Wednesday, May 23, 2012

உறவுகள்...

அள்ளமுடியா
அமில மழை
தூறித் துமித்து முடிய
அடித்த பேய்க்காற்றில்
மூடிய கதவுகளை
அரித்துக்கொண்டிருக்கிறது
ஆக்ரோஷக் கறையான்கள்
பாறிக்கொண்டிருக்கிறது
நிலைப்படியோடு
கதவும் உறவும்!!!

ஹேமா(சுவிஸ்)

52 comments:

  1. என்னமோ ஒரு கதை சொல்ல வாரீங்கன்னு கவிதை அழகாக சொல்லுதே....!!!

    ReplyDelete
  2. சிந்திக்க வைக்கிறது ..!

    ReplyDelete
  3. சூப்பர் அக்கா உறவுகள் பற்றி அழகான அருமையான கவிதை

    ReplyDelete
  4. வணக்கம்,ஹேமா!அமில மழை.............!!!!இதற்கு மேல் வார்த்தைகள் இருக்கவே முடியாது,எம் நிலை சொல்ல.பார்ப்போம்.

    ReplyDelete
  5. தொக்கி நிற்பது?????????

    ReplyDelete
  6. வணக்கம் ஹேமா !அழகான கவிதை!” மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை” என்று சொல்வார்கள்து போல இருக்கிறது இக்கவிதையின் உள்ளடக்கம்!

    அமில மழை என்பதே பெரும் துன்பம்! அது உடனே நின்றுவிடாமல், தூறிப் பின்னர் துமித்து நின்றிருக்கிறது! அதன் பின்னர் பெரும் காற்று என்கிறீர்கள்! அது இன்னும் துன்பம்!

    அத்தோடு முடிந்ததா? - பின்னர் கறையான்களின் அட்டகாசம்!

    ஒரு மனிதனுக்கு வரக்கூடிய எல்லாத் துன்பங்களையும் சொல்கிறது கவிதை!

    ஆனால் கடைசி வரிகள் தான் நம்பிக்கை ஊட்டுவனவாய் இல்லை! - தமிழர்களின் வாழ்க்கையே இப்படியான துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் நடுவில் தானே?

    ஆகவே கதவும் பாற வேண்டாம்! உறவும் பாற வேண்டாம்!

    கடைசி வரிகளில் நம்பிக்கையூட்டியிருக்கலாம் ஹேமா!

    மற்றும்படி கவிதையின் சித்தரிப்பு அருமை!!

    ReplyDelete
  7. கவிதை மனதை அசைத்தது. அருமை ஃப்ரெண்ட். இப்போதெல்லாம் நான் உணர்ந்தது சரியா என்று அறிய மாத்தியோசி மணியை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். நன்றி மணி.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. பாறிக்கொண்டிருக்கிறது ????

    ReplyDelete
  10. அக்காஆஆஆஅ

    ReplyDelete
  11. கவிதை நல்லா இருக்கு அக்கா ...

    மணி அண்ணாவின் விளக்கம் ரொம்ப சூப்பர் ,,,,

    முழுமையா புரிந்துக் கொள்ள முடிகிறது

    ReplyDelete
  12. ....கலியுகம்
    விழித்தல் நன்று
    ம்(;

    ReplyDelete
  13. என் இனிய தோழி ஹேமா....

    உங்கள் கவிதை பாதி புரிந்தது போலவும் பாதி புரியாதது போலவும் உள்ளது.
    பாறிக்கொண்டிருக்கிறது என்றால் என்ன பொருள்?
    (ஹேமா... நீங்க பெரிய ஆளுங்க.... இப்படி ஒரு சின்னோன்டு கவிதை எழுதி என்னோட ஒரு மணிநேரத்தை யோசிக்கவே பிடிச்சிடுறீங்க.)

