Friday, May 18, 2012

மே 18- 2012...

நமக்கான கனவுகள்
எங்களுக்கேயானவை
சதுரங்கச் சுழிகளிலும்
பாம்பு துரத்தி ஏறும்
ஏணிகளின் உச்சியிலும்
அவை காத்திருக்கும்.

எம் கனவுகள்
வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்
நீரைப்போல் ஈரமானவை
பாலைவன நீரைப்போல
மண் உறிஞ்சிக் காய்ந்து
அடையாளம் தொலைக்காது.

என் பிணம் காவி வரும்
என் தாய்
தன் குறியையும்
காக்கவேண்டியிருக்கிறது.

என் தேசத்தின்
ஒவ்வொரு துகள் மண்ணிலும்
என் மக்களின் குருதி
காய்ந்த சருகுகளின் அடியில்
தொலைந்து போன
என் உறவுகள்
எப்போதும் அவர்கள் பற்றிய
எம் கனவு பற்றிய
நினைவுகளை அழிக்க
எவராலும் ஆகாது.

தீயும் போரும்
செல்லப்பூனை எமக்கு
இறப்புப் பற்றிய பயம் அற்று
கனவு நுரைகளை நீர்க்கவைத்து
எமக்கான கனவுகளைத் தொடரும்
காலடித் தடங்களுக்கு
அடையாளம் காட்டும்
நாம்........மிதிப்பட்ட
குருதி வழிகாட்டல்.

நமக்கான தரிசல் காடுகளிலாவது
எம் கனவுகள்
கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும்
கனவுகளைச் சீராக்க வரும்
இளம் காலச் சூரியர்களுக்காக!!!

ஹேமா(சுவிஸ்)

58 comments:

  1. வலிகளும் ரத்தமும் மறக்க முடியாதவைகள். //என் பிணம் காவி வரும்
    என் தாய்
    தன் குறியையும்
    காக்கவேண்டியிருக்கிறது// வேதனையான வரிகள் ஹேமா.அப்பாடி!! இன்னைக்குத்தான் நான் பர்ஸ்ட்.

    ReplyDelete
  2. நேரத்தோட கமண்ட் போடும் பக்கியம் பெற்றவன் நான் இன்று...

    ReplyDelete
  3. மன்னிக்கவும் பாக்கியம் என்னு வாசிக்கவும்

    ReplyDelete
  4. என்ன சொல்வது வழமையான புரிதல்கள் தான் உங்கள் கவிதையில் எனக்கு புரிகிறது...

    இருந்தும் இந்த கவிதையில் ஒரு வலி தெரிகிறது..

    ReplyDelete
  5. எம் கனவுகள்
    வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்
    நீரைப்போல் ஈரமானவை
    பாலைவன நீரைப்போல
    மண் உறிஞ்சிக் காய்ந்து
    அடையாளம் தொலைக்காது.//

    //நீரை இறுக்கி வைத்திருக்கும் வேர்களைப் போல் ஈரமானது
    எம் கனவுகள்///

    என்னுடைய சிந்தனைக்கு இப்படித்தான் தோன்றும் மிகவும் வித்தியாசமான கற்பனைகள்.

    ReplyDelete
  6. மனம் நிறைக்கும் நம்பிக்கையில் மனம் நிறைகிறது ஹேமா. தீயும் போரும் செல்லப்பூனையென்னும் வரிகளில் எத்தனை ஆழம். வேண்டாமென்று துரத்தினாலும் காலைச் சுற்றி வரும் துயரம். மனவேதனையைக் காலம் ஆற்றும். காலத்தின் வேதனையை கவிதைகள் ஆற்றும். ஆற்றிக்கொண்டிருக்கின்றன, உங்கள் கவிதைகள், இரணங்களையும் மனங்களையும்.

    ReplyDelete
  7. நமக்கான தரிசல் காடுகளிலாவது
    எம் கனவுகள்
    கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும்
    கனவுகளைச் சீராக்க வரும்
    இளம் காலச் சூரியர்களுக்காக!!!

