Sunday, July 24, 2011

1983 - 2011 கருப்பு ஆடி...

துண்டித்த தலைகள்கூட
புன்னகை சிந்தின 83ஆடியில்
நான் நினைப்பதுண்டு
"எனக்குண்டான வாழ்விது
என்னை வாழவிடு"
கெஞ்சுவதாக இல்லையா அது.

ஒட்டிய வயிறோடு
உயிர் விட்டிருந்தன
பசியோடு இருந்த
தமிழ்க் குழந்தைகள்
பெற்றவர்களின் கைகளில்.

1953 தொடக்கம்
சிங்கள
ஆட்சிக் கொடியெங்கும்
கொட்டிச் சிதறிக்கிடந்தன
தமிழ் இரத்தம்.

83 ஆடியில்
போதாத
சவப்பெட்டிகளுக்காக
காத்திருக்கவில்லை
தமிழ்ப்பிணங்கள்
தம்மைத் தாமே
அடக்கம் செய்துகொண்டன
கண்களைத் திறந்தபடி.

ஆடி இருளில்
வருடங்கள் கடக்கையிலும்
மெழுகுதிரிப் பொய் ஒளியில்
என்ன கொண்டு வந்தாய்
இந்த வருடத்திலாவது என்றபடி
காத்திருக்கின்றன அவைகள்
கரும்புலிகளையும் சேர்த்துக்கொண்டு.

உங்கள் நினைவு நாளில்
வேண்டுமென்றே வைத்த
உள்ளூராட்சித் தேர்தலில்
வெற்றி தமிழுக்கே
என்று சொல்வதைத் தவிர
இப்போதைக்கு வேறொன்றுமில்லை
பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!

ஹேமா(சுவிஸ்)

57 comments:

  1. வேதனையான சம்பவம். வருத்தம் தரும் வரிகள்.

    ReplyDelete
  2. வணக்கம் அக்காச்சி, படிச்சிட்டு வாரேன்.

    ReplyDelete
  3. முகத்தில கரி பூசினமாதிரி
    தேர்தல் முடிவுகள்
    என்றும் தமிழன் தமிழன்தான்

    ReplyDelete
  4. தமிழ்ப்பிணங்கள்
    தம்மைத் தாமே
    அடக்கம் செய்துகொண்டன
    கண்களைத் திறந்தபடி.

    நித்திரை தராத வரிகள்

    ReplyDelete
  5. இப்போதைய நகர்வுகள் யாவும் நன்றாகவே நடக்கின்றன.ஆனாலும் பயணத்தின் தூரம் இன்னும் வெகுதூரம்.

    ReplyDelete
  6. வெற்றி தமிழுக்கே
    என்று சொல்வதைத் தவிர
    இப்போதைக்கு வேறொன்றுமில்லை
    பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!

    நம்பிக்கை தரும் வரிகளாக...

    ReplyDelete
  7. எங்களின் கடந்து வந்த பாதைகளின் வலிகளை மீட்டினாலும், இறுதி வரிகளில் நம்பிக்கையூட்டும் நல்லதோர் செய்தியினைச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  8. இனி வரும் காலம் தமிழனுக்குத்தான் ....நம்புவோம் !

    ReplyDelete
  9. வலிகள் வரிகளில்...........

    ReplyDelete
  10. நான் உங்களைப் பற்றி நினைத்து வைத்திருந்தது சரியே. இந்த காதல் என்ற கண்றாவியைப் பற்றி எழுதாமல் இது போன்ற தாக்கத்தை உருவாக்கும் விசயங்களை யோசித்தாலே போதுமானது போல. உங்கள் வயது இப்போது அதை செய்ய விடாது. மறுபடியும் அத்ந புதைகுழிக்குள் தான் நீங்க போவீங்க. சரிதானே? பலரும் அது போன்ற வரிகளுக்குத்தான் சிலாகிப்பான விமர்சனங்களும் தருகிறார்கள்.இந்த கவிதையில் ஒவ்வொரு வரியும் அற்புதம்.

    ReplyDelete
  11. //"எனக்குண்டான வாழ்விது
    என்னை வாழவிடு"//

    பூவாய் உதிர்ந்தார்கள்... பூகம்பமாய் அதிர்வார்கள்..

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மருபடியும் வெல்லும்.... பொருத்திருபோம்...

