தாத்தாவின் ஜாகை.
றங்குப்பெட்டியில்
அடிபட்டது பந்து.
வலித்தது தாத்தாவுக்கு.
யாருடா அங்க.
இங்கிட்டு வா...இங்கிட்டு வா.
அங்கயெல்லாம் விளையாடறதில்ல !
அம்மம்மா எதையோ
அரக்கப் பரக்கத் தேடுறா.
அறுபது வருடத் தாம்பத்ய உறவாய்
ஆதிகாலத்து அதே றங்குப்பெட்டி
கறளும் பிடிச்சிருக்கு.
ஏய் இந்தா இங்கிட்டு வா.
நீ தேடுறது ஒண்ணும்
அங்கயிருக்காது !
தாத்தா இறந்து முப்பதாம் நாள்.
துடக்குக் கழிக்க
சாமான் சட்டெல்லாம் ஒதுக்கி
வீடு கழுவுகையில்
அதே றங்குப்பெட்டி
விளக்குமாறு தட்ட
ஐயோ....
தாத்தாவின் குரல் !
தைரியம்தான்
தாத்தாதான் இல்லையே
திறந்து பார்த்தேன் !
பெருவிரல்
நடுவிரல் மோதிரவிரல் என
தனித் தனியாய் தவில் கூடுகள்
ஐந்து ஆறு சுருக்குப்பைகளில் !
அழகான ஜரிகைப் பையில்
ஒரு சோடி
சிவப்புக் கண்ணாடி வளையள்களோடு
ஒரு ஜரிகை ரிபனும் !!!
ஹேமா(சுவிஸ்)
ஹேமா ஆகச்சிறந்த கவிதை உங்களிடமிருந்து....
ReplyDelete//தாத்தா இறந்து முப்பதாம் நாள்.
ReplyDeleteதுடக்குக் கழிக்க
சாமான் சட்டெல்லாம் ஒதுக்கி
வீடு கழுவுகையில்
அதே றங்குப்பெட்டி
விளக்குமாறு தட்ட
ஐயோ....
தாத்தாவின் குரல் !//
நிஜமாவே கேட்டுச்சா ஹேமா!
தாத்தாவுக்கு வலிச்சிருக்கும்.
நினைவுப்புதையல்..!
இது உங்க அம்மம்மாக்கு தெரியுமா?
ReplyDeleteஅவருக்கும் காதல் இருந்திருக்கும்ல.... இலகுவாய் எடுத்தியம்பியது இனிமை....
ReplyDeleteகவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteகனகாலம் கழித்து இங்கே இப்படி ஒரு க(வி)தை
ReplyDeleteஅழகு ஹேமா!
அருமை :)
ReplyDeleteமறைத்து வைத்த காதலைப் பேசும் மென்மையான கவிதை தோழி..:-)))
ReplyDeleteமற்றபடி..
நல்லா இருக்கீங்களா ஹேமா...? குட்டி நிலா நலமா? நிஜமாவே உங்க தளத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சு இல்ல? எப்பவாவது எழுதறோதட சரி.. அதிகமா பின்னூட்டுவது இல்லைங்கிறதுதான் பிரச்சினை.. அத்தோடு மேல் படிப்புக்கு விண்ணப்பிச்சு இருக்கேன்.. ஓடிக்கிட்டே இருக்கேன்.. அதனாலத்தான்.. தப்பா எடுக்காதீங்க சகோதரி.. முடிந்தால் மேவிகிட்ட சொல்லி உங்க மின்னஞ்சல் முகவரி தர சொல்லுங்க.. தனி மடல் அனுப்புறேன்..:-))))
காதல் எவ்வயதானாலும்
ReplyDeleteஇளமையே!
நல்லாயிருக்குங்க
ReplyDeleteஹேமா !!!
ReplyDeleteரொம்ப நல்லா வந்திருக்கு
வாழ்த்துகள்
//ப்ரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteஹேமா ஆகச்சிறந்த கவிதை உங்களிடமிருந்து....//
மாப்ள சொன்னதை ஆமோதிக்கிறேன் ...