    -வலியினூடாக வேதனையில் விளைந்த கவிதையில் நம்பிக்கை தரும் வரிகள். மனத்துயரை ஆற்றும் வல்லமை காலத்துக்கும் நட்புகளுக்கும் உண்டு. இரண்டும் உங்களுக்கு என்றும் உடனிருக்கட்டும்.

    ReplyDelete
  8. நிச்சயமாக
    படிப்பவர்கள் அனைவரின் மனதிலும்
    ஒரு வலியை அல்லது துரோகத்தின் கசடை
    நினைவூட்டிப் போகும் ஆற்றல் மிக்க பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வணக்கம்க்கா. கவிதையின் வரிகளில் வேதனையை என்னால உணர முடிஞ்சுது. வழமைபோல உங்கள் தமிழின் அழகில் மெய்மறந்து போறேன்.

    ReplyDelete
  10. மறைந்த உறவுகளுக்கு அஞ்சலிகள்.
    /எம் கனவுகள்
    கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும்
    கனவுகளைச் சீராக்க வரும்
    இளம் காலச் சூரியர்களுக்காக!!!/
    நிச்சயம் நனவாகும் ஓர் நாள்.

    ReplyDelete
  11. எம் கனவுகள்
    வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்
    நீரைப்போல் ஈரமானவை

    கண்களில் ஈரம் கசியவைக்கும்
    கவிதை வரிகள்..

    ReplyDelete
  12. எம் கனவுகள்
    வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்
    நீரைப்போல் ஈரமானவை
    பாலைவன நீரைப்போல
    மண் உறிஞ்சிக் காய்ந்து
    அடையாளம் தொலைக்காது.//

    கண்ணீர் கசிய வைக்கும் வலி
    நிறைந்த வரிகள்.

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வலிகளோடு இன்னொரு வருடமும் கடந்து போகிறது. இலட்சியக்கனவுகள் கலையாமலே தொடரட்டும்.

    ReplyDelete
  14. வலி வழியும் நினைவுகள்

    ReplyDelete
  15. எந்த தமிழராலும் மறக்க முடியாத நினைவுகள் அக்கா. என்றும் நம் நினைவை விட்டு நீங்காதவை நெஞ்சை உலுப்புகிறது உங்கள் கவி என் உறவுகளுக்கு என் கண்ணீர் அஞ்ஞலி......

    ReplyDelete
  16. வலிகள் ,உணர்வுகள் ,உணர்ச்சிகள் என் உருகவைத்த நாட்கள்.கத்தரிப்பூக்களரில் காத்திருக்கும் கனவு . ம்ம்ம் கவிதை குறியீடு ரசிக்க வைக்குது.

    ReplyDelete
  17. கவிதையிலே ஆழம் அறிகிறேன்ன்...

    ReplyDelete
  18. அக்கா கவிதை மனதை கனக்க செயுதுங்க அக்கா ..

    ReplyDelete
  19. வாங்கிய வலிகள்
    சுதந்திரமாய் வாழ்வதற்கான வழியை அடைந்தே தீரவேண்டிய கட்டாயத்தை உணர வேண்டிய துயர நாள் இது.

    ReplyDelete
  20. தியாகங்கள் என்றுமே வீண் போவதில்லை...

    ReplyDelete
  21. கண்முன்னே அவலங்களை கட்டுவதே கனவுகள் தொலைந்து போனதே... எண்கள் வாழ்வு வீழ்ந்து போனதே ... ஏக்கங்கள் தேர்ந்து வளப்பம் தரும் வாழ்வு தருமே ஒன்று படுவோம் ஒன்று படவைப்போம் ....

    ReplyDelete
  22. வணக்கம்,மகளே!முன்னரும்,பின்னரும் மூன்று ஆண்டுகள் மூன்று யுகங்கள் கடந்ததுபோல்.....................எத்தனை பிஞ்சுகள் கருகின?எத்தனை பெண்கள் துணை இழந்தனர்?எத்தனை உறவுகள் அங்கம் இழந்தனர்?ஆறாத ரணமாக...............ஹும்!வல்லரசுகள்,வல்ல அரசுகளாக,இன்னுமின்னும் உதிரம் குடிக்க.......................விடியும்,ஒரு நாள்!

