தினத்தில்
அம்மாவாய் அருகில் நீ!!!
ஹேமா(சுவிஸ்)
"தாயுள்ளம் படைத்த அனைவரையும் நினைப்போம்...வாழ்த்துவோம் !"
பகல் வணக்கம்,மகளே!நலமா?படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்து விட்டு.....................ஹ!ஹ!ஹா!!!!!!
ReplyDeleteவணக்கம் ஹேமா! நலமா? இனிய சனிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ :-)))
ReplyDeleteஅம்மா தினமா?எப்போது?நேற்றும் பிள்ளைகள் விவாதித்தார்கள்,விஜய் டி.வி பார்த்து!!!!ஜூனில் அல்லவோ வருமாம் என்று!
ReplyDeleteவாங்கோ.....அப்பா மணி !
ReplyDeleteசுவிஸ்ல் நாளைக்குத்தான் அம்மாக்கள் தினம்.நாட்டுக்கு நாடு வேறு வேறு தினங்களில்தான் செய்கிறார்கள்.காரணம் தெரியவில்லை.அம்மாவுக்கான தினமொன்று தேவையே இல்லை என்பது என் எண்ணம் !
"தாயுள்ளம் படைத்த அனைவரையும் நினைப்போம்...வாழ்த்துவோம் !" ///நிச்சயமாக!தாயை நினைக்காதோர்,வணங்காதோர்,வாழ்த்தாதோர் பிறந்தும் பயனில்லை!
ReplyDeleteஇந்தியாவில் நாளை என்று நினைக்கிறேன்.இங்கு(பிரான்சில்)ஜூன்-3 ல்.
ReplyDeleteஹேமா said...
ReplyDelete'சுவிஸ்'ல் நாளைக்குத்தான் அம்மாக்கள் தினம்.நாட்டுக்கு நாடு வேறு வேறு தினங்களில்தான் செய்கிறார்கள்.காரணம் தெரியவில்லை.அம்மாவுக்கான தினமொன்று தேவையே இல்லை என்பது என் எண்ணம் !///அதாவது,எல்லா நாளும் அம்மாவை நினைக்க வேண்டும் என்கிறீர்கள்?உண்மை தான்,அம்மாவை நினைப்பதற்கு தனியாக ஒரு நாள் வேண்டுமா,என்ன?
அம்மாவாவின் அன்பு சொல்லும் அருமையான கவிதை கவிதாயினி. அதுவும் அசரும் தருணத்தில் அழகான வார்த்தை ரசித்தேன்!
ReplyDeleteஅப்பா...இந்தக் கவிதைக்குள்ளயும் ஒரு கரு ஒளிஞ்சிருக்கு !
ReplyDeleteசித்திரா பௌர்ணமியோடு இங்கு அம்மாக்கள் தினம் வருவது ஒரு அதிசயமான வெளிப்பாடு எனக்குள் !
மணி.....வந்தீங்கள்.காணேல்ல !
நேசன்...சந்தோஷம் ..... வாங்கோ !
//அம்மாவுக்கான தினமொன்று தேவையே இல்லை என்பது என் எண்ணம் !//
ReplyDeleteஅதே... அதே.. அம்மாவுக்கு ஒரு தினம் தேவையா.. நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவளுக்கே ஒரு அறிமுகம் தேவையா.... இதெல்லாம் மேலைநாட்டு பாடம்...
அன்புடன்
பவள சங்கரி,
கவிதை படித்தேன் ஹேமா!:-)))
ReplyDeleteஹா ஹா ஹா இது உண்மையாவோ அன்னையர் தினக் கவிதையோ? ;-)
மணி அவர்களே ‘லேபிள்’பாருங்கோ ஒருக்கா !
ReplyDeleteவாங்கோ பவளா.என் கருத்தை நீங்களும் அப்பாவும் சரி சொன்னது சந்தோஷமாயிருக்கு.அப்பா அம்மாவிம் ஆசியும் அன்பும் எங்கள் பக்கமிருக்கும்வரை எங்களுக்கு எதுவும் குறைவிருக்காது !
