ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
உருண்டுகொண்டேயிருக்கிறேன்.
குதித்தும் தாவியும்
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை.
உருண்டுகொண்டேயிருப்பதால்
அறுபட்ட சில நிகழ்வுகள்
மாறி மாறி...
இருள் ஒளி கடக்கும் முகடுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள்.
ஓ.....
பாறையில் வேர் விட்ட
சிறுவிதை.
குட்டி மீன்கள்
பெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி
அடியில் ஊடுருவும் விஞ்ஞானம்.
என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!!
ஹேமா(சுவிஸ்)
விடுமுறை விடுமுறை கோடை...பெரிய விடுமுறை.சந்திப்போம் நண்பர்களே !
Enjoy your summer, Hema!!! :-)
ReplyDeleteஅருமையான கவிதை ஹேமா! 'உருண்டு கொண்டே இருப்பதால் அறுபட்ட சில நிகழ்வுகள்' 'பாறையில் வேர் விட்ட சிறுவிதை' மிகவும் ரசித்தேன்! நீங்க எழுத கேக்கணுமா!
ReplyDeleteவிடுமுறையை சுகமாய் அனுபவத்துவிட்டு வாருங்கள்!
அக்கா, நித்திரை கண்ணைக் கட்டுது..
ReplyDeleteகாலையில் வந்து கமெண்ட் போடுறேன்.
ஹேமா, திருப்பியும் வானம் பாக்கிறன் :)) உங்கள் ஜீனியஸ் கவிதைகள் போகப் போக தெரியும்... அதன் அர்த்த வாச(க)ம் புரியும், எனக்கும்.
ReplyDeleteஉண்மையாகவே 1, 2, 3 தரம் படிச்சனான், நம்புங்கோ.
//..என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!! //
விழுந்தாலும், உருண்டாலும் நீங்க நீங்களாகவே இருங்கோ ஹேமா.
அக்கா உங்களது கவிதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது..தொடருங்கள்..
ReplyDeleteஒருநாள் விடியும்............
தற்பொழுது போகும் பாதை சரி தானா தடுக்க முடியாத விதி தானா என்பது போல் ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை ரசிக்க முடியுமா இல்லை வெறுமையா இல்லை கடந்த காலத்தின் கசப்புகளா என மனம் ஆற்றில் அடித்துச்செல்லும் கூழாங்கல்லாக அலைமோதுவதை அழகு கவிதையில் அசத்தியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்
ReplyDeleteகால ஓட்டத்தில், அதன் பாட்டில் நகர்ந்துகொண்டிருப்பதை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் ))
ReplyDeleteஅருமை...ரசித்தேன்...Happy Holidays..ஒ..அது டிசம்பர்ல...Enzoy...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.. அருமையான கவிதை.. அது சரி நாம் எல்லோருமே கூலாங்கற்களாய் எதிர்பு தெரிவிக்காது பயணிக்கிறோம்.. பொங்கிவரும் ஆற்று நீரின் வேகம் அப்படி....!!!???
ReplyDeleteஅசைவின்றி குளத்தில் இருக்கும் கற்களை விட ஆற்றின் வேகத்துடன் செல்லும் கற்கள் அதிக இழப்பின் பின்னாலும் பலவற்றை இரசித்து செல்கிறதே.. சாக்கடை குளத்தில் இருக்கும் கற்களை விட என்னேரமும் கழுவப்பட்டு அழுக்கற்று ஓடிக்கொண்டிருக்கும் கூலாங்கற்கள் பரவாயில்லை சகோதரி..!!!!!?????
நீண்ட உல்லாச பயணத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி.
காட்டான் குழ போட்டான்...
முதலில் வாழ்த்துக்கள் அக்கா இன்பமயமான விடுமுறைக்கு.
ReplyDeleteஅருமையான கவிதை....
ReplyDeleteகவிதை வழமை போல் சூப்பர்
ReplyDeleteஅழகான சிந்தனை
உங்கள் கவிதைகள் எல்லாம் நிறைய விடயங்களை சொல்லித்தருகிறது
வாழ்த்துக்கள் அக்கா
விடுமுறையா... அய்யஹோ... ஓகே வெய்ட் பண்ணுகிறோம்.... enjoy your summer... don't worry be happy.... சீக்கிரம் விடுமுறை முடியட்டும் ஹி ஹி ஹி
ReplyDeleteகூட்டத்தோடு தங்கி விடாமல் ஒற்றைக் கல்லாய் உருண்டு ஓடிக் கொண்டேயிருப்பது புதிய அனுபவங்கள் என்று ப்ளஸ்ஸா களைத்துப் போகும் ஓட்டம் மைனஸா...அருமை ஹேமா. கவிதையில் 'மூழ்கி' விட்டேன்.
