Thursday, June 17, 2010

அளவீடு...

குடிப்பது உடலுக்குக் கேடாம்
விளம்பரம் ஒன்று
அன்றே...
நிறுத்திவிட்டேன்
விளம்பரங்கள் படிப்பதை !

அம்மா...
நான் பெரியவனாயிட்டேன்
பூசிவிட்ட
நகப்பூச்சையும்
உதட்டுப் பூச்சையும்
துடைத்துக்கொண்டே!

விளம்பரம் - எங்கள் புளொக்.

ஹேமா(சுவிஸ்)

66 comments:

  1. அருமையான கவிதை ஹேமா.. எல்லாம் வளர்ச்சிப்படிகள்.. ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  2. படத்துடன் கவிதை சூப்பர் ஹேமா...

    ReplyDelete
  3. முதலாவது நல்லா இருக்கு.

    ரெண்டாவது அழகா இருக்கு.
    :)

    ReplyDelete
  4. கவிதைகள் அருமை

    ReplyDelete
  5. //நிறுத்திவிட்டேன்
    விளம்பரங்கள் படிப்பதை !//

    நானும்தான் ...

    ReplyDelete
  6. குட்டிப்பையன் படம் அழகு.

    ReplyDelete
  7. அழகான குட்டிப்பையன் போட்டோ....

    ReplyDelete
  8. பாலசந்தரின் சிந்துபைரவியில் ஜனகராஜ்க்கு மாதிரி சொல்லலேன்னா எனக்கு தலை வெடிச்சுடும் மாதிரி இருக்குது:)

    படமும்,பாட்டும் சரி.அழகான தலைப்பு ஒட்டவில்லை சொல்லவந்ததுடன்.

    ReplyDelete
  9. கூகிளோட முகத்துக்கு கூகிளுக்கு முகம் போட்டிருக்கிறது யாரு:)

    ReplyDelete
  10. முதல் நலம்

    இரண்டாவது விளங்கயில்லை ...

    ReplyDelete
  11. ஆங்.. ரைடுங்க

    ReplyDelete
  12. ரெண்டு குட்டீஸ்களும் நல்லாருக்கு, குட்டீஸ். :-)

    ReplyDelete
  13. அளவீடு என்ற வார்த்தையை படித்தவுடன் எங்கள் ஊரில் அறவீடு என்று உள்ளே உள்ள அறைகளை சொல்லும் நினைவு வந்தது.

    ReplyDelete
  14. நானும் நிறுத்திட்டேன்,























    விளம்பரம் படிப்பதை

    ReplyDelete
  15. அருமை அருமை அருமை

    ReplyDelete
  16. ம்ம் ரைட்டுங்க :))

    ReplyDelete
  17. விளம்பரங்களே இப்படித்தாங்க..

    ரெண்டாவது நச்...

    ReplyDelete
  18. அந்த குட்டிப் பையன் ஜோர்..
    இரண்டு வரிகளும் நச்!

    ReplyDelete
  19. வித்தியாசமான சிந்தனை. புதிய வடிவத்தில் கவிதையினை உங்கள் தளத்தினூடாக கையாண்டுள்ளீர்கள். தொடருங்கோ. இன்னும் நிறைய முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  20. //விளம்பரம் - எங்கள் புளொக்.//

    கூகிள் ஆண்டவரு என்னைக்கு உங்க பேருக்கு எழுதி கொடுத்தாரு

    ReplyDelete
  21. ///குடிப்பது உடலுக்குக் கேடாம்
    விளம்பரம் ஒன்று
    அன்றே...
    நிறுத்திவிட்டேன்
    விளம்பரங்கள் படிப்பதை !///


    ம்ம்ம் ...பாட்டிலில கூட அந்த செய்தி ரொம்ப சின்னதா இருக்கு அந்த கோவத்துல அந்த விளம்பரத்த நான் மதிக்கிரது இல்ல..!

