Thursday, December 08, 2011

சும்மாவே போனது...

MySpace Graphics

நீ...
தோழனாய் கை கோர்த்தபோது
நான் இருப்பேன்
இறுதிவரை என்றேன்
சும்மா...எதுவரை என்றாய்.

பின்னொருநாள்
நம் தோழமைக்குள்
சும்மா...எத்தனை நாள்தான்
காதலை ஒளிப்பாயென்றாய்.

நீயும் இருப்பாய்
நானும் இருப்பேன்
அதுவரை என்றேன்
நீ...சும்மா
காதல் சொன்ன முதல் நாளில்.

அம்மா என்றாய்
சமூகம் என்றாய்
நானும் இருப்பதைச் சொன்னேன்
எதுவும் இப்போ நம்மோடு இல்லை
எதுவும் இருக்கப்போவதுமில்லை
சும்மா...ஒரு தத்துவம்
சொன்னோம் இருவரும்.

இருக்கும் எல்லாமே
இல்லாத ஒன்றைத்தான்
இருப்பதாய் சும்மா சொல்கிறது
இருக்கும்...
இந்தக் கணம் மாத்திரம் இருப்பில்
இப்போ அதுவும் "சும்மா"தான்
இல்லாமல் போய்விடும் பாரேன்!!!

ஹேமா(சுவிஸ்)

50 comments:

  1. எப்போதும் "சும்மா" வுக்குள் நிறைய "அர்த்தங்கள்" இருக்கும்.

    ReplyDelete
  2. /////இருக்கும் எல்லாமே
    இல்லாத ஒன்றைத்தான்
    இருப்பதாய் சும்மா சொல்கிறது///

    அக்கா வரிகள் ஒரு யதார்த்தத்தை குழப்பாமல் குழப்பிச் சொல்கிறது...

    ReplyDelete
  3. சும்மா படிச்சு சும்மா ஒரு கமெண்ட் போட்டு விடலாம் என்று பார்த்தால் சும்மா போட்டு விட முடியாதபடி சும்மாக்கு நிறைய அர்த்தங்கள் வருவதால் சும்மா கமெண்ட் போடாமல் சும்மாவையே கமெண்ட் ஆகப் போட்டு விடலாம் என்று சும்மா பின்னூட்டமிட்டு விட்டேன். அதே நேரம் சும்மா என்ற தலைப்பில் முன்பு எங்கள் ப்ளாக்கில் வந்த பதிவும் சும்மா நினைவுக்கு வந்தது. சும்மாதான் அதையும் சொன்னேன்!

    ReplyDelete
  4. சும்மா சும்மா என்பது ஊடாகவே நமக்குள் ஏதும் இல்லை .என்ற உணர்வுகளை மறைத்துக் கொண்டே !சமுகத்துடன் ஒத்து ஓடும் நிலையில் ஏதும் இல்லை! சும்மாவின் தமிழ் வார்த்தைக் கோவை அர்த்தம் பொதிந்தது. அழகான உணர்வைத் தூண்டும் கவிதை தோழி!

    ReplyDelete
  5. ஹேமா சும்மா வை கொண்டு சும்மா ஒரு கவிதை அருமை.

    ReplyDelete
  6. இருக்கும் எல்லாமே
    இல்லாத ஒன்றைத்தான்
    இருப்பதாய் சும்மா சொல்கிறது// மிகச் சிறந்த வார்த்தை பிரயோகம்..

    கவிதை சும்மா அதிருதில்ல..

    ReplyDelete
  7. அட, இந்த சும்மாவுக்குள் சுகம், சோகம், சுமை எல்லாம் இருக்கும் போல :)

    ReplyDelete
  8. ” சும்மா” சொல்லமுடியாதவை அனைத்தும் சொல்லிவிட்டது..சும்மாவே இருந்து சும்மா போனது..சும்மாக்களை கணக்கிட்டால் சுமக்கவே முடியாது போலிருக்கே ஹேமா...இதை படிக்காமல் சும்மா இருந்திருக்கலாம்.ம்ம் சும்மா இருந்த எல்லாம் கமா போட்டு ம் சேர்த்து சும்மாவாக தொடர்ந்துவிட்டது மீண்டும்....