பாராட்டுக்கள் ஹேமா..
நல்லாயிருக்குங்க ஹேமா :)
ReplyDeleteஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்
ReplyDeleteம்ம் நல்லா வந்துருக்கு ஹேமா
ReplyDeleteசொல்லாமல் சொல்லிய விதத்தில் மனசுக்குள் அப்படியே குடியேறிப் போனது..
ReplyDeleteஉணர்வு கலந்த கவிதை..
ReplyDeleteடச்சிங் , ........................... நன்றி
ReplyDeleteமென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு, அழகான கவிதையாய் வெளிப்பட்டிருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஹேமா.
மென்மையாய் சொல்லி உள்ளம் தொட்ட கவிதை..........
ReplyDeleteபாராட்டுக்கள்... ஹேமா
ReplyDeleteஇப்படி எனக்கும் புயியும்படி எழுதுங்க.
அழகான ஜரிகைப் பையில்
ReplyDeleteஒரு சோடி சிவப்பு
கண்ணாடி வளையல்களோடு
ஒரு ஜரிகை ரிபனும்!!!
மரணத்தை தாண்டியும் வாழும் தாத்தாவின் காதல் சின்னங்கள்.....
எல்லோருக்கும் இருக்கும் காதல், தாத்தாவுக்கும் இருந்ததில் ஆச்சர்யமென்ன.
ReplyDeleteம்ம்ம்....அருமை
ReplyDeleteமிக அழகான கவிதை..
ReplyDeleteOne of your best :)
ReplyDeleteஇனிமேல இப்படித்தான் எழுதணும் சரியா ?
ReplyDelete//பெருவிரல்
ReplyDeleteநடுவிரல் மோதிரவிரல் என
தனித் தனியாய் தவில் கூடுகள்
ஐந்து ஆறு சுருக்குப்பைகளில் !//
அடகு வைக்க இடம் இல்லைனா என்கிட்டே சொல்லுங்க
//பெருவிரல்
ReplyDeleteநடுவிரல் மோதிரவிரல் என
தனித் தனியாய் தவில் கூடுகள்
ஐந்து ஆறு சுருக்குப்பைகளில் !//
ஹேமா அதை பார்த்த பிறகு உங்க மனசுல தாத்தா மீது இருந்த மதிப்பு/பிம்பதுல எதாச்சு மாற்றம் வந்துச்சா ?????
அழகாய் சொல்லிருக்கீங்க ......
(கோச்சிகாதிங்க...வேலை ரொம்ப ஜாஸ்தி ஆகிருச்சு ...அதான் பின்னோட்டம் போட முடியல..... வேண்டுமானால் தேர்தல் ல நில்லுங்க நான் vote போடுகிறேன் ... ஆனா இந்திய தேர்தல் ல நிக்கணும்.... பிறகு சுவிஸ் எப்புடி இருக்கு பிரதமரை கேட்டதாக சொல்லவும் )
நினைவுகள்...அவரவருடைய நினைவுகள் அவரவர்க்குப் பொக்கிஷங்கள்...
ReplyDeleteதாத்தாவின் ஜாகை.
ReplyDeleteறங்குப்பெட்டியில்
அடிபட்டது பந்து.
வலித்தது தாத்தாவுக்கு\\\\\\\\
பெருவிரல்
நடுவிரல் மோதிரவிரல் என
தனித் தனியாய் தவில் கூடுகள்
ஐந்து ஆறு சுருக்குப்பைகளில் !
அழகான ஜரிகைப் பையில்
ஒரு சோடி சிவப்பு
கண்ணாடி வளையள்களோடு
ஒரு ஜரிகை ரிபனும் !!!\\\\\
ஒருவருடன் நிமிடத்துக்கு,மணித்தியாலத்துக்கு,வாரத்துக்கு,
மாதத்துக்கு,வருடத்துக்கு மாறி விளையாடும் இக் காலக்
காதல்
மத்தியில்
காதலியாய்,மனைவியாய் இருந்தவரின் நினைவுச்
சின்னத்துடன்..அவரையும் அவரின் காதலையும்
காவலாய் காத்திருந்தார் அல்லவா!?