    ReplyDelete
  12. பொறுத்தார் பூமியாழ்வர்
    நம்பிக்கையான வரிகள்.
    பொறுத்திருப்போம்
    நம்பிக்கையுடன்.....

    ReplyDelete
  13. 83 ஆடியில்
    போதாத
    சவப்பெட்டிகளுக்காக
    காத்திருக்கவில்லை
    தமிழ்ப்பிணங்கள்
    தம்மைத் தாமே
    அடக்கம் செய்துகொண்டன
    கண்களைத் திறந்தபடி.

    எவ்வளவு சத்தியமான வரிகள்.. 

    ReplyDelete
  14. ////உங்கள் நினைவு நாளில்
    வேண்டுமென்றே வைத்த
    உள்ளூராட்சித் தேர்தலில்
    வெற்றி தமிழுக்கே
    என்று சொல்வதைத் தவிர
    இப்போதைக்கு வேறொன்றுமில்லை
    பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!! //ஆமாம் சகோதரி , மக்கள் மிக சிறந்த பதிலடியை தேர்தல் மூலமாக கொடுத்துள்ளார்கள்...

    ReplyDelete
  15. 83 ஆடியில்
    போதாத
    சவப்பெட்டிகளுக்காக
    காத்திருக்கவில்லை
    தமிழ்ப்பிணங்கள்
    தம்மைத் தாமே
    அடக்கம் செய்துகொண்டன
    கண்களைத் திறந்தபடி.

    என் மனதை பாதித்த வரிகள்.....

    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

    ReplyDelete
  16. என்ன சொல்வது. உடலையும், உள்ளத்தையும் கொல்லும் வலிகளோடு.ோடு.

    ReplyDelete
  17. வலி வரிகள். நாளைய ராஜ்ஜியம் நம்பிக்கை ராஜ்ஜியமாக இருக்கட்டும்.

    ReplyDelete
  18. ஹேமா, எதுவோ சொல்லவேணும் எண்டு தோணுது. ஆனாலும் முடியவில்லை.

    ReplyDelete
  19. இப்போதைக்கு ஆறுதல் தரும் செய்தி வெற்றி தமிழனுக்கே . பொறுத்தார் பூமியாள்வார் . நமிக்கைதரும் வரிகள் அக்கா

    ReplyDelete
  20. //உங்கள் நினைவு நாளில்
    வேண்டுமென்றே வைத்த
    உள்ளூராட்சித் தேர்தலில்
    வெற்றி தமிழுக்கே//

    தமிழுக்கான பொது வெற்றி இது.

    தமிழனுக்கான தனி வெற்றி விரைவில்...!

    பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!

    கவிதையில் சோகம் தளும்பினாலும், அரை நூற்றாண்டுக்கால ’ஈழவரலாறு’ பொதிந்திருக்கிறது ஹேமா.

    ReplyDelete
  21. ஹேமா...என்ன சொல்ல..;((
    உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்
    sowmyatheatres@gmail.com

    ReplyDelete
  22. வெற்றி தமிழுக்கே
    என்று சொல்வதைத் தவிர
    இப்போதைக்கு வேறொன்றுமில்லை//

    கொடும் வேதனைகளையும் இழப்புகளையும் தாண்டி நம்பிக்கையில் நகர்கிறது வாழ்வெனும் நத்தை.

    ReplyDelete
  23. ஒட்டிய வயிறோடு
    உயிர் விட்டிருந்தன
    பசியோடு இருந்த
    தமிழ்க் குழந்தைகள்
    பெற்றவர்களின் கைகளில்.


    no words :(

    ReplyDelete
  24. >>கரும்புலிகளையும் சேர்த்துக்கொண்டு.


    ஹேமா ,ஒரு டவுட்டு

    கரும்புள்ளிகளையும் சேர்த்துக்கொண்டு.

    என்பது சரியா?

    >>கரும்புலிகளையும் சேர்த்துக்கொண்டு.

    என்பது சரியா?

