Sunday, January 01, 2012

முத்தக் க/கு 2011...



வருடம் முழுதும்
விட்டு விட்டு நாம் உதிர்த்த
மொத்த முத்தங்கள்
ஆயிரங்கள் தாண்டுமிதை
ஆடையிட்டு அனுப்புகிறேன்.

என்னது...உன்னது
கன்னம்...உதடு
கண்...கழுத்தெனப் பிரி
பிடித்த முத்தம்
பிடிக்காத முத்தமெனக்
கணக்கிடு.

பயந்து தந்தது
மயக்கத்தில் தந்தது
மறந்து தந்தது
இன்னும்...
பூச்சி கடித்தாற்போல
ராட்சத முத்தம்
கலவி முத்தம்
வெட்க முத்தம்
வலித்த முத்தம்
குட்டி முத்தம்
ஊடல் முத்தம்
சும்மா போனால் போகுதென்ற
முத்தங்கள்...
கொசுறுகள்கூட சில...

"சப்" என்ற சில "ச்" களை
வீணாய்ப் போனதாய் விடு
பூச்சி கடித்ததைக் கழி
நீ...
ஒளித்து வைத்ததைக் கூட்டு
சொல் இப்போ
இருவருக்கும் இல்லாமல்
எத்தனை உதிரிகள்
உதிர்ந்து போனது ?

பூச்சிய முடிவில் வருமந்த
முத்தங்களை மட்டும்
சத்தமாய்ச் சொல்லாதே.

அன்பு...ஆசை...ஆறுதல்
அது கணக்கில் இல்லை
அது நித்த முத்தம்.
மிச்சமிருக்கும் எல்லாம்
உனக்கும் எனக்குமானது.

கடன் முத்தமும் இருக்கிறதோ!

கள்ளக் கணக்கெடுப்பாய்
காவலுக்கு நடுவில்
நம் கைத்தொலைபேசி.

சரி...இப்போ
என் கை கோர்
உடல் சேர்
இறுக இறுக்கு
ம்....
ஒரேயொரு
எச்சில் முத்தம்
புதிய கணக்கில்
நான்...தூங்கவும்
நீ...விழித்திருக்கவும்!!!

என் மனம் நிறைந்த இனிய 2012ன் அன்பு வாழ்த்துகள் உறவுகள் எல்லாருக்குமே !

ஹேமா(சுவிஸ்)

57 comments:

  1. superb lines.
    Thanks Hema and also Happy & flourish new year2012 for U

    ReplyDelete
  2. மனம் இனிக்கும் முத்தக் கவிதை.
    அருமை சகோதரி.




    பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஹேமா,

    2011 ஆம் ஆண்டின் மொ(மு)த்தக் கணக்கு அறிக்கை சமர்ப்பிச்சிட்டீங்க.

    2012 ஆம் ஆண்டிற்கான கணக்கு தொடங்கட்டும்!

    //ஒரேயொரு
    எச்சில் முத்தம்
    புதிய கணக்கில்
    நான்...தூங்கவும்
    நீ...விழித்திருக்கவும்!!!//

    முத்தத்துக்கு பின் தூங்கவும் முடியாது, விழித்திருக்கவும் முடியாது. பாவம்!

    கவிதைக்கு ஏற்ற பாடல்!

    ReplyDelete
  4. முத்தக் கவிதை அருமை..

    கள்ளக் கணக்கெடுப்பாய்
    காவலுக்கு நடுவில்
    நம் கைத்தொலைபேசி..

    வாழ்த்துகள்..

    த.ம-3

    அன்போடு அழைக்கிறேன்..

    உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

    ReplyDelete
  5. முத்தக் கவிதை படித்து மெத்த மகிழ்ச்சி அடைந்தேன். நன்று. கவிதைக்கேற்ற பாடலைத் தேடித் தந்தமை இன்னும் சிறப்புங்க ஹேமா. உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. முத்தமா? மொத்தமா சேர்த்து தந்த முத்துக்களா?

    ReplyDelete
  7. "முத்த கதை கவிதையாக அழகாக இனித்தது.

    ReplyDelete
  8. ஐயையோ இதை கூட கணக்க்டுத்துகொண்டு இருப்பார்களா ? என்னமோ நடக்கட்டும் ...

    ReplyDelete
  9. கலக்கல் ஹேமா!
    எனக்கு மிக மிக பிடித்த உங்கள் கவிதைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. புது வருடத்தில் வந்த முதல் கவிதையே கொள்ளை அழகாய் இருக்கிறது ஹேமா. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ஹேமா ஏம்மா? ஏன்? ரெண்டு நாளைக்கு என்னை சைவா இருக்க விட மாட்டிங்களே? ஆமாம் முத்தத்தில் இத்தனை வகைகளா? விட்டா அகராதி கோனார்ன்னு போட்டுடுவீங்க போல...இப்படி ஒரு வீபரீதம் என் பதிவில் நேர்ந்தால் முழுக்க முழுக்க நீங்க தான் காரணம் சொல்லிபுட்டேன் ஆமாம்..


    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹேமா..

    ம்ம்ம் இருங்க மூச்சு வாங்குது ஒரு வாட்டி மூச்சு வாங்கிக்கிறேன்..இன்னொருமுறை படிக்கனுமில்ல...

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹேமா..

    ReplyDelete
  12. மனம் நிறைந்த இனிய 2012ன் அன்பு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. புதுவருடத்தை முத்ததுடன் ஆரம்பித்து இருக்கீங்களா? ம் ம் ம் ரைட்டு நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  15. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. முதலில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்காச்சி.

    ReplyDelete
  17. முத்தக் கவிதை மனதில் நின்றது சகோ

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  18. அக்காச்சி..... கவிதை செம ரொமான்ஸ்.... எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு (ஹீஹீ)... முத்தத்தில் இத்தனை வகையா?? (பார்டா... தெரியாத மாதிரியே கேக்குறான்!!!!) சூப்பர்..... ரெம்ப நாளைக்கு அப்புறம் ரெம்ப ரசிச்சு ருசிச்சு படித்த கவிதை. இப்படி நிறைய எழுதுங்கோ அக்காச்சி..

    ReplyDelete
  19. முத்தக் கணக்கில் மனம் லயித்திருந்தால் முத்தத்தில் எப்படி லயித்திருப்பதாம்? எப்படியோ.... புதுவருடத்திலாவது புதுக்கணக்கு நேர்சீரானால் சரி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  20. புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!

    இத்தனை வகை முத்தமா அட!

    முத்தத்திற்கு ஆடையுடுத்தும் அந்த கற்பனை அருமை..

    ReplyDelete
  21. முத்தங்களோடு துவங்கும்படியான புது வருடம் ?
    விழித்திருக்க...
    அதென்ன ஹேமா அவ்வளவு சுயநலமாய் ஒரு
    முத்தம், மிக ஈரமான கவிதை , அழகு, வாழ்த்துக்கள்...
    -இயற்கைசிவம்.

    ReplyDelete
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. நான்...தூங்கவும்
    நீ...விழித்திருக்கவும்!!!
    //

    இதான் க்ளாஸ்..:))

    ReplyDelete
  25. தூங்கிக் கொண்டிருக்கும் என் மனைவியை எழுப்புகிறேன். புத்தாண்டு வாழ்த்து தான் நேற்றிரவே சொல்லியாச்சே என்கிறாள். இல்லை ... இது முத்தாண்டு வாழ்த்து என்கிறேன். பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த (?!) என் மகன் நகைக்கிறான்.
    அட ஹேமா.
    வகையா மாட்ட வச்சுட்டீங்களே.

    புத்தாண்டு நீங்கள் விரும்பியபடி அமையட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. முத்தத்தைப்பற்றி உங்களின் முத்தான கவிதை அருமை
    புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  27. இரவு வணக்கம் மகளே!ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கவிதை நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  28. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா. Keep Smiling . Enjoy Living

    நான் சின்ன பையன் :)))) ஸோ கவிதை பற்றி நோ கமெண்ட்ஸ்

    ReplyDelete
  29. அட்டகாசமான கவிதை போங்க!புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. கலக்கல் கவிதை...

