Friday, January 06, 2012

இரண்டும் ஒன்றுதான்...

சிணுங்கிச் சத்தமிடும்
மெட்டி
வாங்கித் தந்துவிட்டு
இலக்கணம் தவறிய
இசையென
நகைக்கிறான்
என் நடையின்
தாளக்கட்டை.

பாடச்சொல்லிக் கேட்டுவிட்டு
பரிகாசம் செய்கிறான்
பார்...யாரோ
படலையடியில்
பிச்சைக்காரரென்று!!!
தொங்கும்...
வெறும் கூட்டில்

தூ(தொ)ங்கிக்கொண்டிருக்கிறது
சுகமான அவன் நினைவுகள்.

கனவு முட்டையிட
பொரித்த காதல்குஞ்சை
இறக்கை முளைக்கமுன்
பறக்கப் பழக்கியது யார் ?

கனவும் முட்டையும்
காதலும் கூடும்
இறக்கையும் ஏக்கமும்
காத்திருக்கிறது
தொங்கும் மனதிற்குள்
தூக்கணாங் குருவியாய்
கூட்டை நிரப்புமுன்
காணாமல் போன
ஜோடிக்குருவிக்காய்!!!

ஹேமா(சுவிஸ்)

50 comments:

  1. //தொங்கும் வெறும் கூட்டில்
    தூங்கிக்கொண்டிருக்கிறது
    சுகமான அவன் நினைவுகள்.//

    - என்னவள் நினைவுகள் தூங்குவதில்லை என்பதே என் பிரச்சனை! :)

    கனவு முட்டையிட
    பொரித்த காதல்குஞ்சை
    இறக்கை முளைக்கமுன்
    பறக்கப் பழக்கிது யார் ?//

    - அழகு - நேர்த்தியை கற்று கொடுக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹேமாவின் கவிதைகளை படிக்கிறேன்.. இரண்டாவது பிடித்திருக்கிறது. ஹேமா நலம் தானே?

    ReplyDelete
  3. வணக்கம் ஹேமா ! பிந்திய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    மெட்டியின் தாளக்கட்டை பார்த்துக் கொண்டே இருந்தேன் (படத்தை) அழகச்ய் சில நினைவுகள் பின்னே செல்கின்றது.பகிடியாகச் சொல்லும் சில வார்த்தைகளை கூட கவிதையாக்கிய விதம் அழகு!

    ReplyDelete
  4. அக்காச்சி ரெண்டு கவிதைகளும் செம அழகு, ஆனாலும் எனக்கு ரெண்டாவது கவிதை ரெம்ப ரெம்ப புடிச்சு இருக்கு :)

    ReplyDelete
  5. தொங்கும் வெறும் கூட்டில்
    தூங்கிக்கொண்டிருக்கிறது
    சுகமான அவன் நினைவுகள்.<<<<<<<<<<<<<

    வாவ்...... என்ன ஒரு கற்பனை!!!
    இதுதான் வலியோடு சேர்ந்த சுகமோ..!!!
    பல நேரங்களில் என் நினைவுகளும் இப்படித்தான் அக்காச்சி...
    வெறும் கூட்டில் அந்தரத்தில் தொங்குது :(

    ReplyDelete
  6. கனவு முட்டையிட
    பொரித்த காதல்குஞ்சை
    இறக்கை முளைக்கமுன்
    பறக்கப் பழக்கிது யார் ?<<<<<<<<<<<<<<<<<<

    வேறு யார் "விதி" என்ற அரக்கன் தான் :(

    ReplyDelete
  7. கனவும் முட்டையும்
    காதலும் கூடும்
    இறக்கையும் ஏக்கமும்
    காத்திருக்கிறது
    தொங்கும் மனதிற்குள்
    தூக்கணாங்குருவியாய்
    கூட்டை நிரப்புமுன்
    காணாமல் போன
    ஜோடிக்குருவிக்காய்!!!<<<<<<<<<<<<<<<<<

    கூட்டை விட்டு காணாமல் போன குருவி திரும்பாததால் காலத்தின் கோலத்தால் அந்த இடத்துக்கு வேறு குருவி வந்தாலும் மனசுக்குள்ளே கனவும் முட்டையும் காதலும் கூடும் இறக்கையும் ஏக்கமும் காத்திருக்கிறது ரகசியமாய் அந்த காணாமல் போன குருவிக்காய் :((

