Tuesday, September 14, 2010

ஏன்...எதுக்கு ?

அள்ளிக் கொட்டும் அரிசி
புறாக்களுக்காம் !

பயந்து பறந்த புறா
பத்தடி தூரமாய் !

கள்ளமில்லா மனதில்
கூட்டி அள்ளும் கேள்விகள் !

ஏன் பயம்...
பசிக்காதோ அதுக்கு...
யார் சமைச்சுக் குடுப்பா...
ஏன் சாப்பிடணும்
பூச்சி புளுவெல்லாம் !

நான் குடுக்கிறேன்
என்னோடயும்
சாப்பிட்டு
விளையாடலாம்தானே !

கடவுள் சொல்லியிருக்கிறார்
அதுக்கு....
மனுஷரைக் கண்டால்
தள்ளியிருக்கச் சொல்லி !

பைத்தியம் கடவுளுக்கு...
யோசிக்க முடியாத
சின்னமூளை வைத்த
கடவுள்தான் முட்டாள் !

இன்னும்....
மனுஷனாய் ஆகாத
சின்னக் குழந்தை தானே
நான்!!!

ஹேமா(சுவிஸ்)

72 comments:

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்குதுங்க!

    ReplyDelete
  2. //இன்னும்....
    மனுஷனாய் ஆகாத
    சின்னக் குழந்தை தானே
    நான்!!!//

    அருமைங்க..

    ReplyDelete
  3. / இன்னும்....
    மனுஷனாய் ஆகாத
    சின்னக் குழந்தை தானே
    நான்!!! /

    நீங்க குழந்தையா இல்லை உங்களுக்கு குழந்தை மனசா? (kiding)

    கவிதை அருமை தோழி.. மனசு லேசா இருக்கு..

    ReplyDelete
  4. கவியின் கண் ஒரே சமயத்தில் ஞானியின் கண்ணும், குழந்தையும் கண்ணும் தானே தோழர்!

    எங்களூர் தேவாலயத்தில் புறாக்களுக்குப் பின்னால் திரிந்த கால் டவுசர் நாள்கள் நினைவுக்கு வருகின்றன தோழர்!

    பால்யம் திரும்ப வைத்தமைக்கு நன்றிகள் தோழர்!

    ReplyDelete
  5. பைத்தியம் கடவுளுக்கு...
    யோசிக்க முடியாத
    சின்னமூளை வைத்த
    கடவுள்தான் முட்டாள் !/////

    நல்ல வரிகள்

    ReplyDelete
  6. சில மனித குணங்களைப் பற்றிய ஆற்றாமையும் கோவமும் வெளிப்படுகிறது இந்தக் கவிதையில்...
    நல்லா இருக்கு ஹேமா..

    //மனுஷனாய் ஆகாத
    சின்னக் குழந்தை தானே//

    விளாசல்!

    ReplyDelete
  7. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று....

    //இன்னும்....
    மனுஷனாய் ஆகாத
    சின்னக் குழந்தை தானே
    நான்!!!/

    அழகு...ரசித்தேன்...வழ்த்துகள் ஹேமா...

    ReplyDelete
  8. இன்னும்....
    மனுஷனாய் ஆகாத
    சின்னக் குழந்தை தானே
    நான்!!!//

    ரைட்டு ஹேமா.

    ReplyDelete
  9. கவிதை ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  10. ரொம்ப நல்லாயிருக்குங்க ஹேமா

    ReplyDelete
  11. கவிதை ரொம்ப அருமையா இருக்கு ஹேமா..

    ReplyDelete
  12. ஹேமா,

    கடைசி வரிக்கு வந்ததும் கவிதை முடிந்து விடும் என்றிருந்தேன். ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆமாம்!, மீண்டும் மேலேறி வந்து படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

    குழந்தையாய் மாறி... காட்சிகளும், கேள்விகளும், பதில்களுமாய் படத்தில் சிதறிக்கிடக்கிறது... நானும் அங்கேயே!

    ReplyDelete
  13. பைத்தியக்கார கடவுள்... நல்லா இருக்கு ஹேமா..

    அன்புடன் ஆர்.வி.எஸ்

    ReplyDelete
  14. //இன்னும்....
    மனுஷனாய் ஆகாத
    சின்னக் குழந்தை தானே
    நான்!!
    குழந்தைகளாய் இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்.
    கவிதை நல்லா இருக்கு ஹேமா.

    ReplyDelete
  15. ஹேமா இன்று தான் உங்க தளத்தை ரொம்ப நேரமாக பார்த்துகிட்டு இருந்தேன். எப்போதும் போல எழுத்து நிறம் படுத்தி எடுக்க வைத்து விட்டது.

    சும்மா ஜிகுஜிகுன்னு அங்கங்கே பளபளன்னு ஒரு கவர்ச்சியா இருக்கு ஹேமா.