    ReplyDelete
  22. //
    குடிப்பது உடலுக்குக் கேடாம்
    விளம்பரம் ஒன்று
    அன்றே...
    நிறுத்திவிட்டேன்
    விளம்பரங்கள் படிப்பதை !
    //

    கவிதை எழுதுவது நல்லது என்று
    ஹேமா பாட்டி சொன்னார்கள்
    அன்றே
    நிறுத்திவிட்டேன்
    கவிதை எழுதுவதை

    ReplyDelete
  23. //நான் பெரியவனாயிட்டேன்
    பூசிவிட்ட
    நகப்பூச்சையும்
    உதட்டுப் பூச்சையும்
    துடைத்துக்கொண்டே!//

    எதிர் வீட்டு ஜன்னலில்
    காற்று பட்டு பறக்கும்
    துண்டைப் பார்த்து கொண்டும்?

    ReplyDelete
  24. //எதிர் வீட்டு ஜன்னலில்
    காற்று பட்டு பறக்கும்
    துண்டைப் பார்த்து கொண்டும்? //


    அண்ணே அது துண்டு இல்ல, துப்பட்டா!

    ReplyDelete
  25. கவிதைக்காக படமா ? இல்லை படத்திற்காக கவிதையா? இரண்டும் அழகு

    ReplyDelete
  26. குடிப்பது உடலுக்குக் கேடாம்
    விளம்பரம் ஒன்று
    அன்றே...
    நிறுத்திவிட்டேன்
    விளம்பரங்கள் படிப்பதை !


    கவிதை சிறிது...
    கருத்து பெரிது...

    ReplyDelete
  27. //அண்ணே அது துண்டு இல்ல,
    துப்பட்டா//

    வால் இதிலே ஏதும் உள் குத்து இல்லையே ?

    ReplyDelete
  28. //வால் இதிலே ஏதும் உள் குத்து இல்லையே ? //


    நீங்க கேட்கும் போது தான் எனக்கே சந்தேகம் வருது!

    ReplyDelete
  29. //வால்பையன் said...
    //வால் இதிலே ஏதும் உள் குத்து இல்லையே ? //


    நீங்க கேட்கும் போது தான் எனக்கே
    சந்தேகம் வருது!//

    கொஞ்ச நாளாவே எதைப் படிச்சாலும் உள் குத்து இருக்கிற மாதிரியே இருக்கு !!

    ReplyDelete
  30. //கொஞ்ச நாளாவே எதைப் படிச்சாலும் உள் குத்து இருக்கிற மாதிரியே இருக்கு !! //


    உங்க பதிவுல இருக்குறதை விடவா!?

    ReplyDelete
  31. //உங்க பதிவுல இருக்குறதை விடவா!?//
    மனசிலே எவ்வளவோ இருக்கு, சொல்ல முடியலை..

    ஹேமா கடையிலே இப்படி கும்மி அடிச்சா கோவச்சிக்க மாட்டாங்களா ?

    ReplyDelete
  32. //மனசிலே எவ்வளவோ இருக்கு, சொல்ல முடியலை..//

    நம்ம கடையில தான் தல சொல்ல கூடாது, அப்படி அடுத்த கடையில போட்டு உடைச்சிரலாம்!


    //ஹேமா கடையிலே இப்படி கும்மி அடிச்சா கோவச்சிக்க மாட்டாங்களா ?//


    ஆளில்லாத கடையை பத்திரமா பார்த்துகிட்டோம்னு சந்தோசப்படுவாங்க!

    ReplyDelete
  33. //நம்ம கடையில தான் தல சொல்ல கூடாது, அப்படி அடுத்த கடையில போட்டு உடைச்சிரலாம்!//

    இனிமேல அப்படியே செய்யுறேன்..


    ////ஹேமா கடையிலே இப்படி கும்மி அடிச்சா கோவச்சிக்க மாட்டாங்களா ?//


    ஆளில்லாத கடையை பத்திரமா பார்த்துகிட்டோம்னு சந்தோசப்படுவாங்க!
    //

    பதக்கம் கொடுத்து, பாராட்டு விழா எடுப்பாங்களா?

    ReplyDelete
  34. படமும் / வரிகளும் அழகு. :)

    ReplyDelete
  35. செம நக்கல் ஹேமா.

    ReplyDelete
  36. ஓகே நல்லாயிருக்கு ஹேமா,...

    ReplyDelete
  37. நல்ல கவிதைகள் ஹேமா....

    ReplyDelete
  38. அளவீடு: அளவாக,அழகாக,அமைதியாக
    ஆனால்... பொருள் புதைவு அதிகம்
    இருப்பதாய் உணர்கிறேன் ஹேமா

    ReplyDelete
  39. குட்டியா இருந்தாலும் க்யூட்..:-)))

    ReplyDelete
  40. சித்ரா....முதல் ஓட்டுக்கும் வருகைக்க்கும் நன்றி தோழி.


