Tuesday, September 07, 2010

தனித்தில்லை...

நீண்ட நாட்கள்
அல்ல அல்ல
நீண்ட காலங்களுக்கு பின்
உன் ஸ்பரிசம்.

அலுவலாய் இருந்த என்னை
அணைத்து
முடி தள்ளி....
முத்தம் தந்து
எப்படி முடிகிறது உன்னால்
தனிமை தைரியம் ?

முகம் பார்த்துச்
சிரித்த கண்ணில்
மீண்டும் ஒன்று.

திரும்பவும்....
பயந்தாங்கோழிக்கு
எப்படி இத்தனை
தைரியம் தனியாக ?

யார் சொன்னார்
நான் தனித்தேனென்று.
முன்பைவிட எப்போதும்
நீ...
என்றும் பிரியாமல்.

அலுவல்...அம்மாவீடு
என்றுகூட அகலாமல்
என் மூச்சின் முகவரியே
உன்னோடு.

என்ன கேள்வி இது
போடா தள்ளி
காலையிலேயே கலாட்டா
செய்தபடி நீ இங்கு.

காற்றோடு நீ
கண்மணிக்குள் நீ
தனிமையாய் நான் இல்லை.
நீ இல்லை என்று
என் ஞாபகத்தில்
எப்போதுமே இருந்ததில்லை

என் மரணம் வரை
உனக்கும் இல்லை அது!!!

ஹேமா(சுவிஸ்)

62 comments:

  1. naan thaane first .... padichchuttu varen hema :)

    ReplyDelete
  2. அன்பு நண்பர்களுக்கு ஒருமாதம் ஓய்வு எடுத்துவிட்டேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசியிலும் அன்பாய்த் தேடியும் என்னை நலம் விசாரித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும்
    என் அன்பு நன்றி.
    இனித் தொடர்ந்துகொள்வோம் தோழர்களே.

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது..........வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. / என் மரணம் வரை
    உனக்கும் இல்லை அது!!! /

    இருவரில் இருவரும் இருக்கும் வரை...
    அருமை ஹேமா..
    எண்ணின் ஒரு பழைய கவிதை மனதில் தோன்றுகிறது.. மிக்க நன்றி

    ReplyDelete
  5. நன்றி நன்றி நன்றி விநோ.நிறைந்த நாளுக்கு அப்புறம்.சுகம்தானே !

    நன்றி சிப்பிக்குள் முத்து.முதல் வருகையை அன்போடு வரவேற்கிறேன்.

    ReplyDelete
  6. //முகம் பார்த்துச்
    சிரித்த கண்ணில்
    மீண்டும் ஒன்று.//

    ஹேமா,

    ஆஹா... என நினைக்க வைத்த சொற்கள் இவை.

    ReplyDelete
  7. //தனிமையாய் நான் இல்லை.
    நீ இல்லை என்று
    என் ஞாபகத்தில்
    எப்போதுமே இருந்ததில்லை//

    கவிதை,
    இறங்கி வரும் போது இந்த வரிகளில், நிற்க வைத்து அங்கேயே சுழன்றடித்து நிதானமிழக்க வைக்கும் மிகமிக மென்மையான உணர்வு.

    ReplyDelete
  8. //அன்பு நண்பர்களுக்கு ஒருமாதம் ஓய்வு எடுத்துவிட்டேன்.//

    ஆச்சி,

    “ரிடையர்” ஆகிட்டாங்களோன்னு நெனைச்சிருந்தேன்.

    மீண்டு (ம்) வந்ததில் மகிழ்ச்சி. தொடருங்கள்.

    ReplyDelete
  9. //மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசியிலும் அன்பாய்த் தேடியும் என்னை நலம் விசாரித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் ..//

    கவிதையில் “பொய்” இருக்கலாம்தான்.

    பின்னூட்டத்திலுமா “பொய்” நிரப்பி வெப்பாங்க?

    தாங்காதுடா இந்த வலையுலகம் சாமீய்ய்ய்ய்!

    ReplyDelete
  10. மென்மையான கவிதை..!!
    நல்லாருக்குங்க ஹேமா...

    ReplyDelete
  11. கண்ணழகா அலுவலகத்தில இருந்துகிட்டு என்ன பண்றீங்க.சம்பளம் சரியாத்தானே தாறாங்க.எது பொய்..என்ன பொய் ?


    சிவாஜி...நன்றி.
    சுகம்தானே நீங்களும் !