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  31. முத்த கவிதை மொத்தமாய் இனித்தது.
    அன்பிற்கினிய நல்வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  32. உங்கள் கவிதைகள் அனைத்திலும் மிகச்சிறந்த கவிதை இதுவே :))))

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  33. முத்தக் கவிதையோடு புது வருடத்தைத் தொடங்கி மொத்தப் பேரையும் கவர்ந்து விட்டீர்கள் ஹேமா. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. ஹேம்ஸ் முத்தாண்டு வாழ்த்துகள் ச்சீ புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete
  35. முத்தமெல்லாம் சரி அதுக்கு முன்னாடி கண்டிப்பா ப்ரெஷ் பண்ணியிருக்கனும் pepsodent :)

    நீ விழித்திருக்கவும் :) நல்லாயிருக்கு ஹேமாஜி

    ReplyDelete
  36. Hema!

    Muththa Mazhai....Moththa Mazhai.... Azhagu!

    TM 9.

    ReplyDelete
  37. புதுவருடம் முத்தத்துடனா ஆரம்பம். ஐயையோ... முத்தம் கணக்கு படித்ததும்தான் எனக்கும் ஞாபகம் வருகிறது என் இனிய ராட்சசி செல்லம்மாவிற்கு கொடுக்கவேண்டிய பாக்கி இருக்கிறது கொடுத்துவிட்டு அப்புறம் வருகிறேன்.

    ReplyDelete
  38. ஹேமா உங்களுக்கு இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  39. முத்தத்தில் இத்தனையா...

    ReplyDelete
  40. Facebookல் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  41. மூச்சு முட்டியது
    முழுவதும் படிக்கையில்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  43. முத்தத்தில் இத்தனை வகைகளா? விட்டா அகராதி கோனார்ன்னு போட்டுடுவீங்க போல...

    repeatu....

    nan daily 10 mutham vangukinren. ( enga veetula irukinra kosukkal kitta).

    wish happy new year hemu.

    ReplyDelete
  44. குமார்...முதல் முத்தச் சத்தம் கேட்டிச்சா.டுபாய்ல்ல இருந்து வந்தீங்களா.சந்தோஷம் !

    மகேந்திரன்...உங்கள் அன்புக்கு என்றும் என் நன்றி !

    சத்ரியா...பாட்டுப் பிடிச்சிருக்கா.கணக்கு எப்பவும் கணக்கா இருக்கணும்.அது முத்தமானாலும்.அதுசரி யார் பாவம்.வாங்கினவங்களா குடுத்தவங்களா.சொல்லவேயில்ல !

    மதுமதி...உண்மையைத்தான் சொன்னேன்.முத்தத்திலயும் கள்ளக் கணக்கெடுத்து அப்புறம் கடன்ன்னு சொல்றாங்க திருடங்க !

    கணேஸ்...பாடலை ரசித்த உங்களுக்கு நன்றி.இப்பிடி ஒரு பாடல் வேணுமென்று தேடிக் களைத்த தருணத்தில் அருமையாகக் கிடைத்த பாடல் இது.நன்றி உங்களுக்கு !

    ஓசூர் ராஜன்...மொத்தமாய்க் கிடைத்த முத்தப் பொக்கிஷங்கள் குழந்தைநிலாவில் !

    தமிழ்...முத்தம்ன்னா இனிக்காமப் போகுமா என்ன.ஆனா கணக்கெடுக்க ரொம்பக் கஸ்டப்பட்டுட்டேன் !

    மாலதி...வெட்கத்தைப் பாருங்கப்பா இந்த மாலதிக்கு !

    மீனு...வருஷத் தொடக்கத்திலேயே அழுவாச்சி கவிதை இல்லன்னா புரியாத கவிதைன்னு திட்டுவாங்களேன்னுதான் முத்தக் கணக்கெடுத்தேன்.இதில சிரிப்பு என்னன்னா உயிரோசைல பதிவான கவிதை இது.அந்தப்படத்தோட என் பதிவில இணைக்கலாம்ன்னா...ஒரு பொண்ணு கண்ணீரோட இருக்கிற படம் போட்டிருக்காங்க.
    அவங்களுக்கும் தெரிஞ்சுபோச்சாகும்!

    தமிழம்மா...வாங்க வாங்க.இந்தக் கவிதை உங்களுக்குத்தான் நான் உண்மையா சமர்ப்பிக்கணும்.ஏன்னா ஒருவாரக் கணக்கெடுத்தீங்களே.அப்பவே உசுப்பேத்திவிட்டது நீங்கதான்.இப்போ என்னால விபரீதமா...பாக்கலாம் !

    ஆசியா...சுகம்தானே.உங்க சமையல் அடிக்கடி பண்ணிக்கிறேன்.நன்றி !

    இராஜேஸ்வரி...பிடிச்சோ பிடிக்கலயோ சாமி கும்பிட வைக்கிறீங்க.அப்புறமென்ன !

    ராஜி...உங்க வீட்ல நடக்காததையா சொல்லிட்டேன்.நீங்க கணக்கு வச்சுக்கிறதில்லையா!

    சசி...முதல் முதல் வந்திருக்கீங்க.முத்தச் சத்தம் கேட்கலையா !

    ReplyDelete
  45. துஷிக்குட்டி...பாவம் இவன் சின்னக்குட்டி.எதுவும் தெரியாது.ஆனா இதை மாதிரி நிறைய எழுதட்டாம்.உதை விழும்...எனக்கும் சேர்த்து !

    கீதா...முத்தத்தில் லயித்திருக்கிற நேரம் கள்ளக் கணக்கெடுக்கிறாங்கள் கவனமா இருங்கோ.இதில கணக்கு எப்பவும் குழப்பம்தான்.சீராகாது !

    அத்திரி...வாங்கோ வாங்கோ எவ்வளவு காலம் உங்களைக் கண்டு.சுகம்தானே !

    ரியாஸ்...முத்தமும் பாவம்தானே.புத்தாடை கொடுப்போமே !

    இயற்கைசிவம்...உங்க பேரைப் பார்த்தா சுகிசிவம் மாதிரி ஒரு மரியாதையா இருக்கு.இங்க சுயநலமா இருந்தாத்தான் சந்தோஷம் நிறையக் கிடைக்கும்.ஆனா கவிதையின்படி சுயநலம் இல்ல.கொடுத்த களைப்பில் தூக்கமில்ல.
    வாங்கின சந்தோஷத்தில தூக்கம் !

    இராமாநுசம் ஐயா...நன்றி உங்க வாழ்த்துக்கு !

    ரிஷபன்...உங்களுக்கும் என் அன்பு வணக்கம் !

    முத்தக்கா...என்னைக் கவனிக்கிறீங்கன்னு மட்டும் தெரியுது.முத்தச் சத்தம் கேட்டிச்சாக்கும்.சந்தோஷம் !

    சிவகுமாரன்...என்னால நீங்க சந்தோஷமா இருந்தீங்கன்னா அதுதான் என் கவிதைக்கு வெற்றி !

    தமேஷ்...பாருடா...எவ்வளவு காலத்துக்குப் பிறகு.சரி சரி வாங்கோ.சுகம்தானே தம்பி !

    அப்பா...வாங்கோ...உங்களுக்கும் வெக்கமாப்போசுப்போல.ஒண்டும் சொல்லேல்ல.உங்களுக்க்கும் என் அன்பு வாழ்த்துகள் எப்பவும் !

    மேவீ...சின்னப்பையன்...
    ஒல்லிப்பையன் பாவம்
    இருக்கட்டும் இருக்கட்டும் !

    அப்பாஜி...பின்ன புதுவருஷம்ன்னா அட்டகாசமா இருக்கவேணாமா.அதுவும்
    ஆங்கிலப் புத்தாண்டு !

    இந்திரா...ரொம்பக் காலமாச்சு இந்தப் பக்கம் வந்து.சுகமா இருக்கீங்களா இந்திரா !

    தவறு...அட...போங்க !

    மல்லிக்கா...உங்க கவிதைக்குப் பக்கத்தில இல்ல இது.ஆனா உங்க கருத்துக்கு சந்தோஷம் தோழி !

    செந்தில்...இணையப்பக்கங்களில் உள்ளதை உள்ளபடி சொல்பவரில் நீங்களும் ஒருவர்.உண்மையில் சந்தோஷம்.நன்றி தோழரே !