    ReplyDelete
  14. மணி அண்ணாவின் விளக்கம் ரொம்ப சூப்பர் ,,,,

    முழுமையா புரிந்துக் கொள்ள முடிகிறது\\\\\
    ஐய்ய....என் நாத்தனாரு ரொஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒம்பப் புத்திசாலி என இம்புட்டு நாளும் நினைத்திருந்தேன்....

    ReplyDelete
  15. ஹேமா,
    உறவுகளுக்காக..உதிர்ந்த சொற்கள
    "உண்மையாகவே" உதிரவைக்கிறது
    கண்ணீரை.

    ReplyDelete
  16. எத்துணை துன்பங்கள் வந்தாலும் உறவுகள் தொடரும்.

    ReplyDelete
  17. நெஞ்சுக்கும் நிற்கும் வரிகள் ..

    ReplyDelete
  18. ஹேமா!கவிதைக்கெல்லாம் இன்னும் கூட பொருள் தேடிக்கொண்டுதான் உள்ளேன்.ஆனால் இப்பவெல்லாம் மழலை மொழி மாதிரி மெல்ல புரிகிறது.

    ReplyDelete
  19. ஹேமா!வெறுமனே நான் வந்து பின்னூட்டம் சொல்லி விட்டுப் போவதில்லை.இன்னுமொரு முறை கவிதையை படிக்க தூண்டியது கவிதையின் வரிகள்.

    ReplyDelete
  20. என்னமா கவிதை சொல்லுறாங்கப்பா.......ரூம் போட்டு யோசிசாலும் நமக்கு வரவே வராது:)

    ReplyDelete
  21. நல்ல கவிதைப் பதிவு....தொடருங்கள் ( இத நான் சொல்லனுமாக்கும்)

    ReplyDelete
  22. கவிதையில் கலக்குறீங்க ஹேமா... அதிகம் தமிழ்... பாவிக்கிறீங்க.. அதுதான் சிலது புரியக் கஸ்டமாக இருக்கு..

    கலை சொன்னதுபோல மணியம் கஃபே ஓனரால்.... புரியாதது புரிந்திருக்கு....

    என்ன சொல்வது... “இதுவும் கடந்து போகும்”.

    ReplyDelete
  23. மேலே போட்டிருக்கும் படம் எத்தனையோ கதைகள் சொல்லுது....

    ReplyDelete
  24. மாத்தி யோசி மணி சொன்னதை எதுவும் மாற்றாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மீண்டும் படித்தேன்..கறையான்கள் என்ற துன்பம் ஓடுது. படியும், கதவின் உறவும் பலப்படுகின்றது.முதலில் உங்களைப் பிடித்து கேட்கவேண்டும். ஹேமா.. வார்த்தைகளை எங்கே தேடிப்பிடிக்கிறீர்கள். உங்கள் கவிதைகள் மூளையை குழப்பி விடிய விடிய யோசிக்க வைக்கிறது.(மூளை இருக்கா அப்படின்னு எதிர்கேள்வி கேட்ககூடாது...)

    ReplyDelete
  26. இன்று தான் முதலில் நிதானமாக உங்கள் தளத்தை ரசிக்கிறேன்..அத்தனையும் மிக அருமை..நிறையயயயய வழிகாட்டல்கள் பெற்றுக்கொண்டேன்..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. கரையான் நினைவுகளும் கதவில் தொங்கும் உறவுகளும் இன்னும் பல கவிதைகள் சொல்லும் ம்ம்ம் எல்லாம் கடந்து சொல்லுவோம் காலத்தின் கட்டாயம்!

    ReplyDelete
  28. அன்பின் ஹேமா,

    சிந்திக்கவைத்த அருமையான கவிதை. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  29. பொதுவான அர்த்தம் புரிகிறது. அருமை.
    அமில மழை எதைக் குறிக்கிறது?
    துமித்து, பாறிக் கொண்டிருக்கிறது .. இரு வார்த்தைக்சளும் புரியவில்லை!