    ReplyDelete
  25. பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழும் எம்மினம் தன்மானத்துடன் தன்னை ஆள நாம் இன்னமும் கடக்கவேண்டிய நெடும்பயணத்தில் அனைத்துத் தமிழரும் கைகோர்த்து பயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்

    ReplyDelete
  26. நான் உங்களைப் பற்றி நினைத்து வைத்திருந்தது சரியே. இந்த காதல் என்ற கண்றாவியைப் பற்றி எழுதாமல் இது போன்ற தாக்கத்தை உருவாக்கும் விசயங்களை யோசித்தாலே போதுமானது போல. உங்கள் வயது இப்போது அதை செய்ய விடாது. மறுபடியும் அத்ந புதைகுழிக்குள் தான் நீங்க போவீங்க. சரிதானே? பலரும் அது போன்ற வரிகளுக்குத்தான் சிலாகிப்பான விமர்சனங்களும் தருகிறார்கள்.இந்த கவிதையில் ஒவ்வொரு வரியும் அற்புதம்.\\\\\\\\\\\\\\\\\
    ஐயா.ஜோதிஜி அவர்களே!
    உங்கள் கருத்குக்கு{ள்} நான் உள்வருவதற்கு மன்னிக்கவேண்டும்

    இந்த காதல் என்ற கண்றாவியைப் பற்றி எழுதாமல் \\\\\\\\
    இந்தக் காதலைப்பற்றி அதிகம் எழுதாமல்..
    என்றிருந்தால் பரவாயில்லை ஏன்உங்களுக்கு இவ்வளவு
    கோபம் இந்தக் காதல் என்ற கட்டழகுமேல்!
    நீங்களே சொல்கிறீர்கள் கண்றாவி என்று அதாவது
    கண்+ஆவி ஆம் காதல் என்னும் ஆவி ஒவ்வொருவர் கண்களிலும்
    பல வடிவங்களில்{அன்பு,பாசம்,பரிவு,நேசம்...}இன்னும்பல..
    சுற்றுகிறது ஒருவரை அதற்குப் பிடித்துவிட்டால் உட்புக முயற்சிக்கிறது.
    போயும்விடுகிறது இது இன்றுநேற்றல்ல...மனிதன் தோன்றியகாலத்திலிருந்தே,,,,,
    ஒரு பெற்றோருக்கு தன் குழந்தை குழந்தையாய் இருந்து இறுதிக்காலம் முடியுவரை அவர்கள் பிள்ளைதான்!மாற்றமில்லை ஆனால் மாறுவது
    பருவங்கள்தான்,அதேபோல் காதல்எப்போதும் காதல்தான்! எல்லோர் வாழ்விலும் ,வயதிலும்
    வரலாம்..காதல் அழியாதது நாம் கையாளும் முறைகள்தான் தப்பாகிறது
    அதனால் காதலை யாரும் தள்ளிவைக்கவும் மாட்டார்கள் ,வெறுக்கவும் மாட்டார்கள்.
    அடுத்து அதற்குப் புதைகுழி என்றுவேறு பட்டமும்......
    சரி உங்கள் பேச்சுப்படி பார்த்தால் புதைகுழி என்று தெரிந்தும்
    மனிதர்கள் காதலிக்காமல்,கரம்பற்றாமல் இருந்துவிடவில்லையே!
    அதுவாக வா..வா வந்து விழு என்று கூவி அழைக்கவில்லையே
    நாம்தானே அதைத் தேடி அலைகிறோம்..அலையாதபோதும் தானாக
    வருவதுமுண்டு,கட்டாயத்தின் மூலம் வருவதுமுண்டு இப்படி மனிதர்கள்தான்
    அதைப் பாடாப்படுத்துகிறார்களே தவிர...அது நம்மைப் பாடு படுத்தவும் இல்லை
    புதைகுழியில் தள்ளுவதுமில்லை.
    காதல் என்பது ஒரு உணர்வு நாம் ஆறறிவு படைத்தவர்கள்தானே! அதை எப்படி?
    ஏன்?எதற்கு?சரியா?தப்பா?வரலாமா?வேண்டாமா? எனமுடிவெடுத்துக் கை கோர்க்க முடித்தால்,கை கோர்த்து இல்லையென்றால் உதறிவிட்டும்
    செல்ல நமக்கு கடவுள் சிந்திக்கும் திறனை தந்துள்ளார் அதை விடுத்துக்
    காதல்மேல் இவ்வளவு சொற்களால் அர்சனை எதற்கு? அது புனிதமான
    {ஆளறிந்து,ஆழமறிந்து போகவேண்டும்}
    ஒரு சொல் அதில் புழுதியும்,சேறும் வாரி இறைத்து .....வடிவத்தை,அழகை.தன்மையை இழக்கச் செய்வது இந்த ஆற்றிவு படைத்த
    ஜீவன்களே! செய்வதெல்லாம் செய்துவிட்டு பழி மட்டும் காதல்மேல் இது
    எந்தவிதத்தில் நியாயம்?காதல் ஏமாற்றுவதில்லை, காதல்தோல்விஅடைவதில்லை,நம்பிக்கைத்துரோகம் செய்வதுமில்லை.
    கெட்டதுமில்லை அது எப்போதும் நம்மில் இருக்கும்{வெளிவரும்போதுவெளிப்படும்} ஓர் உணர்வுதான்,அதைப்
    பக்குவப்படுத்தி வழிநடத்துவது நம் பொறுப்பு அதனால் காதல்மேலோ,
    காதல்கவிதைகள் மேலோ கோபப்படலாமா..நீங்கள்?