ReplyDeleteவிடுமுறையைக் கனடாவில் அக்கடா என்று கொண்டாடி விட்டு வாருங்கள்!
ஹேமா,
ReplyDeleteமகிழ்வு, துயரம்,பிரச்சினைகள்... இவைகளூடான பயணம் தான் நம்மை பண்படுத்தும்.
அதற்கான சான்று - கூழாங்கற்கள்.
கொசுறு கொமெண்ட்:-
விடுமுறையில போகும்போது மொழுமொழு-ன்னு கூழாங்கல் மாதிரி போயிட்டு,
திரும்பி வரும்போது கரடுமுரடான பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய.... பாறையப் போல வருவீங்கன்னு எதிர்ப்பார்க்குறோம்.
பயணம் ... பலனுடையதாயும், மகிழ்ச்சியுடையதாயும் அமைய வாழ்த்துக்கள்.
Enjoy your summer
ReplyDeleteஏதோ போராட்டத்துல இருக்கீங்கன்னு மட்டும் புரியுது.. ஹி ஹி நான் கொஞ்சம் தத்தி.
ReplyDeleteகல் - இங்கே சிலையாவதற்கு பதிலாக கவிதையாகி உள்ளது. அற்புதமான கவிதை ஹேமா..
ReplyDeleteகூழாங்கல் அர்த்தங்கள் பல கொடுக்கிறது...!
ReplyDeleteஹேமாவின் கவிதை எப்பவும் எனக்கு ஸ்பெஷல்...ஒரு கவிதையை பல முறை படிக்க வைக்கும் விந்தை தான் புரியவில்லை...! :)
விடுமுறையை உற்சாகமாக கழிக்க என் வாழ்த்துக்கள் தோழி.
ஓ.....
ReplyDeleteபாறையில் வேர் விட்ட
சிறுவிதை. ////
பாறையில் வேர் விட்ட சிறு(க)விதை
வாழ்வியல் அழகைச் சொல்கிறது
அற்புதமான கவிதை ஹேமா....
ReplyDeleteஅருமையான கவிதை சகோதரி... 'உருண்டு கொண்டே இருப்பதால் அறுபட்ட சில நிகழ்வுகள்' 'பாறையில் வேர் விட்ட சிறுவிதை' மிகவும் ரசித்தேன்!
ReplyDeleteவிடுமுறையை சுகமாய் அனுபவத்துவிட்டு வாருங்கள்!
ஃஃஃஃஃகுட்டி மீன்கள்
ReplyDeleteபெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி
அடியில் ஊடுருவும் விஞ்ஞானம்ஃஃஃ
அக்கா ஆழ்ந்த கவிதையில் ஒரு அறிவியல் முறையீடா அருமை அருமை...
கூழாங்கல்லை பிரதிபலிக்கும் தெளிவான நீரைப்போல் கவிதை ஹேமா....
ReplyDeleteகுதித்தும் தாவியும்
ReplyDeleteநொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை.//:-(
mmmmmmmmmmmm....
இன்பமயமான விடுமுறைக்கு வாழ்த்துக்கள்!
உருண்டுகொண்டேயிருப்பதால்
ReplyDeleteஅறுபட்ட சில நிகழ்வுகள்
மாறி மாறி...
இருள் ஒளி கடக்கும் முகடுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள். //
வித வித வண்ணங்களில் வடிவங்களில் உருளும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
அழகியல் கவிதை ..
ReplyDeleteவிடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
கூழாங்கல் அருமை...
ReplyDeleteஎளிமையான வார்த்தைகளால் அழகியதோர் கவிதை...
வாழ்த்துகள்...
அருமைடா....உன் கவிதையால்தான் மனதை ஊடறுத்து உள்ளே சென்று வித விதமான...எண்ணங்களை விதைக்க
ReplyDeleteமுடிகிறது.வாழ்த்துகள்டா தாயி!
அழகு கூழாங்கற்கள்
ReplyDeleteகோடைவிடுமுறையை சிறப்பானதாக்கிக் கொள்ளுங்கள்.
அருமை! மீண்டும் வந்து தொடருங்கள்! :-)
ReplyDeleteஈடு இணையற்ற அருமையான கவிதை வரிகள் !