பத்திரமாய்....
ReplyDeleteபாவாடை நாடாவாய்
இறுக்கிக் கட்டி வைத்தாலும்
என் அசந்த தருணங்களை
சாதகமாக்கிக் கொள்கிறது
அந்தக் குட்டிச்சாத்தான்.///////
இண்டைக்கு ஹேமாவ விடமாட்டன்! எனக்கு உடனடியா விளக்கம் சொல்லோணும்!
குட்டிச்சாத்தான் எண்டால் ஆண் பால் தானே?
அப்புறம் ஏன் சாதகமாக்கிக் கொள்கிறது என்று போட்டீர்கள்? சாதகமாக்கிக்கொள்கிறான் எண்டெல்லோ வரும்??
விளக்கம் ப்ளீஸ்!
எனக்கு மண்டை விறைக்கிறது,மகளே!நான் சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு வருகிறேன்,ஹி!ஹி!ஹி!!!
ReplyDeleteபிடி...பிடியென
ReplyDeleteதுரத்திப் பிடித்துத் தூக்கி
கக்கில்....
இடுக்கிக் கொள்கிறாய்
அடிக்கடி குழந்தையாகி
உன் இடுப்பில் நான். ///////
ஆஹா, மிக அழகான இடம் ! அதிலும் பிடி பிடியென துரத்திப் பிடிக்கிறாரோ? நீங்கள் ஏன் அப்படி ஓடுறீங்கள்? ஒரு இடத்தில நில்லுங்கோ பார்ப்பம்! ஹா ஹா ஹா
குட்டிச் சாத்தான் என்று குட்டினாலும் கொடுக்கும் பாசம் குறையாதவள் தாய்.
ReplyDeleteஅம்மாவாய்...
ReplyDeleteஅடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்.///////
இப்படியெல்லாம் உணர்ச்சி பூர்வமா எழுத உங்களால தான் முடியும் ஹேமா! நான் அண்டைக்கும் கேட்டனான், சாப்பாட்டுக்குப் பதிலா உணர்வுகளையோ சாப்பிடுகிறீர்கள் என்று?
அம்மாவின் தினத்தில்
ReplyDeleteஅம்மாவாய் அருகில் நீ!!! ///////
புருஷனைக் கண்டவுடன, பெத்த தாயையே ‘ யார்!’ எண்டு கேப்பினமாம் பொம்பிளையள்! ஹி ஹி ஹி இது அதுதான் போல கிடக்கு ! :-)))
சமையல் அறை மேடையிலும் சங்கீதக்குரல் குழந்தை தானே தாயண்புக்கு. இப்படி எத்தனை அன்னையர்கள் கவிதை போட்டாலும் ரசிக்கலாம். (வேலை நேரத்தில் இருக்கின்றேன் பிறகு வாரன் கவிதையில் ரசித்த வரிகளுடன்)
ReplyDeleteசரி சரி, நிஜமாவே அழகான காதல் கவிதை ஹேமா! உணர்வுகளைக் கொட்டியிருக்கிறீங்கள்! நான் மேலே சும்மா ஜாலிக்கு சொன்னேன்! நிஜமாவே கவிதை அருமை!
ReplyDeleteஅது சரி இந்தக் கவிதையை சிவப்பு நிறத்தில போட்டதுக்கு ஏதாவது பின்னணி, முன்னணிக் காரணங்கள் இருக்கோ?? :-))
வணக்கம் ஹேமா அக்கா அருமையான அம்மா கவி் சூப்பர்.
ReplyDeleteஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.........
என்னங்க அநியாயமா இருக்கு.. அம்மா நாள்னா... புறட்சி தலைவி அம்மா பத்திதானே கவித எழுதியிருக்கனும் ;)
ReplyDeleteஅக்கா கவிதை சுப்பரா இருக்கு
ReplyDeleteஅம்மா தினமா?எப்போது?நேற்றும் பிள்ளைகள் விவாதித்தார்கள்,விஜய் டி.வி பார்த்து!!!!ஜூனில் அல்லவோ வருமாம் என்று!