    ReplyDelete
  27. ? பலரும் அது போன்ற வரிகளுக்குத்தான்
    சிலாகிப்பான விமர்சனங்களும் தருகிறார்கள்.
    இந்த கவிதையில் ஒவ்வொரு வரியும் அற்புதம்.\\\\\\\\\\\\\\\\\
    ஜயா.காதல்கவிதைதான் எப்படிவேண்டுமானாலும்{நவரசங்களுடன்}
    விமர்சிக்கலாம்,
    உ+ம் திருமணவீட்டில்தான் கையடித்துக் கும்மாளம்போட்டு,வம்புகிழுத்து
    இது,இதெல்லாம் பேசமுடியும் {காதல்கவிதை இதுதான்}
    சோகமோ,புண்பட்டுவந்த ரணங்களிலோ..ஏங்கும்தாய்நாட்டுக்கோ,இப்படிபழைய
    நினைவுகளிக்கோலும்கவிதைகளுக்கோ{கருப்புஆடி} ஹேமாவை வம்பிக்கிழுத்தோ,ஆர்ப்பாட்டம் பண்ணியோ கருத்துரை போடமுடியாது
    நீங்கள் போட்டதுபோல் ஒவ்வொரு வரியும் அற்புதமென்றோ,இல்லை மிகவும்வலியுள்ளகவிதையென்றோ,கலங்காதே காலம்கனியுமென்றோதான்
    இடமுடியும் கும்மாளம் போடமுடியாத மரியாதைக்குரிய வரிகளுடன் வந்தால்
    மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் ,இடம்,பொருள்,ஏவல்மாதிரி
    கவிதையையும் அறிந்துதான் கருத்துரை இடவேண்டும்
    உங்கள் கருத்துரையில்...கண்றாவி,புதைகுழி,
    சிலாகிப்பான விமர்சனங்கள் : இச்சொற்கள் என்னை மிகவும்
    பாதித்தது அதனால் இதை எழுதினேன் விமர்சனத்துக்கு தடையில்லையென்றதனாலும்,மனதில் தோன்றியதை எழுதினேன்
    உங்களை குறைகூறவில்லைநீங்கள் கையாண்ட சொற்கள் என்னுள்
    எழுதத்தூண்டியது,ஹேமா நீண்டகருத்துரைக்கு மன்னிப்பு வேண்டுகிறேன்......
    காதல்,காதல் என்றெழுதவும் முடியாது
    சோகம்,சோகம் “” “
    தாக்கம்,தாக்கம் “ “
    பிரிவு,பிரிவு “ “
    தோல்வி,தோல்வி “ “

    எல்லாமே கலந்துண்டால்தான் ஆரோக்கியம் அதேபோல் நவரசங்களுடன் நாட்டியமாடினால்தான் கவிதை அழகு.

    ReplyDelete
  28. உங்கள் நினைவு நாளில்
    வேண்டுமென்றே வைத்த
    உள்ளூராட்சித் தேர்தலில்
    வெற்றி தமிழுக்கே
    என்று சொல்வதைத் தவிர
    இப்போதைக்கு வேறொன்றுமில்லை
    பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!! ///வென்று விட்டோம் சகோதரி!இனியும் வெல்வோம்!இலங்கை அரசுக்கு மட்டுமல்ல,சர்வ தேசத்துக்குமே முகத்திலறைந்து சொல்லியிருக்கிறார்கள் எங்கள் உடன் பிறப்புகள்!

    ReplyDelete
  29. ......................

    No words to express...

    நண்பர் கரடி பொம்மை Lali -யின் வரிகளில் சொல்வதென்றால்...

    //ஒரே கையென
    யானை சுமக்கும் தும்பிக்கையாய்
    நானும் சுமக்கிறேன் நம்பிக்கையை. //

    ReplyDelete
  30. அக்கா என் பிறப்புக்கு முற்பட்ட சம்பவமானாலும் ஒவ்வொரு வருட பிறப்பிலும் நெஞ்சை நெருடும் நாளிது...

    ReplyDelete
  31. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

    ReplyDelete
  32. \\சவப்பெட்டிகளுக்காக
    காத்திருக்கவில்லை
    தமிழ்ப்பிணங்கள்
    தம்மைத் தாமே
    அடக்கம் செய்துகொண்டன
    கண்களைத் திறந்தபடி.///

    --யப்பா . நெஞ்சில் ஈட்டியால் குத்துவது போல் உள்ளது.
    வார்த்தைகளில் வலி தோய்ந்திருக்கிறது

    ReplyDelete
  33. கலா, நீங்கள் கவிதை எழுதினாலும் பொழிப்புரை எழுதுவது, யாராவது
    பின்னூட்டம் போட்டாலும் அதுக்கும் பொழிப்புரை எழுதுவது என்பது எங்கள் ஈழத்து பாஷையில் (நீங்கள் ஈழத்தமிழ் என்று நினைக்கிறேன்) "நல்ல பொழிப்பாத்தான் கெடக்கு" :)))

    ReplyDelete
  34. சகோதரி
    தங்கள் கவிதை
    சொல்லில் வரும் சோகம்
    கல்லும் கரைந்து உருகும்
    அமைதி காண வேண்டுகிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. It was the worst massacre Of Eela Tamilargal

    ReplyDelete
  36. மனதை வருடும் கவிதை..

    ReplyDelete
  37. ஹேமா ...பொறுத்திருப்போம்.

    ReplyDelete
  38. ரதி, நீங்களும் என் கட்சிதானா? அதாவது...சந்தேகம் என்றுபட்டால் மறைவில்லாமல் கேட்டுவிடுவது சரி கேட்டதற்கும்,ரசித்ததற்கும் நன்றிகள் பல.....
    தென்இந்தியாவும்+கிழக்கிலங்கையும்
    கூடிய காதலினால்..
    சூடிய திருமணத்தில்..
    தரித்த கரு இவள்.

    புரிகிறதா?

    ReplyDelete
  39. கருப்பு ஆடி....வேதனை.

    ReplyDelete
  40. தமிழ்ப்பிணங்கள்
    தம்மைத் தாமே
    அடக்கம் செய்துகொண்டன
    கண்களைத் திறந்தபடி.

    மனம் கணக்க வைக்கும் வரிகள்

    ReplyDelete
  41. மறக்க முடியாது அந்த நாட்களை,
    அந்த வலிகளை...

    /தமிழ்ப்பிணங்கள்
    தம்மைத் தாமே
    அடக்கம் செய்துகொண்டன
    கண்களைத் திறந்தபடி./

    கனமாய் இருக்கிறது இதயம்...
    காத்திருப்போம்..

    ReplyDelete
  42. ஆமாம் வென்றாலும் அது ரத்தம் தோய்ந்தபின்தானே..

    ReplyDelete
  43. காலத்தால் அழியாத எம் உறவுகளின் உணர்வோடு ஒட்டியிருக்கும் வலிதரும் வரிகள் .காத்திருக்கும்
    விழிகளுக்கு எதிர் காலம் காட்டும் நல்ல வழிகள்கவலை வேண்டாம் சாகோதரி.நீங்கள் சொன்ன பொறுமை
    வெல்லும் வெல்லும்போது எம் பூமியில் அமைதியும் கிட்டும் .
    பகிர்வுக்கு நன்றி ........

    ReplyDelete
  44. தமிழ்ப்பிணங்கள்
    தம்மைத் தாமே
    அடக்கம் செய்துகொண்டன
    கண்களைத் திறந்தபடி.
    வருத்தம் தரும் வரிகள்.

    ReplyDelete
  45. வெற்றி தமிழுக்கே
    என்று சொல்வதைத் தவிர
    இப்போதைக்கு வேறொன்றுமில்லை
    பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!! நம்பிக்கை...........

