Friday, December 16, 2011

மழை முத்தம்...

அன்றைய நாளில்...
நம் முத்தச்சண்டை குறித்து
யோசிக்கையில்
காற்றும் மழையும் குசுகுசுத்தபடி
ஏதோ சதித்திட்டமாயிருக்கலாம்.

இன்னொரு நாளில்...
உன்னை வெளியில் தள்ளி
கதவுகளை மூடிக் கொஞ்சம்
அழுது துயில்வோம் என்று
முற்றத்து நிலவில்
அண்ணாந்து சரிகையில்
வார்த்தைகள் பிடுங்கி
கண்களின் கனவுக் கோடுகளை
அழித்துப் போனது அதே மழை.

மற்றொரு நாளில்...
நீ என்னை விட்டுப் பிரிவாய்
என மின்னலாய் இடியாய்
மழைச் சாத்திரம் சொல்லி
என்னை நனைத்துச் சேறாக்கியது
மீண்டும் அந்த மழை.

அதே நாளில்...
என் கன்னத்து
உன் இதழ்ப் பதிவைப்
பறித்து போனது
அந்தப் பாவிக் காற்றும்.

பிறிதொரு நாளில்...
இரண்டும் இயல்பு மாறாமல்.

என்னருகில் அணைத்தபடி
அன்று நீ...!!!

ஹேமா(சுவிஸ்)

41 comments:

  1. என் வாழ்வின் முக்கியக் கட்டஙகளில் எல்லாம் மழை உடன் இருந்திக்கிறது. ரசனையான உங்க கவிதை அதை நினைவுபடுத்திடுச்சு. மிக்க நன்றி!

    ReplyDelete
  2. உன் இதழ்ப் பதிவைப்
    பறித்து போனது
    அந்தப் பாவிக் காற்றும்.

    குறிப்பாய் மேற்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன்.வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. வாழ்வில் மழையின் சுவடுகள் மனதில் பல விதங்களில் பதிகின்றன. அது கொண்டு வரும் நினைவுகளும் ஏராளம். அருமை.

    ReplyDelete
  4. முத்திரை பாதிக்கும்
    முத்தத்தின் நிமித்தம்
    மழைக்காற்றின் நிரல்களை
    நியாயப்படுத்தி வரைந்த
    அழகுக் கவிதை.

    ReplyDelete
  5. அன்றைய நாளின் முத்தச்சண்டையில் துவங்கியது, இன்னொரு நாளாகி மற்றுமொரு நாளாகி அதே நாளின் கன்னத்து முத்தத்தில் பரவி, பிறிதொரு நாளிற்கு முத்தத்தின் இயல்பு நிலை மாறாமல் ...

    கனநாட்கள் கழித்து முத்த சத்தம் ஹேமா ...

    ReplyDelete
  6. அழகான நாட்கள். அருமையான ஞாபகங்கள், கவிதைகள்.

    ReplyDelete
  7. ஹேமா,

    என்னமோ தெரியவில்லை. திரும்பிய திசையெல்லாம் ’முத்தமழை’ கவிதையாகவே பொழிகிறது.

    ReplyDelete
  8. காதலும் ஊடலும் மழையுடன் வந்து போன
    உணர்வுகளை மிகவும் நளினமாக  சொல்லிச் செல்லும்முத்தக் கவிதை சிறப்பு. அதிலும் வெளியே தள்ளி அழுதுவடித்த வரிகள் நெஞ்சில் முள்ளாக!

    ReplyDelete
  9. மழைத் தொடுதலும் முத்த இனிப்புதானே ஹேமா!

    ம்...ம்..

    தமிழ்மணம் வாக்கு 8.

    ReplyDelete
  10. ஊடலும் கூடலும்
    உட்பொருள் ஆக
    பாடலும் தேடலும்
    பாடுபொருள் ஆக
    வாடலும் வருந்தலும்
    வரும்பொருள் ஆக
    நாடலும் மழைமுத்தம்
    நவின்றீரே ஹேமா
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. மழைக்கால கவிதை மழை சூப்பர்ப்...!!!

    ReplyDelete
  12. அருமை கவிதை புதுமை

    ReplyDelete
  13. மழையும் தென்றலும் மனிதவாழ்வுடன் என்றும் கைகோர்த்து நடைபயிலுகிறது. இனிய கவிவரிகள்.

    ReplyDelete
  14. மிகவும் ரசித்தேன் கவிதையை சகோ..

    ReplyDelete
  15. மாலை வணக்கம் மகளே!பொன் சுவார்!குட் நாபெண்ட்!!!அருமையாக இருக்கிறது கவிதை.வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  16. கவிதை அருமை

    ReplyDelete
  17. @ சத்ரியன்

    ரிபீட்டு ..............

    விஜய்

    ReplyDelete
  18. ஆரம்பத்திலிருந்தே உங்கள் கவிதைகளின் ரசனை சிறிதுகூட குறையாமல் அப்படியே இருக்கிறது அவ்வப்பொழுது இப்படியான ரசனையான கவிதைகளும் தாருங்கள் கவிஞரே ..