ReplyDeleteமாமா எனக்கும் தெரியல ..
அருமையான கவிதை, என் தாயின் நினைவுகளை என் நெஞ்சில் ஏற்படுத்தியது கவிதையின் சில வரிகள் ..!
ReplyDeleteஅதானே....அன்னைக்கென்று தனி தினம் தேவையா என்ன? என் மனதிலும், ஏன், என் 'செல்'லிலும் கூட (2002 இல் மறைந்து போன) என் அம்மா இருக்கிறார்கள். அன்னையர் தினக் கவிதை அருமை.
ReplyDeleteஅன்னையர்தின வாழ்த்துக்கள்.
ReplyDelete//அடிக்கடி
பக்கத்துத் தெருவில்
பூந்தோட்ட மர உச்சியில்
சமையலறை மேடையில்// வரிகள் நல்லாயிருக்கு ஹேமா..
மடிதேடி அலைகிற குழந்தைகளுக்கு அன்னையர்களின் வாழ்த்துக்களும் அன்னையர்களுக்கு நமது வாழ்த்துக்களுமாய்/
ReplyDeleteஅன்னையர்தினத்தில் நல்ல கவிதை.
அம்மாவாய் அருகில்......
ReplyDeleteயார் அந்த..?த்
தூரம் போனவக...?
அருகில்,அருகில்..ம்ம்ம்மகும்
சான்ஸ்சே இல்லப்பா
பத்திரமாய்....
ReplyDeleteபாவாடை நாடாவாய்
இறுக்கிக் கட்டி வைத்தாலும்
என் அசந்த தருணங்களை
சாதகமாக்கிக் கொள்கிறது
அந்தக் குட்டிச்சாத்தான்.\\\\\\\\
மனதைக் கட்டிப்போட முடியுமா?ஹேமா!
பாவம் மனது! அதற்குப்போய் குட்டிச்சாத்தான்
என்று திட்டலாமா?
உங்கமேல தப்பை வைத்துவிட்டுப்...பழி
அதன்மேலா?
பாவாடை நாடாஅல்ல!பத்தாயிரம்
நீளமான கயிறு போட்டுக்
கட்டினாலும்.....
ம்ம்ம்ம..கேட்கவே,கேட்காது
ஆஹா... ஹேமாவிடமிருந்து இப்படி ஒரு கவிதை கிடைக்குமென்றால் வருடம் முழுவதும் அன்னையர் தினமாகவே இருக்கட்டுமே... தாயுள்ளம் படைத்தோர் அனைவருக்குமான கவிதை! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துக்கள். அழகான நாளில் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடிக்கடி
ReplyDeleteபக்கத்துத் தெருவில்\\\\\
{கைகோர்த்தும்,முத்தம்கொடுத்தும்,
கட்டியணைத்தும் நடப்பவர்களை....
பாசமுடன்..அன்பு,காதலென......
பூந்தோட்ட மர உச்சியில்\\\\
{மரஉச்சியில்கூடப் பறவைகள்
சோடியாய.....கொஞ்சிக் குலாவுவதும்....
சமையலறை மேடையில்.....\\\\\\
{சமைக்கும்போதும் மனது விட்டுவைப்பதில்லை
நம் சமையல்.
சாப்பாடு,பிடிப்பவை,பிடிக்காதவை எனப்
பேசிய ஞாபகங்கள் ...வந்தவண்ணம்
பிடி...பிடியென
ReplyDeleteதுரத்திப் பிடித்துத் தூக்கி
கக்கில்....
இடுக்கிக் கொள்கிறாய்
அடிக்கடி குழந்தையாகி
உன் இடுப்பில் நான்.\\\\\\
நடந்த! அந்த நாட்களின்
நினைவுகளாய் இன்னும்..
