Tuesday, August 02, 2011

இருள் வழி...

எங்கோ...
போயிருக்கிறது அது
கண்ணைக் கட்டி
இருளுக்குள் விட்டுவிட்டு !

மலையும் ஆறும் கலக்கும்
மிருகங்கள் புணரும்
காடுபோலிருக்கிறது
கண்ணாமூச்சி விளையாடி
கை விட்டுப் போனது யார் இங்கே !

பிந்திய இரவின் முனகலும்
பயந்து ஒதுங்கும் மானை
மயக்க முயலும் துணையுமாய்
விரகத்தின் வேதனையை
நீட்சியாக்கிவிட்டபடி...

மூடித் திறக்கும் கதவுவழி
ஏதேதோ உருவகங்கள்
கற்பனைக் கழிவுகள்...

ஓடிக் களைத்த வீராங்கனையாய்
கண்ணாடி பார்த்து
களிப்படைந்து
உடை மாற்றி
மீண்டும் வந்து
போர்வைக்குள் நுழைகையில்
ஏதோ ஒன்று
குறுக வைக்கிறது என்னையே!!!

ஹேமா(சுவிஸ்)

65 comments:

  1. ரொம்ப நல்லாருக்கு..நடத்துங்க...

    ReplyDelete
  2. //பிந்திய இரவின் முனகலும்
    பயந்து ஒதுங்கும் மானை
    மயக்க முயலும் துணையுமாய்//
    அருமையான வரிகள்!!!உக்கார்ந்து ஜோசிப்பீன்களோ??

    ReplyDelete
  3. பற்பல நிகழ்வுகளை உள்ளடக்கிய அழகிய கவிதை !

    ReplyDelete
  4. இன்னைக்கு எல்லாருமே இப்படியான ஒரு சூழலில்தான இருக்கோம் ஹேமா.. நல்லா வந்திருக்கு

    ReplyDelete
  5. உண்மையா சொல்லனும்னா கவிதையின் கரு எதை நோக்கியதான பயணம் என்று எனக்கு புரியவில்லை...

    விளக்கினால் என்னைப்போன்றவர்கள் எளிதில் புரிந்துகொண்டால் கவிதையின் சுவையை கூடுதலாய் ரசிக்க முடியும்

    ReplyDelete
  6. ரொம்ப ஆழமாக எழுதுறீங்க, இரண்டு தடவை படித்த பின்பு தான் புரியுது எனக்கு .....

    ReplyDelete
  7. வார்த்தை ஜாலங்கள், வசீகர வரிகளுடன் ஒரு அழகிய கவிதை.

    ReplyDelete
  8. மூடித் திறக்கும் கதவுவழி
    ஏதேதோ உருவகங்கள்
    கற்பனைக் கழிவுகள்...


    ..... அசத்தல்..... அருமையான கவிதை.

    ReplyDelete
  9. சொகமா இருக்கீளா?

    ReplyDelete
  10. பயந்து ஒதுங்கும் மானை மயக்க முயலும் துனையுமாய் அற்புதமான வரிகள் எப்படித்தோழி வார்த்தைகளை கையாலமுடியுது !
    வாழ்த்துக்கள் !
    மீண்டும் வருவேன் விரைவில்!
    நட்புடன் நேசன்!

    ReplyDelete
  11. கலக்கல் கவிநடை.
    உணர்வுள்ள வாக்கியங்கள்.
    அருமை.

    ReplyDelete
  12. கவிதை படித்தேன்.

    ReplyDelete
  13. பிரமாதம் அக்கா,

    கலக்குறேள், எப்படித்தான் இப்படி தேடி தேடி எழுதுகிறீர்களோ
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. தமிழில் இருக்கும் பல சொற்கள் உங்களிடம் வந்துதான் அழகாகிறதோ

    அசத்தல் அழகு கவிதை

    ReplyDelete
  15. பாருங்கோ சகோதரி உங்கள் கவிதைகளை படிப்பதற்காகவே நான் மீண்டும் புத்தகம் தூக்குகிறேன்.. ஆச்சி அப்பவே சொன்னா..பள்ளிக்கூடம் போடா காட்டான்னு கேட்டேனா இப்ப மாட்டிகிட்டு முழிக்கிறேன்...!?