    ReplyDelete
  19. கவிதை ரெம்ப அழகு பிளஸ் ரொமான்ஸ் அக்காச்சி... சூப்பர் .... கலக்கிட்டீங்க :)

    ReplyDelete
  20. இன்னொரு நாளில்...
    உன்னை வெளியில் தள்ளி
    கதவுகளை மூடிக் கொஞ்சம்<<<<<<<<<<<<<<<<<

    இந்த வரிகள் எனக்கு ஏனோ ரெம்ப புடிச்சு இருக்கு அக்காச்சி... திரும்ப திரும்ப படிச்சேன் ஆக்கும்... ரியலி இந்த வரிகள் செம க்யுட் அக்காச்சி

    ReplyDelete
  21. கவிதை மழைத்தூறலாய் மனதை நனைக்கிறது!

    ReplyDelete
  22. கண்களின் கனவுக் கோடுகளை
    அழித்துப் போனது அதே மழை.//

    கண்களின் கண்ணீர் துளிகளை அன்போடு அழவேண்டாம் என துடைத்து சென்றதோ!

    ReplyDelete
  23. அழகிய உணர்வை வெளிப்படுத்தும் கவிதை சகோ

    த.ம 13

    ReplyDelete
  24. அய்யய்யோ தெரியாம வந்துட்டனே இங்க பார்த்தா முத்தமழை கொட்டுது என்னமோ நடக்குது விடுங்க கற்று புகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ...........

    ReplyDelete
  25. அக்கா வணக்கம் ..
    இனிமை வரிகளில் இணக்கமாய் கவி வரிகள் ..
    சாரல் பொழிகிறது .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. முதத மழையில் நனைந்தேன் .....ந்ல்ல கவிதை.....

    ReplyDelete
  27. இந்தக் கோணம் புதிது. மழையுடன் ஊட ஒரு காரணியா? ம்ம்ம்.. nice.

    ReplyDelete
  28. மழை முத்தம்
    மனசுக்குள் சத்தமாய்
    மெளனத்தையும் கலைத்தபடி
    மறுபடி மறுபடி கேட்கிறது
    முத்தச் சத்தமும்
    மழை முத்தமும்..

    அருமை தோழி..

    ReplyDelete
  29. மழைக்கவிதை வெகுவாக நனைத்தது.
    ஒரு இதழின் வெவ்வேறு முத்தங்களை
    வகைப்படுத்தியதில் மிளிர்ந்தது உங்கள் சுகித்தல்.
    -இயற்கைசிவம், வெயில்நதி வலைப்பூ

    ReplyDelete
  30. ம்ம்ம்...இன்னும் என்னன்வோ ஹேமா...

    ReplyDelete
  31. மழையையும் முத்தத்தையும் இணைத்து கவிதை மழையில் நனைய வைத்ததற்கும் , காதல் கவிதை எழுதி நாளாகி விட்டதே என்ற ஏக்கத்தை என்னுள் விதைத்ததற்கும் நன்றி ஹேமா ...!

    ReplyDelete
  32. வணக்கம் அக்காச்சி,
    மழையில் தொடங்கி மழையில் கரைந்து மழையில் இணைந்த உறவு பற்றிய மழைக் கவிதை! அருமை!

    ReplyDelete
  33. ரசிக்க வைக்கும் வரிகள் ரசித்தேன் கனவுலகில் கண்ட காட்சியாய் நினைவுகளைக் கடந்து செல்கினறன கவிதை ........

    ReplyDelete
  34. //அன்றைய நாளில்...
    நம் முத்தச்சண்டை குறித்து
    யோசிக்கையில்
    காற்றும் மழையும் குசுகுசுத்தபடி
    ஏதோ சதித்திட்டமாயிருக்கலாம்.//தொடக்கமே அருமை

    ReplyDelete
  35. முத்தமழையில் நனையாதவர்கள் யார்.ஒவ்வொரு பருவத்திலும் முத்தம் வாழ்வை சுவையூட்டி ஊட்டச்சத்தாகவும் வாழ்வைச் சுறுசுறுப்பாக்குகிறது.அதன் வழிதான் இந்தக் கவிதை.கொஞ்சம் மனம் இளகியிருந்த நேரம் வந்த வரிகள்.அழகாக வெளிப்பட்டிருந்தது அந்த நேர உணர்வை.மழை பலபேருக்கு எதிரியாவும் நட்பாயும் அப்பப்ப மாறும்.எனக்கு மழை எதிராயிருந்த நேரத்தை உப்புமடச்சந்தியில் எழுதியிருக்கிறேன்.என்னோடு மழையில் நனைந்த நீங்கள் எல்லாரும் சுகம்தானே.காய்ச்சல் வரேல்லத்தானே.சந்தோஷம் !

    முத்தமே பிடிக்காதமாதிரி ஒண்டிரண்டு பேர் கண்ணைப் பொத்திக்கொண்டு விரல் இடுக்கால் ரசித்ததையும் பாத்திட்டேன் !

    என்னோடு இந்தக் கவிதையில் புதிதாக இணைந்த அப்பா யோகா,பிரேம் குமார் இருவருக்கும் என் அன்பு வணக்கம்.இனி அடிக்கடி வரவேணும் !

    ReplyDelete
  36. அட
    முத்தச் சாரலில் நனைக்கும் கவிதை மழை
    அருமை ஹேமா

    ReplyDelete