Friday, June 11, 2010

ப்ரியம் சுழித்தோடும் வெளியில்...

அதிர்வுகள் எத்தனை
சந்தித்தது இந்த உயிர்
சிதறாத
என் உயிரை பறித்த வீரன் நீ !

கருத்த வீட்டின்
இறுகிய கதவு
இழைத்தது
இரையாகியது
இல்லாமலே போனது
பின் கழற்றியது
பெரிதேயல்ல தோழனே
கருவாய்
தொடரும் பிறப்பில்
என் குழந்தையாய் நீ !

மனம் தவிர்த்து...
இரு மார்பும்
ஒரு பெண்குறியும்
நீண்ட
அழகான விரல்களோடு கால்களும்
தடித்த தொடைகளுமே
பெண்ணென்ற குறியாய்
நினைக்கும்
ஆண்கள் மத்தியில்
அதிசயமானவன் தான் நீ !

நீ...வெளியே
நான்...உள்ளே
விளையாட்டல்ல
இது வாழ்வு !!!

ஹேமா(சுவிஸ்)

72 comments:

  1. பிரிய ஹேமசுதனுக்கு இது நல்ல கவிதை..
    ஆனால் வார்த்தைகளில் கவனம் தேவை.. வாழ்க்கையே வக்கிரமாய் மாறிப் போனாலும்
    நமகென்று பொது வெளி உண்டு.. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  2. ஆக சிறந்த ஆக்கம் ஹேமா... Hats off you

    திரும்ப திரும்ப படித்துவிட்டு வருகிறேன் :)

    தலைப்பே அழகு... அதன் கீழே அமர்ந்திருக்கும் பெண்ணும்... இடியின் backgroundil கூடுதல் வலு சேர்க்கிறது..

    ReplyDelete
  3. கொஞ்சம் வார்த்தைகள் இடறுதல் தவிர அருமை சகோதரி...

    பிரபாகர்...

    ReplyDelete
  4. பெண்ணின் ஆழ் மனதை இதுவரை ஆண்களே பேசி வருகிறார்கள்... அதுவே இங்கே நடந்து வருகிறது...

    பெண்ணே பெண்ணின் நிலைபாடுகளை சொல்ல இங்கே வழியில்லை...

    அதில் நீங்கள், பத்மா, தேனம்மை போன்றோர் வருகை.. ஒரு ஆறுதல்.. (ஆனாலும் ஒவ்வொருவரும் தனித்தனிவழி)

    so dont worry... உங்களுக்கான மொழியில்.. தொடர்ந்து போய்கிட்டேயிருங்க...

    ReplyDelete
  5. //நீ...வெளியே
    நான்...உள்ளே//

    ஹேமா,

    இந்த நான்கு சொல் மட்டுமே எத்தனையோ அர்த்தம் பொதிந்ததாய் இருக்கிறது .

    ReplyDelete
  6. //ஆண்கள் மத்தியில்
    அதிசயமானவன் தான் நீ !//

    மனிதமுள்ள உண்மையான மனிதனும்கூட..

    நல்ல கவிதைங்க ஹேமா...

    ReplyDelete
  7. നന്നായിട്ടിരുക്ക്

    ReplyDelete
  8. //கருத்த வீட்டின்
    இறுகிய கதவு
    இழைத்தது
    இரையாகியது
    இல்லாமலே போனது
    பின் கழற்றியது
    பெரிதேயல்ல தோழனே
    கருவாய்
    தொடரும் பிறப்பில்
    என் குழந்தையாய் நீ !
    ////////

    இதயத்தின் நிஜப்தத்தில் ஓங்கி ஒலிக்கிறது உங்களின் வார்த்தைகள் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. விளையாட்டல்ல இது வாழ்வு

    நீ வெளியே - நான் உள்ளே

    வாவ்! அருமை ஹேமா

    ReplyDelete
  10. ஐயோ ஹேமாவா இது ?