அங்குதான் உண்மையான “காதல்” வாழ்ந்கொண்டிருக்கின்றது.
இப்போதையக் காதல் .....
ஆண்: கண்களே கண்களே காதல் செய்வதை
விட்டு விடுங்கள்
பெண்களே குலப் பெண்களே வாலிபரைக் கொஞ்சம்
வாழவிடுங்கள்
பெண்: சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் ஆணிணமே
ஜீவனுள்ள பெண்ணிணத்தை வாழவிடமாட்டாயா?
இப்படிப் போகின்றது காதல்ஹேமா!
ஹேமா,
ReplyDeleteஇக் கவிதை மேலோட்டமாய்ப்
பார்க்கும் போது...
மிக மிக எளிமை
ஆனால்.....
அழகின் ஆழத்தைப் பார்த்தால்...
தாக்கத்தின் வெளிப்பாடதான் “இது”
{ஹேமா உன் கதாநாயகி.}
“யாரோ ஒருவரின் ஏமாற்றத்தால்”
விளைந்த கவி இது
அவரிடம்,...
இப்படியும் அன்புக்கு இலக்கணமாய்க்
காதல் இருக்கின்றது “பார்”
என்று நீ{அடித்த} வடித்த கவிதான்
மனசோடு கா{வ}தல் அருமை
நன்றி
அது சரி.......
மாறியது நெஞ்சம்
மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம்
காணவருவாயோ...
என்கிறது உன் கவிதை
ஹேமா...
ReplyDeleteஅருமையான கவிதை
:)
SUPERB........................mmmmmmmmm
ReplyDeleteபா.ரா தளத்திற்கு மாறி வந்துட்டேனா ?
ReplyDeleteநல்லாருக்கு ஹேமா
விஜய்
றங்குபெட்டியில் (மெல்ல திறந்தது) ஒரு காதல்.
ReplyDelete>றங்குப்பெட்டியில்
ReplyDeleteஅடிபட்டது பந்து.
தொடக்கத்திலிருந்து விறுவிறுப்பு. beautiful!
நீங்காத நினைவுகள்
ReplyDeleteநீக்கமற நிறைந்தவைகள்!
மொழி எளிமையாய் நெஞ்சைத் தொட்டுச் செல்கிறது.நல்ல கவிதையின் அடையாளம் இதுதான் ஹேமா. சபாஷ்.
ReplyDeleteஹேமா மிக அழகு மிக சிறந்த முறையில் எழுதுறீங்க வாழ்த்துகள் தோழி..
ReplyDeleteநல்லா இருக்குது.... அழகான வெளிப்பாடு, வாழ்த்துகள் !
ReplyDeleteஎங்கள் ஊர் மொழி நடையுடன் கலந்த கவிதை. அருமை.. அதே தாத்தாவின் தவில் வித்தகத் தன்மையினை இப்போது வார்த்தைகளீனூடாக வானம் வெளித்தபின்னும் பதிவின் ஒவ்வோர் கவிதைகளிலும் காண்கிறோம்.
ReplyDeleteபால்யத்தின் படச்சுருள் போல இருக்கிறது கவிதை.
ReplyDeleteதாத்தா நினைவுகளை அருமையாக படம்பிடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!!
பழம் பெட்டிக்குள்
ReplyDeleteபுத்தம் புதுசாய் ஒரு காதல்.
மிக நன்று.
சூப்பர் :-)
ReplyDeleteபாராட்டுக்கள் ஹேமா.கவிதை மிகவும் அருமை
ReplyDeleteரொம்ப நல்லாருக்குடா ஹேமா!!!
ReplyDelete// விஜய் said...