    ReplyDelete
  8. அடக்கோதாரி நான் ஒரு கவிதை எண்டு எல்லோ நினச்சி வாசிச்சன்

    என்னடா ஒரு தொடர்பும் இல்லாம கிடக்கு எழுத்துனடையும் வித்யாசமா இருக்கெண்டு

    முதலாவது கவிதை போட்டிருக்கவே தேவை இல்லை

    ஏன் எண்ட இரண்டாவது கவிதை செம கலக்கல். கொஞ்சம் எண்டாலும் நிறய கதை சொல்லுது. வாசிப்பவரின் சிந்தனையை அல்லது பழைய அனுபவங்களை தூண்டி விடுற கவிதை என்றைக்குமே i love u this kavithai

    ReplyDelete
  9. கனவு முட்டையிட
    பொரித்த காதல்குஞ்சை
    இறக்கை முளைக்கமுன்
    பறக்கப் பழக்கிது யார் ?

    இந்த வரிகளை வாசிக்கும் போது நான் எழுதிய வரிகள் யாபகம் வருகிற்து


    முதல் குழந்தையின் முதல் சுவாசம் நுரையீரல் தாண்டமுன் நுரைகக்கி செத்தது காதல்

    நீங்கள் காதல் பறந்து போனதாக எழுதியிருக்கிறீர்கள் நான் காதல் இறந்துபோனதாக எழுதியுள்ளேன்


    i love ur varikal

    ReplyDelete
  10. //கனவும் முட்டையும்
    காதலும் கூடும்
    இறக்கையும் ஏக்கமும்
    காத்திருக்கிறது//
    கவிதை வரியை படிக்கும்போதே வலிக்குதே வலியை கூட அழகாய் சொல்லிப்போவதில் ...கவிதை
    மிகவும் அருமை

    ReplyDelete
  11. பின்னிட்டிங்க ஹேமா! (தலைய இல்ல, கவிதைய) மெட்டிக் கவிதையை ரசிச்சேன்ன சாதாரண வார்த்தைல சொன்னா, ரெண்டாவது குருவிக் கவிதை மனசுல ஒட்டிக்கிச்சுன்னு ஸ்பெஷலா சொல்லணும். அருமையான சொற் பிரயோகங்கள்! சூப்பர்ப்!

    ReplyDelete
  12. ஹேமா,

    மெட்டி ஒலியும், பரிகாசமும் பிணைப்பை வலுப்படுத்தும். கவலையை விடுங்கோ.

    இணை குருவி இரை தேடி தொலைதூரத்துக்குப் போயிருக்கும் போல. கொஞ்சம் பொருத்திருங்கோ, வந்து விடும்!

    ReplyDelete
  13. இந்த காணாமல் போன ஜோடிக் குருவி பற்றி பல கவிதைகளிலும் மென்ஷன் வருகிறது.... ஆனால் அதனால் பல நல்ல கவிதைகள் கிடைக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.... சேமித்த கணங்கள் வரிசையில் இந்தக் கவிதையும்...! உங்கள் கவிதைகளை காதல் சோகம் என தரம் பிரித்து ஏன் ஒரு புத்தகம் போடக் கூடாது ஹேமா?

    ReplyDelete
  14. கவிதைதனை ரசித்தேன்..சகோ..வார்த்தைகளின் கட்டமைப்பு நேர்த்தியாயிருக்கிறது..வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. வாழ்வு
    கவிதை எக்கமாய்.

    ReplyDelete
  16. அருமையான படைப்பு
    வாழ்த்துக்கள்
    த்.ம

    ReplyDelete
  17. //தொங்கும்...
    வெறும் கூட்டில்
    தூ(தொ)ங்கிக்கொண்டிருக்கிறது
    சுகமான அவன் நினைவுகள்.//நினைவுகள் சுகம் இதைவிட எப்படி சொல்ல அருமை

    ReplyDelete
  18. பிரிவை இதை விட அழகாக சொல்ல முடியும். ஸ்ரீராம் சொன்னமாதிரி பிரிவு துயர் நிறைய கவிதை தருகிறது. ஒரு பிரிவு... ஓராயிரம் கவிதைகள்...

    ReplyDelete
  19. Arumai Hema! Nachnu Irukku. Unga alavukku Nammaala mudiyathuppaa.

    ReplyDelete
  20. ஒரு குருவிக்கூட்டைப் பார்த்து இப்படியெல்லாம் தோணுதே உங்களுக்கு! Nice.

    ReplyDelete
  21. கவிதையும் படங்களூம் குட் மேட்ச்

    ReplyDelete
  22. கூட்டில் தொங்கும் காதல் நன்கு பிடித்தது ஹேமா. அருமை.

    ReplyDelete
  23. எக்ஸலண்ட்... ஹேமா!!!