    அதிரடியா இருக்கு

    விஜய்

    ReplyDelete
  11. என்னைப்போல் ஒருவன்

    ReplyDelete
  12. தைரியமானவர் தான் "நீங்கள்" (>>?<<)

    ReplyDelete
  13. சமீப இடுகைகள் அத்தனையும் தடைகள் போட்டு வெளியிடும் பின்னோட்டத்திலும் உங்கள் தைரியம் + நம்பிக்கையும் வியக்க வைக்கிறது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. தவறான சிந்தனைகள் இல்லாவிட்டால் தரமானவர்கள் இது போல் தொடர்து கொண்டு தான் இருப்பார்களோ?

    ReplyDelete
  15. உண்ர்வுகள் பொங்க எழுதியிருக்கிறீர்கள் ஹேமா!!

    ReplyDelete
  16. புறவிசைக்கு சமமான விசை..
    ஹேமா.. :)

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. ஹேமா உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருக்கீங்க... பீ கூல்...

    ReplyDelete
  18. //மனம் தவிர்த்து...
    இரு மார்பும்
    ஒரு பெண்குறியும்
    நீண்ட
    அழகான விரல்களோடு கால்களும்
    தடித்த தொடைகளுமே
    பெண்ணென்ற குறியாய்
    நினைக்கும்
    ஆண்கள் மத்தியில்
    அதிசயமானவன் தான் நீ !//


    நியாயமான சீற்றம் தான் தோழி...மிகைத்துப் போனவர்களின் எண்ணங்களை கிழித்தெரிகிறது இவ்வரிகள்! எனக்கு ஒப்புமை நிறையவே உண்டு உங்களின்.....கவிதைப் புயலில்! வாழ்த்துக்கள் தோழி..!

    ReplyDelete
  19. ஆண்கள் மத்தியில்
    அதிசயமானவன் தான் நீ !

    தன் துணையை நினைத்து இப்படி வியப்பதே ஒரு காதலனின் அழகு.

    ReplyDelete
  20. சீக்கிரம் மதுரைல "ஹேமா ரசிகர் மன்றம்" ஆரம்பிக்க வச்சுடுவீங்க போல.

    ReplyDelete
  21. நல்ல கவிதையினிடையே
    ஆண்களுக்கு ஒரு சாட்டையடி.

    ReplyDelete
  22. ஓட்டு போட்டுட்டேன் ஹேமா.

    ReplyDelete
  23. எனக்கும் சொல்லி கொடுங்களேன் இப்படி உயிர் தொடும் கவிதைகள் எழுத!

    ReplyDelete
  24. உணர்வுகளின் வெளிப்பாடு கவிதையாய் ..வித்தியாசமாய் இருக்கிறது ..
    ..பாராடுக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  25. அதிர்வுகள் எத்தனை
    சந்தித்தது இந்த உயிர்
    சிதறாத
    என் உயிரை பறித்து

    கருத்த வீட்டின்
    இறுகிய கதவு
    இழைத்தது
    இரையாகியது
    இல்லாமலே போனது
    பின் கழற்றியது
    பெரிதேயல்ல தோழனே
    கருவாய்
    தொடரும் பிறப்பில்
    என் குழந்தையென

    மனம் தவிர்த்து
    கிளர்த்தும் பாகங்கள்
    கரு வாயில் அழகான விரல்களோடு கால்களும் பெண்ணென்ற
    ஆண்கள் மத்தியில்
    அதிசயமானவன்
    நீ...வெளியே
    நான்...உள்ளே
    விளையாட்டல்ல
    இது வாழ்வு

    இப்படி வாசித்துக் கொள்கிறேன் ஹேமா

    அறச்சீற்றம் நன்று !

    ReplyDelete
  26. அருமை. சகோதரி.

    ReplyDelete
  27. விளையாட்டல்ல
    இது வாழ்வு !!!


    ...... very nice.

    ReplyDelete
  28. எனக்கு வழக்கம் போல கொஞ்சம் புரியல :)

    ReplyDelete
  29. கவிதை அருமை. கொஞ்சம் வார்த்தைகள் தான் நெருடலா இருக்கு.

    ReplyDelete
  30. என்னாச்சி ஹேமா !!!! ..