    ReplyDelete
  12. nalla irukken hema.. ungalukku mail podalaam ninaiththen.. id illai.. oru mail podunga vinod.nila@gmail.com

    ReplyDelete
  13. அம்மாடி, வந்துடீங்களா! :)

    தலைப்பும், கவிதையும் பிரமாதம். உங்கள் கவிதையை வாசிப்பதே ஒரு தனி சுகம்தான் ஹேமா!
    'நீ இல்லை என்று என் ஞாபகத்தில் எப்போதுமே இருந்ததில்லை......'
    எப்படிதான் இவ்வளவு அழகா எழுதறீங்களோ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஓய்வுக்கு பின்னான வருகைக்கு வந்தனங்கள்....

    கவிதை மிளிர்கிறது...!

    ReplyDelete
  15. வாங்க ஹேமா நலமா.. மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி..

    கவிதை நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  16. வெள்ளை எழுத்தில் தந்த என் தங்கத் தலைவி வாழ்க்,

    ரொம்பவே ரசித்தேன்.

    நாங்களும் எழுதுவோம்ல(?)

    ReplyDelete
  17. நீங்கள் தனித்தில்லை
    யார் சொன்னது
    இம்மாம் பெரிய வலையுலகம் இருக்கு

    கவிதை கன நாட்களுக்கு பின் நல்ல காதலோடு

    நிலா(வும்) நலம் தானே

    ReplyDelete
  18. ஒரு மாதம் ஆயிற்றே .... நினைப்பேன் எங்கே ஹேமாவை காணவில்லை என்று...

    அத்தனை வரிகளையும் அணு அணுவாய் ரசித்து உண்ர்ந்தேன் ஹேமா....

    ReplyDelete
  19. //முகம் பார்த்துச்
    சிரித்த கண்ணில்
    மீண்டும் ஒன்று.

    திரும்பவும்....
    பயந்தாங்கோழிக்கு
    எப்படி இத்தனை
    தைரியம் தனியாக ?//

    தலைப்பே தனிக் கவிதை
    தாண்டி வந்த ஒவ்வொரு வரியும் துணைக்கவிதை
    ரசனையில் ராட்டினமாய்...

    தனியாக இருக்கும்போது தைரியத்திற்கா பஞ்சம்?!!!!...
    வாழ்த்துகள் ஹேமா...

    ReplyDelete
  20. ஒரு மாத ஓய்வுக்கு பின், அருமையான கவிதையுடன் மீண்டும் வருகை புரிந்து இருக்கும் உங்களுக்கு, எங்களது அன்பான வரவேற்பும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  21. வெல்கம் பேக்
    உடலும் உள்ளமும்
    ஒரு மாத ஓய்வில்
    refresh ஆகியிறுக்கும்
    வாழ்த்துக்கள் தொடருங்கள்
    பின் தொடர்கிறோம்.

    ReplyDelete
  22. ரெம்ப நாளைக்கு அப்புறமா வந்து இருக்கீங்க, அதான் கும்மி இல்லை

    ReplyDelete
  23. //யார் சொன்னார்
    நான் தனித்தேனென்று.
    முன்பைவிட எப்போதும்
    நீ...
    என்றும் பிரியாமல்.//

    நல்ல வரிகள்

    ReplyDelete
  24. தனிமையாய் நான் இல்லை.
    நீ இல்லை என்று
    என் ஞாபகத்தில்
    எப்போதுமே இருந்ததில்லை////////

    அன்பை எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள். அன்பை போல் கவிதையும் அழகு.

    ReplyDelete
  25. ஹய்யொ எவ்ளோ நாளைக்கு பிறகு பதிவு...

    ஹேமாக்கா உங்க கவிதைக்கு அதோட எழுத்துக்கு அது சுமக்குர அர்த்தத்துக்கு
    lot of love n kisses

    cant express my feel...

    ReplyDelete
  26. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கவிதையுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி தோழி!!!

    நல்லாயிருக்குங்க ஹேமா வரிகள் அனைத்தும்

    ReplyDelete
  27. வாங்க ஹேமா

    நலமா

    "நான் தனித்தேனென்று"

    கொம்புத்தேனல்லவா !!!

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  28. சூப்பர்ப்டா!

    மதியமே வாசித்தேன். வேலைக்கு போக வேண்டிய அவசரம். ஓட்டு மட்டும் போட்டுட்டு ஓடிட்டேன்.

    ReplyDelete
  29. வாங்க ! நாங்களும் வந்துட்டோமுல்ல லீவு முடிஞ்சு :))

    நல்ல வெளிப்பாடு ஹேமா !

    ReplyDelete
  30. Nice Hema,glad to see you back to blogging.