    ReplyDelete
  9. சும்மா என்றாலே அதில் ஒரு அர்த்தம் பொதிந்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாம் ,அது மாதிரி இந்த சும்மா கவிதை அர்த்தம் நிறைந்தது சகோ

    தமிழ்மணம் ஆறாவது வாக்கு

    ReplyDelete
  10. சும்மாச் சொல்லக்கூடாது
    சும்மா..சும்மா புகுந்து விளையாடுது
    சும்மா இருக்கமுடியாததால்
    சும்மா ஒரு கமெண்ட்

    ReplyDelete
  11. இருக்கும்...
    இந்தக் கணம் மாத்திரம் இருப்பில்
    இப்போ அதுவும் "சும்மா"தான்
    இல்லாமல் போய்விடும் பாரேன்!!!//


    சும்மா //என்ற வார்த்தையை வைத்து எத்தனை அருமையான கவிதை
    சும்மா சொல்லக்கூடாது சும்மா சூப்பர்

    ReplyDelete
  12. என்ன ஒரு சொல் விளையாடல் உங்கள் கவிநடையில்..
    அசந்து போனேன் சகோதரி..

    ReplyDelete
  13. சும்மா... சொல்லவில்லை
    சூத்திரம் அறிந்த
    கவிதாயினி நீங்கள்..

    ReplyDelete
  14. அம்மா, சும்மா என்ற வார்த்தை கொண்டு தாங்கள் நிகழ்த்திய சொற் தாண்டவத்தை ரசித்தேன். சும்மா என்ற வார்த்தையை சும்மா சும்மா எத்தனை விதங்களில் பயன்படுத்துகிறோம் எனு நானும் வியந்ததுண்டு. அழகான கவிதையை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  15. /இருக்கும் எல்லாமே
    இல்லாத ஒன்றைத்தான்
    இருப்பதாய் சும்மா சொல்கிறது/

    உண்மைதான். அருமை ஹேமா!

    ReplyDelete
  16. //இருக்கும் எல்லாமே
    இல்லாத ஒன்றைத்தான்
    இருப்பதாய் சும்மா சொல்கிறது
    இருக்கும்...
    இந்தக் கணம் மாத்திரம் இருப்பில்
    இப்போ அதுவும் "சும்மா"தான்//

    சும்மா கலக்கிட்டீங்கன்னு சும்மா சொல்லிடமுடியாதபடிக்கு சும்மா அருமையான கவிதையை தந்து சும்மா அசத்திட்டீங்க சும்(ஹே)மா :-))

    ReplyDelete
  17. hollo sumathan unga blog vanthen.

    summathan padichen.

    summa oru comment pottutan.

    summa poitu varukinren.

    ReplyDelete
  18. சும்மா சும்மான்னு சொல்றதுல ஆயிரம் அர்த்தம் இருக்கு இல்லையா, அருமையான கவிதை, வாழ்த்துக்கள் மக்கா...!!!

    ReplyDelete
  19. இந்தக் கவிதையை கொஞ்சம் யோசித்து எழுதியிருந்தால் மிகச்சிறப்பாக வந்திருக்கும்..

    இன்னொருமுறை முயற்சி செய்து பாருங்கள்...

    ReplyDelete
  20. சும்மா என்பதற்குத்தான் எத்தனை
    மாறுபட்ட அர்த்தங்கள்
    வல்லவன் கையில் புல்லும் ஆயுதம் என்பதற்கு
    இந்த சும்மாவே சான்று
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 10

    ReplyDelete
  21. இந்த சும்மா இருக்கிறதே இந்த சும்மாதான் எத்தனையோ சாதனைகளையும் சோதனைகளையும் தந்து மனிதத்தை பன்படுத்தியும் இருக்கிறது பாழ்படுத்தியும் இருக்கறது உங்களின் ஆக்கத்தில் ஒரு தத்துவம் இருக்கிறது ம் சிறப்பு பாராட்டுகள் .

    ReplyDelete
  22. //இருக்கும் எல்லாமே
    இல்லாத ஒன்றைத்தான்
    இருப்பதாய் சும்மா சொல்கிறது
    இருக்கும்...
    இந்தக் கணம் மாத்திரம் இருப்பில்//

    சும்மா அதிருதுல்ல...