    //
    நீ...வெளியே
    நான்...உள்ளே
    விளையாட்டல்ல
    இது வாழ்வு !!!
    //

    ஆமா ரம்மி விளையாட்டும் இல்லை .. கும்மி விளையாட்டும் இல்லை

    ReplyDelete
  31. ப்ரியம் சுழித்தோடும் வெளியில்...

    ஒரு வாசிப்பனுபவம்.. நன்றி..

    ReplyDelete
  32. இந்த மாதிரி கவிதையை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை

    ReplyDelete
  33. நல்ல கவிதை ஹேமா..உடலைத் தாண்டி மனம் பார்ப்போம்.
    இங்கு கலா கமெண்ட் மற்றும் ஜெகன் கமெண்ட் எதிர்பார்க்கிறேன்...
    இருவருமே நன்றாக அலசி எழுதக் கூடியவர்கள்...

    ReplyDelete
  34. நல்லாயிருக்கு ஹேமா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. azhuthamana karuththu...class hema...

    ReplyDelete
  36. ஐயோ ஹேமா என்ன ஆச்சு???

    “ப்ரியம் சுழித்தோடும்
    வெளியில்...” ஏன் இந்த சீற்றம் தோழி?

    ReplyDelete
  37. நல்ல கவிதைங்க ஹேமா...

    ReplyDelete
  38. ஆண்கள் மத்தியில்
    அதிசயமானவன் தான் நீ !//

    ரொம்ப நல்ல சினேகிதம் ஹேமா வாழ்க.:))

    ReplyDelete
  39. வார்த்தைக‌ள் கொஞ்ச‌ம் க‌டுமையா இருந்தாலும்...க‌விதை ந‌ல்லாயிருக்கு...ஃபோட்டோ பெரிய‌ ப்ள‌ஸ்..ந‌ல்லா தேர்வு செஞ்சிருக்கீங்க‌

    ReplyDelete
  40. //நீ...வெளியே
    நான்...உள்ளே
    விளையாட்டல்ல
    இது வாழ்வு//

    அருமை!

    ReplyDelete
  41. கலக்கிட்டிங்க..... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. நீ...வெளியே
    நான்...உள்ளே//

    கவிதையின் உயிரோட்டமான வரிகள் இது தான் எனப் புலப்படுகிறது. இக் கவிதைக்கு இவ் வரிகளையே தலைப்பாகவும் வைத்திருக்கலாம். நிஜங்களின் பிரதிபலிப்பிற்கும், மனித மனங்களின் உணர்வுகளுக்கும் கவி வடிவம் கொடுத்துள்ளீர்கள்.


    புதுமைப் பெண்களின் உயிரோட்டமான சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஹேமா.

    ஆபாசம் நிறைந்த கவிதை என்று இதனைப் படித்து ஒரு சிலர் பெருங் கூச்சல் போடலாம். ஆனாலும்’’வான் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும், ஆண்மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்,

    ‘விஞ்ஞானக் கள்வா.. எனைத் தீண்டும் தோழா.உன்னாலே உள்ளாடை... எனும் சினிமாப் பாடல் வரிகளை விட இக் கவிதையில் பூடகமாகச் சில விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. கவிதை அருமையாக உள்ளது.

    ReplyDelete
  43. கொண்டவேண்டும் இக்கவிதையை!
    தலைப்பில் துவங்கி கவிதையின் கடைசிச் சொட்டு வரை ஒரு நதியின் ப்ரவாகம். சுழிகள் ஏராளம்!
    கொண்டாடுகிறேன் இக்கவிதையை!
    பெண்ணை உடலாக காட்சிப்படுத்தும் இடம் வித்யாசமான ஒன்றுதான். இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்லியிருக்கலாம்.
    கவிதை நதிபோல... நாங்களும் ஓடம் போல!
    வாழ்த்துக்கள் ஹேமாஜி!!

    ReplyDelete
  44. ஸ்ரீராம்:
    //இங்கு கலா கமெண்ட் மற்றும் ஜெகன் கமெண்ட் எதிர்பார்க்கிறேன்...
    இருவருமே நன்றாக அலசி எழுதக் கூடியவர்கள்...
    //
    நல்லது. ஸ்ரீராம் - எங்கள்-ப்ளாக் ஆசிரியர்களில் ஒருவர் என நம்புகிறேன்.