    குழந்தைகள் ரொம்பவே ரசிச்சாங்க.

    ReplyDelete
  16. குழந்தை வரைந்த கவிதை அருமை.

    ReplyDelete
  17. பைத்தியம் கடவுளுக்கு...
    யோசிக்க முடியாத
    சின்னமூளை வைத்த
    கடவுள்தான் முட்டாள்

    nice

    ReplyDelete
  18. இன்னும்....
    மனுஷனாய் ஆகாத
    சின்னக் குழந்தை தானே
    நான்!!!

    மறுபடி குழந்தையாய் ஆனது மனசு.

    ReplyDelete
  19. குழந்தையின் பார்வையில் .. அழகான கவிதை...

    ReplyDelete
  20. கவிதை வசித்து நானும் குழந்தையானேன் .குழந்தையின் எண்ண ஓட்டம் பாராடுக்கள்

    ReplyDelete
  21. நல்லா இருக்கு ஹேமா.

    ReplyDelete
  22. குழந்தையின் பார்வையே தனி.
    வித்தியாசமான கோணம்.
    ரசித்தேன் ஹேமா.

    ReplyDelete
  23. எனக்குத் தெரியும் இது குட்டிநிலா புறாவோட பேசின மழலைமொழிதானே ! நல்லாயிருக்கு கேள்வியும் பதிலும் ...

    பைத்தியம் பைத்தியம் பைத்தியம் கடவுள்....

    ReplyDelete
  24. கடவுள், பறவை, மனிதன், குழந்தை இந்த 4-யையும் வைத்து ஒரு உருவக, உவமை கவிதை. கவிதைப்படைப்பில் உயர்ந்து வருகிறீர்கள் சகோதிரி.

    ReplyDelete
  25. என்ன திடிர்ன்னு .... என்னாச்சு ???

    கவிதை நல்லாயிருக்கு

    ReplyDelete
  26. புறாக்கு அரிசியா போடுவாங்க ஜி..
    கோதுமை & கம்பு best.

    //யார் சமைச்சுக் குடுப்பா...//
    புறாவோட அப்பா அம்மாங்க

    //ஏன் சாப்பிடணும்
    பூச்சி புளுவெல்லாம் !//
    நல்லா சொன்னீங்க போங்க.. அதாங்க புரோட்டீன்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் எல்லாம்.

    //நான் குடுக்கிறேன்
    என்னோடயும்
    சாப்பிட்டு
    விளையாடலாம்தானே !//
    நீங்க சாப்பிடற உணவகொடுங்க.. அப்புறம் புறாக்கு டண்டணக்காதான்...

    //கடவுள் சொல்லியிருக்கிறார்
    அதுக்கு....
    மனுஷரைக் கண்டால்
    தள்ளியிருக்கச் சொல்லி !//
    ஏன்னா... புறா கறி ருசியானவை என்பதால இருக்கும்

    //சின்னமூளை வைத்த
    கடவுள்தான் முட்டாள் !//
    என்னது.. சின்ன மூளையா.. அது கட்றா மாதிரி கூடு நமக்கு கட்டிக்க முடியுமா?

    //சின்னக் குழந்தை தானே
    நான்!!!//
    உட்டா நான் ரெண்டாங்கிளாஸ் தான் படிக்கிறேன்னு சொல்லுவீங்க.. போல

    மொத்தத்ல... நல்ல ருசியான புறா பிரியாணி சாப்பிட்டா மாதிரி இருந்ததுங்க... கவிததாங்க

    (என்ன பண்ணறதுங்க இந்த வாட்டி நசரேயன் அடக்கிவாசிச்சதால... நாம அந்த பொறுப்ப ஏற்க வேண்டியது ஆகிடுச்சுங்க :)) )

    ReplyDelete
  27. வித்தியாசமான கவிதை. :-)

    ReplyDelete
  28. குழந்தையாய் மாறி அதன் மனநிலையொத்த கவிதை அழகு காட்சி அழகாய் கண்களில் தோன்றியவாறு கவிதை ரசிக்க முடிந்தது...

    ReplyDelete
  29. பாவம் இறைவன்..! அந்த ஆள் மேல ஏன் இவ்ளோ கோவம்.. ஹஹ.. கவிதை நன்று தோழி!

    நல்ல வேளை புறாக்களுக்கும் நம்மை போன்ற ஆறவு கொடுக்கல கடவுள்.. கொடுத்திருந்தா.. நிச்சயம் சமைச்சுப் போட்டாத்தான் தின்னும்!!

    ReplyDelete
  30. //இன்னும்....
    மனுஷனாய் ஆகாத
    சின்னக் குழந்தை தானே
    நான்!!!//
    :))) Nambittom. Rasithen.