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  16. //மூடித் திறக்கும் கதவுவழி
    ஏதேதோ உருவகங்கள்
    கற்பனைக் கழிவுகள்..//

    உணர்வுள்ள... பயமா இல்லை குழப்பமா எனத்தெரியாமல் தவிப்பு அடங்கும் கவிதையாய் அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  17. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அன்பார்ந்த ஹேமா அவர்களுக்கு
    தங்கள் கவிதைகளின்
    பரம ரசிகன் நான்
    தங்களை வலைச்சரத்தில்
    அறிமுகம் கிடைத்த வாய்ப்பை
    ஒரு நல் வாய்ப்பாகக் கருதுகிறேன்

    ReplyDelete
  19. காத்திரமான வரிகள்

    ReplyDelete
  20. //ஏதோ ஒன்று
    குறுக வைக்கிறது என்னையே!!!//


    ஏதோ ஒண்ணுனு புரியுது.
    என்னானு தான் புரியலை.

    ReplyDelete
  21. Nice.,
    Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

    ReplyDelete
  22. படித்தேன் ஹேமா..புரியத்தான் நேரமாகிறது.

    ReplyDelete
  23. அழகிய கவிதை...
    ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  24. இருள் வழி...இலகுவில் என்னால் பொருளுணர முடியாத குறியீட்டினைத் தாங்கி வந்து,
    கவிதை மூலம் என்னைக் கண்ணைக் கட்டிக் காட்டில் கொண்டு போய் விட்டது போன்ற உணர்வினைத் தருகிறது.

    ReplyDelete
  25. மூடித் திறக்கும் கதவுவழி
    ஏதேதோ உருவகங்கள்
    கற்பனைக் கழிவுகள்...//
    அழகிய கவிதை

    ReplyDelete
  26. கண்ணைக் கட்டி
    இருளுக்குள்
    விட்டுப் போயிருக்கிறது
    எங்கோ அது\\\\\\\\
    அந்த அன்பு அம்பு விடுகிறதா?


    “அதனால்” கட்டாதே கண்ணை!
    அது,”அதுதான்” நீதான் மூடி இருக்கிறாய்
    திறந்து பார்.........வெளிச்சம் வரும்
    இரவும்வரும்,பகலும்வரும்
    உலகம் ஒன்றுதான்
    இதற்குத்தான்,கண்மூடி தனமாய்......

    ReplyDelete
  27. மலையும ஆறும் கலக்கும்
    மிருகங்கள் புணரும்
    காடுபோலிருக்கிறது.
    கண்ணாமூச்சி விளையாடி
    கை விட்டுப் போனது யார் இங்கே\\\\\\\
    ஒரு பெண்ணுடன்....அல்லது பெண்ணை நேசித்துக்,
    கை
    விட்டுச் சென்றது ....
    அவளுக்கு காடு போல் இருக்கிறது
    {உணரமுடியாத,உறுதிப்படுத்த முடியாத}
    திக்கற்ற நிலை...
    {யாருடி..செல்லமிது?}

    ஹேமா கண்ணாமூச்சி விளையாடி.....
    என்ற வரிக்குள் அருமையான உவமை ஒளிந்து
    கிடக்கிறது...
    கண்ணைக் கட்டிப் பின் அவிழ்துவிட்டால்...
    கொஞ்சநேரம் இருட்டாய்தான் இருக்கும்
    அதுபோல.....இப்போது அந்தப் பெண்ணுக்கும்!

    ReplyDelete
  28. பிந்திய இரவின் முனகலும்
    பயந்து ஒதுங்கும் மானை
    மயக்க முயலும் துணையுமாய்
    விரகத்தின் வேதனையை
    நீட்சியாக்கிவிட்டபடி\\\\\\

    ஓஓஓ...கடைசியாகக் கண்ட கனவில் கூட
    வாய்விட்டு.......
    அவர் இன்னொரு துணையுடன் கனவில் வர...
    பெண் பயந்து .,முதல் அவருடன் காதல்வயப்பட்ட
    ஏக்கவேதனை வெளிப்பட...கனவு நீண்டுகொண்டே.....
    {இப்படியொரு கனவு தேவையா?ஹேம்ஸ்...

    ReplyDelete
  29. மூடித் திறக்கும் கதவுவழி\\\\

    வாவ் கண்ணுக்கு! நன்றாய் இருக்கு

    ஏதேதோ உருவகங்கள்\\\\

    அரண்டவன் கண்ணுக்கு
    இருண்டதெல்லாம் பேய்
    என்பார்கள் அதுபோலதான்...


    கற்பனைக் கழிவுகள்\\\\\\
    ம்ம்ம் மனது அலைபாய்ந்தால்....
    இப்படித்தான் தோணும்
    அப்படி இருக்குமோ!இப்படிஇருக்குமோ!!
    எனக் கற்பனையுமாய்....
    {ஹேமா ஒரு சி.ஜ.டி வைப்போமா?}

    ReplyDelete
  30. ஓடிக் களைத்த வீராங்கனையாய்
    கண்ணாடி பார்த்து களிப்படைந்து
    உடை மாற்றி
    மீண்டும் வந்து
    போர்வைக்குள் நுழைகையில்
    ஏதோ ஒன்று
    குறுக வைக்கிறது என்னையே!!!\\\\\\\


    பட்டது போதும் இதிலிருந்து
    விடுபட்டு மகிழ்ச்சியாய்
    இருக்கலாமென...மனதை
    மாற்றினாலும்....
    தூங்கப் போகும் போதாவது
    ஏதாவதொரு உன்னைப்பற்றிய
    ஞாபகம் {குறுக}கொஞ்சமாவது
    வந்து வதைக்கிறது என்னையே!!

    ReplyDelete
  31. இருள் வழி....
    படம் கவிதைக்கும் தலைப்புக்கும்
    ஏற்றவாறு அமைந்திருக்கிறது
    {ஆமா இப்படி உன்னில் வரையும்வரை....
    அழகாய்த்தான் இருக்கிறாய் ஹேமா!}

    படம்: அவள் பார்வைக்குப் பெண்ணாய்த்தான்
    இருக்கின்றாள்,ஆனால்....
    அவனால்..வரையப்பட்ட{பேசப்பட்ட}அத்தனையும்
    உடலில் எல்லாப் பாகங்களிலும்....
    சில நேரங்களில்...வெண்மையாய்
    {பரவாயில்லை சுத்தமான அன்புதான்!}
    சிலநேரங்களில்...கருமையாய்...
    {மனதை வதைக்கும் காதல் கலந்த சோகநினைவாய்..}
    சிலநேரங்களில்...சிவப்பாய்...
    {நெருங்க முடியாத அபாயமாயும்..}
    முகம் கொடுக்க{காட்ட}முடியாமல் சோகச்சுமைகளால்
    மூடப்பட்டு,வாழ்கைவழி
    இருள்வழியாய்..
    குறுகிய வட்டத்துக்குள் அவள்!!

    எம்புட்டுக் கஷ்ரபட்டு இப்புட்டும் எழுதிப்போட்டேன்
    எம்புட்டுப் பரிசி கொடுக்கபோறாக....

    இருள்வழி
    இரு உள்
    {ஹேமா,என்னுள் இரு இனிமேல்
    உனக்கு வேறு வழியில்லை என்கிறாயா?என்ன மிரட்டலா?

    ReplyDelete
  32. ஏதோ நிறைய சொல்றீங்க! ஆனா எனக்குதான் விளங்க மாட்டேங்குது! அவ்வ்வ்வ்! :-(

    ReplyDelete
  33. அருமை.
    வாசகனை கற்பனைக் காட்டுக்குள்ளே நுழைத்து அவரவர் பார்வையில் அர்த்தங்களைத் தேடுகிறது கவிதை.

    ReplyDelete
  34. அக்கா நன்றாக உள்ளது ; பல தடவைகள் படித்து ரசித்து கொஞ்சமாவது புரிந்து கொண்டேன்

    ReplyDelete
  35. அழகான வார்த்தை விளையாட்டு .கவிதை நல்லா இருக்கு ஹேமா .
    (முதலில் படித்தபோது கொஞ்சம் தான் விளங்கியது மறுபடியும் படித்தபோது கவிதை ஈர்த்தது )

    ReplyDelete
  36. //அரண்டவன் கண்ணுக்கு
    இருண்டதெல்லாம் பேய்
    என்பார்கள் அதுபோலதான்...//

    இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.

    அரண்டவள் கண்ணுக்கு
    இருண்டதெல்லாம் பேய்...”ன்னும்
    சொல்லலாமே!?

    ReplyDelete
  37. ஹேமா,

    இருள்வழி

    “காமாட்சி” கவிதை அருமை.

    ReplyDelete
  38. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.\\\\\
    வனிதையிடமா?வன்மையா?நான் அழுதிடுவேன்...

    அஆஆஆஆஆ....
    தன்மையாக் கண்டுகிறேன்
    ஹேமா நீங்க சொல்லும் கண்ணழகரு.....அந்தக் கண்{ண}
    வைச்சுகிட்டு{டிக்கிறாராம்}நோண்டிருவன்
    என்றுசொல்....

    அரண்டவள் கண்ணுக்கு
    இருண்டதெல்லாம் பேய்...”ன்னும்
    சொல்லலாமே!?\\\\\
    வந்திட்டாங்கையா!வந்துட்டாங்க!!
    அந்த மூக்கில் எப்படித்தான் வியர்கிறதோ!
    ஜயா பெரியவரே!இந்தச் சின்னப்பொண்ணு,,
    படிப்பறிவில்லாதவ இது நான் காதால கேட்டதுதான்!
    இப்படித்தான் சொன்னார்கள் அதை எழுதினேன்
    சரி,உங்களுக்கும் வேண்டாம்,எனக்கும் வேண்டாம்
    அதனால்,,,,
    அரண்டவர் கண்ணுக்கு
    இருண்டதெல்லாம் பேய்
    சரிங்களா?பெரியவரே!

    வன் னா??வள ளா? என்று பட்டிமன்றம்
    வச்சுப்போட்டீகளே!கனம் கோட்டார் அவர்களே!இதைக் குறிப்பெடுக்கவும் பின் உதவும்...

    ReplyDelete
  39. கழிவிரக்கத்தால் உந்தப்பட்டு கையகப்படுத்தப்பட்ட எண்ணங்களால் எழுந்த கவிதை என்பது மட்டும் புரிகிறது. கவிதையின் பன்முகங்களையும் பல்வேறு பின்னூட்டங்களால் அறிகிறேன். பாராட்டுகள் ஹேமா.

    ReplyDelete
  40. யோசித்து புரியவைக்கும் கவிதை......
    அருமை.....
    எப்பிடிதான் இப்பிடியெல்லாம் வருது என்றுதான் புரியலயே ஹேமாஅக்காவுக்கு...!!!!

    ReplyDelete
  41. அருமையான கவிதை.

    ReplyDelete
  42. அருமையான கவிதை ஹேமா!

    ReplyDelete
  43. அருமையான கவிதை ஹேமா...
    தமிழ் - தமிழ் அகராதி வாக்கியங்களுக்கு இல்லையே...

    இருந்தாலும் பக்கத்திலேயே வைக்க வேண்டும் கூடிய விரைவில்...

    நான் கண்ட கவிதாயினிகளில் நீங்கள் ஒரு தனி ராகம்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  44. நான் கண்ட கவிதாயினிகளில் நீங்கள் ஒரு தனி ரகம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  45. கண்ணாமூச்சி விளையாடி
    கை விட்டுப் போனது யார் இங்கே !//

    இருள் வழி இருண்ட காலமும் மனமும்.

    ReplyDelete
  46. ரொம்ப நல்லாருக்கு

    ReplyDelete
  47. ஹேமா. எல்லாரும் கவிதை பிரமாதம்கறாங்க.. டிஸ்கி போட்டு கவிதைக்கு விளக்கம் சொன்னா நானும் அதே போல் சூப்பர்னு சொல்லுவேன்.. ஹி ஹி ஒண்ணூம் புரியல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  48. மொழி எங்கிருந்தோ நகர்ந்து எங்கு வந்து விட்டிருக்கிறது ஹேமா. தொடர்ந்து எழுதுங்கள் இனி என் அட்டெண்டன்ஸ் தொடர்ந்து இருக்கும் :)

    ReplyDelete
  49. ஹேமா! அழகானக் காட்சிப் படுத்தல். ஏன் காட்டை விட்டு கவிதை வெளியே வந்தது?

    ReplyDelete
  50. கவிதை அருமையாக உள்ளது

    சகோ விற்கு

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. மூடித் திறக்கும் கதவுவழி
    ஏதேதோ உருவகங்கள்.////உணர்வுள்ள வாக்கியங்கள்.

    ReplyDelete
  52. மைந்தனைக் காணோம்!கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்!!!

    ReplyDelete
  53. // பிந்திய இரவின் முனகலும்
    பயந்து ஒதுங்கும் மானை
    மயக்க முயலும் துணையுமாய்
    விரகத்தின் வேதனையை
    நீட்சியாக்கிவிட்டபடி//...

    அழகிய கற்பனை நல்ல
    கவித்துவம் நிறைந்த வரிகள்!
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  54. ஓடிக் களைத்த வீராங்கனையாய்
    கண்ணாடி பார்த்து
    களிப்படைந்து
    உடை மாற்றி
    மீண்டும் வந்து
    போர்வைக்குள் நுழைகையில்
    ஏதோ ஒன்று
    குறுக வைக்கிறது என்னையே!!!// எழுத்து உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்டமை புரிகிறது நல்ல ஆக்கம் ம் ..........தொடர்க

    ReplyDelete
  55. Moodi thirakkum kathavu vazhi-nice Hema

    ReplyDelete
  56. மெல்லிய வரிகளில் அழுத்தமான பதிவு .. வாழ்த்துக்கள் அக்கா ..

    ReplyDelete
  57. லோகு...இருள் வழிக்கும் முதன் முதலாய்.நடப்போம் சிந்தனைகளையும் சேர்த்துக்கொண்டு !

    சிவா...ம்ம்...நீங்க கேட்டபிறகுதான் யோசிக்கிறேன்.நான் யோசிக்கிறப்ப இருக்கிறேனா நடக்கிறேனா பறக்கிறேனா எண்டு.அப்பு...ராசா !

    பாலா...உள்ளடக்கம் விளங்கினமாதிரி இருக்கு !

    கார்த்திக்...என்னமோ இந்தக் கவிதையாச்சும் இந்தப் பக்கம் உங்களை ரொம்ப நாளைக்கப்புறம் கொண்டு வந்திச்சே.
    சந்தோஷம்.சுகம்தானே !

    ஷீ-நிசி...கவிதையின் என் சிந்தனை சொல்லவே மாட்டேனே.
    அவரவர்களுக்கு எப்படி வடிவம் காட்டுகிறதோ அதுவேதான் கவிதையின் கரு !

    கந்தசாமி...புரிஞ்சா சரி.ஆனா எனக்கும் ஒரு வித்தியாசமான
    கவிதைதான் இது !

    தமிழ்...ம்...வசீகரமான கவிதை !

    சித்ரா...விளங்கிச்சோ விளங்கலியோ உங்க ஊக்கம் தரும் வார்த்தைக்கு நன்றி !

    ஜோதிஜி...ஜீ...நான் நல்ல சுகம்.கிண்டலு...தேவியர்கள்தான் சரி உங்களுக்கு !

    நேசன்...நீண்ட கோடை விடுமுறையா.சுகமாய் விரைவில் வரணும் !

    சாரல்...நன்றி தோழி !

    ஆகுலன்...அன்புக்கு நன்றி !

    மகேந்திரன்...நன்றி வருகைக்கு !

    ரதி...கவிதைன்னா 1- 2- 3- தரம் படிகணும்ப்பா !

    துஷி...பாராட்டு சுகமாத்தான்
    இருக்கு !

    காட்டான்...என்ர சாட்டில குழையோட திரியிற நீங்கள் புத்தகத்தைக் கையில எடுத்தா அந்தப் புண்ணியம் எனக்குத்தானே.
    சந்தோஷம் அப்பு !

    மாய உலகம்...ம்..தவிப்பு அடங்கும் கவிதயேதான் !

    ReplyDelete
  58. அப்பாஜி...உங்களுக்கு விளங்கியிருக்கு கவிதை.அதான் அழகு சொல்லியிருக்கீங்க !

    ரமணி...உங்கள் அன்புக்கு மிக்க மிக்க நன்றி !

    கவி அழகன்...ம் நன்றி கிழவரே !

    இந்திரா...அதுதான் ஏதோ ஒண்ணுன்னு மறைச்சுச் சொல்லியிருக்கேன்.கண்டு பிடிங்க !

    கருன்...செல்பேசியில்கூட என் பதிவைக் கவனிப்பது சந்தோஷமே.நன்றி !

    தவறு...ரதிகிட்ட கேட்டுப்பாருங்க.சொல்லுவாங்க.
    3 தரம் படிச்சுப் பார்க்கச் சொல்லியிருக்கேன் !