    நமக்கே தெரியாமல் நம்மிடம் கொடுக்கப்படும் பணிகள் சிலசமயங்களில் சுவாரஸியமாய் இருக்கின்றன.

    வானம் வெளித்த பின்னும்-ல் ஒரு விரிவுரையாளராக :)) நியமிக்கப் பட்டிருப்பது படு சுவாரஸியம்தான்.

    கவிதையை போர்டில் எழுதிவிட்டு மாணாக்கர்களிடம் திரும்புவனாக கற்பனைத்துக்கொள்கையில் கிலியடிக்கிறது.
    சக விரிவுரையாளராக கலா இருப்பது தெம்பளிக்கிறது. ஓபி அடிக்கும் லெக்சரர்கள் சகலெக்சரரிடம் நோட்ஸ் கடன் வாங்குவது போல... நான் மைக்கை கலா-வுக்கு பாஸ் செய்கிறேன் :)))

    ReplyDelete
  45. //கொண்டவேண்டும் இக்கவிதையை!//
    என்பதைக் ​கொண்டாட ​வேண்டும் என வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறேன்.

    விடுபட்டதாக கருதும் ஒன்று:
    //ஆண்கள் மத்தியில்
    அதிசயமானவன் தான் நீ !
    //
    என்ற வரிகளில் இப்படியும் ஒரு​பெண் மதிக்கும் ஆண் இருக்கிறான் என்ற வகையில் சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete
  46. அடடா.. அதிசயமானவனை இப்படியும் விளிக்கலமோ.. வியக்கிறேன்.. மிக அழகு ஹேமா

    ReplyDelete
  47. ஹேமா மன்னிக்கனும்....
    3,4 நாட்களாய் இணையப்பக்கம்
    வரமுடியவில்லை.
    இருந்தும் என் அன்பான இதயங்கள்
    குறிப்பாக..ஸ்ரீராம் ,ஜெகன் மிக்க நன்றி
    என் வரவு நோக்கி வழிபார்ததற்கு!

    ReplyDelete
  48. அதிர்வுகள் எத்தனை
    சந்தித்தது இந்த உயிர்
    சிதறாத
    என் உயிரை பறித்த வீரன் நீ !\\\\\\

    இதயம் கவர்ந்த காதலனை ...
    காதலி எவ்வளவு மேன்மையாய்
    அதிலும் வீரன் என்று கொடுத்திருப்பது

    {போர்களத்தில் }எதிர் கொள்பவன் வீரன்

    காதல்களத்தில்...
    யாரிடமும் இதுவரை தோற்காத நான்
    அதை உடைத்து வீரனாகினாய்!
    என்னும் போது உயர்த்தி விட்டாய்
    ஆண்மகனை.

    அவ்வளவு பலசாலி யார் ஹேமா?
    நானும் அப்படியான ஒருவரைத்தான்
    தேடுகிறேன் கிடைக்கவில்லை...
    {கவிதை எழுதத்தான்}
    உங்களுக்கு மட்டும் கிடைத்து விட்டாரே!

    ReplyDelete
  49. கருத்த வீட்டின்

    இறுகிய கதவு
    இழைத்தது
    இரையாகியது
    இல்லாமலே போனது
    பின் கழற்றியது
    பெரிதேயல்ல தோழனே
    கருவாய்
    தொடரும் பிறப்பில்
    என் குழந்தையாய் நீ !\\\\\\

    எந்தவொரு {மகிழ்ச்சி,காதல்....}
    உணர்வுகளில்லாமல்..
    இறுகிக் கிடந்த என் மனக் கதவை

    இழைத்தல்:{வழவழப்பாக வர சீவுதல்,தேய்த்தல்}
    தேய்த்து உடைத்து ..
    உள்வந்து அதில் காதலை இரையாக்கி..
    பின் இல்லாமலாக்கி
    அதன்பின் அடியோடு கழற்றிவிட்டாய்
    இருந்தும் அதை நான் பெரிதாய்
    எண்ணாமல்...
    உன்னை நான் ஒரு குழந்தை செய்த
    தப்பாகத்தான் நினைக்கின்றேன்