    ஸ்டார்ஜன்...நன்றி நன்றி
    அன்பின் புரிதலுக்கு.


    இர்ஷாத்....நன்றி நன்றி.


    ஆறுமுகம்...இதற்கு முந்தைய இடுகையின் சலசலப்பை கொஞ்சம் தணிக்கவே.சந்தோஷம்தானே !


    வேலு...நன்றி நண்பரே.


    செந்தில்...விளம்பரங்கள் படிக்கிறதை நிறுத்தியாச்சுன்னா .....அப்போ !


    குணா...உங்கள் வரவுக்கு மிக்க நன்றி.உங்களிடம் தமிழ் படிக்க நிறையவே இருக்கு.


    அம்மிணி...பையன் போட்டோ மட்டுமா நல்லாருக்கு.என்ன சொல்றான் பாத்தீங்களா!


    ஜெயா...சின்னப் பையன்
    எவ்வளவு உஷாராயிட்டான்.
    கவனிக்கேல்லையோ !


    நடா..எப்பவுமே மனசில இருக்கிறதைச் சொல்லாமல் போகாதேங்கோ.எனக்கும் பிடிக்கும் அது.என்னையும் திருத்திக்கொள்ள - புரிந்துகொள்ளவும் உதவும்.

    "அளவீடு" இருவருமே தங்களைத் தாங்களே அளந்து கொள்வதாக நினைத்தே பெயர் வைத்தேன்.

    "எங்கள் புளொக்"என்பது ஸ்ரீராம் அவர்களது பக்கம்.அவரிடமிருந்தே விளம்பரப்படமெடுத்தேன்.


    ஜமால்...இரண்டாவது வரிகளின் விளக்கம்.*அன்றுவரை அம்மா கைக்கு - உதட்டுக்குப் பூசும் நேரமெல்லாம் சரியென்று இருப்பவன் இன்று அழிக்கிறான் என்றால் தான் வளர்ந்துவிட்டதையும் தான் ஒரு ஆண்பிள்ளை என்பதையும் உணர்கிறான்.*அதைத்தான் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.இப்போ படித்துப் பாருங்கள்.


    அஷோக்...நீங்க விளம்பரங்கள் படிக்கிறதில்லன்னு தெரியும்.


    பாரா அண்ணா...உங்களைக் காண்றதே இப்போவெல்லாம் அத்திப்பூப்போல.சுகம்தானே அண்ணா.


    சுபா...நன்றியடா தம்பி.


    பொன்சிவா...
    முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  41. ஜோதிஜி...*அறவீடு* என்றால் முற்றாகப் பறிமுதல் செய்வதாக இல்லையா? நீங்கள் சொல்வது *அறவீடு* அறைவீடு என்கிறதாய் இருக்குமோ !நன்றி கவனிப்புக்கு.


    வாலு....சொல்லவே மாட்டேன் கருத்து.எல்லாரும் சொல்றாங்க உங்களைப் பத்தி !

    அப்பிடியே மனசில இருக்கிறதையெல்லாம் சொல்லணும்ன்னு நீங்களும் நசரும் மெல்லமா கும்மி அடிக்கத் தொடங்கினமாதிரி இருக்கு.தப்பிடிச்சு குழந்தைநிலா.பாவம்.எங்க ரவியும் வந்திடுவாரோன்னு பாத்திட்டு இருந்தேன்.கும்மிக்கு உப்புமடச்சந்தி இருக்கவே இருக்கு.குந்தியிருந்து கதை பேசுங்களேன்.


    கொல்லான்....உங்ககிட்ட
    சந்தேகம் ஒண்ணு.போன பதிவில மலையாளத்தில என்னை
    திட்டிட்டுப் போனீங்களா ?புரியவேயில்லை.
    தமிழ்ல்ல திட்டுங்க இனி.


    T.V.ராதாகிருஷ்ணன் ஐயா
    நிறைவான நன்றி உங்களுக்கு.


    கார்த்திக் (பாவம் கடி கார்த்திக்)
    நன்றி நன்றி.