    ReplyDelete
  31. அழகிய காதல் கவிதையோடு நீ...ண்ட இடைவெளிக்குப் பின் ஒரு இனிய தொடக்கம். சுகம்தானே...தொடருங்கள். கொடுத்து வாங்குவதுதான் அன்பு என்பதை கடைசி வரிகளிலும் சொல்லியுள்ளீர்கள். வழக்கம்போல மிக அழகிய கவிதை.

    ReplyDelete
  32. சிருங்காரம் துள்ளும் நிறைவான கவிதை. இது தான் ரகசியமென்றால் அடிக்கடி தலைமறைவாகுங்களேன் :)

    ReplyDelete
  33. வாங்க ஹேமா!
    அன்பின் ஸ்பரிசமும் வாசமும் என்றும் நம்மை விட்டு அகலுவதில்லை
    மிக மென்மையான கவிதை. அருமை தோழி!
    பூவின் இதழ்களின் மெல்லிய உரசல் போல!

    ReplyDelete
  34. கவியரசி,
    இத்தனை நாள் எங்க போயிட்டீங்க?
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் கவிதை.
    கிளப்புங்க.

    ReplyDelete
  35. காற்றோடு நீ
    கண்மணிக்குள் நீ
    தனிமையாய் நான் இல்லை.
    நீ இல்லை என்று
    என் ஞாபகத்தில்
    எப்போதுமே இருந்ததில்லை

    என் மரணம் வரை
    உனக்கும் இல்லை அது!!!

    மிகவும் அருமையான வரிகள்.....

    ReplyDelete
  36. நல்லாயிருக்குங்க... இளமையாய்

    ReplyDelete
  37. காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி இன்னும் என்னென்னவோ பண்ணிட்டீங்களே ஹேமா

    ReplyDelete
  38. வாங்க ஹேமா... வந்தது மகிழ்ச்சி..

    கவிதையில் நீ, நீயென்று உறவாடுவது வலைப்பக்கத்தோடா?

    நல்லாயிருக்குங்க...

    ReplyDelete
  39. கவிதை அழகாய் நகர்கிறது ஹேமா அக்கா..

    ReplyDelete
  40. அற்புதம் கவிதை பிடிச்சிருக்கு
    நான் வரவில்லை என்று ஏங்கினேன்.
    //நீ இல்லை என்று
    என் ஞாபகத்தில்
    எப்போதுமே இருந்ததில்லை///

    நல்லா இருக்கு வாழ்த்துக்கள் சோதரியே

    தொடர்ந்திடுவோம்

    ReplyDelete
  41. நன்றி ஹேமா - அருமையான கவிதை.

    ReplyDelete
  42. நீண்ட நாட்கள்
    அல்ல அல்ல
    நீண்ட காலங்களுக்கு பின்
    உன் ஸ்பரிசம்.\\\\\

    என்ன...!!
    காதலர் வேண்டுமென்றால் தொட்டுக் கொள்வதும்,
    வேண்டாம் என்றால் தள்ளி வைப்பதும்...
    ஊறுகாய் என்ற நினைப்பா?

    பிரிந்தவர் _ சேர்ந்து +விட்டார்= போலும்.....
    வாழ்த்துகள்

    ReplyDelete
  43. சகோதரி ஹேமா...
    தாங்கள் இப்போ உப்பு மடசந்தியில் எழுதுவதில்லையோ?

    கவிதையில் காதல் வழிகிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. \\யார் சொன்னார்
    நான் தனித்தேனென்று.
    முன்பைவிட எப்போதும்
    நீ...
    என்றும் பிரியாமல்.\\

    Super.

    ReplyDelete
  45. இந்தக் கவிதையின் தனி மொழியை ரசித்து மயங்குவது அதிகாலைக் குளிருக்குக் கம்பளியில் பதுங்குதல் போல சுகம்.உங்களையும் ஒரு மாதம் இழந்திட்டோம் ஹேமா.எல்லோரும் சுகம்தானே?

    ReplyDelete
  46. அமுதன்...நன்றி நன்றி அன்பான வருகைக்கு.நான் என்றுமே தனித்தில்லை.


    மீனு...நான் வந்ததில் உங்கள் உற்சாகம் கண்டு குழந்தையாகிறது என் மனம்.இடையில் தேடியும் இருந்தீர்கள்.நன்றி தோழி.


    தேவா...நன்றி நண்பரே.
    வருகைக்கும் கூட.


    இர்ஷாத்...நான் நல்ல சுகம்.நீங்களும்தானே.தொடர்வோம்.