    ReplyDelete
  31. கவிதை அருமை! உங்களுக்கு குழந்தை மனசு ஹேமா. அதான் இந்த கவிதை இவ்வளவு
    அருமையா வந்திருக்கு.

    ReplyDelete
  32. சின்ன குழந்தையின் பெரிய மனசு..!

    அழகு..!

    ReplyDelete
  33. நல்ல கவிதை!

    ReplyDelete
  34. சின்னக் குழந்தையின் பெரிய கேள்விகள், சந்தேகங்கள்...! படமும் அருமை.

    ReplyDelete
  35. //கடவுள் சொல்லியிருக்கிறார்
    அதுக்கு....
    மனுஷரைக் கண்டால்
    தள்ளியிருக்கச் சொல்லி //

    சரிதான்....?

    ReplyDelete
  36. ஏன்...எதுக்கு.எப்படி...இதெல்லாம்...நல்லாயிருக்கு ஹேம்ஸ்

    ReplyDelete
  37. கவிதை ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  38. \\ஏன் பயம்...
    பசிக்காதோ அதுக்கு...
    யார் சமைச்சுக் குடுப்பா...
    ஏன் சாப்பிடணும்
    பூச்சி புளுவெல்லாம் !\\

    Neraiya time yosithirukkiren..
    innikuthan answer kedachirukku..

    Kavithai puravin siragai pola menmaiyai irukku.

    ReplyDelete
  39. நான் குடுக்கிறேன்
    என்னோடயும்
    சாப்பிட்டு
    விளையாடலாம்தானே ! இப்படி குழந்தை மனது எப்பொழுதும் இருக்க பேறு பெற்றிருக்க வேண்டும் ஹேமா.........வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. சின்ன மூளையை வைத்த கடவுளை சாடுமளவு பெரிய மூளைங்க உங்களது

    வாழ்த்துக்கள் ஹேமா

    விஜய்

    ReplyDelete
  41. குழந்தை மனது புரிந்த்தது அருமை கவிதை

    ReplyDelete
  42. கவிதை சூப்பர்.

    wwww.vijisvegkitchen.blogspot.com

    ReplyDelete
  43. பைத்தியம் கடவுளுக்கு...
    யோசிக்க முடியாத
    சின்னமூளை வைத்த
    கடவுள்தான் முட்டாள் !\\\\\\\

    பைத்தியம்,முட்டாள்...
    என்று வாய்க்கு வந்தபடி திட்டித்
    தீர்த்துவிட்டீர்கள்
    இப்போதாவது தணிந்ததா
    உங்கள் கோபம்?
    ஏன் ஹேமா இவ்வளவு பாசஉணர்வு
    கடவுளின் மேல்?


    ஏதோ நீங்கள் கேட்க!அவர் உதவவில்லை
    போலும்!!

    ReplyDelete
  44. சின்னஞ்சிறுமியின் எண்ணக் கேள்விகளை
    கொட்டி...
    விசிறிவிட்ட கற்பனை அற்புதம் ஹேம்ஸ்

    ReplyDelete
  45. கள்ளமில்லா மனதில் கூட்டி அள்ளும் கேள்விகள் அழகு தான்.....படம் அருமை ஹேமா.

    ReplyDelete
  46. ரொம்ப அருமையான கவிதை, வரிகள் மிகவும் நல்ல இருக்கிறது

    வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  47. பைத்தியம் கடவுளுக்கு...
    யோசிக்க முடியாத
    சின்னமூளை வைத்த
    கடவுள்தான் முட்டாள்//

    உண்மையோன்னுதான் தோணுது ஹேமா.. சிலது பார்த்தால்

    ReplyDelete
  48. சின்னக் குழந்தையின் சிந்தனை பெரியதும் உண்மையானதும்.அந்த அளவு மூளையும் மனதும் படுத்தும்பாடு இருக்கே அதுவே ஆனந்தமானதும் ஒப்பீடற்றதும்.இதில் இன்னும் பெரிதாய் இந்த ஹேமா கேட்பது அநியாயத்துக்கு அநியாயம்.

    ReplyDelete
  49. ஹேமா.. உங்க கவிதை அழகானது.என் யானைப் பதிவை ரசித்ததற்கும் நன்றி

    ReplyDelete
  50. பைத்தியம் கடவுளுக்கு...
    யோசிக்க முடியாத
    சின்னமூளை வைத்த
    கடவுள்தான் முட்டாள்

    அருமை..

    ReplyDelete
  51. //கடவுள் சொல்லியிருக்கிறார்
    அதுக்கு....
    மனுஷரைக் கண்டால்
    தள்ளியிருக்கச் சொல்லி !//

    குழந்தையாகவே இருந்திருக்கலாம் நாமெல்லாம்...!!!