    நேசமித்ரன்....ஒரு நேசன் கவிதைகளோடயே போராட்டம்.
    நீங்க கவிதை எழுதல
    சந்தோஷம்.சும்மா சும்மா.
    நன்றி அன்புக்கு.


    பாலாஜி...அப்போ இனி எந்த விளம்பரங்களும் படிக்கவேணாமா !

    எங்கே கதிர் ?பயந்திட்டாரா ?


    ரிஷபன்...வாங்க வாங்க.இரண்டாவது புரிகிறமாதிரி சொல்கிறேனா என்பதாய் இருந்தது.புரிந்தமைக்குச் சந்தோஷம்.


    கமல்...சின்னச் சின்ன சிந்தனைகளை வரிகளாக்கலாமோ !நல்லாவேயிருக்கு.


    நசர்....தாத்தா தாத்தா....கூகிளைச் சொல்லல நான்.ஸ்ரீராம் "எங்கள் புளொக்"கைச் சொன்னேன்.

    நேத்து ரொம்ப குஷி போல இருக்கு.எதிர்க்கவிதை,கும்மி எல்லாம் கலகலன்னு இருந்திச்சு.

    //நசர்....ஜன்னலில் காற்று பட்டு பறக்கும் துண்டைப் பார்த்து கொண்டும்?//

    //வாலு...அண்ணே அது துண்டு இல்ல, துப்பட்டா!//

    என்னமா துண்டை இவர்போட வாலு துப்பட்டாவா எடுத்துக் குடுக்கிறார் !அப்பாடி விட்டா ரவியும் வந்திருப்பார்.ஒரு கை பாத்திருப்பீங்க.


    பத்மா....வாங்க தோழி.எங்கே ரொம்பநாள் ஆச்சு பதிவு போட்டு !


    தமிழ்...கவிதைன்னா இப்பிடித்தான் சுருக்கமாச் சொல்லணுமாம்.
    சொல்றாங்க.வரமாட்டேங்குதே !


    ஷங்கர்...எங்க போன கவிதையில காணோம்.எஸ்கேப்பா !


    மது....போன கவிதை எல்லாரையும் கொஞ்சம் என்னவோன்னு ஆக்கிடிச்சு.அதான் கொஞ்சம் கலகலப்பாக்கிட்டேன்.


    ஞானம்....அட அட ஞானம்,எங்க நீங்க ?சுகம்தானே.ஏன் வேலைப் பளுவா ?காணவே கிடைக்குதில்லையே.


    ஸ்ரீராம்....கவிதை *டக்*ன்னு
    புரிஞ்சு போச்சாக்கும்.

    உங்க விளம்பரம் படம் போட்டிருக்கேன்.ஒண்ணும் சொல்லாமப் போனா எப்பிடி !இன்னொரு படமும் வச்சிருக்கேன்.
    அதுக்கும் கவிதை போடணும்.
    மீனாட்சி சொல்லியிருக்காங்க.


    வசந்த்...அமைதியான
    அன்புக்கு மிக்க நன்றி.


    கலா...கவிதைகளே அப்படித்தான்.பொருள் நிறைவாக இருக்கும்.அது அவரவர் கண்கள் கணக்கெடுப்பதைப் பொறுத்தது !


    கார்த்தி...என்பக்கம் எந்தக் காத்து தள்ளிச்சு.சந்தோஷமாயிருக்கு.

    ReplyDelete
  42. //மலையாளத்தில என்னை
    திட்டிட்டுப் போனீங்களா ?புரியவேயில்லை.
    தமிழ்ல்ல திட்டுங்க இனி.//
    നന്നായിട്ടിരുക്ക് - இதுதானே?
    நன்னாயிட்டிருக்கு - இதுதான் அந்த வார்த்த.
    உங்கள போயி நான் ஏன் திட்டப் போறேன்?
    என்னங்க நீங்க?

    ReplyDelete
  43. நன்றி....நன்றி கொல்லான்.
    உங்களைக் கோவிக்கல.
    சும்மாதான்.என்னன்னு
    தெரிஞ்சக்கணும்ன்னு
    ஒரு ஆர்வம்.அதான்.

    என்னை ஒரு நண்பர் கேலி பண்ணினார்."அண்ணைக்கு ஒரு பதிவில் ஹிந்தியில ,இண்ணைக்கு மலையாளத்தில என பதிவைத் திட்டிட்டுப் போறாங்களாம்."ன்னு !