    ReplyDelete
  23. என் பிணம் காவி வரும்
    என் தாய்
    தன் குறியையும்
    காக்கவேண்டியிருக்கிறது\\\\

    எதுவுக்கும் ஆகமுடியாமல் போன..
    நம்மளால்,ஆதங்கங்களை இப்படித்தான் வெளிப்படுத்த முடியும்.
    இனியொரு பிறவி அதிலும்..ஈழத்தமிழராய் வேண்டாம் ஜய்யாசாமி! வேதனையான நிகழ்வுகளும்...இன்நாளும். உதயம்
    வராமலா!போகும்?

    ReplyDelete
  24. "என் தேசத்தின்
    ஒவ்வொரு துகள் மண்ணிலும்
    என் மக்களின் குருதி".

    ReplyDelete
  25. மனதை கனக்க செய்த கவிதை .

    ReplyDelete
  26. ஷேமா அக்கா....

    ஆறியக் காயத்தைக்
    கீறிப் பார்த்திருக்கிறீர்கள்.

    வலி உள்ள வடு அது.
    மேலும் வலிக்கும் தான்.

    ஆறுதலுக்குத் தற்போது
    வார்த்தை மட்டும் தான்
    மருந்து அக்கா.

    ReplyDelete
  27. நமக்கான தரிசல் காடுகளிலாவது
    எம் கனவுகள்
    கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும்
    கனவுகளைச் சீராக்க வரும்
    இளம் காலச் சூரியர்களுக்காக!!!:///////

    உங்களின் மற்றுமொரு கவனிப்புக்குரிய கவிதை ஹேமா! ஒவ்வொரு வரியையும் நன்குவிளக்கிச் சொல்ல முடியும்! உணர்வுகளைக் குழைத்து எழுதியிருக்கீங்க!

    நாம் சந்தித்த அவலங்களை கோபத்தோடு சொல்வது மாதிரமின்றி, இன்னும் எதுவும் முடிந்துவிடவில்லை என்பதையும் ஆழமாக வலியுறுத்துகிறது கவிதை!

    ம்..... இளம்சூரியர்கள் வரத்தான் போகிறார்கள்.....!

    ReplyDelete
  28. வலிகளையும் வேதனைகளையும் வார்த்தைகளில் விளக்கும் கவிதை.

    ReplyDelete
  29. ரணம் தொலைத்த வடுக்கள் இன்னும் மௌன சாட்சியாய்..மரித்தோருக்கு என் கண்ணீர் அஞ்சலி...

    ReplyDelete
  30. வலி மிகும் வரிகள் .

    ReplyDelete
  31. //என் பிணம் காவி வரும்
    என் தாய்
    தன் குறியையும்
    காக்கவேண்டியிருக்கிறது.//செய்திகளில் படித்ததை உங்கள் கவியில் காண்கிறேன் வேதநியான உண்மை

    ReplyDelete
  32. இன்றைய தினம் எனக்கு ஞாபகமிருந்தது. அதுவும் காலையில உங்க கவிதையப் படிச்சதுலருந்து மனசே கனத்துப் போச்சு. இப்ப திரும்பப் படிக்கையிலும்... என் தாய் தன் குறியைக் காக்க வேண்டியிருக்கிறது என்ற வரிகள் தந்த வேதனையும் வலியும்... என்னை மறுபடி அழ வெச்சிட்டியே ஃப்ரெண்ட்!

    ReplyDelete
  33. வரிகள் தந்த வேதனை சொல்லி மாளாது...
    வலிக்கின்ற கவிதை.

    ReplyDelete
  34. வணக்கம் ஹேமா, ஒவ்வொரு ஈழத்தமிழனதும் ஆழ்மன வலிகளையும், கோபங்களையும் முழுவீச்சுடன் வெளிப்படுத்தியிருக்கிறது உங்கள் கவி வரிகள்.

    ReplyDelete
  35. உங்கள் விடா முயற்சிக்கும் தளராத நம்பிக்கைக்கும் வணக்கம்.

