Tuesday, December 20, 2011

முந்தி ஒரு காலத்திலே...

மூலையில் பயந்தொதுங்கும்
எலியென ஒரு கும்பி உருவம்
உக்கிய சப்பல் குச்சியென
கைதொட உதிர்ந்து கரைய
ஆயுள் முழுதும் சேமித்த மூச்சை
விட்டு விட்டு இழுத்தபடி
சரிவரப் புரியாதபடிக்கு.

நூற்றாண்டின் நினைவலைகள்
புரட்டித் திருப்ப
எண்ணற்ற முகங்கள்
சிரித்தும் அழுதும்
கைகுலுக்கியும்
இரவும் பகலுமில்லா ஒரு பொழுது
நீர்த்து மறைந்துகொண்டிருக்க...

தூக்கத்தின் நடுவில்
சொண்டு சுளித்தழுது
அம்மாவைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையாய்
சொல்லி முடியா
கதைகளை
விக்கி விழுங்கி
சொல்லிச் சொல்லி
களைத்துப் போகுமது
ஒரு சாடையில் நானாக!!!

உயிரோசையில் ஹேமா(சுவிஸ்)

47 comments:

  1. உணர்வு பூர்வமான படைப்பு
    உணர்ந்து கொள்ள முடிகிறது
    மனம் கவந்தபதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. ஒரு சாடையில் நானாக!!!


    ம்ம்

    ----------

    வலிகள் மறந்து போச்சா, அல்லது மறத்துப்போச்சா தெரியலை எனக்கு ...

    ReplyDelete
  3. துயர் சொட்டும் வரிகள்.

    /தூக்கத்தின் நடுவில்
    சொண்டு சுளித்தழுது
    அம்மாவைத்
    தொட்டுப் பார்க்கும் குழந்தையாய்/

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் ஹேமா.

    ReplyDelete
  4. அருமை.
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாசிக்கையிலேயே உணரப்படுகிறது சரியான காரணமும் கற்பனை செய்துக் கொள்ளும் காரணமும்.. காரணம் எதாயிருந்தாலும்

    //ஆயுள் முழுதும் சேமித்த மூச்சை
    விட்டு விட்டு இழுத்தபடி
    சரிவரப் புரியாதபடிக்கு.//

    இது கொடுமையல்லவா.. நல்லாயிருக்கு தான் ஹேமா ஆனால் வலிகளை ரசிக்க முடிவதில்லை உணர்வதால்..

    ReplyDelete
  6. உணர்வுபூர்வமான கவிதை ஹேமா.

    தமிழ்மணம் வாக்கு செலுத்திவிட்டேன். (4)

    ReplyDelete
  7. இருண்மை அதிகமாக இருக்கிறது ஹேமா. கவிதை தெரிந்தவர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். சாதாரண வாசகர்கள்? படிமம், குறியீடு, இருண்மை ஆகிய உத்திகள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தைப் போல் இருந்தால் போதும். அதுவே அழகு என்ற்பது எனது கருத்து. கவிஞர்கள் முயற்சி செய்தால் மகிழ்வேன்.

    ReplyDelete
  8. சீரியஸா படிச்சன்

    ReplyDelete
  9. உணர்வுகளை பிழிந்து ஒரு உயரிய படைப்பு ...
    சில இடங்களில் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை அக்கா ,,,
    மீண்டும் முயற்சித்து பார்க்கிறேன் ...

    ReplyDelete
  10. மனதை தொட்ட கவிதை.

    ReplyDelete
  11. வலி நிறைந்த அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. புரிந்தும் புரியாமலும் வரிகள்.

    புரிந்த வரிகளே... வலியாய் வதைக்கிறது.

    ReplyDelete
  13. முத்திரை வரிகள் ஹேமா...

    ReplyDelete
  14. //ஆயுள் முழுதும் சேமித்த மூச்சை
    விட்டு விட்டு இழுத்தபடி
    சரிவரப் புரியாதபடிக்கு//
    very nice!