    நிரூ...அதுதான் இருள்வழி.தட்டித் தடக்கித்தான் வெளிச்சம் தெரியும் !

    மாலதி...என்னைத் திட்டாமப் போனீங்களே.சந்தோஷம்ப்பா !

    கலா...உங்கட கற்பனையே கற்பனை.உங்கட பின்னூட்டம் வச்சே இன்னொரு கவிதை எழுதலாம்போல இருக்கு.பின்னூட்டத் தென்றல் நீங்கள்.அப்படி ஒரு சுகம் !

    ஜீ...நல்லா வாசிச்சா விளங்கும்.உங்களுக்கென்று ஒரு கற்பனையும் வரும்.வாசியுங்கோ !

    ஸ்ரீராம்...நீங்க சொன்னதுதான் சரி.காட்டுக்குள்ள நுழைய விட்டுத் தேட விட்டிருக்கேன்.
    வெளிவரும்பொழுது அவரவருக்கு சொந்தக் கற்பனைகளை நிச்சயம் தரும் !

    தமேஷ்...புரிஞ்சுதா...நன்றி !

    ஏஞ்சல்...கொஞ்சம் வித்தியாசமாக விளையாடிப் பார்த்த கவிதைதான் இது !

    சத்ரியா...பெரியவை சொன்ன பழமொழிகளை மாத்தலாமோ.
    காமாட்சி...யாரு இது.இங்க பக்கத்து வீட்லகூட வெள்ளையம்மாதான் இருக்கா.கவிதையைப் புரிந்து சொன்ன வார்த்தை அழகு !

    கலா...பாவம் கண்ணழகரை அப்பிடியே விடுவம்.எத்தனை தரம்தான் கண்னை நோண்டுறது.
    கன்னியில்லாத்தீவில வேற இருக்கார்.வாரத்தில ஒரு நாள் லீவிலதான் சிங்கை தலைநகரம் போய் கன்னிகளைப் பார்க்கிறாராம்.விட்டு வைப்பம்.பாவம்தானே !

    கீதா...புரிதலுக்கு நன்றி.சில பின்னூட்டங்கள் என்னையே
    குழப்புது தோழி !

    செண்பகம்...அது தானா வருதுப்பா.உள்ளுக்குள்ள திட்டுவீங்களோ தெரியேல்ல !

    காஞ்சனா அன்ரி...குட்டிப் பாராட்டில் பெரிய சந்தோஷம் !

    மீனு...பிடிச்சிருக்கா கவிதை !

    ரேவேரி...வித்தியாசமான சந்தோஷமான பாராட்டு நண்பரே.நன்றி !

    ராஜேஸ்வரி...நன்றியம்மா பாராட்டுக்கு !

    ஜோயல்சன்...ஹாய் ஜோ ரொம்ப நாளுக்கப்புறம்.இனி எப்பவோ !

    சிபி...நான் டிஸ்கியெல்லாம் போடறதில்லை.தெரியுமோ !

    நேசன்...எல்லாம் உங்கள் வழிநடத்தல்தான் என் மொழியின் இடப்பெயர்வு.சந்தோஷம் கனநாளைக்கப்புறம்
    உங்க கருத்துக்கு !

    மோகண்ணா...எப்போ கவிதை காட்டை விட்டு வெளில வந்திச்சு.எனக்குச் சொல்லவேயில்ல !

    எம்.ஆர்...நன்றி நண்பரே.என்றும் என் அன்பு வாழ்த்துகள் !

    யோகா...சிவாவையும் காணோமா.வடையண்ணாவையும் காணல.சொல்லாம கோடை விடுமுறைக்குப் போனா நாங்கதான் தவிச்சுத் தேடணும்.இனியாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா எல்லாரும் !

    இராமாநுசம்...ஐயா உங்கள் அன்புக்கு நன்றி.உங்கள் கவிதைக்குப் பக்கத்தில் இதெல்லாம் சின்னதே !

    போளூர் தயாநிதி...உங்கள் ஆழமான பாராட்டு மிகவும் நன்றியும் சந்தோஷமும் !

    டாக்டர்...மறக்காமல் எப்போவாவது உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி !

    அரசன்...நன்றி நன்றி !

    ReplyDelete
  59. உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

    ReplyDelete
  60. கிரண்08 October, 2011 23:25

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    ReplyDelete