பா.ரா தளத்திற்கு மாறி வந்துட்டேனா ?//
பங்கு,
இந்த கவிதை எழுதிய விரல் மாதிரி பிறக்க ஆசை,இந்த தருணத்தில்.
என்றாலும், அண்ணன்-தங்கைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாய் இதை எடுக்கிறேன். நன்றி விஜய்!
வசந்து...நிறைய நாட்களுக்குப் பிறகு உங்கள் முதல் வருகை.சந்தோஷம்.
ReplyDeleteசத்ரியா...உண்மையாவே பயந்திட்டேன்.அவர் குரல் கேட்டிச்சு.
அவர்"ஆச்சி"ன்னுதான் கூப்பிடுவார்.
ரவி...அம்மம்மாவுக்கு அந்த அண்ணைக்குத்தான் தெரியும்.என்ன சொல்லியிருப்பான்னு நினைக்கிறீங்க."பாரேன் இந்த மனுஷனை.இப்பிடி ஒரு காதலை மனசில வச்சுக்கொண்டுதான் என்னை இவ்ளோ நாளும் ஆச்சி,அம்மா எண்டெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவரோ" !ஆனாலும் கோவிக்கேல்ல.ஏனெண்டா அவவிலயும் நல்ல அன்பாத்தானே இருந்தவர்.
பாலாஜி....இளமைக் காதலும் அதன் உண்மை அன்பும் சில சமயங்களில் தொக்கி நிற்கிறது.எங்களுக்குள்ளும் இப்பிடி ஒவ்வொரு அனுபவங்கள் இருக்கும்தானே !
பனித்துளி...நன்றி அன்பாய்த் தூவியமைக்கு !
ஜமால்...மெல்ல மெல்ல எங்கட தமிழ் கதைக்கத் தொடங்கிட்டியள்.
நல்லாத்தானிருக்கு !
சுபாங்கன்...சின்னப்பெடியா இப்பிடி ஏதாச்சும் இருக்கோ !
கார்த்தி...வந்ததே சந்தோஷம்.
மேவியிடம் கொடுக்கிறேன்.நிறையப் படிக்கணும்ன்னு வாழ்த்திக்கிறேன்.
ராஜவம்சம்....முதல் காதல் அதுவும் உண்மையாய் இருந்தால் அது சாகும்வரை நிலைத்திருக்கும்.
நண்டு சார்....நன்றி நன்றி.
நேசன்...அன்புக்கு என்றும் என் நன்றி.
செந்தில்....வசந்தின் கருத்தை மீண்டும் புதுப்பித்தமைக்கு
நன்றி தோழரே.
அஷோக்...என்ன ஒண்ணும்
சொல்ல வரலையோ !
வேலு...எங்க தாத்தா அடைச்சுத்தானே வச்சிருந்திருக்கார்.
நீங்க சொல்றீங்க அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்ன்னு !
பாலா...ரொம்ப நாளைக்கப்புறம்.
சுகம்தானே !
ரிஷபன்...கருத்துச் சொன்ன விதத்தில் எனக்கொரு நிறைவு.நன்றி.
முனைவர்.இரா.குணசீலன்...
நன்றி நன்றி.
மங்குனி அமைச்சர்...உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.உங்கள் பதிவுகளோடு தொடர்கிறேன் இப்பல்லாம்.
அம்பிகா...நன்றி தோழி.இதில ஒரு சந்தேகம்.ஆண்கள் ஒளிச்சு வச்சிருந்தாங்க பரவால்லன்னு கவிதையும் போடுறோம்.இதையே நாங்க பண்ணினா என்ன சொல்லுவாங்க இந்த ஆம்பிளைங்க !அதே உணர்வுதானே எங்க மனசிலயும் !
ReplyDeleteநிலா...தாத்தா ஒளிச்சு வச்ச கவிதை இது.இப்போ அம்பலமாயிடிச்சு !
அரசு...சொல்றதைப் பார்த்தா நான் இவ்ளோ நாளும் எழுதினது ஒண்ணுமே புரியல மாதிரி இருக்கு !
ஜெயா...காதலும் அதன் நினைவுகளும் அழிவில்லாதது சாகும்வரை.
தமிழ்...தாத்தாவுக்கு காதல் இருந்தது தப்புமில்ல.ஆச்சர்யமுமில்ல.அதை இவ்ளோ காலமும் 12 பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் வரை பாதுகாத்ததுதான் ஆச்யர்யம் !
யாதவன்...நன்றி அன்பு வருகைக்கு.
ஆறுமுகம் முருகேசன்...முதல் வருகைக்கு மிக்க நன்றி.
பிரசன்னா...கவிதை விளங்கிச்சுப்போல !
நசர்...சரி சரி இனி சொன்ன பேச்சுக் கேப்பேன்.இப்பிடியே எழுதிக்கிறேன்.
எல்லாரும் பாரா தங்கச்சின்னு சொல்லுவாங்க.ஐயோ...தவில் கூட்டையும் அடகு வைக்கலாமா?யாராச்சும் காசு தராங்களா அமெரிக்காவில.அப்பிடீனா நான் ஊர்ல சொல்லி நிறைய வாங்கித் தரேன் !
மேவி...அப்பிடி ஒண்ணும் தாத்தா மேல இருந்த அன்பும் அபிப்பிராயமும் அப்படியேதான்.ஏன்னா 62 வருட வாழ்க்கையின் அத்தனை ஆச்சர்யம் அவர்.என்றாலும் ஆழமான காதல் போல.சந்தர்ப்பம் ஏனோ சறுக்கியிருக்கலாம்.
ஸ்ரீராம்...பொக்கிஷங்களைப் பாதுகாப்பதுதான் கெட்டித்தனம்.
நீங்களும் ஏதாச்சும் வச்சிருக்கிங்களா !
கலா...உங்கள் பொழிப்புரைக்கு நான் ஒன்றுமே சொல்ல மாட்டேன்.
ReplyDeleteஅவ்வளவும் உங்கள் எண்ணம்.என் எண்ணங்களும் கலந்திருப்பதாய் எனக்கும் தோன்றும்.அழகான பழைய பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருகிறீர்கள்.காதலும் அதன் நினைவுகளும் அடிமனதில் ஒளித்தபடிதான்.உருவங்களை மட்டுமே ஒளிக்கமுடிகிறது.மனங்கள் றங்குப் பெட்டிக்குள்தான் !
சிவாஜி...நன்றி கவிதை உங்கள் பார்வையில் பிடித்தமைக்கு.
அத்திரி...இப்போவெல்லாம் அடிக்கடி காண்கிறேன் உங்களை.சந்தோஷம்.
விஜய்...பாரா அண்ணாவிடமே சொல்லியிருந்தேன் உங்கள் பாணியில் கவிதை நானும் எழுதுகிறேன் என்று.உங்கள் பார்வை சரியாகவே இருக்கிறது.நன்றி.
குடந்தை அன்புமணி...நிறைய நாளுக்குப் பிறகு உங்கள் வருகை சந்தோஷம்.
அப்பாத்துரை...அப்பா..ஏதாச்சும் ஒளிச்சு வச்சிருந்தா மெல்லமா ஸ்ரீராம் கிட்டயாச்சும் சொல்லி வையுங்க !
அண்ணாமலை...நன்றி உங்கள் அன்பிற்கு.
சுந்தர்ஜி...நன்றி பாராட்டுக்கு.ஆனால் என் சாயல் மாறிக்கிடக்கு.
மல்லிக்கா...நன்றி நன்றி தோழி.
துரோகி....ஐயோ...பயமாயிருக்கு உங்க பெயர் சொல்லவே.ஏங்க இப்பிடி ஒரு வெறி !
க
மல்...நன்றி நன்றி.சிலசமயம் உங்கள் தாத்தா என் தாத்தாவை அறிந்திருக்கக் கூடும் !