    {அப்படியொரு நல்லவரு,வல்லவரு
    யாரடி சகி?}

    ReplyDelete
  50. மனம் தவிர்த்து...
    இரு மார்பும்
    ஒரு பெண்குறியும்
    நீண்ட
    அழகான விரல்களோடு கால்களும்
    தடித்த தொடைகளுமே
    பெண்ணென்ற குறியாய்
    நினைக்கும்
    ஆண்கள் மத்தியில்
    அதிசயமானவன்\\\\\\

    கே.ஆர்.பி செந்தில் சொன்னது போல்
    கொஞ்சம் வரம்பு உணர்ச்சியைக்
    குறைத்து,நேசமித்திரனின் சொல்லாடல்
    போல் வந்திருந்தால் இன்னும் சுவைபடும்
    பரவாயில்லை.....
    யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே..
    அதுபோல் ஹேமாவுக்கும் சில நேரங்களில்
    சொல் சறுக்கி விழுகிறது போலும்!

    ஒரு ஆண்மகனைப் பற்றி புகழந்து உச்சியில்
    ஏற்ற நினைத்து உச்சாணிக்குப் போய்விட்டார்
    ஹேமா .

    அந்த ஆண்மகனை இப்படியெல்லாம்
    சொல்லி {மிகமிக உயர்வாய் காண்பிக்க}
    வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வந்த
    வார்த்தைகளாய் நாம் நினைத்து
    நெருடலை மறப்போம் .நெருடலாய் எண்ணும்
    அன்பு உள்ளங்களே! நன்றி

    ReplyDelete
  51. நீ...வெளியே
    நான்...உள்ளே
    விளையாட்டல்ல
    இது வாழ்வு !!!\\\\\\\\

    எவ்வளவுதான் உயர்த்திப் பேசினாலும்
    இந்த மனம் இருக்கே {அது ஒரு குரங்குதானே}
    சில நேரங்களில்...
    வேண்டாம் என்பதை வேண்டுமென்று
    அடம்பிடிக்கும்
    பார்காதே என்றால்
    பார்த்தே தீருவேன் எனப் பாடுபடும்
    இனிமேல் எதுவும் வேண்டாம்
    என்று விலகினால் ...
    உசுப்பிவிடும் இப்படிப் பல.....

    நீ வெளியே எதுவும் தெரியாதவன்
    போல்.எதுவும் நடக்காதவன் போல்
    நடமாடுகிறாய்....

    ஆனால் நான்?

    நான் உள்ளே ... யாரிடமும் பகிர்ந்து
    கொள்ளமுடியாமல்..வெளிக்காட்டத்
    தெரியாமல் மனக்கூட்டுடன்
    போராடுகின்றேன்
    நீ விளையாட்டாய் நினைக்கும் காதலை
    நான்
    வாழ்கையாய் நினைக்கின்றேன்.

    ReplyDelete
  52. நான் மைக்கை கலா-வுக்கு
    பாஸ் செய்கிறேன் :)))\\\\
    பிடித்து விட்டேன் கெட்டியாக....
    “கடி”த்துவிட்டேன் கவிதையை
    உயிர் துடிக்கிறது போலும்..
    வலியா?”அறுவையா”?
    என....யாரும் உரைக்கும் முன்
    அடக்கி வாசியென்று என்னை!!

    அன்புத் தோழரே நன்றி

    ReplyDelete
  53. நன்றி கலா, ஜெகன்...
    என்னால் கருத்தை மட்டுமே (அதுவும் பல சமயங்களில் தவறாக...! ப(பி)டிக்க முடிகிறது...கலா அலசி துவைத்து காயப்போடுவதைப் பார்க்கும்போது உவகையாக இருக்கிறது...ஜெகனின் எழுத்துக்களில் ஒரு வசீகரம் இருக்கிறது...

    ReplyDelete
  54. ஒரு மாறுதலான கவிதைதான் இது."ப்ரியம் சுழித்தோடும் வெளியில்".ஆனால் எனக்குப் பிடித்த கவிதையும்கூட.இதே போல பல கவிதைகள் கொஞ்சம் கோபமாக எழுதித்தான் இருக்கிறேன்.என்றாலும் சில சொற்கள் என்னைத் தாண்டியிருக்கிறது.

    நீங்கள் இதுநாள்வரை பார்த்த ஹேமாவைத் தாண்டி ஒரு பக்கம் தெரிவதாய் நீங்கள் உணர்வதாலேயே தப்பாய் அல்லது மற்றவர்களின் என்னைப்பற்றிய நல்லதொரு கண்ணோட்டம் கெட்டுவிடுமோ என்கிற கவலையில்தான் எல்லோரும் என் சார்பிலேயும் என்னைக் கண்டித்துப் கருத்துக்கள் சொல்லியிருக்கிறீர்கள்.உண்மையில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.

    எத்தனை பேர் என்னில் என் எழுத்தில் கவனமும் அக்கறையும் வைக்கிறீர்கள் என்று.நான் தவறிவிடக்கூடாது என்பதில் உங்கள் கவனம் என்னைவிட அதிகமாகவே இருக்க்கிறது.நன்றி அத்தனை உள்ளங்களுக்கும்.

    ஆனாலும் நான் அடிக்கடி இப்படி எழுதப்போவதில்லை.என்றாலும் சில மன அழுத்தங்களை வெளிப்படுத்த வேண்டியே இருக்கிறது.நான் சொன்ன சொற்களில் பெரிதான ஆபாசம்,
    விரசம் இருப்பதாக இல்லையென்றே நம்புகிறேன்.வள்ளுவரின் திருக்குறளில்கூட "காமத்துப் பால்" படிக்கிறோம்தானே.அங்கொன்றும் இங்கொன்றுமான சொற்களை அவர்கூட பயன்படுத்தித்தான் இருக்கிறார்.எனவே பெரிதான தப்பில்லையென்று உணர்கிறேன்.என்றாலும் திருத்திக்கொள்கிறேன்.

    நேசன் அழகாகத் திருத்திய கவிதையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்.செந்தில், அத்திரி,பிரபா போன்றோர் கோபப்பட்டே கண்டித்திருக்கிறார்கள்.
    எல்லோருக்குமே நன்றி நன்றி நன்றி.

    கலாவுக்கும் நன்றி.கவிதை என்பது அவரவர் அபிப்பிராயமாகவே கருத்துக்கள் உள்வாங்கப்படுகிறது.
    கலாவின் கருத்துக்கள் சின்னச் சின்ன கருத்து நழுவலோடு ஒத்துப்
    போவதாகவே இருக்கிறது.
    இக்கவிதையும் அப்படியே.
    நன்றி கலா.

    ஜெகனிடமிருந்தும் தப்புவது எப்படியென்று பயந்தபடியே இருந்தேன்.அவரின் "கொண்டாடலாம்" என்ற ஆதரவு மிகுந்த சந்தோஷம்.

    இதில் பிரசன்னா,இரவீ பெரியபாவம்.புரியவேயில்லையாம்.
    இதுவும் நல்லாவேயிருக்கு.

    ReplyDelete
  55. அருமை ஹேமா. கவிதையையும் கருத்துகளையும் ரசித்தேன் .தாமதத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  56. எனக்கு இதுபோன்ற கவிதைகள் படித்து பழக்கம் இல்லை.. வித்தியாசமாக இருக்கிறது.. உங்கள் கோபத்தின் வெளிப்பாடாகவே இது தெரிகிறது.. நல்ல வெளிப்பாடு..

    தொடர்ந்து அழகான வரிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...

    நன்றி..

    ReplyDelete
  57. இரு மார்பும்
    ஒரு பெண்குறியும்
    நீண்ட///


    உண்மை தான் மேடம் , நியாயமான கோபம் , ஆனா அவர்களும் யாரிடமாவது காதல் வயப்பட்டிருபார்கள்

    ReplyDelete
  58. மேடம் உங்க ப்ளாக் ரொம்ப அழகா இருக்கு , சூபரா டிசைன் பண்ணிருக்கிங்க

    ReplyDelete
  59. //மனிதமுள்ள உண்மையான மனிதனும்கூட//

    நல்ல வரிகள் தோழி..