    ஸ்ரீராம்...ம்ம்...வருஷத் தொடக்கமாச்சேன்னு ஒரு சந்தோஷம்தான்.வீட்டுக் கணக்கை எல்லாருக்கும் சொல்லுவமேன்னு அனுமதியோட கணக்குக் காட்டிட்டேன் !

    வசந்தா...ம்ம்...வெட்கப்பட்டா எதுவும் ஆகாது.நானும் இல்ல நீங்களும் இல்ல!

    அஷோக்...பிரெஷ் பண்ணணுமா...அதுசரி...எப்போ காலேலயா...ராத்திரிலயா !

    ரத்னவேல் ஐயா...நன்றி நன்றி
    அன்பு வாழ்த்துக்கு !

    டானியல்...முத்தம் மொத்தமா இருந்தாலும் ஒத்தையா இருந்தாலும் அழகுதான்.சொல்லியா தெரியணும் உங்களுக்கு !

    அம்பலத்தார்...பாத்தீங்களோ...
    இதுதான் சொல்றது எதிலயும் கணக்கு கணக்கா இருக்கவேணுமெண்டு.கடன் வச்சிருந்திருக்கீங்கள்.படுகள்ளன் நீங்கள்.பாவம் செல்லம்மா அக்கா !

    விச்சு...முகப்புத்தகத்தில இணைச்சீங்களா...அடி வாங்கினா நான் இல்லப்பா.
    சந்தோஷம்.உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிட்டேன்.இத்தனையான்னு கேக்கிறீங்க !

    வேல்முருகன்...வணக்கம்.பாருங்க மூச்சு முட்டினபடியாத்தான் குழந்தைநிலாப் பக்கம் இளைப்பாறியிருக்கீங்க.நன்றி !

    காஞ்சனா...நன்றி நன்றி.அன்புக்கு மிக்க நன்றி.எங்கே ஐயா ஒளிச்சிட்டார்.கண்டுபிடிங்க !

    சுதாச்சாமியார்...கொசுமுத்தம்ன்னு இன்னொரு கவிதை போட்டாப்போச்சு.சீக்கிரமா பொண்ணு பாருங்க.இல்லன்னா கொசு உங்களைக் கொண்டு போகப்போகுது !

    ReplyDelete
  46. முத்தம் மீதான என் அத்தனை எண்ணங்களையும் வருடிவிட்டது உங்கள் கவிதை ! அழகு !

    ReplyDelete
  47. ஆகா! ரணகளமா இருக்கே!
    (இந்த உலகத்தில நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்குடா ஜீ!)

    மிக அருமையான இருக்கு! நீங்க எழுதிய கவிதைகள்ல (எனக்குப் புரிஞ்சதில) இதுதான் பெஸ்ட்னு தோணுது!

    புதுவருஷத்தில அட்டகாசமான ஆரம்பம்..கலக்குங்க!

    ReplyDelete
  48. பின்றீங்கப்பா.. :-)

    ஏ க்ளாஸ்!! கவிதை.

    ReplyDelete
  49. அருமையான கவிதை ..

    ReplyDelete
  50. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  51. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. அருமையான கணக்கு. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. அக்காச்சி, கவிதை மூலம் கடைசி வரியில் என்னமோ ஒரு அர்த்தம் சொல்லியிருக்கிறீங்க.

    ஹி....ஹி...

    என்ன ஒரு கவி நயம்!

    அதுவும் கணக்குப் பார்த்து எஞ்சிய முத்தத்தினை மீட்ட, மீண்டும் நான் தூங்க நீ விழிக்க! ஹே...ஹே...

    ரசித்தேன்!

    ReplyDelete
  54. மொத்த முத்தங்களுக்கும் முத்தாய்ப்பாய் நான் தூங்கவும், நீ விழித்திருக்கவும் ஆன எச்சில் முத்தம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  55. எத்தனை ரக முத்தம்...

    இத அறிஞ்சிக்கவேனும் சீக்கிரம் பொண்ணு பாக்கற வழியப் பாக்கணும்...

    ReplyDelete