கனமற்றதான
பூக்களோடு கலந்திருக்கிறேன்
இடியப்பச் சிக்கலான
ஆட்டத்தைப் பிரிக்க
மலமுருட்டும் வண்டுகள்
விடுதலை விரும்பிகளென.
தெற்கு நரிகளின் ஊழை
மௌனங்களைக் கிழித்தாலும்
சாக்காடாய்
உறக்கம் கலையாத வழிப்போக்கர்
மனிதனே கொல்கிறான்
மனிதனே இறக்கிறான்
யாரோ அவர்கள் யாரோ
யாருக்கோ என்ன.
பொத்திக்குள் வளர்ந்த அறிவு
விரிதலில் இல்லாமல் போயிற்றோ
ஒன்றுப(ட்)ட சிநேகம்
சகோதர முகங்களில்லை
இறு(க்)கிய சாரளங்களுக்குள்
அந்நியனாகவே.
சாம்பல் பறவைகளின் வெப்பம்
ஈரப்பலா முலை வெடிக்க
சிதறுகிறது
நான் கலந்திருக்கும் வாசனை மல்லி
வி...டு...த...லை...யென உதடு பிரிந்து மூட
நாயொன்றும் காவலிருக்கிறது
வைரவருக்கு விடுதலை வேண்டி
புத்தனின் மட்டறுத்த புன்னகையோ மாறாமல்.
பிந்திய செய்திகளின்படி
இனந்தெரியாதோரால் கொல்லப்பட்ட...!!!
அதீதத்தில் முதன் முதலாக....ஹேமா(சுவிஸ்)
ஒன்றுபட முகங்களில்லை என்பதுவே நிதர்சனம்.
ReplyDeleteமனிதனே கொல்கிறான்
ReplyDeleteமனிதனே இறக்கிறான்
யாரோ அவர்கள் யாரோ
யாருக்கோ என்ன..
இப்படியான மனநிலை மாறத்தான் வேண்டும்..
வாசித்தேன்..வாக்கிட்டேன்..
சந்தேகம்
தனக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறபோது... எதிரியை பற்றி பேசுகிறோம.
ReplyDeleteவசீகர வரிகளாயினும்.....
ReplyDeleteபுரியுது....ஆனா புரியலை....!
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் கண்டு நெஞ்சு பொறுக்காமல் பாடினான் அன்று. இன்று இப்படி மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் நிலைகண்டால் என்ன பாடுவான்? இப்படித்தானோ?
ReplyDeleteஅதீதத்தில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் ஹேமா.
பொத்திக்குள் வளர்ந்த அறிவு
ReplyDeleteவிரிதலில் இல்லாமல் போயிற்றோ
ஒன்றுப(ட்)ட சிநேகம்
சகோதர முகங்களில்லை
இறு(க்)கிய சாரளங்களுக்குள்
அந்நியனாகவே.
>>
இன்றைய யதார்த்ததை புட்டு புட்டு வைத்துவிட்டது இவ்வரிகள். வெளியில் மட்டுமல்ல வீட்டுக்குள்ளும் தனிமை தீவாய் வாழும் நிலையை தோலுறித்து காட்டிவிட்டது உங்க கவிதை
'''ஒன்றுப(ட்)ட சிநேகம்
ReplyDeleteசகோதர முகங்களில்லை
இறு(க்)கிய சாரளங்களுக்குள்
அந்நியனாகவே.'''
எனக்குப் பிடித்த வரிகள்.
இன்றைய உறவு நிலையை
பாதரசக் கண்ணாடியாய்
முகம் காட்டுகிறது.
அருமையான படைப்பு சகோதரி.
நல்ல " பா " ஆக்கம் நல்ல சுவை அவலச்சுவை எப்போதும் விரும்பி கேட்கவைக்கும் சிலவற்றைத் தூண்டும் அழவைக்கும் இந்த புத்தன் எல்லோரையும் சிரித்துக் கொண்டே கொல்லுவான். இருப்பினும் ஈரப்பலா முலை வெடிக்க என வார்த்தையை கொர்த்துளீர் இது மரபு ரீதியாக சரியில்லையோ என எண்ணத் தூண்டுகிறது .முலை எப்போதும் வெடிப்பதில்லை மொட்டு வெடிக்கும் .கண்ணதாசன் வெட்டு பட்ட காயத்திலும் விம்மி நின்ற கட்டியிலும் கட்டுப் பட்டு நின்றதொரு காலம் என பெண்களின் அல்குலை வெட்டு பட்ட காயம் என்பான் பிழை இருப்பின் சுட்டிக் காட்டலாம்
ReplyDeleteமனிதனே கொல்கிறான் | மனிதனே இறக்கிறான் | யாரோ அவர்கள் யாரோ |
ReplyDeleteயாருக்கோ என்ன. |
நிதர்சனத்தைக் கூறிய வரிகள் மனதை வலிகொள்ளச் செய்தது ஹேமா. இந்த மாதிரியான மனநிலை என்றாவது ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புடன்தான் நாட்களை நடத்த வேண்டியுள்ளது.