ReplyDeleteம்ம்ம் :)
ReplyDeleteஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
ReplyDeleteஉருண்டுகொண்டேயிருக்கிறேன். \\\\\\
எந்த ஆறம்மா?ஓஓஓ...காதல்ஆறா?
யார்!அந்த ஓட்டச்சுழியில் போய்
மாட்டிக்கச் சொன்னாக....
குதித்தும் தாவியும் \\\\\
புதிதில்..இப்படித்தான் இருக்கும்,
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்\\\\\
மனசுநொருங்கானால்..
அழவேண்டியதுதான் !
:)
ReplyDeleteஉருண்டுகொண்டேயிருப்பதால்
ReplyDeleteஅறுபட்ட சில நிகழ்வுகள் \\\\\\
ஜய்யோ..பாவம்! இப்படிக்
கத்தி வைக்கலாமா?
மாறி மாறி....\\\\
ரொம்மத் தொல்ல கொடுக்குதில்ல...
என்ன பண்ணலாம்?
நாடு கடத்திடலாமா?
இருள் ஒளி கடக்கும் முகடுகளில் \\\
எந்த உச்சிபுள்ள? எனக்குத் தெரியல்ல...
பட்டாம்பூச்சிச் சிறகுகள்.\\\\\\
சிறகுக்குள மறைத்து வைத்தால்தானே!
நினைக்கும் போது விரிக்கலாம்....
ரொம்பக் கெட்டிக்காரிடியம்மா!
மறைத்துவைக்க இப்படி ஒரு இடமா?
நானும் ஒரு இடம் தேடிக்கிட்டுத்தான்..
இருந்தேன் நன்றி இடம் சொன்னதற்கு!
ஓ.....
ReplyDeleteபாறையில் வேர் விட்ட
சிறுவிதை. \\\\\
ஓ...இதைத்தானோ!
கல்லுக்குள் ஈரமென்பது!
குட்டி மீன்கள்
பெரிய மீன்களாய். \\\\
எவ்வளவு கஷ்ரப்பட்டு ஹேமா
இந்தக் காதல் படிப்படியாக வளரவைத்தார்.
படர்ந்த பாசி \\\\\
அடா...பாழாப்போன பாசியே!
வந்து நீ மூடலாமா?
என்ன “உள்” இருக்கு
என்று தெரியாமல்..ஹேமாவை
இந்தக் கலக்கு கலக்கிவிட்டாயே பாசி!
என்றாலும் தட்டித் தடக்கி
ReplyDeleteஉருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்\\\\\
ஹேமாவா?கொக்கா?
உருளுறார்.....................
பிடிங்கோ.........சத்ரியனை தவிர!
மற்றவர்களெல்லாம்.
கூழாங்கல்லுக்குள்ளும்.......
ReplyDeleteகூழாக்கி பதப்படுத்தி வைத்ததை..
“கல்”எனக்காட்டி கவிதையாக்கிவிட்டாய்ஹேமா!
கொஞ்சம் கடன் தாயேன்..அந்த மூளையை.
ஆமா இப்படி அம்போ......என்று விட்டுவிட்டு
விடுமுறைக்குச் சென்றால்,,...
அப்புறம் ,,,,,அந்தா..அந்தா அந்தப் பாட்டு
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே...........
கேட்கிறதா?
கவலைப்படாமல் சென்று வா!
நான் பத்திரமாகப் பாத்துகிறேன்
முறைக்காதே....
கவிதை நல்லாருக்கு ஹேமா..
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDelete'பாசியின் அடியில் விஞ்ஞானம்' - பிரமிக்க வைத்த வரி. எதிர்பார்க்கவில்லை. intellectual டைப் கவிதை.
ReplyDeleteஒற்றைக் கல்லாய்
ReplyDeleteஉருண்டு வந்ததே
மற்றக் கல்லிலோர்
மாற்றம் காணுமே
வானம் வெளித்திட
வந்திடும் விடிவே
கானம் இசைத்துமே
களிப்புடன் இருப்பீர்
புலவர் சா இராமாநுசம்
வலைப் பக்கம் காணோம்
கடைசி பத்தி நீரில் இருந்த கவிதையை கரையேற்றி விட்டது...கூழாங்கல் கவிஞர் கைப்பட்டு மேலும் மேன்மையடைந்தது என்றே சொல்லலாம்...
ReplyDelete// என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!!//
நிறையமுறை படிச்சேன் ஹேமா இந்த வரிகளை..உணர்வை தட்டி எழுப்பாமல் செல்வதில்லை உங்கள் கவி வரிகள்...