    ReplyDelete
  60. //நீ...வெளியே
    நான்...உள்ளே
    விளையாட்டல்ல
    இது வாழ்வு !!!//

    அருமையான கவிதை... இறுதிவரிகளின் அழுத்தம் வெகு சிறப்பு...
    உங்கள் வலைப்பூவின் வடிவமைப்பு கலக்கல்... பூரிப்படையச் செய்கிறது...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  61. உங்கள் கோபம் கூட நன்றாக வந்திருக்கிறது...
    இது போன்ற கவிதைகளில் வார்த்தைகளைப் போஸ்ட் மார்டம் பண்ணிப் பார்ப்பதில் விருப்பமில்லாதவன் நான்...தொடரவும்...

    ReplyDelete
  62. இந்த கவிதை நேற்று தில்லி தமிழ்சங்கத்தில் நடந்த கருத்தரங்கத்தின் போது திரு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களால் தமிழ்சங்கத்தின் திரையில் ஒளிர்ந்தது ..

    ஒரு தகவலுக்காக ஹேமா :)

    ReplyDelete
  63. நன்றி அக்கா நீங்கள் தந்த தகவலுக்கு.மிகவும் மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன்.

    http://sirumuyarchi.blogspot.com/2010/12/2010-1.html

    இந்த இடத்தில் காற்றுவெளி இதழுக்கும் நன்றி சொல்லிகொள்கிறேன்.யார் என்று முகம் தெரியாமலே மின்னஞ்சலில் மட்டும் என்னை முல்லை அமுதன் அவர்கள் ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார்.

    உங்கள் பதிவையும் ரசித்தேன் அக்கா.மீண்டும் நன்றி.

    ReplyDelete
  64. ப்ரியம் சுழித்தோடும் வெளியில் தலைப்பே சொல்லிவிட்டது அத்தனையையும் வாழ்த்துக்கள்ங்க ஹேமா! எனக்கு இந்தமாதிரி மொழி ஆளுமை நிறைஞ்சிருக்கிற கவிதையை எல்லாம் பறிச்சு சே படிச்சு புரிஞ்சுக்க தெரியாது வாசித்த அளவில் ஏதோ பெரிய கவிஞரின் கவிதை என்றே தோன்றியது!

    ReplyDelete
  65. நிஜமாகவே இந்த தலைப்பு தனிப்பட்ட முறையில் ரொம்பவே கவர்ந்தது. போட்டியில் பங்கெடுத்த தலைப்பு என்ன சொல்கிறது என்பதை பார்க்க வந்தேன்.

    தைரியமான பெண். மீண்டும் நீரூபணம். இந்த இடத்தில் வேறு எதுவும் எழுத முடியாது அல்லவா?

    ReplyDelete
  66. இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகள்டா ஹேமா! :-)

    ReplyDelete
  67. எல்லா தலைப்புகளும் அடுத்த ஆட்டத்திற்கு வந்து விட்டது ஹேமா.

    ம் ம் நடத்துங்க.

    சேம் சேம் பப்பி சேம்????????

    ReplyDelete
  68. பாரா அண்ணா..ஜோதிஜி நன்றி நன்றி.வாழ்த்துகள் பலிக்கட்டும்.இப்படியான சில ஊக்கங்கள்தான் தொடர்ந்து எழுத வைக்கிறது !

    ReplyDelete
  69. கவிதை நன்றாக இருக்கிறது, தமிழ் மணத்தில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  70. மறுபடியும் படிக்கிறேன்..ரொம்ப நல்ல கவிதைங்க... தமிழ்மணம் மூன்றாம் சுற்றிலும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  71. மிகவும் சந்தோஷமாய் உணர்கின்றேன் பாலாஜி.என் நான்கு பதிவுகள் தேர்வில் இருக்கிறது.
    இதுவரை வந்தமைக்கு என் வீட்டில் ஒரு ஓட்டுப்போடக்கூட யாருமில்லை.என் இணைய உறவுகளுக்கே என் நன்றிகள்.

    உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
    உங்கள் “ராசம்”மனதிலேயே நிற்கிறாள்.

    ReplyDelete