    ReplyDelete
  52. ம்ம்ம்... ரசிக்க வைத்த கவிதை... நன்று..

    ReplyDelete
  53. கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  54. குழந்தை மனதில் புறா கவிதை அழகு. படமும் ஒன்றுசேர்க்கிறது.

    ReplyDelete
  55. ஹேமா நான் வந்துட்டேன்,
    நல்லா இருக்கீங்களா?
    கவிதை அருமைங்க,,,
    வாழ்க வளமோடு,,,,,,

    ReplyDelete
  56. கவிதை ரசிக்கும் படியா இருக்குங்க.
    அசோக்கின் புறாக்கறி கமென்ட்டும்.

    ReplyDelete
  57. வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
    வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


    சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
    சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
    பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

    ReplyDelete
  58. ஹேமா

    உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். நன்றி.
    மிக்க மகிழ்ச்சி.
    உங்களுக்கௌ நினைவிருக்கிறதா தெரியவில்லை..ஒரு முறை ஜெரி அவர்கள் வலைச்சரத்தில் என்னைப் பற்றி எழுதும்போது, உங்களுக்குப் போட்டியாக இறக்கியிருக்கிறோம் என விளையாட்டாய் எழுதியிருந்தார் :) அப்போது தான் உங்கள் தளம் முதல்முறையாக பார்த்தேன்.
    உண்மையில், ஜெரி கூறியது, மிக அநியாயம் என உணர்ந்தேன்!
    அதன் பின், அலுவலகத்தில் வலைத்தளங்கள் பார்க்க இயலாத காரணத்தினல் கூகிள் ரீடர்’ல் பதிவு செய்து படித்து வந்தேன். நிறைய ரசித்திருக்கிறேன்.
    இப்போது தான் வலைத்தொடர்ப்பு பெற்று வீட்டிலிருந்தும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

    அருமையான பணி. தொடருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    தொடர்பில் இருந்தால் மகிழ்ச்சியடைவேன்.

    seethabharathi@gmail.com
    kutipaiyaa@gmail.com

    சந்திப்போம்.

    ReplyDelete
  59. உங்கள் கவிதைகள் ரொம்பவே உணர்வு பூர்வமா இருக்கு ஹேமா.....தொடர்ந்து வாசிக்கணும் என்று இன்றில் இருந்து தொடருகிறேன் தோழி.

    இது எனது மற்றொரு தளம்.
    http://sanvishblue.blogspot.com/

    ReplyDelete
  60. கவிதை நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  61. நன்று ஹேமா..

    அறிந்தோ அறியாமாலோ உங்கள் கவிதையில் சில வரிகள் எஸ்.ராமகிருஷ்ணனை ஞாபகப்படுத்துகிறது..

    www.narumugai.com

    ReplyDelete
  62. கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  63. உங்கள் கவிதைகளை எனக்கு தியா தான் அறிமுகப்படுத்தினர்
    உண்மையாக எல்லா கவிதை களும் சொல்லான வசீகரங்களை
    கொண்டுலாத்துகிறது ..................

    ReplyDelete
  64. என்னோடு கை கோர்த்துக்கொண்டு புறாவுக்குச் சாப்பாடு போட்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி.என்னோடு புதிதாய் இணந்துகொண்ட நண்பர்களையும் வரவேற்றுக்கொள்கிறேன்.உண்மையில் நேரமின்மையால் தனித் தனியாக நன்றி சொல்லிச் சந்தோஷப்பட முடியவில்லை.

    ஜமால்...உங்களுக்கு எப்பிடித் தெரியாமப் போச்சு.நிலாக்குட்டிதான் இப்பிடியெல்லாம் கேட்டிருப்பான்னு.ஏன் என்னாச்சுன்னு கேட்டிருக்கீங்க !

    சின்னபாரதிதான் சரியாக் கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்கார்.

    படத்தை ரசித்த நண்பர்களுக்கும் நன்றி.

    அஷோக்...புறா பிரியாணியா !வீட்டு போன் நம்பர் தாங்க.
    சொல்லிவிடுறேன் !

    ReplyDelete
  65. உண்மையாவே குழந்தையாவே இருந்திருக்கலாம்னு தோணுது. பிற உயிர்களிடத்தும் காட்டுகிற அந்த பரிவு மனப்பான்மை இப்பல்லாம் இருக்கிறதா தெரியல... நல்ல படைப்புங்க..

    //கள்ளமில்லா மனதில்
    கூட்டி அள்ளும் கேள்விகள் !//

    எக்ஸ்லண்ட் லைன்ஸ்...

    ReplyDelete
  66. அனைத்து உயிர்களையும் நேசிக்கத்தூண்டும் வரிகள்... பிரமாதம்...

    ReplyDelete