கூழாங்கல்லும் ஆழ்ந்த சிந்தனை கிளப்பி, அழகிய கவிபுனையச் சொன்னதே உங்களை! வாழ்க்கை நதியின் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து நாமும் இப்படி உருண்டுகொண்டே இருந்தால் என்றேனும் தேய்ந்து காணாமற்போய்விடுவோமோ?
ReplyDeleteஅழகிய வார்த்தைகளால் கவிதையின் மெருகு கூடுகிறது ஹேமா.
அழகான கவிதை....
ReplyDeleteதற்குறிப்பேற்ற கவிதை...
ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
ReplyDeleteஉருண்டுகொண்டேயிருக்கிறேன்.
குதித்தும் தாவியும்
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை. //
வாழ்க்கை எனும் பாதையில் வரும் தடைகளை எதிர் கொண்டு, வெற்றிப் படிக்கட்டு நோக்கிச் செல்ல நினைக்கும் பெண்ணின் உணர்வினை இவ் வரிகள் சொல்லி நிற்கிறது.
ஆனாலும் வரும் தடைகளை எதிர் கொண்டு முன்னேறினாலும், இவ்வளவு துன்பங்களையும் தாங்கி நடந்திருக்கிறோம் எனும் உணர்வு எவருக்கும் இல்லை எனும் தத்துவத்தை மேற்படி வரிகள் சொல்லி நிற்கிறது.
ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
ReplyDeleteஉருண்டுகொண்டேயிருக்கிறேன்.
குதித்தும் தாவியும்
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை. //
வாழ்க்கை எனும் பாதையில் வரும் தடைகளை எதிர் கொண்டு, வெற்றிப் படிக்கட்டு நோக்கிச் செல்ல நினைக்கும் பெண்ணின் உணர்வினை இவ் வரிகள் சொல்லி நிற்கிறது.
ஆனாலும் வரும் தடைகளை எதிர் கொண்டு முன்னேறினாலும், இவ்வளவு துன்பங்களையும் தாங்கி நடந்திருக்கிறோம் எனும் உணர்வு எவருக்கும் இல்லை எனும் தத்துவத்தை மேற்படி வரிகள் சொல்லி நிற்கிறது.
உருண்டுகொண்டேயிருப்பதால்
ReplyDeleteஅறுபட்ட சில நிகழ்வுகள்
மாறி மாறி...
இருள் ஒளி கடக்கும் முகடுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள். //
இயந்திர வேக வாழ்வில், வாழ்க்கையோடு போராடி ஓடிக் கொண்டிருகையில் பல இனிப்பான நினைவுகள் எம்மை விட்டு கடந்து சென்றாலும், அவை மீட்டிப் பார்க்கையில் சுகமாக இருக்கின்றன என்பதனை,.
‘இருள் ஒளி கடக்கும் முகடுகளில் பட்டாம் பூச்சிச் சிறகுகள்’ எனும் ஒப்புவமையூடாக விளித்திருக்கிறார் கவிதாயினி!
ஓ.....
ReplyDeleteபாறையில் வேர் விட்ட
சிறுவிதை.
குட்டி மீன்கள்
பெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி
அடியில் ஊடுருவும் விஞ்ஞானம்.
என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!! //
வாழ்க்கைப் பாதையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் பெண்ணின் உணர்வலைகளை இவ் வரிகள் சுட்டி நிற்கின்றன.
கூழாங்கல்: வாழ்க்கைப் பாதையோடு போராடி எதிர் நீச்சல் போடும் பெண்ணின் உணர்வுகளை இங்கே வெளிப்படுத்தி நிற்கிறது.
ReplyDeleteஎன் இன்ரநெட் கனெக்சனின் ஏதோ ப்ராப்ளம், அதனால் தான் வலைப் பக்கம் வர முடியலை.
ReplyDeleteதாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்,.
விடுமுறையினை நன்றாக அனுபவியுங்கள்.
வாழ்த்துக்கள் அக்காச்சி.
காட்டாற்று வெள்ளத்தில் எப்பதுமே கூழங்கற்கள் உருண்டோட தான் செய்யும் இது இயற்கையின் நியதி ஆயின் இதில் மாற்றம் வேண்டின் உருண்டோடும் கல் ஒரு தடுப்பின் மீது பட்டு தனக்கான நிலை நிறுத்தலை உண்டாக்க வேண்டும் உங்களின் இந்த இடைவெளியும் அதற்க்கான பணியை செய்யலாம் நல்ல ஆக்கம் பாராட்டுகள் .