    ReplyDelete
  44. என்னமோ சொல்றீங்க.. hmm

    ReplyDelete
  45. ரெண்டுமே நல்ல கவிதைங்க!

    ReplyDelete
  46. நல்லா இருக்கு ஹேமா

    விஜய்

    ReplyDelete
  47. LK கார்த்திக்
    "என் கொ.ப. செ நீங்கதான்"
    ன்னா என்ன?

    ReplyDelete
  48. சின்ன சின்னதா இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  49. //"என் கொ.ப. செ நீங்கதான்"
    ன்னா என்ன?//

    கொள்கை பரப்பு செயலாளர்.

    ReplyDelete
  50. "உப்புமடச் சந்தியில்...."அப்பா அடிப்பார்."

    விளம்பரம் - எங்கள் புளொக்."


    விளம்பர துறையில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஹேமா

    romba busy ah irukkeenga pola ???

    ReplyDelete
  51. ரொம்ப நல்லாவே இருக்கு ஹேமா

    ReplyDelete
  52. //புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.//

    இந்த அறிமுகமே உங்கள் பதிவுகளை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது எல்லாமே அற்புதம்..

    ReplyDelete
  53. குடிப்பது உடலுக்குக் கேடாம்
    விளம்பரம் ஒன்று
    அன்றே...
    நிறுத்திவிட்டேன்
    விளம்பரங்கள் படிப்பதை !//

    இது தான் நேர்மைங்கிறது....
    ஆமா நீங்க குடிப்பிங்களா?

    ReplyDelete
  54. கமெண்ட்டில் இருந்த குறும்பு நிழற்படத்துடன் நன்றாக இணைந்திருந்தது.அருமை ஹேமா.அந்த போர்ன்விடா விளம்பரம் இலங்கை வானொலியின் பிரபல விளம்பரநாட்களை மலர்த்தியது.

    ReplyDelete
  55. கார்த்திக்...என்ன என்னமோ சொல்லிட்டேன்.யாரும் சொல்லாததையா சொன்னேன் !


    நன்றி நன்றி அண்ணாமலை.


    விஜய்...ரொம்ப லேட்.


    நன்றி கமலேஸ்.உங்க அளவுக்கு இல்ல.முயற்சி செய்றேன்.
    அவ்ளோதான்.



    கொல்லான் ...
    //"என் கொ.ப. செ நீங்கதான்"
    ன்னா என்ன?//

    கொள்கை பரப்பு செயலாளர்.

    கடவுளே..கார்த்திக் கடைசில கவுத்திட்டீங்களே.இனி ஒண்ணுமே சொல்லல நான் !

    நன்றி கொல்லான் சார்.



    மேவீ...ஹேமா ரொம்ப பிஸி.ராக்கோழிதான் தூங்கிடிச்சு !


    வேல்கண்ணன்...ரொம்ப நாளுக்குப் பிறகு வாறீங்க.வந்து சொல்லுங்க அபிப்பிராயம்.அப்பத்தானே எழுதுற ஆர்வம் வரும்.


    ரியாஸ்...நன்றி முதல் வருகைக்கு.அடிக்கடி
    சந்திக்கலாம் இனி.


    அரசு....உங்க நேர்மையும் பிடிச்சிருக்கு.நேரவே கேட்டிட்டீங்க.
    சந்தோஷம்.நிறுத்தியிருக்கேன் !


    சுந்தர்ஜி...ஓ..இந்த விளம்பரம் இலங்கை வானொலியிலும் பிரபலமா !சந்தோஷமாயிருக்கு.
    "எங்கள் புளொக்"
    ஸ்ரீராம் க்குத்தான் மீண்டும் நன்றி.

    முதல் கவிதையை மறைக்க இப்படி ஒரு கவிதை.இப்போ சரியாப்போச்சு !

    ReplyDelete
  56. Nalla varigal & nalla padangal Hema.

    ReplyDelete
  57. படமும் கவிதைகளும் அருமை ஹேமா..

    ReplyDelete
  58. குடிப்பது உடலுக்குக் கேடாம்
    விளம்பரம் ஒன்று
    அன்றே...
    நிறுத்திவிட்டேன்
    விளம்பரங்கள் படிப்பதை !// அதான.. நம்பளால இருக்க முடியுமா!

    ReplyDelete