நெறுக்கமாய் தொடுத்துயிருக்கிறீர்கள்
ReplyDelete/பொத்திக்குள் வளர்ந்த அறிவு
ReplyDeleteவிரிதலில் இல்லாமல் போயிற்றோ
ஒன்றுப(ட்)ட சிநேகம்
சகோதர முகங்களில்லை/
உண்மைதான் ஹேமா. நல்ல கவிதை.
மனிதனே கொல்கிறான்
ReplyDeleteமனிதனே இறக்கிறான்
யாரோ அவர்கள் யாரோ
இந்த பொய் முகப்போர்வையை யார் கிழிப்பது அருமை
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
ReplyDeleteநல்ல கவிதை ஹேமா..வாழ்த்துக்கள்...
நாயொன்றும் காவலிருக்கிறது
ReplyDeleteவைரவருக்கு விடுதலை வேண்டி
புத்தனின் மட்டறுத்த புன்னகையோ மாறாமல்.
பிந்திய செய்திகளின்படி
இனந்தெரியாதோரால் கொல்லப்பட்ட...!!!
அவலம் கனத்த கவிதை..
Azhakana varigal. Nalla karpanai. Eppadi ithellam?
ReplyDeleteவைரவருக்கு விடுதலை வேண்டி//
ReplyDeleteகோண்டாவில் அறிவியல் கழகம் (முந்தி ஈசன் டியூட்டரி இருந்திச்சே) இராணுவ முகாமிற்கு பக்கத்திலை இருக்கிற ஞான வைரவரோ அக்கா?
கடந்த கால சோகம் இன்னும்
ReplyDeleteஆறாது இரணமாக உள்ளது
உங்கள் கவிதைகளில் உள்ளூடாக
அவ்வப்போது வொளிவருவது
மிகவும் வேதனையே!
மனிதனை மனிதன் கொல்லும்
போது அவன் அரக்கனாகி விடுகிறான்! என்பதே உண்மை!
புலவர் சா இராமாநுசம்
உள்ளுக்குள் புல்லுருவிகள் இருக்கும் வரை மாறாது இந்த ஏற்ற இறக்கங்கள்.
ReplyDeleteசமகால மனித இயல்புகளையும், வாழ்வியலையும் மனதை ஊடுருவும் வார்த்தைகளில் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteவணக்கம் அக்கா,
ReplyDeleteபேச்சளவில் தான் எம் விடுதலையும் இருக்கிறது என்பதனை, அழகிய தலைப்பின்னூடாக, அர்த்தங்கள் கற்பிக்கும் வார்த்தைகள் வாயிலாக கவிதையாக்கிச் சொல்லியிருக்கிறீங்க. ரசித்தேன்.
வணக்கம் சகோதரி..!
ReplyDeleteஉங்கள் கவிதைகளை பின்னுட்டத்தையும் பார்த்து விளங்கி கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.. ஹி ஹி
கடைசி எட்டு வரிகளின் தாக்கத்திலிருந்து மீள்வது சிரமமாக இருக்கிறது..
ReplyDeleteபடமும் பிரமாதம்.
எப்படி இப்படிச் சரளமாக உணர்வு பூர்வமாக
ReplyDeleteதொடர்ந்து பதிவுகள் தர முடிகிறது என
ஆச்சரியப் பட்டுப் போகிறேன்
ஒவ்வொரு படைப்பும் எம்முள் ஏற்படுத்திப் போகும் பாதிப்பை
வார்த்தைகளில் விவரிப்பது கடினமே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
அருமை கவிதை வாழ்த்துகள்
ReplyDeleteகவிதை உண்மை.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
#பிந்திய செய்திகளின்படி
ReplyDeleteஇனந்தெரியாதோரால் கொல்லப்பட்ட...!!!# கவிதையில் காதல் சொல்வது மட்டுமல்ல இதயத்தை கனக்க வைக்கவும் முடியும் என்று சொல்லும் கவிதை ஹேமா !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்