ஜே...பால்ய நினைவானாலும் ஆழமாய்ப் பதியும் நினைவுகள்
சில மட்டுமே !
மது...பழைய றங்குப் பெட்டியில் இப்படி ஒரு புதையல் இருக்குமென்று யார் நினைத்திருந்தோம் !
உழவன்...எங்கே உங்கள் கவிதைகள் !
ஜெஸி...உங்கள் அன்புக்கும்
நன்றி தோழி.
பாரா...அண்ணா ரொம்பக் கோவமா இருக்கேன்.உங்களுக்கு முதலே சொல்லியிருந்தேன்.உங்களைப்போல கவிதை பதிவு பண்றேன்னு.கடைசியா வந்து பாத்திருக்கீங்க.உங்க தங்கச்சி சரியா உங்ககிட்ட படிச்சிருகேனா ?(கோவம் போயிடிச்சு)
ஹேமா இப்படியான ட்ரங்கு பெட்டிகள் நிஜத்திலோ அல்லது நினைவிலோ அனைவருக்கும் இருக்கும் ..அதை அனைவரும் கொஞ்சம் திறந்து பார்க்க ஏதுவாய் அழகிய கவிதை ஆக்கி விட்டீர்கள் .மிகவும் தாமதாமாக வந்து படிக்கிறேன்.நல்ல வேலை miss பண்ண வில்லை என்ற மகிழ்ச்சிப் பெருமூச்சுடன் .
ReplyDeleteகவிதை செம அழகு ஹேமா
நினைவுக்களஞ்சியம் ஹேமா..அருமைங்க...
ReplyDeleteஆழ்மனகிடங்கில் புதைந்திருக்கும் நினைவுகள் நம்மோடு உறவாடுவதை சில சமயம் நாம் உணரும்போது ஆச்சரியம் நமக்கே!
ReplyDeleteகவிதை மிக நேர்த்தி..
றங்கு பெட்டி என்ற வார்த்தை இலங்கைத் தமிழர் பேசும் வழக்கத்திலும் உண்டா?
ReplyDelete//கண்ணாடி வளையள்களோடு
ReplyDeleteஒரு ஜரிகை ரிபனும் !!!//
வாழ்க்கையின் ''வாழ்தல்'' இது தான்.
பத்மா...பிந்தி வந்தாலும் உங்கள் அன்பும் கவிதைக்குண்டான கருத்தும் கிடைத்தே.நன்றி தோழி.
ReplyDeleteஇர்ஷாத்....உங்க வீட்லயும் தேடிப்பாருங்க.கண்டிப்பா ஏதாச்சும் நினைவுக் களஞ்சியம் கிடைக்கும்.
மல்லிக்கா...அன்புப்
பாராட்டுக்கு நன்றி தோழி.
ஜோதிஜி...இப்போ புழக்கத்தில் இல்லை றங்குப்பெட்டி.எங்கள் வீட்டில் தாத்தாவினது ஒன்று இருந்தது.இப்போ எங்கேயும் இருப்பதாய் இல்லை.இருந்த காலத்தில் (ர)-(றெ)-(ற)ங்குப்பெட்டி என்கிற சொல் பாவனையில் ஈழத்தில் இருந்தது.
¨
கொல்லான்...உங்கள் வருகை மிகுந்த சந்தோஷம்.உங்கள் பதிவுகள் பார்த்தேன்.அதிரடிப் பக்கங்கள்.
கவிதை மிகவும் அருமை....
ReplyDeleteதாத்தாவின் மனதிற்குள் (பூட்டிய)காதல் அருமை.
ReplyDelete:-)
ReplyDeleteரசித்தேன் ஹேமா...பிடித்த்ருக்கிறது.
ReplyDeleteதேவையற்ற வார்த்தைகள் இன்றி கச்சிதமாகவே இருக்கிறது.
ரொம்ப நெகிழ்வா இருக்குங்க...
ReplyDelete