    ReplyDelete
  46. தம்மைத்தாமே அடக்கம் செய்து கொண்ட
    தமிழ் பிணங்களுக்கு
    எப்போது புயலாய் சீறி எழுவது எனவும்
    உறுதியாய் தெரியும் தானே..
    கனலாய் கிடக்கும் இன உணர்வை
    நீருபூக்காது விசிறிச் செல்லும்
    இனிய கவிதைப் பூங்காற்று...
    தொடர வாழ்த்துக்கள்c

    ReplyDelete
  47. துன்பங்களுக்கெல்லாம் விரைவில் விடிவுகாலம் பிறக்கட்டும்..

    மனசை கனக்கவைத்த கவிதை..

    ReplyDelete
  48. பொருத்தாரே பூமியாழ்வார்..

    வாக்கியம் மெய்ப்படும்...

    மனம் கனக்கவத்த கவிதை ஹேமா அவர்களே!

    ReplyDelete
  49. பிரார்த்திப்பதைத் தவிர வேறேதுவும் புரியாத நிலை.

    ReplyDelete
  50. முப்பதாண்டுகள் அறவழிப் போராட்டம் முப்பதாண்டுகள் ஆயுதப்போட்டம் ஈழம் இன்னும் விடிய வில்லை பிச்சை கேட்டுவந்தான் இன்று நாட்டை ஆளுகிறான் குற்ற பரம்பரையாக இருந்தவன் இன்று இன்று எம்மினத்தை பயங்கர வாதி என்கிறான் இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள இரு இரட்டை பிறவி தமிழ் அறிவர்கள் சிங்களனை குற்ற பரம்பரையி இருந்து நீக்க இங்கிலாந்து சென்று விடுவிதத்தின் விளைவு இன்று தமிழர்களை கொன்று குவிக்கிறான் மாற்றம் வரும் விடியும் . தமிழீழம் வெல்லும்

    ReplyDelete
  51. பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!

    ReplyDelete
  52. சிறு இடைவேளைக்கு பின் வருகுறேன் அக்கா
    ( கொஞ்சம் பிஸி)
    ஹும்... உலர்ந்த வார்த்தைகளை கோத்து எழுதி இருக்கிறீர்கள்
    வலி மிகு கவிதை
    நிஜம் சொல்லும் வரிகள்

    ReplyDelete
  53. தலைப்பும் வரிகளும் நெஞ்சை பிழிகின்றது அக்கா..

    ReplyDelete
  54. எம் வலிகளை நம் வலிகளாக்கிக் கை கோர்த்துக்கொண்ட என் அத்தனை உறவுகளுக்கும் என் அன்பான நன்றிகள்.

    முக்கியமாக சிபியின் கேள்வி...

    //ஹேமா ,ஒரு டவுட்டு
    கரும்புள்ளிகளையும் சேர்த்துக்கொண்டு.
    என்பது சரியா?//

    முதல் தரைக் கரும்புலித் தாக்குதல் 1987 யூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான கரும்புலி கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதலை நடத்தினார்.என்வே ஜூலை கரும்புலிகள் மாதமும் கூட சிபி.

    ஜோதிஜி....காதல் கண்ராவியா...என்ன ஜோதிஜி.நான் ஒரே ஈழம்ன்னு எழுதிட்டு இருந்தா சுவிஸ்க்கு ஆட்டோதான் அனுப்புவாங்க.கலந்துதான் எழுதணும் ஜோதிஜி.நடு நடுவில ஈழம் பற்றிய என் உணர்வும் வரும்தானே.
    அதுசரி...உப்புமடச் சந்தி பாத்தீங்களா? !

    எல்லாம் இழந்தபின் என்ன வெற்றி வேண்டிக்கிடக்கு என்பது ஒரு மனச்சோர்வு.இழந்துவிடோம்தான்.
    30 ஆண்டுகள் பின்னடைந்து விட்டோம்தான்.ஆனால் இருப்பதையும் விட்டால் சிங்களவர்களிடம் பிச்சைதான்.
    இப்பவே கிட்டத்தட்ட அதேகதிதான்.அதைச் சரிசெய்யவோ எதிர்காலத்திற்கு வழி காட்டவோ வேண்டாமா.இப்படியே விட்டுவிட்டால்....ஏதோ முடிந்தை முயல்வோம் !

    ReplyDelete
  55. //சவப்பெட்டிகளுக்காக
    காத்திருக்கவில்லை
    தமிழ்ப்பிணங்கள்
    தம்மைத் தாமே
    அடக்கம் செய்துகொண்டன
    கண்களைத் திறந்தபடி// வலி

    ReplyDelete