    ReplyDelete
  24. காணாமல் போன
    ஜோடிக்குருவிக்காய்!!!


    :(

    ReplyDelete
  25. தொங்கும்...
    வெறும் கூட்டில்
    தூ(தொ)ங்கிக்கொண்டிருக்கிறது
    சுகமான அவன் நினைவுகள்.//

    ஆஹா மிகவும் ரசனையான வரிகள், மிகவும் ரசித்தேன், படங்களும் டச்சிங் வாழ்த்துக்கள் ஹேமா...!!!

    ReplyDelete
  26. நிரம்பித் தளும்பியது மனம். இப்பிடியும் அப்பப்ப எழுதுங்க ஹேமா.

    ReplyDelete
  27. பகடியில் பதுங்கிய பரிவைக் கண்டுணர முடிகிறது முன்னதில். முதல் கவி மனம் இலேசாக்க... இரண்டாவது கொஞ்சம் கனம். தூக்கணாங்குருவிக்கூட்டைப் போல நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட கவிதை. காணாமல் போன ஜோடிக்குருவிக்காய் காத்திருக்கும் ஏக்கம் கவிதை முடித்தபின் நம் மனங்களில் இடம்பெயர்கிறது.

    ReplyDelete
  28. முத்தங்களின் தித்திப்பை சொல்லி திகைக்க வைக்கிறீர்கள் .கனவில் வந்த காதலை பாவாக்கி எங்களுக்கு பரவசமூட்டுகிரீர்கள் மொத்தத்தில் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்து உர்ச்சகமூட்டுகிரீர்கள் பாராட்டுகள் தொடர்க ..

    ReplyDelete
  29. கனவு முட்டையிட
    பொரித்த காதல்குஞ்சை
    இறக்கை முளைக்கமுன்
    பறக்கப் பழக்கிது யார் ?

    கூட்டை நிரப்புமுன்
    காணாமல் போன
    ஜோடிக்குருவிக்காய்!!!
    நிச்சயமாக தேடி வரும் உங்கள் வரிகளைக் காணவே அருமை

    ReplyDelete
  30. //கனவும் முட்டையும்
    காதலும் கூடும்
    இறக்கையும் ஏக்கமும்
    காத்திருக்கிறது
    தொங்கும் மனதிற்குள்
    தூக்கணாங் குருவியாய்
    கூட்டை நிரப்புமுன்
    காணாமல் போன
    ஜோடிக்குருவிக்காய்!!!//

    - அருமை சகோ. ஹேமா! அருவியாய் வந்து பொழிகிறது வார்த்தை மழை. தொடருங்கள்!

    ReplyDelete
  31. சிணுங்கிச் சத்தமிடும்
    மெட்டி
    வாங்கித் தந்துவிட்டு
    இலக்கணம் தவறிய
    இசையென
    நகைக்கிறான்
    என் நடையின்
    தாளக்கட்டை
    >>
    எங்க அண்ணனை அவன் இவன் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  32. ரெண்டு கவிதைகளுமே அழகு ஹேமா..

    மெட்டி இன்னும் பிடிச்சிருக்கு :-)

    ReplyDelete
  33. முதல் கவிதை நல்லா இருக்கு ஹேம்ஸ் ஆனா நடக்கையில் இருக்கும் தாளக்கட்டிற்க்கும் மெட்டிக்கும் சம்மந்தம் இருக்கா? தெரியாமல்தான் கேட்கிறேன்..

    குதிகால் தாளக்கட்டுத்தான் எனக்குத்தெரியும் ..

    அய்யய்யோ பெருவிரலுக்கடுத்தவிரல் பெருவிரலைவிட நீளமாக இருக்கிறதே.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்

    ReplyDelete
  34. சபாஷ் அக்காச்சி........

    கலக்கல் கவிதை நடை, இங்கே கையாண்டிருக்கும் குறியீடுகளும், சொல் அலங்காரங்களும், கவிதையினை நகர்த்திய விதமும் சூப்பரா இருக்கு!

    காதல் பறவை ஒன்று எப்படி இறக்கை முளைத்து பறந்தது என்பதனை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  35. கனவு முட்டையிட
    பொரித்த காதல்குஞ்சை
    இறக்கை முளைக்கமுன்
    பறக்கப் பழக்கியது யார்

    மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.

    அருமை..

    ReplyDelete
  36. கனவு முட்டையும்....
    வலிகளின் உச்சம் தெரிந்தாலும்
    போனா போடா வெண்ண என்ற உறுதியும்
    அடர்வாக் இருக்கிறது ஹேமா, வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  37. ஹேமா லேட் கம்மர்...எல்லாம் அழகா சொல்லிட்டாங்க கவிதைப்பற்றி..இரண்டும் ஒன்றும் தான் அதை தொடுத்த விதங்கள் அழகு..மெட்டி அழகோ அழகு..குருவி ம்ம்ம்ம்ம் பெருமூச்சு..

    ReplyDelete
  38. வணக்கம் ஹேமா!
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகிறேன்!
    இங்கே இரண்டு கவிதைகள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! இரண்டுமே ஒன்றுதான்! அதைத்தான் தலைப்பும் சொல்கிறது!

    கலையாத சேலை + புத்தம் புதிய மெட்டி, சொல்ல வரும் சேதியை பச்சை நிறத்தில் உள்ள கவிவரிகள் சொல்கின்றன!

    கால்கொலுசின் முதலாவது ரசிப்புத்தான் அதன் ஓசை! இதே கொலுசுக்கு இரண்டாவது மூன்றாவது ரசிப்புக்களும் உள்ளன! அவற்றையெல்லாம் ரசிக்க விடாமல், ரசிகனை பாதியில் பறித்தவர்கள் பற்றி இரண்டாவது வரிகள் சொல்கின்றன!

    ஹேமா! இறக்கை முளைக்க முன்பு, பறக்கும் படி நிர்ப்பந்தித்தவர்களை என்ன செய்யலாம்???

    ReplyDelete
  39. அக்கா உங்கள் கவிதையை நான் படித்து என்னை மறந்த இடம்

    கனவு முட்டையிட
    பொரித்த காதல்குஞ்சை
    இறக்கை முளைக்கமுன்
    பறக்கப் பழக்கிது யார்?
    அட இந்த வரிகள் பிரபலமான வரிகள இருக்கே ; அருமை

    ReplyDelete
  40. ஹேமா....எப்படி இப்படி....ம்ம்ம்

    ReplyDelete
  41. மனத்தைக் கொள்ளை கொண்ட கவிதை சகோதரி.

    மனைவியை அவளின் செயல் மூலமாகவும்
    அவளின் பேச்சு மூலமாகவும் பரிகசித்து பேசுவதில்
    ஒரு தனி ஆனந்தம் தான் சகோதரி....
    அந்த சுவடுகள் காலம் கடந்து போனாலும் மனதில்
    எப்போதும் புதினமாய் நிறைந்திருக்கும் இருபாலருக்கும்.

    நெஞ்சுக்கு நிம்மதி நினைவுகள் தானே??????

    ReplyDelete
  42. வணக்கம் மகளே!தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்!கவிதை அருமை!உப்புமடச் சந்தியிலும் இசையும்,கதையும் பிரம்மாதம்!வாழ்த்துக்கள்!(தாமத வருகையின் காரணம்;தமிழ்மணம் ஊடாக நான் உங்கள் தளம் வருவதில்லை!பிறர் பதிவுகளின் பின்னூட்டமூடாக பிரவேசிப்பதால் தான் தாமதம்.)

    ReplyDelete
  43. ஹேமாவின் கவிதையை எனக்கு விமர்சிக்க தெரியவில்லை.

    நல்லாருக்கு!

    ReplyDelete
  44. வணக்கம் ஹேமா, சிக்கனமான வார்த்தைகளில் சிறப்பான கவிதைகள் தந்திருக்கிறிங்க.

    ReplyDelete
  45. எனது பழைய சிந்தனையை(ஞாபகங்களை) தூண்டிவிட்டுள்ளது.

    ReplyDelete
  46. /தொங்கும் மனதிற்குள்
    தூக்கணாங் குருவியாய்/

    அழகு.

    கவிதை அருமை ஹேமா.

    ReplyDelete
  47. கனவு முட்டையிட
    பொரித்த காதல்குஞ்சை
    இறக்கை முளைக்கமுன்
    பறக்கப் பழக்கியது யார் ?

    ஒன்றிய வரிகள் ரசிக்கவைத்தன.

    ReplyDelete
  48. #கனவு முட்டையிட
    பொரித்த காதல்குஞ்சை
    இறக்கை முளைக்கமுன்
    பறக்கப் பழக்கியது யார் ?#

    தாமதமாக படித்ததற்கு வருந்த வைக்கும் வரிகள் ... காதல் ரசம் சொட்டும் கவிதை காதலிக்க வைக்கிறது !

    ReplyDelete
  49. படமும் கவிதையும் அழகு ஹேமா.

    ReplyDelete