நீ என்னைத்
துரத்தித்திக் கொண்டே........
நீ என்மேல் வைத்த
கரிசணையும்,அன்பும்,அக்கறையும்
மறக்கமுடியாமல்...நீ என்னைக்
குழந்தைபோல் பார்த்ததை...இன்னும்..
மறக்கமுடியாமல்..குழந்தைபோல் நான்
அம்மாவாய்...
ReplyDeleteஅடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்\\\\\\\\
வாவ்... எவ்வளவொரு அன்பும்,
பாசமும்....
இதன் வெளிப்பாடே இவ்வரிகள்
மிக ஆழமான வரிகள்ஹேமா
அம்மாவின் தினத்தில்
ReplyDeleteஅம்மாவாய் அருகில் நீ!!!\\\\\
இவ்வரிகள் அதைவிட...ஆழம்
இதைப்படிக்கும் போதே..
“அந்த” அன்பின் ஆழம் எனக்குப்
புரிகிறது என்னதான் இனிமேல்ச்
செய்யமுடியும்..?
அம்மாவாய்...அருகில் ..என்று...
நினைத்துக்கொள்.
{அன்னைபோல் பார்த்த{பாதுகாத்த}
“உங்களுக்கு”நன்றி
இரவு வணக்கம்,(கலா)பாட்டிம்மா!நன்றாக கவிதையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள்!இதுக்குத் தான் பாட்டிகள் வேண்டும் என்பது.எங்கள் போன்ற புரியாத மண்டூகங்களுக்கு அருமையான விளக்கம்!நன்றி(று)பாட்டிம்மா!!!ஹி!ஹி!ஹி!!!!!
ReplyDeleteசட்டென்று நெஞ்சைத் தொடும் வரிகள்.. நன்று
ReplyDeletethottnaiththaathu-
ReplyDeletevarikal!
Happy Mother's Day!
ReplyDeleteபடித்துப் புரிந்து கொள்ள முயற்சித்து விட்டு.....................ஹ!ஹ!ஹா!!!!\\\\
ReplyDeleteஎங்கள் போன்ற புரியாத மண்டூகங்களுக்கு அருமையான விளக்கம்!நன்றி(று)பாட்டிம்மா!!!ஹி!ஹி!ஹி!!!!!\\\
என்னங்க..
இப்பிடிச் சொல்லிப்போட்டீக....
அப்ப நான் ஒரு முதியோர்கல்வி நடத்துவதற்குரிய தகுதி பெற்றுவிட்டேனாக்கு! யார்.யாரெல்லாம் வரப்போகிறீக...
பெயரைப் பதிவுசெய்து கொளளுங்கோ...
இதோ..இதோ..சேச்சே..இந்தப்
புளளைங்க இந்தத் தளளாத வயதிலையும் என்னைச் சத்தே திண்ணையில...தலைசாய்க்க விடமாட்டன்எங்கிறாங்களே!
நலமா ஹேமா?
ReplyDeleteகாலை வணக்கம்,மகளே!!!
ReplyDeleteகாலை வணக்கம்,கலா !!!என்னது,என்னங்கவா?நல்ல வேளை தங்கமணி(மனைவி)இணையத்தில் மெனக்கெடுவதில்லை!இப்ப எல்லாரும் கிளாஸ்(வகுப்பு)எடுத்து காசு தேத்துற வழி தான் பாக்கிறாங்க.பாட்டிம்மா,நான் இந்த விளையாட்டுக்கு வரல!!!!
ReplyDelete//பத்திரமாய்....
ReplyDeleteபாவாடை நாடாவாய்
இறுக்கிக் கட்டி வைத்தாலும்
என் அசந்த தருணங்களை
சாதகமாக்கிக் கொள்கிறது
அந்தக் குட்டிச்சாத்தான்.//
குட்டிச்
சாத்தான்கள் ( நாங்கள்)
சூறையாடும் தருணம் ஆச்சே அது
பழம் நழுவி
பாலில் விழும் தருணம்
//அடிக்கடி
பக்கத்துத் தெருவில்
பூந்தோட்ட மர உச்சியில்
சமையலறை மேடையில்.....//
ஊரில்
வீட்டில் யாரும் (மூத்தவர்கள் )இல்லைஎன்றால்
அடிக்கடி அரங்கேற்றப்படும் நிகழ்வு
அது ஒரு ம்ம்ம் (:
//பிடி...பிடியென
துரத்திப் பிடித்துத் தூக்கி
கக்கில்....
இடுக்கிக் கொள்கிறாய்
அடிக்கடி குழந்தையாகி
உன் இடுப்பில் நான்.//
பலமுறை துரத்தி
ஒருமுறை இடுப்பில் ஏற்றும்போது
அவங்க நெளிவதும் நாங்கள் வழிவதும்
ம்ம்ம்ம்......... என்ன சொல்ல
அவங்களை
ஒக்கத்தில் (இடுப்பில் )தூக்குகையில்
உண்மையில் அவங்க குழந்தைதான்
//அம்மாவாய்...
அடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்.//
எங்களை
பெற்றது நீங்கள் என்றாலும்
உண்மையில் நாங்களே உங்கள்
(மார் சுரக்காத )தாய்
//அம்மாவின் தினத்தில்
அம்மாவாய் அருகில் நீ!!!//
அம்மாவாய்
இருப்பது இறைவரம்
அப்படி ஒரு தலைவன் கிடைப்பது
ஜென்ம புண்ணியம்
அம்மா தினத்தில்
தன் தலைவனை அம்மாவாக்கியது
போற்றுகையில் அந்த தலைவனின்
சித்திரம் ஒளிர்கிறது
வரிகளில்
பெண் மனசில்
என்ன இருக்கு என்று
நிறையப்பேர் கேட்டு தெரிந்துகொள்வதில்லை
கேட்டு தெரிந்து கொள்பவன்
ஆகிறான் தலைவிக்கு நல்ல
தலைவன்
அம்மா தின வாழ்த்துக்கள்
அன்னையர் தின வாழ்த்துக்கள் ஹேமாக்கா
ReplyDeleteஹேமா...
ReplyDeleteஅம்மாவாய்...
அடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்.
அழகு தான்... வாழ்த்துகள்.
என் தலைச்சன் புளள யோகாவுக்கும்...
ReplyDeleteஅடுத்து வந்த ..மகனுங்களுக்கும்,மகளுங்களுக்கும்...அத்தனை புளளைங்களுக்கும் இந்த அம்மாவோட...பிராத்தனை.
நலமும்,வளமும்,ஆரோக்கியமும்,
அழகும் பெற..ஆசிர்வாதங்களும்..வாழ்த்துகளும் கூறும் உங்கள அனைவரின் அன்னை நான்.
அன்பான கலா அம்மாவுக்கு(பாட்டிம்மா)சிரம் தாழ்த்திய வணக்கம்!இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக,அன்பான தாயாக நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்,தாயே!!!!
ReplyDeleteதாயே!தவமே!தாய்க்குலமே!
ReplyDeleteஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ஹேமா.....
ReplyDeleteஅப்பா...எங்கே இரவும் காணேல்ல.நேரத்துக்கு நித்திரையாகிப்போனீங்களோ ?!////பார்த்துக் கண்கள் பூத்து..............சரி விடுங்க!
அன்னையர் தின வாழ்த்துகள் சகோதரி..
ReplyDeleteஇனிய அன்னையர் தின வாழ்த்துகள் !
ReplyDeleteநேசன் பதிவு போட்டிருக்கிறார்!ஓடி வாங்கோ,மகளே!!!
ReplyDeleteதாய்க்குப் பின் தாரம் என்பார்கள். ஏன் ஆண்களுக்கு மட்டும்தான் தாயின் தேவை வேணுமோ? பெண்களுக்கு வேண்டாமோ? தாய்க்குப் பின் காதலனாய், கணவனாய்க் கட்டியணைத்து அன்பைப் பொழியவும் ஒரு ஜீவன் தேவைதானே! ஹேமாவின் கவிதை வரிகளுக்குள் அடங்கமுடியாமல் திமிறிக்கொண்டு கிடக்கும் அன்பையும் சிநேகத்தையும், தாய்மையையும் காணும்போதே மனம் நிறைகிறது. பாராட்டுகள் ஹேமா.
ReplyDeleteகாலை வணக்கம்,மகளே!எனக்குத் தெரியும் ஞாயிறு என்றால் "அந்த"(அங்கிருந்து)அழைப்பு வருமென்று.அதனாலென்ன,கொஞ்ச நேரம் பேசியதே நிம்மதி!
ReplyDeleteஅக்கா நானும் வந்துட்டு போயிட்டன்..........ஓ கேயா..நமக்கு உங்க பதிவுக்கு முதல் கமண்ட் போடும் பாக்கியம் இல்ல போல.:::(((
ReplyDeleteஅம்மாவாய் அருகில்... அருமையான கவிதைன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஇந்த மரமண்டைக்குத் தான் புரியவே மாட்டேங்கிறது. (நான் ரொம்ம்ம்ம்ப சின்ன பிள்ளை ... அதனால் தான் புரியலைன்னு நினைக்கிறேன்.)
நன்றிங்க ஷேமா அக்கா.
மாலை வணக்கம்,மகளே!வீட்டில நிக்கிற மாதிரித் தெரியுது,என்ன விஷயம்?????
ReplyDeleteஇரவு வணக்கம் மகளே!நேசன் பதிவு..................
ReplyDelete//மாத்தியோசி-மணி...குட்டிச்சாத்தான் எண்டால் ஆண் பால் தானே? //
ReplyDeleteஇதுதான் என்ர கவிதையில நான் நினைச்ச கரு.குட்டிச்சாத்தான் எண்டு என்ர குழந்தைத்தனத்தைச் சொன்னன்.நான் அசந்திருக்கிற நேரம் என் குழந்தைத் தனம் வெளியே வந்து அங்க இஙக்யெண்டு ஓடித்திரிய.....அவர் தூக்கி இடுப்பில் வச்சுக்கொள்றார் ஒரு அம்மாபோல.இப்ப விளங்கிச்சோ.நீங்க நினைக்கிற ஆண்பால் குட்டிச்சாத்தான் இல்ல.உதுதான் ஆம்பிளைப்புத்தி.உணர்வுகளைத் தின்பது...அருமை.அனுபவிக்கவேணும் விளங்கும் மணி.ஆணுக்கு மனைவி அம்மாவாய் இருக்கும்போது ஏன் பெண்ணுக்குக் கணவன் அம்மாய் இருக்ககூடாது.நீங்க சொன்னபிறகு கலரும் படமும் மாத்திட்டேனே.ஹிஹிஹி !
எஸ்தர்...வாங்கோ நன்றி உங்களுக்கும்.அம்மாவென்றான் சும்மாவா !
அஷோக்....உங்க அட்டகாசம் தாங்கல.வீட்ல உங்கம்மா,வீட்டுக்காரம்மா எப்பிடித்தான் உங்களை.....புறட்சித்தலைவி...மற்றப்பக்கம் காட்டுற தலைவி....!
கலை....அம்மு வாங்கோ.மே 13 ல்தான் இங்க அம்மாக்கள் தினம்.இது ஒரு சும்மா.அம்மாவை எப்பவாச்சும் நாங்கள் மறக்கிறமோ.அவவை மறந்தால் நாங்கள் இல்லை !
வரலாற்றுச் சுவடுகள்....அம்மா என்று சொல்லும்போதே ஒரு நெகிழ்வு.நன்றி உங்கள் அன்புக்கு !
ஸ்ரீராம்...அம்மாவைத் தெய்வமாய்க் கொண்டாடும் உங்களிடமும் என் ஆசீர்வாதங்களைக் கேட்டுக்கொள்ளலாம் !
விச்சு...உங்களின் அன்புக்கும் மிக்க நன்றி.பால்கோவா இப்பவும் இனிக்குது !
விமலன்...நன்றி நன்றி ... உணர்வுள்ள உங்கள் கதைகளை நானும் ரசிக்கிறேன் !
கலா...புட்டுப் புட்டு வைக்ககூடதெண்டு சொல்லிட்டன்.கருப்பு பெல்ட் இருக்கெண்டு எல்லாத்தையும் காட்டிக் குடுக்கலாமோ.பாவமெல்லோ.சில ஞாபகங்கள் எனக்காக மட்டும்.எனக்காவே மட்டும்.பகிர்வதற்கல்ல.குழந்தைகளை அம்மாக்கள் மறப்பார்களா !
யோகா...அப்பா கலா உங்களுக்குப் பாட்டி....நீங்கள் பேரன்.கலைக்கு அண்ணி.அப்போ ....எனக்கு என்னமுறை வேணும் ?!
அப்பாஜி...அம்மாவை எப்படிச் சொன்னாலும் பாராட்டலாம்.நன்றி !
சீனி...நன்றி அம்மாவின் தோழமையோடு தொட்டணைத்துப் போனமைக்கு !
ரதி....ரதியம்மா....வாங்கோ வணக்கம் சுகம்தானே !
ஜோதிஜி...என்ன உங்களைக் காணவே கிடைக்குதில்லை.தேவியர்கள் நீங்கள் சுகம்தானே.ரொம்ப பிஸியாயிட்டீங்கள் போல !
செய்தாலி...என் கவிதைக் கருவில் இன்னொரு குழந்தையும் கண்டேன் உங்கள் பின்னூட்டத்தில்.நன்றி தோழமையே !
கலியராஜ்...தவறா சரியா.தமிழ்ல மாத்துங்கோ உங்கட பெயரை.அன்புக்கு நன்றி.மறக்காம வந்ததுக்கும் !
நடா...என்ன வர வர அரசியல்வாதியாகிப் போனீங்கள்.கஸ்டம்தான் !
இராஜராஜேஸ்வரி....அன்னையர் தின வாழ்த்துகள் உங்கள் பதிவில் எப்போதும்தானே.நன்றி ஆன்மீகத்தோழி !
கீதா...நாங்கள் சோர்ந்துபோகும் நேரம் துணைவன்தானே தாயாகிறான்.அவன் தாயாகும்போது அதே குழந்தைதனம் அவன் மடியில் புரள்கிறதே.அந்த அன்புக்கு ஈடு என்ன !
சிட்டுக்குருவி...இனி நான் சொல்லி வைக்கவேணும் முதல் பின்னூட்டம் சிட்டுவுக்குத்தானெண்டு.பறந்து வந்திடுங்கோ !
அருணா....நீங்க சின்னப்பிள்ளையோ...நம்புறன்.ஆனா உங்கள் கவிதைகளின் தரம்....!
கணேஸ்...என்னோட ஃப்ரெண்ட் ....தவறுப்பட்டுப்போச்சு !
ReplyDeleteநேசன்...அன்பான உறவு !
மதுமதி...அன்புக்கு நன்றி !
ராஜி...எங்க ஆளைக் காணோம் இந்தப்பக்கம் !
உங்கள் எல்லாருக்குமே எப்பவும் என் அன்பு இருக்கும் !
காலை வணக்கம்,மகளே!
ReplyDeleteமனத்தை கட்டி நிற்கின்றது கவிதை.
ReplyDeleteஅன்னையின் சிறப்பை சொல்லி மாளாது.
வாழ்த்துகள் ஹேமா.
அருமை ஹேமா <3
ReplyDelete