    ReplyDelete
  36. ////தீயும் போரும்
    செல்லப்பூனை எமக்கு/////

    அக்கா இந்நாளை என்றும் மறக்க முடியாதே....

    மனம் கனத்த நாள் இது...

    ReplyDelete
  37. என் தாய்
    தன் குறியையும்
    காக்கவேண்டியிருக்கிறது.
    >>
    மகளை, பேத்தியை காக்கவேண்டிய தாய் தன்னை பாதுகாத்துக் கொள்வதென்பது எவ்வளவு கொடுமையான விஷயம் ஹேமாக்கா.

    ReplyDelete
  38. உதிர்த்த
    கண்ணீரும்
    ஒழுக்கிய பச்சைக் குருதியும்
    ஈழ மண்ணிலும் தமிழ் நெஞ்சிலும்
    ஆறா வடுவாய்

    ReplyDelete
  39. இளம் சூரியர்களுக்கான காத்திருப்பு வீண் போகாது ஹேமா

    ReplyDelete
  40. வேடிக்கை மனிதர்கள் போலத்தான் இந்த நாளை நினைவு கூற வேண்டியுள்ளது,

    ReplyDelete
  41. வலி தாங்கிய கவிதை.... இன்றுதான் தற்செயலாகக் கண்டேன்.. தாமதத்திற்கு மன்னிக்கவும் ஹேமா.

    ReplyDelete
  42. நமக்கான தரிசல் காடுகளிலாவது
    எம் கனவுகள்
    கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும் /////

    கத்தரிப்பூ நிறம் கூட ஆயிரம் கதைகள் சொல்லுதே!

    ReplyDelete
  43. காலை வணக்கம்,மகளே!நலமாகவே இருக்கிறேன்.கொஞ்சம் சிரமமாக இருக்கிறது,நாளை பார்க்கலாம்!

    ReplyDelete
  44. மீள் வணக்கம்,மகளே!"அது" இப்போது தான் பார்த்தேன்.சந்தோஷம். நலமாகவே இருக்கிறேன்!

    ReplyDelete
  45. மனதை கனக்க வைக்கும் கவிதை வரிகள்.
    காலமும், கவிதைகளும் காயம் ஆற்றும். வேறென்ன சொல்ல?

    ReplyDelete
  46. ஒரு செய்தி அனுப்பியிருக்கிறேன்,மகளே

    ReplyDelete
  47. கனம் மிகுந்த கவிதை வரிகள் வாழ்வின் வலி சொல்லிச்செல்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. காலை வணக்கம்,மகளே !சுகமாக இருக்கிறீர்களா?

    ReplyDelete
  49. //ஒவ்வொரு துகள் மண்ணிலும்
    என் மக்களின் குருதி//

    எம் வாழ்வின் ஒவ்வொரு துகளிலும் எம் தாய்த் தமிழ் உறவை காக்க முடியாத குற்ற உணர்ச்சி.. அதை வெளிப்படுத்தி எங்களை ஒருபோதும் நியாயபடுத்தியும் விடமுடியாத கேவலம்..

    ReplyDelete
  50. உங்கள் உணர்வுள்ள கவிதைகள் மனதை எப்பொழுதும் கரைத்து விடுகிறது..

    ReplyDelete
  51. காலை வணக்கம்,மகளே!நலமா???

    ReplyDelete
  52. வலைச் சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளேன்
    நேரம் இருப்பின் வாருங்கள் (வலைச்சரத்திற்கு )

    ReplyDelete
  53. இளம் சூரியர்களின் வெளிச்சத்தில் இந்த வலிகளை மறந்து மின்னுவோம் அக்கா ..
    அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.. உணர்ச்சிக் கவிதை ...

    ReplyDelete
  54. காலை வணக்கம்,மகளே!நலமா???

    ReplyDelete
  55. கனவுகளைச் சீராக்க வரும்
    இளம் காலச் சூரியர்களுக்காக!!!
    - அருமை

    ReplyDelete
  56. Please tell me how to add animation pictures in blogspot

    ReplyDelete