    ReplyDelete
  30. பாறிக் கொண்டிருக்கிறது வரிக்கு மாத்தி யோசி மணி சொல்லியிருப்பதிலிருந்து அர்த்தம் கொஞ்சம் குண்ட்சா புரிகிறது!

    ReplyDelete
  31. மற்றுமொரு தரமான/குட்டி கவிதை கவிதாயினி...

    ReplyDelete
  32. துமித்து, பாறிக்கொண்டு... பொருள் தேட வேண்டிய சொற்கள்.
    கவிதையை பலவகைப் புயல்களுக்கு உருவகப் படுத்தி ரசிக்க முடிகிறது.

    ReplyDelete
  33. ஸ்ரீராம். said...

    பொதுவான அர்த்தம் புரிகிறது. அருமை.
    அமில மழை எதைக் குறிக்கிறது?
    துமித்து, பாறிக் கொண்டிருக்கிறது .. இரு வார்த்தைக்சளும் புரியவில்லை!////துமித்து----என்றால் (மழைத்)தூற்றல் என்று பொருள்.....பாறிக் கொண்டிருக்கிறது-----தானே சரிந்து விழுகிறது/விழுந்து கொண்டிருக்கிறது என்று பொருள் தரும்.

    ReplyDelete
  34. நிலைப்படியோடு
    கதவும் உறவும்!!! அருமை ஹேமா

    ReplyDelete
  35. பின்னல்கள் நிறைந்த
    உறவுகளின் நிலைகளை
    காற்றில் படபடக்கும்
    சன்னல் கதவுகளாய்
    வார்த்தைப் பின்னல்களுடன்
    தொகுத்த கவிதை
    கரைதொடும் அலையாய்
    நெஞ்சில் வந்து வந்து போகிறது சகோதரி...

    ReplyDelete
  36. வணக்கம் அக்கா,
    நறுக்கென்று உறைக்கும் கருத்துக்கள் நிரம்பிய சுருக்க கவிதையினை கொடுத்திருக்கிறீங்க.
    ஆக்ரோஷக் கறையான்கள்... உறவுகளின் கழுத்தறுப்பினை உணர்த்திட அருமையான அணியாக வந்து விழுந்திருக்கிறது.

    நன்றி.

    நல்ல கவிதை.

    ReplyDelete
  37. காலை வணக்கம்,மகளே!நலமாக இருக்கிறீர்களா?இன்றைய பொழுது நன்றாக அமைய பிள்ளையார் துணை இருப்பார்!

    ReplyDelete
  38. அமிலமழை, பேய்க்காற்று, ஆக்ரோஷக் கரையான்கள் என்று உறவுகளின் உபத்திரவ நச்சரிப்பில் கதவு மட்டுமல்ல, கருணையும் காணாமற்போய்விடும். மனம் நெகிழ்த்திய கவிதை ஹேமா.

    ReplyDelete
  39. அருமையான கவிதை

    ReplyDelete
  40. நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. உறவுகள் வலி தரும் என்பதை மறுப்பதற்கில்லை.

    மகிழ்வும் தரும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?

    குட்டியா ஒரு கெட்டி(உறுதி/கனம்)க்கவிதை ஹேமா.

    ReplyDelete
  42. காலை வணக்கம்,ஹேமா !இன்றைய பொழுது நல்லபடியாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!

    ReplyDelete
  43. இளந்தமிழன்...அழகான பெயர்...முதல் வருகைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் வரவேண்டிக்கொள்கிறேன் !

    நாஞ்சில் மனோ...கதையேதான்.சுருங்கமாச் சொல்லியிருக்கிறேன் !

    வரலாற்றுச் சுவடுகள்...சிந்திக்கப் புரிய விஷயமேயில்லை.உறவுகள்...இப்பிடித்தான் !

    எஸ்தர் அபி...ம்ம்..உறவுகள் சிலநேரங்களில் சங்கடமான உறவுகளாக மாறிவிடுகிறார்கள் !