    ஜோதிஜி...வெள்ளை எழுத்தைக் கண்ட சந்தோஷமா இல்லை என்னைக் கண்ட சந்தோஷமா !நீங்க எழுதின கவிதை பார்த்துத்தானே ஒரு மாசம் குழந்தைநிலாவுக்கு விடுமுறை விட்டேன் !


    ஜமால்...எப்பவும் நிலாக்குட்டியை விசாரிக்க மறக்கவே மாட்டீங்க.
    நிலாக்குட்டிக்கும் சொல்லித்தான் வச்சிருக்கே ஜமால் மாமான்னு ஒருத்தர் எப்பவும் உன்னைக் கேட்கிறார்ன்னு.நான் தனித்தில்லை ஜமால்.எப்போதும் முகம் காணா நண்பர்களுடன்தான்.அன்புக்கு எப்போதும் நன்றி ஜமால்.


    தமிழரசி...நன்றி.நீங்கள் நினைத்த நேரம் தும்மினேன்.கேட்டதா தோழி.


    சீமான்...சரியாகச் சொன்னீர்கள்.
    ஒன்றைப் பறித்தால் ஒன்று கிடைக்குமாம்.தனிமை என்று பயந்தேன் துணிவு கிடைத்தது.


    சித்ரா...நன்றி நன்றி அன்பு வரவேற்புக்கு.உங்கள் தளம்தானே மனதை இளகவைக்கிறது சிலசமயங்களில்.


    ராஜவம்சம்...நீங்கள் சொல்வதுபோல மனமும் உடம்பும் சுகமாகியிருந்தாலும் ஏதோ ஒரு சோம்பேறித்தனம் என்னுள் ஏறியிருப்பதுபோல உணர்கிறேன்.
    நிரந்தர இருப்பிடம் கொடுக்கமாட்டேன்.
    பார்த்துக்கொள்ளலாம்.


    நசர்...கும்மியடிச்சாத்தான் நீங்கன்னு நம்புவேன்.இல்லாட்டி இது யாரு !


    அன்பரசன்...பெயரிலேயே அன்பு.
    நன்றி முதல் வருகைக்கு.

    ReplyDelete
  47. தமிழ்...அன்பை எப்படிப் புரட்டிப் போட்டாலும் அது அன்புதர மறுப்பதில்லை.அத்தனை சக்தி அந்த வார்த்தைக்குள்.


    றோஸ்....உங்க பாராட்டுக்கு அன்புக்கு மிக்க நன்றி தோழி.


    சக்தி...உங்க கவிதைகளுக்கு
    நான் ரசிகை.


    விஜய்...இப்போவெல்லாம் உங்கள் உற்சாகம் குறைந்தாற்போல.ஏன் ?உங்களின் உற்சாகம்தான் என் தனிமையை இல்லை என்றாக்கும்.


    அண்ணா...பாரா அண்ணா எனக்கு உங்க அன்பும் பாராட்டுமே சந்தோஷம்.


    நேசன்...விடுமுறை நிறைந்த சந்தோஷத்தையும் இப்போ ஒரு சலிப்புத்தன்மையுமா இருக்கீங்கபோல.
    எல்லாம் சரியாயிடும்.
    நிறைய எழுதுங்க.எனக்கும் சொல்லித்தாங்க.

    டாக்டர்...வைத்தியத்துக்கு நடுவில என்னையும் மறக்காம ஓடி வருவீங்க.சந்தோஷம்.


    ஸ்ரீராம்...உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.நான் விலக நினைத்தாலும் விலகமுடியாப் பிணைப்புக்கள் இந்த இணையத்தில்.


    அப்பா...ரகசியம் ஏதுமில்லை.
    சும்மாதான் ஒரு கவிதை.


    பாலா...அன்பின் பாராட்டுதலுக்கு அன்பாய் நன்றி சொல்லிக்கிறேன்.


    கொல்லான்...சுகம்தானே நீங்களும்.


    பிரின்சஸ்...முதல் வருகைக்கு நன்றி.சந்திப்போம் மீண்டும்.


    அஷோக்...முந்தைய உற்சாகத்தோடு உங்களைக் காண ஆசை.


    வேலு...அன்பைத் தேடணும்ன்னா இப்பிடியெல்லாம்
    கசிந்துருகத்தானே வேணும்.


    அம்மிணி..நன்றி நன்றி.


    பாலாஜி...உங்கள் எண்ணம் கவிதை வலைப்பக்கத்தோடு உறவாடுவதாயா !உங்கள் எண்ணம் அப்படியே இருக்கட்டுமே !நீண்ட நாளாயிற்று உங்களைக் கண்டு.அதற்கும் மகிழ்ச்சி.


    ரியாஸ்...கவிதையில் மனம் இருப்பதால் அதன் நகர்வு இயல்பாயிருக்கும்.


    குட்டிப்பையா...சந்தோஷம்.
    கவிதை பிடிசிருக்கா ?


    றமேஸ்...எங்களுர்க் காற்றுக் கொண்டு வந்தீர்களா.சுகம்தானே சகோதரா.

    ReplyDelete
  48. ரவி...நிறையப் பொய் சொல்றீங்க இப்பல்லாம்.ஊருக்குப் போய்ட்டு சுகமா சந்தோஷமா வாங்க.
    பாத்திட்டு இருப்பேன்.


    கலா...கலா யார் பிரிந்தார் சேருவதற்கு.கவிதைப்படி உங்கள் எண்ணக்கரு வேறயா இருக்கோ.
    அதுவும் சந்தோஷம்தான்.


    குமார்...ஒருமாத விடுமுறையில் ஓய்வு எடுத்திருக்கிறது உப்புமடச்சந்தி.அங்கும் இனிக் காணலாம் உங்களை.ஆனால் உங்களுக்குக் கவிதைதானே பிடிக்கும்.


    லோகு..நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.


    சுந்தர்ஜி...இங்கு எல்லோருமே சுகம்.நீங்களும்தானே.அன்புப் போர்வைகளோடு சந்திப்போம்
    இனி அடிக்கடி.

    ReplyDelete
  49. நாம் யாருமே தனித்தில்லை ஹேமா ..
    எனினும் தனித்தே தான் இருக்கிறோம் ...
    மீண்டும் கவிச்சுவை தர ஆரம்பித்ததில் மகிழ்ச்சி ...
    வாங்க welcome back

    ReplyDelete
  50. அழகான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. காதல் வரும்போது கிடைத்த சுகம் , காதலர் (தலைவனோ ! தலைவியோ! ) பிரிந்த (ஊடல்) நேரத்தில் இரட்டிப்பாகிறது .

    உங்களை மறந்துவிட்டேன் , அல்லது மறந்துவிடுங்கள் என்னும் சொற்களில் மட்டும்தான் மறந்து இருக்குமே ! தவிர ....

    உடலில் தொட்டுணர்வு இருக்கும்வரை
    அதாவது அவர்கள் அவர்களாக இருக்கும் வரை....

    //தனிமையாய் நான் இல்லை.
    நீ இல்லை என்று
    என் ஞாபகத்தில்
    எப்போதுமே இருந்ததில்லை//

    காதலின் உயிர்நிலையை உயர்நிலையை எட்டிப்பிடிக்கிறது கவிதை .,

    நல்ல பங்களிப்பு .... வாழ்த்துகள்

    ReplyDelete
  52. நலம் தானே தோழர் ... சற்று தொலைவு செல்வதென்றால் தளத்தில் ஒரு அறிவிப்பிட்டு சொல்லி விட்டு சென்றாலென்ன ... பாருங்கள் ... எத்தனை பேரை தவிக்க வைத்து சென்று விட்டீர்கள் ... உங்கள் ரம்மிய பொழுதுகள் தொடரட்டும் தோழர் ...

    ReplyDelete
  53. என் மரணம் வரை
    உனக்கும் இல்லை அது!!!



    are you trying to say about your leave.

    ReplyDelete
  54. காற்றோடு நீ
    கண்மணிக்குள் நீ
    தனிமையாய் நான் இல்லை.
    நீ இல்லை என்று
    என் ஞாபகத்தில்
    எப்போதுமே இருந்ததில்லை

    என் மரணம் வரை
    உனக்கும் இல்லை அது!!!

    இந்த வரிகளில் தெரிந்த ஆழம் அப்படியே என்னை உலுக்கி விட்டது.

    ReplyDelete
  55. புகைப்படமும்... அதற்கேற்ற வரிகளும் வார்த்தைகளும் அழகு சேர்கின்றது..

    வாழ்த்துகள் ஹேமா

    ReplyDelete
  56. வணக்கம்
    கவிதை நன்றாக உள்ளது

    ReplyDelete
  57. மிகவும் ரசித்தேன் கவியை.
    அருமை தோழி..

    ReplyDelete
  58. நானும் தேடினேன் இன்றுதான் புரிந்தது.
    உள்ளத்தால் இணைந்தவர்களை எண்ணங் கள் என்றும் பிரிப்பதில்லை இறக்கும் வரை

    ReplyDelete
  59. ரசனையான கவிதை..

    ReplyDelete