Friday, July 22, 2011

சொல்லா சாபமா...

சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்...

நீர்த்த உணவுக்குள்
ஒட்டாமலிருக்கும் உணவாய்
தனித்தேயிருப்பதாயும்
நாளைய வெக்கையில்
நசிந்து நாறப்போவதாயும்...

தொலைத்த கணங்களில்
மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
இம்மியளவாவது
இம்சிக்காமல் சாவு வராது என்றும்...

மூலை முடுக்குகளில்
இடுக்களில்
மீனின் செவுளாய்
கண் காணாத சாபங்கள்
உள்ளிருப்பதாயும்...

கோடுகளுக்குள்
நடந்து ஓடிக்கொண்டிருந்தாலும்
பிறழ்வுகளுக்குள்
அகப்பட்டேயாவாய் என்றும்...

சிவப்புச் சட்டைபோட்ட
உன் கருத்த வேண்டுதல்கள்
இப்போ விலகியே இருந்தாலும்
இறுதியில் உன்னுடனே
தொடரும் என்றும்....

இன்னும் இன்னும்...
சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்
பாவியவள்!!

நன்றி உயிரோசை.ஹேமா(சுவிஸ்)

38 comments:

  1. அழகான உணர்வு கவிதையாய் வெளிப்பட்டு இருக்கிறது..

    ReplyDelete
  2. ’சொல் பேச்சு’ கேக்கலைன்னா
    திட்டத்தான் செய்வாங்க.

    ஆனா,

    இப்படி கவிதையா
    திட்டினதுதான்
    (ஹேமா கவிதையாய் தீட்டினது)
    வியப்பு...!

    ReplyDelete
  3. எல்லா சாபத்துக்கும் சேத்து
    கவிதாயினி
    ஒரு சொல்லில்
    தாக்கியிருக்காங்க பாரு.

    //பாவியவள்//

    ReplyDelete
  4. கலங்கள் எப்போதுமே ஒரே பக்கமாக காற்றை செலுத்துவதில்லை வேட்கைகளும் அதற்கான வேகங்களும் மனிதத்துள் வந்தே கிடைக்கிறது இவைகள் எல்லாமே ஒருவகையில் ஏதோ ஒன்றை இழந்து விட்டமையால் உளவியலை பாதித்து அதன் தாக்கம் இதுமாதிரியான எண்ணங்களை தொற்றிவிக்கிறது என்கிறது ஒரு உளவியல் ஆய்வு நல்ல ஆக்கம் தொடர்க

    ReplyDelete
  5. மீண்டும் ஒரு அருமையான கவிதை தோழி..

    ReplyDelete
  6. தொலைத்த கணங்களில்
    மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
    இம்மியளவாவது
    இம்சிக்காமல் சாவு வராது......

    சொல்லா சாபமா???? அழகான வரிகள்.

    ReplyDelete
  7. கவிதை அழகு.. ஹேமா அக்கா..

    ReplyDelete
  8. //தொலைத்த கணங்களில்
    மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
    இம்மியளவாவது
    இம்சிக்காமல் சாவு வராது என்றும்...//

    பிடித்த வரிகள். நல்ல கவிதை. தலைப்பும் சிறப்பாக. அருமை ஹேமா.

    ReplyDelete
  9. கவிதை பிடிச்சிருக்கு

    ReplyDelete
  10. கவிதை உணர்வுகள் .......

    ReplyDelete
  11. >>சிவப்புச் சட்டைபோட்ட
    உன் கருத்த வேண்டுதல்கள்
    இப்போ விலகியே இருந்தாலும்

    கம்யூனிஸம் இன் காதலிசம்

    ReplyDelete
  12. இப்போ விலகியே இருந்தாலும்
    இறுதியில் உன்னுடனே
    தொடரும் என்று பதிவுகளில் கவிதை திட்டுகளாய் மிளிர்கிறது...

    ReplyDelete
  13. நிச்சயம் சாபம் தான் ஹேமா. அர்த்தம் நிறைந்த சாபங்கள். கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  14. கோடுகளுக்குள்
    நடந்து ஓடிக்கொண்டிருந்தாலும்
    பிறழ்வுகளுக்குள்
    அகப்பட்டேயாவாய் என்றும்...//

    சொல்லே சாபத்தை விட வலிதருவதாய் உணர்த்திய கவிதை....

    ReplyDelete
  15. அழகிய வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட மாலை!!

    ReplyDelete
  16. //தொலைத்த கணங்களில்
    மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
    இம்மியளவாவது
    இம்சிக்காமல் சாவு வராது என்றும்.//
    எனக்கு பிடித்த அழகிய வரிகள் .கவிதை நன்றாக இருக்கிறது தோழி .

    ReplyDelete
  17. அசத்தலான கவிதை...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. சகோதரி கவிதைய வாசித்து பார்த்தேன் காட்டானின் அறிவுக்கு எட்டல கருத்துரைகளை  பார்த்தேன் அதன் பின்னேயே.. காட்டானுக்கு விளங்கியது இனிமேல் கருத்துக்களை பார்க்காமல் விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்..!?

    ReplyDelete
  19. அருமையான உணர்வு கவிதை அக்கா

    ReplyDelete
  20. எல்லா சாபத்துக்கும் சேத்து
    கவிதாயினி
    ஒரு சொல்லில்
    தாக்கியிருக்காங்க பாரு.

    //பாவியவள்/\\
    ஹேமா என்னைத்தான் திட்டி இருக்கிறார் போலும்......
    ஏன் ஹேமா எனக்கு இவ்வளவு திட்டு?
    அதுவும் யாரோ சாடினமாதிரி,,,,,இத்திட்டு
    இப்ப ஆத்திரம் தீர்ந்ததா?

    ReplyDelete
  21. ரொம்ப ரொம்ப நல்லாருக்கு ஹேமா.. சிலசமயம் அதீத அன்பின் வெளிப்பாடும் இப்படி திட்டுகளாக வெளிப்படுவதும் உண்டோ.... இருக்கலாம்.

    ReplyDelete
  22. தொலைந்த கருணங்களில் மிஞ்சயிருக்கும் ஏதோ ஒன்று இம்மியளவு இம்சிக்காது சாவு வராது என்ற வரிகளில் பல பொருள் உள்ளது வெளிக்காட்டமுடியாத வேதனைகள் சிறப்பான கவிதை!

    ReplyDelete
  23. வந்தேன். கவிதையைப் படித்தேன்.

    ReplyDelete
  24. அடிவயிற்றுச் சாபமாக இருப்பினும்
    கவிதையின் அழகுசொற்களின் பிரயோகம்
    சொல்லிச் செல்லும் விதம் இவைகளைப் பார்க்கையில்
    பாவியவள் இன்னமும் சாபமிட்டிருக்கலாமே
    எனத்தான் தோன்றுகிறது
    தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. நல்ல கவிதை சில இடங்களில் புரியவில்லை....புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.....

    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

    ReplyDelete
  26. நலமா ஹேமா அவர்களே...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. //"தொலைத்த கணங்களில்
    மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
    இம்மியளவாவது
    இம்சிக்காமல்..."//


    தொலைத்த கணங்கள் இம்சித்தால் சேமித்த கணங்கள் காப்பாற்றட்டும்!!

    ReplyDelete
  28. supper kavithai
    vaalththukkal..

    ReplyDelete
  29. பாவியவள் சொல்வதும் மெய்தான். மீன் செதிலாய் மூலைமுடுக்குகளிலும், இடுக்குகளிலும்
    கண்காணாத சாபங்கள் இருக்கின்றன. அதற்கு ஒஸ்லோவில் நேற்று நடந்த நடப்பு ஒரு சான்றாகி விட்டது.

    ReplyDelete
  30. //தொலைத்த கணங்களில்
    மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
    இம்மியளவாவது
    இம்சிக்காமல் சாவு வராது என்றும்...//


    நினைத்து பார்க்க முடியாத வரிகள்.
    ரொம்ப நல்லருக்குங்க.

    ReplyDelete
  31. வணக்கம் அக்காச்சி, சிறிய இடைவெளியின் பின்னர் வந்திருக்கிறேன்.

    ReplyDelete
  32. சொல்லா சாபமா...மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல வடிவம் பெறுகின்றது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. கவிதை ரசனை !!!
    உங்கள் ப்வேட்டி வாசித்தேன் சி பியின் பக்கங்களில்!!ம்ம்ம்

    ReplyDelete
  34. //மூலை முடுக்குகளில்
    இடுக்களில்
    மீனின் செவுளாய்
    கண் காணாத சாபங்கள்
    உள்ளிருப்பதாயும்...//
    உணர்வு வெளிப்பட்டு இருக்கிறது..

    ReplyDelete
  35. பாவியவளின் சாபங்களையும் அழகிய கவியாக்கியதை அறிந்தால் அவளே அசந்துபோவாள். உணர்வுகளைத் தக்க உவமைகளால் வடிக்கும் உங்கள் திறமையை வியந்து பாராட்டுகிறேன் ஹேமா.

    ReplyDelete
  36. கோடுகளுக்குள்
    நடந்து ஓடிக்கொண்டிருந்தாலும்
    பிறழ்வுகளுக்குள்
    அகப்பட்டேயாவாய் என்றும்...

    அருமையான வரிகள்

    ReplyDelete