    யோகா அப்பா...ம்ம்....நேரே திட்டமுடியாத உறவுகள்.மனம் வலிச்சால் எழுதிவிட்டால் பாரம் குறைகிறது அப்பா.தொக்கி நிற்பது உறவுகள்தான் !

    மணி...வாங்கோ.கவிதைக்கு அழகாக விளக்கம் கொடுத்துவிட்டிருக்கிறீங்க.மிக்க நன்றி.தொடர்ந்து வந்தவர்களுக்கு உதவியாய் இருந்திருக்கிறது.அமிலமழை அடிக்கத்தொடங்கி...கதவு பாறி விழும் நிலையில் என்ன நம்பிக்கை வரக்கிடக்கிறது.இனி எப்படித்தான் நிமிர்த்தினாலும் அது தன்னியல்போடு நிமிர்ந்து நிற்குமென்று நம்புகிறீர்களா?

    கணேஸ்...ஃப்ரெண்ட் மணியின் கருத்து உங்கள் கருத்தா?உங்களுக்கென்றும் கருத்து இருக்குமே.சொன்னால் ஊக்கம்
    தரும் !

    வி.ஆர்...வணக்கம் சுவாமி.உண்மையில் அதிசய மனிதர் நீங்கள்.கிட்டத்தட்ட 2-3 வருடத்தில் எனக்கு மூன்று முறைகள் இப்படி அன்புத்தேடல் ஒன்று உங்களிடமிருந்து.நிச்சயம் இந்த முறை தொடர்பு கொள்கிறேன் !

    சின்னப்பயல்...பாறுதல் - அடியொட்ட வேரோடு,இனிமேல் அடையாளம்கூட இல்லாமல் அழிந்து போதல்.சரிந்து விழுவதை நிமிர்த்தலாம்.இது முடியவே முடியாது.பலபேருடைய சந்தேகம் உங்களுக்கும்.உங்கள் மூலமாக சொல்லிக்கொள்கிறேன் !

    கலை...மணியண்ணா சொன்னபடியால்தானா புரிந்தது.சின்னக்கவிதை.எளிமையான தமிழ்ச்சொற்கள்தானே.வம்பளக்க மட்டும் எல்லா வார்த்தையும் வரும் காக்காவுக்கு !

    அருணா செல்வம்...என்ன நீங்களும் கலைபோல.உங்கள் கவிதையில் தமிழ்ச்சொற்கள் அழகாக
    உலவுகிறதே !

    செய்தாலி...உறவுகள்கூட கலியுகத்தில் மாற்றம் எடுக்கிறது.பாசம் குறைகிறதோ !

    கலா...என் சிங்கத் தோழி எல்லோர் வாழ்க்கையிலும் இப்படி அப்படித்தான்.சில உறவுகளோடு விட்டுக்கொடுத்து அசையமுடிகிறது.சில உறவுகள் பாறி விழுந்துவிடுகிறது.தாங்கிப்பிடிக்க ஏங்கினாலும் முடிவதில்லையே...என்ன செய்ய !

    விச்சு...கவிதையைத் திரும்பவும் வந்து பார்த்திருக்கீங்க.
    ம்ம்ம்...மூளை இருக்கிறவங்ககிட்டத்தான் நான் கடனெல்லாம் கேப்பேன்.உங்ககிட்ட ஹிஹிஹி.என்ன விச்சு அத்தனை வார்த்தைகளும் நாம் நித்தம் பாவிக்கும் வார்த்தைகள்தானே. வாத்தியாருக்கே விளங்காட்டி மத்தவங்கெ...அதுவும் உங்களிட்ட படிக்கிற பிள்ளைகள் பாவம் சரியான பாவம் !