ReplyDeleteவாழ்க்கையில் இப்பிடியெல்லாம் உருண்டு புரண்டு மீண்டு நகர்கிறோம்....
ReplyDeleteஅருமையான கவிதை...
அன்புடன் அற்புதக்கவிதைக்கு வாழ்த்துக்கள்..
விடுமுறையை மகிழ்வுடன் கழித்து வாங்க...!!
நல்ல உணர்வுள்ள கவிதை
ReplyDeleteஉள்ளத்தை தொட்டது
பகிர்வுக்கு நன்றி
அசைவின்றி குளத்தில் இருக்கும் கற்களை விட ஆற்றின் வேகத்துடன் செல்லும் கற்கள் அதிக இழப்பின் பின்னாலும் பலவற்றை இரசித்து செல்கிறதே.. சாக்கடை குளத்தில் இருக்கும் கற்களை விட என்னேரமும் கழுவப்பட்டு அழுக்கற்று ஓடிக்கொண்டிருக்கும் கூலாங்கற்கள் பரவாயில்லை சகோதரி..!!!!!?????
ReplyDeleteஇதைத்தான் நானும் சொல்ல விரும்புகின்றேன் .அருமையான கவிதைவரிகளால்
உள்ளத்தைக் கவர்ந்தீர்கள் ஆனாலும் நாம் இருவரும் இருப்பது இப்போ ஒரே தேசத்தில்.
உங்களை இதுவரை நான் சந்தித்தேனா இல்லையா என்றுகூடத் தெரியாமல்.நன்றி சகோ
பகிர்வுக்கு .வாழ்த்துக்கள்..
enjoy u r summer
ReplyDeleteபல சிரமங்களிற்குமத்தியில் எதிர்நீச்சலிட்டு வாழத்துடிக்கும் ஒரு பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ளமுடிகிறது
ReplyDeleteஆழ்மனதில் நீந்திச்செல்கிறது தோழி வரிகள்..........
ReplyDeleteஇருள் ஒளி கடக்கும் முகடுகளில்
ReplyDeleteபட்டாம்பூச்சிச் சிறகுகள். /
விடுமுறையை சுகமாய் அனுபவத்துவிட்டு வாருங்கள்!
arumai...
ReplyDeleteUrundu kondey, nice words Hema
ReplyDeleteமிக அருமையான கவிதை ஹேமா.
ReplyDelete/ தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன் /
ஆம் தடைகளை மீறித் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
விடுமுறை இனிதாக அமையட்டும்.
மிக அருமையான கவிதை ஹேமா..
ReplyDeleteநீண்ட உல்லாச பயணத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeletenice. have a good journy.
nillavai kettathaka solluma.
all the best
நல்ல கவிதை. விடுமுறை சந்தோஷம் அளிக்கட்டும்
ReplyDeleteஅருமையான பதிவு...
ReplyDeleteவாழ்க வளமுடன்.
அன்போடு
www.vnthangamani.blogspot.com
www.indians-meditation.blogspot.com
அருமையான கவிதை மேடம்!
ReplyDeleteadada poradikkuthu sandai podalamnu parthal
ReplyDeletevidumurraikku poi vittai. ini yarai muraippathu?.
லீவ் முடிஞ்சாச்சு!!!!!!!!!!!!! அட்டெண்டென்ஸ்
ReplyDeleteஇன்னுமா கோடை!!!
ReplyDeleteசீக்கிரம் வாங்க ...
நிலாக்குட்டி(யும்) சுகம் தானே ...
அப்படியோ 71 ன்னா ?
ReplyDeleteஇன்னுமா கோடை விடுமுறை?!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹேமா,
ReplyDeleteசிறப்போடும் செழிப்போடும்,
சிறந்த படைப்போடும்
பெற்றோரும் உற்றோரும்
பேறுபெற்று மனம்மகிழ
சிறப்பாய் வாழ்ந்திடவும்
பேறுபல பெற்றிடவும்
எப்போதும் இறைவன்
உன்னுடன் இருக்கட்டும்.
விக்ரமாதித்தன்
உருளும் கூழாம்கற்கள் நிறையவே பேசுகின்றன...
ReplyDeleteகோடை இனித்திடட்டும் ஹேமா.
காணவில்லை..
ReplyDelete((குட்டி மீன்கள்
ReplyDeleteபெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி )) அழகான சிந்தனை
நலமா?
ReplyDeleteநான்கு வாரம் ஆகிவிட்டது. கடுமையான வேலைப்பளூ. நலமா?
வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete