Tuesday, December 27, 2011

சின்னச் சின்ன...

சம்பிரதாயம்...தவமாய்
சில ஒட்டுப் பொட்டுக்கள்
கண்ணாடியில்
வெள்ளைச் சேலையின்
விவரம் அறியாமல்!!!

குப்பைத்தொட்டி...
தவறியவள்
போட்டுவி(ட்)ட
பரிதவிக்கும்
உயிருக்காக
உயிரற்ற என்
தவிப்பு!!!

அசுத்தங்கள்...
அலுக்கவில்லை
அள்ளிக்கொண்டே இருக்கிறது
காற்று ஊத்தைகளை
மனிதனைத் தவிர்த்து
பூமி சுத்தமாகவேயில்லை!!!

காவல்...
நாய்க்கு உணவிட்ட
வீட்டுக்காரரிடம்
நேற்றிரவெல்லாம்
மாறி மாறி
முற்றத்திலும்
கொல்லையிலும்
படுத்தபடியும்
ஓடியபடியும்
உறுமியபடியும்
குரைத்த நாயைப்
புகழ்ந்துகொண்டிருந்தார்
அயல்வீட்டுக்காரர்!!!

வயதுக்கேற்றபடி...
நெஞ்சில் படுத்தபடி
இடக்கு முடக்கான கேள்விகள்
பதில்கள் சரியானதாயில்லை
வளைந்தேன்
நிமிர்ந்தேன்
முறிந்தேன்
வார்த்தைகள் இல்லாமலில்லை
இருந்தும்...!!!

பெண்...
சில...
எழுத்துப் பிழைகளோடு

எழுதப்பட்ட கவிதை
சிலரால்...
திருத்த விரும்பாத பக்கத்தில்!!!


ஹேமா(சுவிஸ்)

46 comments:

  1. நிறைவான கவிதைகள். அதிலும் "அசுத்தம்" மிகவும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  2. அருமை!
    சம்பிரதாயமும், குப்பைத்தொட்டியும் எனக்குப் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  3. எல்லாமே அருமை. புது முயற்சி? ஏற்கெனவே இது மாதிரி முயற்சித்திருக்கிறீர்களா...? பிடித்த வரிசை கடைசியிலிருந்து ஒன்று இரண்டு என....!

    ReplyDelete
  4. அனைத்தும் நன்று ஹேமா. பெண் சிந்திக்க வைக்கின்றாள். அசுத்தங்கள், உண்மை.

    ReplyDelete
  5. பெண் மட்டும் ok :)

    ReplyDelete
  6. ஏன் பெண்ணை எழுத்துப் பிழைன்னு சொல்றீங்கன்னு புரியல..

    சம்பிரதாயம் சூப்பர்..

    ReplyDelete
  7. தவமாய்
    சில ஒட்டுப் பொட்டுக்கள்
    கண்ணாடியில்
    வெள்ளைச் சேலையின்
    விவரம் அறியாமல்!!!

    அருமை சகோ..வாழ்த்துகள்..

    அன்போடு அழைக்கிறேன்..

    நாட்கள் போதவில்லை

    ReplyDelete
  8. தவமாய்
    சில ஒட்டுப் பொட்டுக்கள்
    கண்ணாடியில்
    வெள்ளைச் சேலையின்
    விவரம் அறியாமல்!!!//

    மனது வலிக்கும் வரிகள்...!!!

    ReplyDelete
  9. வலி நிறைந்த கவிதை.

    ReplyDelete
  10. தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடர வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. மேலோட்டமாய் வாசித்தால் ஒரு பொருளையும் ஆழ வாசித்தால் வேறொரு பொருளையும் தந்து மன ஆழம் பதியும் வித்துக்கள் அனைத்தும் அருமை ஹேமா.

    ReplyDelete
  12. ஹேமா,

    சிறுதுளி பெருவெள்ளம் போல, சிறு சிறு கவிதைகள் பெரும்பொருள்களை உள்ளடக்கி!

    ReplyDelete
  13. தவறியவள்
    போட்டுவி(ட்)ட
    பரிதவிக்கும்
    உயிருக்காக
    உயிரற்ற என்
    தவிப்பு!!!]]


    மிக அருமை ஹேமா!

    ReplyDelete
  14. எல்லாமே அருமை. அதிலும் சம்பிரதாயமும், குப்பைத் தொட்டியும் மிகமிக அருமை ஹேமா. உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. பெண்...
    சில...
    எழுத்துப் பிழைகளோடு
    எழுதப்பட்ட கவிதை
    சிலரால்...
    திருத்த விரும்பாத பக்கத்தில்!!

    அருமை
    அழகாக சிந்திக்கும் விதமாக சொன்னீர்கள்..

    ReplyDelete
  16. அனைத்தும் அருமை.. :)

    ஹேமா WHEN WE R GOING TO COME OUT ? என்பதே என் கவிதை..:)

    ஒளிதல், ஒளித்தல், ஒடித்தல், ஒடிப்பித்தல் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மிளிர ஒளிர கற்பது எப்போது? ..:)

    ReplyDelete
  17. அனைத்து கவிதைகளும் மிக மிக அருமை
    குறிப்பாக சம்பிரதாய்ம்
    பகிர்வுக்கு நன்றி
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. மனிதனில்லையேல் பூமி
    அசுத்தமாயும் இருக்காது.

    நாய்கள்
    ஆறறிவுகளுக்கு துணையிருக்கிற பேரறிவுகள்.
    நன்றியற்ற மனிதங்கள் தான்
    தம் கோபங்கள் தீர்க்கும் வார்த்தைகளுக்கு
    நாயின் பெயரையும் பயன்படுத்துகிறார்கள்.

    நன்று

    தீபிகா.

    ReplyDelete
  19. ////தவறியவள்
    போட்டுவி(ட்)ட
    பரிதவிக்கும்
    உயிருக்காக
    உயிரற்ற என்
    தவிப்பு!!!///

    எனக்கு மிகவும் பிடித்த துளிப்பா இது..

    ReplyDelete
  20. ஹேமா ரொம்ப பிடிச்சிருக்கு ...குறிப்பா சம்பிரதாயம் ...!

    ReplyDelete
  21. அக்காச்சி தளத்தில் நான் லேட் ஆ..... அவ்வ்வ்வ்

    ReplyDelete
  22. அக்காச்சி... எல்லா கவிதைகளும் சூப்பர்.
    எனக்கு கடைசி கவிதை ரெம்ப புடிச்சு இருக்கு...
    அந்த கவிதை கடைசியாத்தான் இருக்கு
    ஆனாலும் கடைசி வரை மறக்க முடியாது :))

    ReplyDelete
  23. தவமாய்
    சில ஒட்டுப் பொட்டுக்கள்
    கண்ணாடியில்
    வெள்ளைச் சேலையின்
    விவரம் அறியாமல்!!<<<<<<<<<<<

    இதுவும் ரெம்ப புடிச்சு இருக்கு...
    எனக்கு இப்பவும் நினைவு இருக்கு அக்காச்சி.எங்க அம்மா எப்பவும் எங்கேயும் போயிட்டு வந்தா
    கண்ணாடியில் தான் பழைய போட்டி ஓட்டுவார்...எங்க அப்பா செமையா திட்டுவார் இல்ல.... ஹா ஹா....
    ஆனாலும் அம்மா திரும்ப திரும்ப ஓட்டிட்டே இருப்பார் இல்ல... :))

    ReplyDelete
  24. மிகவும் சரியான உள நிலையில் எழுதப் பட்ட ஆக்கம் ம் தொடர்க....

    ReplyDelete
  25. //சில...
    எழுத்துப் பிழைகளோடு
    எழுதப்பட்ட கவிதை
    சிலரால்...
    திருத்த விரும்பாத பக்கத்தில்!!!//
    பெண்கள் எழுத்துப்பிழைகளுடன் எழுதப்பட்ட கவிதைகளல்ல. பெண்ணிலும் தவறில்லை பெண்ணைப் படைத்தவனிலும் தவறில்லை இடையில் புகுந்த சிலரால் பெண்ணுக்கு தப்பான போலி வேசங்கள் போடப்பட்டுவிட்டன. அவற்றை அகற்றினால்போதும்.

    ReplyDelete
  26. நண்பர்களுக்கு
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    நொடியாய்ப் பிறந்து
    மணித் துளியாய் மறைந்து
    புது ஆண்டாய் மலர்ந்த
    பொழுதே....
    வறண்ட வாழ்வும்
    தளர்ந்த கையும்
    உன் வரவால்
    நிமிர்ந்து எழுதே!
    புது வருடம் பிறந்தால்
    வாழ்வு மாறும்-என
    ஏங்கித் தவிக்கும்
    நெஞ்சம்..
    உன் வரவே
    நெஞ்சின் தஞ்சம்!
    இறந்த காலக்
    கவலை அதனை
    மறந்து வாழ
    பிறந்து வா வா
    என் புதிய வாழ்வே
    விரைந்து வா வா!

    அழுதுவிட்டேன்
    ஆண்டு முழுதும்
    முயன்று பார்த்தேன்
    விழுந்து விட்டேன்
    அழுத நாளும் சேர்த்து
    மகிழ்ந்து வாழ
    எழுந்து நின்று
    இமயம் வெல்ல
    இனிய ஆண்டே
    இன்றே வா வா
    நன்றே வா வா!

    அன்புடன் இனியவன்

    ReplyDelete
  27. பெண் எழுத்து பிழையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. அனைத்தும் அருமை சகோ ,சம்பிரதாயம் மனதைத்தொட்டது


    த.ம 13

    ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  29. குட்டிக் குட்டிக் கவிதைகளில்
    பெரிய பெரிய விஷயங்கள்
    என்றாலும் கொஞ்சம் வலிகள்
    தொடருங்கள்...
    -இயற்கைசிவம்

    ReplyDelete
  30. குட்டிக் குட்டிக் கவிதைகளில்
    பெரிய பெரிய விஷயங்கள்
    என்றாலும் கொஞ்சம் வலிகள்
    தொடருங்கள்...
    -இயற்கைசிவம்

    ReplyDelete
  31. ஹேமா...சின்னச்சின்னதாய் நிறையவே ....

    ReplyDelete
  32. ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பது போல் படுகிறதே? வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  33. ஹேமா, இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  34. எல்லாமே உள்ளம் கொள்ளை கொண்ட முத்து துளிகள் .குப்பைதொட்டி கவிதை மனதை பிசைந்தது .
    காவல் காக்கும் பைரவர் ஒருவர் படத்தில் இருப்பது போலே எஜமானின் கல்லறை அருகில் இன்னமும் படுதிருக்கிறாராம்..


    உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. ஒட்டுப்பொட்டுக்கள் நெஞ்சைத்தொட்டது.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. சம்பிரதாயம்,குப்பைத்தொட்டி அருமை.

    புதுவருட வாழ்த்துகள் ஹேமா.

    ReplyDelete
  37. அக்காச்சி நலமா ,?
    அத்தனை கவிதைகளும் அருமை
    குப்பைத்தொட்டி ,அசுத்தங்கள் இரண்டும் என்னை மிக கவர்துள்ளன

    ReplyDelete
  38. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  39. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதிரி.

    ReplyDelete
  40. அருமையான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  41. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. ஹாய் ஹேமா அக்காச்சி...
    எப்படி இருக்கீங்க???

    என் ஹேமா அக்காச்சிக்கு என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    எப்பவும் ஹப்பியா இருங்கோ.. இருக்க.. என் வாழ்த்துக்கள் அக்காச்சி.

    புத்தாண்டுக்கு மட்டும் அல்ல அதை தொடர்ந்து ஒவ்வொரு நானும் உங்களுக்கு இனிய நாளாக நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க என் வாழ்த்துக்கள் அக்காச்சி.
    அன்புடன்...
    தம்பி.
    துஷி

    ReplyDelete
  43. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஹேமா!

    வம்சி சிறுகதை போட்டியில் உங்கள் 'வார்த்தைகள்' கதை தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கபட்டிருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை. அதிலும் குப்பைத்தொட்டி எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.
    தொடர்ந்து எழுதுங்கள். புத்தாண்டு வாழ்த்து ஹேமா.

    ReplyDelete