    ReplyDelete
  44. அரசன்...சிலநேரங்களில் நீங்கள் இப்போதெல்லாம் வருவதேயில்லை.கவிதை புரியாதது ஒரு காரணமோ தெரியவில்லை.கவிதை உங்கள் பார்வைக்கு எப்படிப் படுகிறதென்பதுதானே கருத்தாகிறது.கவிதையின் அழகும் அதுதானே.நான் விளக்கம் தந்தால் அது கதையாகிவிடுமே.அடிக்கடி வாங்கோ அரசன் !

    நடா...அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.’மழலைமொழி’.இவ்வளவு நாளையில புரிஞ்சிருக்குன்னு சொன்னதே சந்தோஷம்.ஆனாலும் என்னிடம் இடக்கு முடக்காகக் கருத்தை ஒளிச்சு வச்சிருக்கும் எண்ணக் கவிதைகள் நிறையவே.என்ன செய்ய ‘உயிரோசை’ இதழில் இடம் பிடிக்கவேணுமே.சரி இடைக்கிடை மழலைத் தமிழிலும் தரப்பார்க்கிறேன் !

    நடா...போன பதிவில் ’நச்சுப்பல்லி’ கேட்ட ஞாபகம்.எங்களூரில் ஏதாவது புது விஷயம் கதைக்கும்போது முன்னுக்கே அபசகுனமாக ஏதாவது சொன்னால் அதைக் கூடாத கருத்துச் சொல்றதுபோல நச்சுப்பல்லி சொல்லுது என்போம்.”நச்சுப்பல்லிபோல முன்னுக்கே மூதேவி சொல்லிச்சு.எல்லாமே அழிஞ்சுபோச்சு...ஹிஹிஹி இப்பிடி” !

    சிட்டுக்குருவி...கவிதை எழுத இப்போதைக்கு அழகான பெண்களைப் பாருங்க.ஏனெண்டா அந்த வயசுதானே.ரூமெல்லாம் போட்டு ஏன் வீண் செலவு !

    அதிரா...படத்தை நீங்கள் ரசித்திருக்கிறீர்கள்.நன்றி பூஸாருக்கும்.ஏன் அதிரா நாங்கள் சாதாரணமாக பாறிவிழுதல் யாழ் தமிழில் பாவிக்கிறோமே.அமிலமழை...வார்த்தைகளின் கொடூரம் தாங்காமல் பாவித்திருக்கிறோமே.கஸ்டமாயிருக்கா.மணியின் பின்னூட்டம் முன்னுக்கே வந்தபடியால் உதவி.அவருக்கும் நன்றி சொல்வோம்.கிர்ர்ர்ர்ர் இதுவும் கடந்து அடுத்த கவிதை வரும்.நீங்களும் பூஸாரும் வரவே மாட்டீங்கள் !

    இராமநுசம் ஐயா...நீங்களுமா......?!

    அதிசயா...வாங்கோ வாங்கோ.இனி அடிக்கடி சந்திப்போம் !

    தனிமரம்....நேசன் கறையான் நினைவுகளும் கதவில் தொங்கும் உறவுகளும்....நிலைமை இப்போ இதுதான் !

    நித்திலம் - சிப்பிக்குள் முத்து.நன்றி பவளா.உங்களிடமிருந்து ஆழமான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன் எப்போதும்.அன்புக்கு நன்றி !

    ஸ்ரீராம்...பாறாத உறவுகளுக்கு இன்னும் அன்பு என்னும் மண் அணை கொடுப்போம்.நிலைத்து வாழும் இறுதிவரை !

    அப்பாஜி...பாறுதல்....ஏற்கனவே சொல்லிவிட்டேன்.தூறலைவிடச் சின்னது துமித்தல்.மழைத்துமி - தூறல்.அதைப்போல வார்த்தைத் தூறலுக்கு அமிலம் -நஞ்சுத்தூறலுகுப் பாவித்திருக்கிறேன் !

