Tuesday, April 20, 2010

மகனே வந்துவிடு...

தாயே...
சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
மாளிகையில் கொலுவிருப்பாய்
மகனும்
துணையாய் அணைத்திருப்பான்
உலகில்
வஞ்சனையில்லா வரவேற்பும்
வாழ்வும் இனித்திருக்கும்.

வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்
மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே
தங்கத்தை நீ !!!

ஹேமா(சுவிஸ்)

37 comments:

  1. மூளையில் இலவசத்தை
    வைத்துகொண்டு

    இதயத்தில் ஈரத்தை
    காயவிட்டவர்கள்

    இதைவிட தமிழனுக்கு வேறு அவமானம் தேவையில்லை

    விஜய்

    ReplyDelete
  2. //வீரனைப் பெற்றதாலோ
    விழுதாய் தள்ளாட்டம்//

    ம்ம்ம்... என்ன சொல்ல

    ReplyDelete
  3. கண்ணீர்தாங்க வருது....

    ReplyDelete
  4. :(

    சரித்திரம் திரும்பும்

    ReplyDelete
  5. புதுமையான சிந்தனை .
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .


    .

    ReplyDelete
  6. :நெஞ்சு ஆறவே இல்லை ....

    ReplyDelete
  7. சரித்திரத்தலைவனின் தாயே உன்னை தமிழினமே தலை வணங்குகிறது .....!!!

    சில சுயநல அரசியல்வாதிகள் இருக்கும் வரை இன்னும் என்னென்ன அவமானமெல்லாம் எதிர்கொள்ளப்போகிறோமோ.....

    ReplyDelete
  8. என்ன செய்வது....

    நம்மால் கவிதையும் பின்னூட்டம் மட்டுமே போட முடிகிறது....

    ReplyDelete
  9. என்னை கொஞ்ச நேரம் அழ விடுங்கள்.

    ReplyDelete
  10. வீரனைப் பெற்றதாலோ
    விழுதாய் தள்ளாட்டம்
    மீண்டும்...
    பெற்றெடு தாயே
    தயங்காதே
    தங்கத்தை நீ!!!

    என்ன எழுதுவது என்றே தெரியவில்லை ஹேமா.....

    ReplyDelete
  11. \\மீண்டும்...
    பெற்றெடு தாயே
    தயங்காதே
    தங்கத்தை \\
    சிலிர்க்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  12. சென்னையில் அன்னைக்கு நடந்த செய்தியை கேள்விப்பட்டேன். மனம் வருந்தினேன்.

    ReplyDelete
  13. மனமிருப்போர்க்கு மார்கமில்லை
    மார்கமிருப்போர்க்கு?

    ReplyDelete
  14. //தாயே...
    சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
    மாளிகையில் கொலுவிருப்பாய்
    மகனும்
    துணையாய் அணைத்திருப்பான் //


    ம்...

    ReplyDelete
  15. என்ன சொல்ல, ஒரு பெண்ணை, அதிலும் வயதான தாயைத் திருப்பி அனுப்பிய கொடுமையை, சை கேவலாமாக இருக்கின்றது தமிழன் என்றும் இந்தியன் என்றும் சொல்ல.

    ReplyDelete
  16. ஒரு வார்த்தை என்றாலும் திருவார்த்தை

    மீண்டும் பெற்றெடுக்கட்டும்,


    அருமையான கவிதை

    ReplyDelete
  17. இது வருந்ததக்க விஷயம்; என்ன செய்ய?..

    ReplyDelete
  18. தமிழக அரசின் இந்தசெயல் வருந்ததக்கது; என்ன சொல்ல.. :((

    ReplyDelete
  19. மீண்டும்...
    பெற்றெடு தாயே
    தயங்காதே
    தங்கத்தை நீ !!!



    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  20. வெட்க படுகிறேன் தமிழன் என்று சொல்ல ..

    ReplyDelete
  21. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் கலங்காதே... ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...

    ReplyDelete
  22. ஹேமா,

    உன் இயலாமை இங்கே கவிதையாய்.
    என் இயலாமை உள்ளுக்குள் அழுகையாய்.

    ReplyDelete
  23. ஹேமாம்மா மன்னிக்கனும்
    பின்னோடம் என்று தொடங்க.....
    வெள்ளம் அணை உடைத்தால்.....

    அடங்கியே போகிறேன்.

    ReplyDelete
  24. மனதைத் தொட்டது..

    ReplyDelete
  25. தமிழின் உணர்வால்தான் இணையத்திலும் இணைந்திருக்கிறோம்.அதே தமிழின் உணர்வோடு கை கோர்த்துக்கொண்ட அத்தனை என் சகோதர சகோதரிகளுக்கு என் அன்பும் நன்றியும்.அரசியலை ஒரு பக்கம் வைப்போம்.அரசியலற்ற எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உணர்வோடு என்றும் கை கோர்த்திருப்போம்.
    என்றும் அன்புக்கு நன்றி.

    அன்போடு ஹேமா.

    ReplyDelete
  26. kaalam oru naal maarum nam kavalaikal yaavum theerum.

    ReplyDelete
  27. kaalam oru naal maarum nam kavalaikal yaavum theerum.

    ReplyDelete
  28. மன்னியுங்கள் அம்மா. :-(

    ReplyDelete
  29. http://nizamroja01.blogspot.com/2010/04/blog-post.html

    ReplyDelete
  30. :( நிச்சயம் ஒருநாள் வரலாறு திரும்பும்! கலங்காதிருப்போம்.

    ReplyDelete
  31. ஆற்ற முடியாத வேதனை. ஆயினும் இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
  32. உணர்ச்சிகள் மேலிட ஊறிய கவிதை வார்த்தைகளில் வார்த்தெடுத்து வாரித்தெறித்திருக்கிறது,. அருமை தோழி..

    ReplyDelete