    ReplyDelete
  23. சும்மா கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  24. ஹேமா சும்மா ...ஹம்மா...ம்ம்ம்..

    ReplyDelete
  25. சும்மா சும்மா... அர்த்தங்களாக்கப்பட்டிருக்கிற தன்மை அழகு.

    ReplyDelete
  26. ஹேமா,

    இக்கவிதையை ”சும்மா” எழுதியிருக்க வாய்ப்பில்லை.

    உங்களின் “சொந்தக்காரனுக்கு” எதையோ உணர்த்தத் தான் எழுதப்பட்டிருக்கிறது.

    படிக்கும் “அவனுக்கு” நிச்சயம் விளங்கும்.பின்,

    எதுவும் “சும்மா” இல்லை என்பது உங்களுக்கும் விளங்கக்கூடும்.

    ReplyDelete
  27. எதுவும் இப்போ நம்மோடு இல்லை
    எதுவும் இருக்கப்போவதுமில்லை//

    இருக்கும்...
    இந்தக் கணம் மாத்திரம் இருப்பில்//

    எல்லோருக்குமான‌ வ‌ரிக‌ள்!

    ReplyDelete
  28. இந்தக் கணம் மாத்திரம் இருப்பில்
    இப்போ அதுவும் "சும்மா"தான்
    இல்லாமல் போய்விடும் பாரேன்!!!

    சும்மாவே போனது..."அந்த க்ஷணம்!!!

    ReplyDelete
  29. //இருக்கும் எல்லாமே
    இல்லாத ஒன்றைத்தான்
    இருப்பதாய் சும்மா சொல்கிறது
    இருக்கும்...//

    அருமை....

    ReplyDelete
  30. கடந்த சில இடுகைகளை கண்டும் வாசித்தும் வருகிறோம் இப்போது நாங்கள் மீண்டும் கற்காலத்திற்கு பயணமாகிக் கொண்டு வருகிறோம் காரணம் எங்களுக்கு வேண்டிய மின்சாரம் கிடைப்பதில்லை இதனால் எந்த பதிவிற்கும் பின்னூட்டமும் பதிவையும் செய்ய இயலவில்லை .

    முதலில் ஈழம் பற்றிய இடுகையில் முறையில்லாத பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்பது எனது கருத்து காரணம் நானும் இதே பிழையை ஒரு இடுகையில் செய்தேன் என்பது வேறு செய்தி மழுங்கடிக்க செய்யும் வேலைகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பானேன் . அடுத்த இடுகை நன்கு படித்தவர்கள் புரியாமல் விழிக்கிறார்கள் .
    அந்த குறியை நீக்க இந்த சிறப்பான பசுமையான நினைவுகளை எங்களுக்காக பதிவவிட்டி இருக்கிறீர்கள் சிறப்பு பாராட்டுகள் ...

    ReplyDelete
  31. /////அம்மா என்றாய்
    சமூகம் என்றாய்
    நானும் இருப்பதைச் சொன்னேன்////

    ரசித்த வரிகள் அக்கா அருமை..

    ReplyDelete
  32. ஹேமா அக்கா... உந்த ச்சும்மா.. வுக்கு நிறைய அர்த்தம் உண்டு.... சும்மா என்ற சொல்லை நான் ரெம்ப அதிகம் பாவிப்பேன்..... சும்மா என்ற ஒற்றை சொல்லே அழகுதான் உங்கள் கவிதை அதை விட அழகு :)

    ReplyDelete
  33. /இருக்கும் எல்லாமே
    இல்லாத ஒன்றைத்தான்
    இருப்பதாய் சும்மா சொல்கிறது/

    ரெம்ப ரசித்தேன்... நீங்கள் சொல்லியதை சும்மா என்று ஒதுக்க முடியவில்லை... நீங்கள் சும்மா சொன்னாலும் இது எவ்ளோ உண்மை

    ReplyDelete
  34. எது எப்படியோ.... இனி சும்மா என்று எப்போ சொன்னாலும் சும்மா சும்மா ஹேமா அக்கா நினைவு வரப்போகிறது .... ஹா ஹா

    ReplyDelete
  35. சும்மா.. புகுந்து விளையாடியிருக்கிறீர்களே?

    ReplyDelete
  36. அட.. கலக்கறேள் போங்கோ... :)

    சும்மா இல்லைங்க நெசமா.. with நேசமா

    ReplyDelete
  37. இதுவும் கடந்துபோகும் என்ற எண்ணமிருந்தால்தான் எல்லோருமே ஞானிகளாகிவிடுவோமே. நிறைய யோசிக்கவைத்த கவிதை ஹேமா!

    ReplyDelete
  38. சும்மா கலக்குறீங்க போங்க ...!

    ReplyDelete
  39. மிகவும் அருமை ஹேமா! சும்மா சும்மா படித்து ரசித்தேன் பலமுறை.

    ReplyDelete
  40. ஹேமா, கவிதை எவ்வளவோ பேசுகிறது
    ஆனால்....
    அதையெல்லாம் எழுத எனக்குத்தான் நேரமில்லை
    மன்னிகவேண்டும்
    உன் மனதில் குமைந்தவைகளை,சுமைந்தவைகளை
    சும்மாடுபோட்டுத் தலையில் தூக்கிவைக்காமல்...
    “பெண்” பாடு பட்ட,படும் மெய்ப்பாட்டை
    பொய்பாடுஇல்லாமல்...
    சும்மாவெளிப்பாடாய் “சுட்டுவிட்டாய்உன்னைச் சுட்ட
    அந்த..........!.,,..! சும்மா சொன்ன...வரை!

    ReplyDelete
  41. எளிமையான வரிகளில் சுறுக்கென்று ஒரு கவிதை ..
    இயல்பான கவிதைக்கு வாழ்துக்கள் அக்கா

    ReplyDelete
  42. நிச்சியம் ஒரு நாள் எல்லாம் "சும்மா"ன்னு போவும்,
    இருந்தாலும்
    ஏதோ ஒன்று இருந்து கொண்டேயிருக்கும் ஹேமா!

    ReplyDelete
  43. சும்மா சொல்லக்கூடாது... சும்மான்னு ஒரு வார்த்தைய வெச்சு நீங்க உங்க திறமைய நல வெளிப்படுத்தி இருக்கீங்க :) இந்த கவிதை சும்மா சூப்பரா இருக்கு :)

    ReplyDelete
  44. சும்மா இல்லை சில சுமைகளைக் கோர்த்துத்தான் எழுதினேன்.சுகமாய் சுமை கொஞ்சம் குறைவதாய் நினைப்பு.திரும்பவும் சும்மாவே ஏறிக்கொள்கிறது சில சும்மாக்கள்.இதுதான் வாழ்வு.சும்மா இல்லாமல் என் சும்மாவைப் கிண்டலாயும் கேலியாயும் உணர்வோடும் பகிர்ந்துகொண்ட என் உறவுகளுக்கு நன்றி !

    உண்மையில் இப்பல்லாம் சரியான நேரப்பற்றாக்குறை.அதனால் தனித்தனியாக பதில் சொல்ல நினைக்கிறேன்.முடியவேயில்லை !

    செந்தில்...நிறைய நாளுக்கப்புறம் என் பக்கம்.கவிதையை இன்னும் அழகாக்கலாம் என்று சொல்லியிருந்தீர்கள்.முயற்சித்தேன்.
    என் உணர்வு இப்படித்தான் சொல்ல வருகிறது.முடிந்தால் செந்தில் நீங்களே அழகாக்குங்களேன்.
    ரசிக்கலாம் !

    ReplyDelete
  45. பாசாங்கு செய்வதற்காய்ச் சொல்லப்படும் சும்மா பற்றிய சுவையான கவிதை தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  46. சும்மா சொன்னாலும் நல்லாத்தான் இருக்கு..கவிதை! இது சும்மா சொல்லல்ல நெசமாத்தான்..

    ReplyDelete
  47. வணக்கம் சகோதரி..!
    சும்மாவை வைத்து இப்படி ஒரு சுவையான கவிதையா? சும்மா கலக்கீட்டிங்க போங்க..!!

    ReplyDelete
  48. "சும்மா" நிறையவே சொல்கிறது.

    ReplyDelete