    ReplyDelete
  15. பரவல.... நான் சொல்லி கூடுத்த மாதிரி இல்லாட்டியும், அந்த மாதிரி எழுத முயற்சி பண்ணி இருக்கீங்க. வாழ்த்துக்கள் :)))))

    ReplyDelete
  16. அருமையான கவிதை ஹேமா. வலிகளில் உணர்வுகளின் பிம்பங்கள் பிரதிபலிக்கின்றன. நல்ல கவிதை.

    ReplyDelete
  17. மிகவும் உணர்வுபூர்வமாக எழுதுன மாதிரி இருக்கு ஆனால் கொஞ்சம் புரியலை...!!!

    ReplyDelete
  18. கருத்துப்பொதிந்த உணர்வுபூரமான கவிதை. சிறப்பான வார்த்தைப்பிரயோகம்.

    ReplyDelete
  19. வணக்கம் அக்கா,
    நல்லா இருக்கிறீங்களா?

    முன்னைய காலத்தில் அடிமைத் தளையுள் சிக்குண்டு ஒரு ஓரமாய் ஒதுங்கி வாழ்ந்த பெண்ணின் அவல நிலையினை காலத்தின் பதிவாக இக் கவிதை சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  20. ///சொல்லி முடியா
    கதைகளை
    விக்கி விழுங்கி
    சொல்லிச் சொல்லி///

    உணர்வுகள் தொண்டைக்குள்ளே சிக்கி நின்றது போல
    ஒரு உணர்வு...
    அருமையான சொல்லாடல் சகோதரி.

    ReplyDelete
  21. வாசிக்கும் ஒவ்வொருவரின் பிடிமானங்களைத் தளர்த்தி, வழுக்கலுறச் செய்து தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் வலி மிகுந்த வரிகள். இளக்கம் மறந்து இறுகச் செய்யும் வன்மையான கரு. என்ன சொல்ல ஹேமா? ஒரு சாடையில் நானாகவும் ஆகிப்போனேன்.

    ReplyDelete
  22. எவ்ளோ அழகான சொற்கள் பிடித்து எழுதுறீங்க...!! ஆச்சரியமாயும் பொறாமையாகவும் இருக்கு அக்காச்சி...

    ReplyDelete
  23. தூக்கத்தின் நடுவில்
    சொண்டு சுளித்தழுது
    அம்மாவைத்
    தொட்டுப் பார்க்கும் குழந்தையாய்
    சொல்லி முடியா
    கதைகளை
    விக்கி விழுங்கி
    சொல்லிச் சொல்லி
    களைத்துப் போகுமது
    ஒரு சாடையில் நானாக!!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப ரெம்ப ரசித்தேன் அக்காச்சி....
    அக்காச்சி விரக்தியின் வெளிப்பாட்டை இவ்ளோ அழகா சொன்னவன் நீங்களாத்தான் இருக்க முடியும் :)

    ReplyDelete
  24. நல்ல கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. எல்லாரும் வாய் நிறையப் பாராட்டிட்டுப் போயி்ட்டாங்க ஹேமா! அதனால மனதைப் பாதித்த இந்த கவிதைக்காக நான் உங்களுக்கு ஒரு சல்யூட்டும், இந்த ரோஜாப்பூவையும் கொடுக்கறேன். வாங்கி்‌க்கங்க.

    ReplyDelete
  26. பிரியாத வலிகளைப் புரிந்தும் புரியாத வரிகளில் சொல்லும் கவிதை.அருமை ஹேமா.

    ReplyDelete
  27. நூற்றாண்டின் நினைவலைகள்
    புரட்டித் திருப்ப
    எண்ணற்ற முகங்கள்
    சிரித்தும் அழுதும்
    கைகுலுக்கியும்
    இரவும் பகலுமில்லா ஒரு பொழுது
    நீர்த்து மறைந்துகொண்டிருக்க...

    வலிகளை வலிமையாய் வார்த்தைகளில் கோர்த்த கவிதை..