    யோகா....அப்பா எனக்காகக் கருத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றி.நான் இன்னும் ஆழமாகச் சொல்லியிருக்கிறே.சரியா சொல்லுங்கோ !

    எவரெஸ்ட்துரை...நன்றி ஐயா உங்கள் அன்பான கருத்துக்கு.என் கவிதைகளைக் கவனிக்கிறீர்கள் என்பது மிக்க சந்தோஷமும் கூட !

    மகி...வாங்கோ வாங்கோ.ஊருக்குப் போய் ஒய்வெடுத்து வந்திருக்கிறீங்க.சுகம்தானே.அன்பான ஆழமான கவிபோல ஒரு கருத்துக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் !

    காஞ்சனா...அன்ரி ஐயாவையும் உங்களையும் காண்பது குறைவாகவே இருக்கு.சுகம்தானே.தொடர்பில்தான் இருக்கிறேன் எப்போதும் உங்களோடு !

    நிரூ...கனநாளைக்குப் பிறகு....சுகம்தானே.முகப்புத்தகத்திலும் பார்த்தேன் இந்தக் கவிதையை இணைத்திருந்தீர்கள்.நன்றி !

    கீதா...மனம் நொந்துதான் பாறிக்கொண்டு நிற்கும் ஒரு உறவு.....விழுந்துவிடும் இல்லை விழுந்துவிட்ட நிலையில்...தாங்கமுடியாமல் 4 வரியில் வந்து விழுந்த வார்த்தைகளோடு நிறுத்திவிட்டேன் !

    யாதவன்...என்ன இப்பல்லாம் சின்னதா ஒரு கருத்து.வெளிநாடு ம்ம்....எல்லாம் சரியாயிடும் !

    என் ராஜபாட்டை"- ராஜா...நன்றி வருகைக்கு !

    விமலன்...அன்புக்கும் வருகைக்கும் நன்றி !

    சத்ரியா...கடைசிப் பந்தியா....எல்லாரும் என்ன சொல்லுகினமெண்டு சிங்கப்பூரில இருந்து பாத்துக்கொண்டிருந்தீங்களோ.உறவுகள் மகிழ்வும் தரும் வலியும் தரும்.மறுக்கேல்ல.ஆனால் ஏன் வேண்டாமெண்டு விட்டே போகவேணும்.உப்புமடச் சந்தியில் சொல்லியிருந்தேன்......

    "அவரவருக்கான பலமும் பலகீனங்களோடும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்க ஏன் தவறிவிடுகிறோம்.நம்மிலும் நம்மோடு இருப்பவர்களிடமும் ரசிக்கத்தக்க எத்தனையோ விஷயங்களைக் கவனிக்கத்தவறி வெறுமனே கடந்துபோய்க்கொண்டிருப்பதா வாழ்வு...."!

    ”தவறுகள் மன்னிப்போடு திருத்தப்படவேண்டியவை.தண்டிக்கப்படவேண்டியவை அல்ல...”

    ReplyDelete
  45. யோகா....அப்பா எனக்காகக் கருத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றி.நான் இன்னும் ஆழமாகச் சொல்லியிருக்கிறேன்.சரியா சொல்லுங்கோ !////மெத்தச் சரி,மகளே!எழுதியவர்களால் தான் ஆழமாக விளக்க முடியும்,நான் பொதுப்படையாகச் சொன்னேன் அவ்வளவுதான்.

    ReplyDelete
  46. ஹேமா அக்கா அவர்களே கவிதை மிகவும் அருமை . நிலைக்கும்-கதவுக்கும் உள்ள உறவைப்போன்று நம்முடைய உறவும் தொடரட்டும்.

    ReplyDelete
  47. காலை வணக்கம்,மகளே!

    ReplyDelete
  48. அருமை அக்கா..

    ReplyDelete
  49. மூடிய கதவுகளை
    அரித்துக்கொண்டிருக்கிறது
    ஆக்ரோஷக் கறையான்கள்

    ReplyDelete