    ReplyDelete
  28. வலியும் விரக்தியும் கலந்த வார்த்தைகள் .

    /தூக்கத்தின் நடுவில்
    சொண்டு சுளித்தழுது
    அம்மாவைத்
    தொட்டுப் பார்க்கும் குழந்தையாய்/

    மனதைத் தொட்ட வரிகள்

    ReplyDelete
  29. நூற்றாண்டின் நினைவலைகள்
    புரட்டித் திருப்ப
    எண்ணற்ற முகங்கள்
    சிரித்தும் அழுதும்
    கைகுலுக்கியும்
    இரவும் பகலுமில்லா ஒரு பொழுது
    நீர்த்து மறைந்துகொண்டிருக்க...

    வலிகளை வலிமையாய் வார்த்தைகளில் கோர்த்த கவிதை..

    ReplyDelete
  30. உணர்வுபூர்வமான கவிதை ஹேமா.

    ReplyDelete
  31. அனுப‌வ‌ங்க‌ள்... தெறிக்கும் வ‌லிக‌ள் நிர‌ம்பிய‌தாய்!

    ReplyDelete
  32. கவிதை செம கலக்கல் வழக்கம்போலவே

    ReplyDelete
  33. அன்புச் சகோதரிக்கு வணக்கம்!

    வலிகள் நிறைந்த வாழ்க்கையின் துயரங்களை அழகாகப் படம்பிடித்து, அழமான கருத்தோட்டத்தில் கவிதையாகப் புனைந்திருக்கிறீர்கள்! உங்கள் கவிதையில் இருக்கும் நுண்மை வியப்புக்கும் போற்றுதற்கும் உரியது!

    உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    அன்புடன் ஈழவயல்

    ReplyDelete
  34. வணக்கம் ஹேமா !
    நலமா?
    மனதில் தோன்றும் இருமையான தவிப்புக்களை சொல்லிச் சொல்லி களைத்துப்போய் சாடையாக !
    என ஏக்கம் கலந்த கவிதையை ரசித்துப் படித்தேன்!

    ReplyDelete
  35. அருமையான படைப்பு ஹேமா..வாழ்த்துகள்..

    ReplyDelete
  36. மனதைத் தொடும் உணர்வுக் கவிதை அருமை சகோதரி அருமை.

    த.ம 15

    ReplyDelete
  37. உணர்வுப்பூர்வமான கவிதை ... என்னுடைய வலைத்தளத்தில் உங்களை இந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு ... எழுத அழைத்துள்ளேன் ... !

    ReplyDelete
  38. மனத்தை வலிக்கும் கவிதை.

    ReplyDelete
  39. மிகவும் அருமை!
    பகிர்விற்கு நன்றி!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  40. //சொல்லி முடியா கதைகளை
    விக்கி விழுங்கி சொல்லி சொல்லி
    களைத்து போகுமது
    ஒரு சாடையில் நானாக//

    அருமை ஹேமா!

    ReplyDelete
  41. ஃஃஃஎண்ணற்ற முகங்கள்
    சிரித்தும் அழுதும்
    கைகுலுக்கியும்ஃஃஃ

    அருமை அக்கா... ஒற்றை முகமே இத்தனையும் நொடியில் காட்டுமில்லியா?

    ReplyDelete
  42. நெகிழ வைத்தது தங்கள் கவிதை,
    கொஞ்சம் வார்த்தைகள் (எனக்கு) புதியனவாயிருப்பினும்.
    அன்பு வாழ்த்துகள்

    ReplyDelete
  43. கவிதை பல பேருக்குப் பல்பொருள் பட்டிருக்கும்.துரைடானியல் அதிகம் குழம்பியிருப்பதாக சொல்லியிருக்கிறார்.என் பார்வையில்,என் கருவில் பல பல ஆண்டுகளின் பின் ஒரு ஆன்மா தன்னைத் தானே அடையாளம் கண்டுகொள்கிறது.இப்பொழுது வாசித்துப் பாருங்களேன் !

    ReplyDelete
  44. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete