பனி தேசமும்
என் தனிமையும்
என்னை தன்னிச்சையாய்
இயங்க விடுவதாயில்லை.
காலநிலை கனிய
சூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது.
நாளொன்று விடிய
காளான் குடையோடு
கண் வெளிக்கும்
அந்த மண்ணுக்குள்.
முளை வெடிக்கும்
வளரும்
பிரம்புப் பந்தலில்
கொடி படரும்
மேக நிறத்தில்
பூக்களும் குலுங்கும்
காத்திருப்பில்
கண்கள்தான்
கண்டல் கண்டு
நீலமாய் மாறியபடி.
முளைத்தலும்
படர்தலும்
வளைதலும்...வளைத்தலும்
மொட்டும் பூவும்
என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!
ஹேமா(சுவிஸ்)
என் தனிமையும்
என்னை தன்னிச்சையாய்
இயங்க விடுவதாயில்லை.
காலநிலை கனிய
சூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது.
நாளொன்று விடிய
காளான் குடையோடு
கண் வெளிக்கும்
அந்த மண்ணுக்குள்.
முளை வெடிக்கும்
வளரும்
பிரம்புப் பந்தலில்
கொடி படரும்
மேக நிறத்தில்
பூக்களும் குலுங்கும்
காத்திருப்பில்
கண்கள்தான்
கண்டல் கண்டு
நீலமாய் மாறியபடி.
முளைத்தலும்
படர்தலும்
வளைதலும்...வளைத்தலும்
மொட்டும் பூவும்
என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!
ஹேமா(சுவிஸ்)
வளைதலும்...வளைய வளைத்தலும் நல்லாருக்கு ஹேமா.. ;)
ReplyDeleteவித்யாசமா இருக்கு ஹேமா உங்களிடத்தில்
ReplyDelete(காலநிலை)
வாழ்த்துக்கள்
விஜய்
அதிகமா பனி கொட்டுதோ??
ReplyDeleteசூரியனுக்காக ரொம்ப ஏங்குது கவிதை.
விதைப்பதோடு முடிந்தது வேலை.!!
:))
நல்லா இருக்குங்க.
என்னால்...என்னால்
ReplyDeleteஎன்ன இருக்கிறது என் கையில் !]]
தெளிவு
//காலநில கனிய
ReplyDeleteசூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது//
எங்கயோ... போய்ட்டீங்க ..
நல்லாயிருக்கு ஹேமா :)
"எல்லாம்
ReplyDeleteவெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!"
கால நிலை ...வெப்பம் ஒருபுறம்.. மின்வெட்டு.. வெடிக்குது எரிமலை.
//என்னால்...என்னால்
ReplyDeleteஎன்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!//
அழகான கவிதை.....
thambi vettothi sundaram is based on true story.....
ReplyDeleteDirector v.c.vadivudaiyan has quitley completed the first shedule of his movie.thambi vettothi sundaram.this story is based on real life incident that took place in the kanyakumari district.a decade ago.karan is back in a powerfull lead role,playing the protoganistand is paired with anjali."we have presented the story as realystically as possible.saravan and kanja karrupu are part of the cast.music director vidhyasagar asassembled a tradational music group from the district to ensure a natural feel and flavour.lyrics are by vairamuthu.visit www.vettothi.com
///நாளொன்று விடிய
ReplyDeleteகாளான் குடையோடு
கண் வெளிக்கும்
அந்த மண்ணுக்குள்.//
நல்ல வரி ஹேமா. கவிதை அருமை....
//முளை வெடிக்கும்
ReplyDeleteவளரும்
பிரம்புப் பந்தலில்
கொடி படரும்
மேக நிறத்தில் பூக்களும் குலுங்கும்//
நம்பிக்கை தரும் நல்ல கவிதை. அருமை ஹேமா...
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஹேமாவின் கவிதை படிக்கிறேன். ரொம்ப அருமை.
ReplyDelete/என்னால்...என்னால்
ReplyDeleteஎன்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!///
யார் கண்டது ...!
சூரியனை பொசுக்கும் வல்லமைகூட நாளை நமக்கு உண்டாகலாம்..!.
நல்ல கவிதை.
ReplyDelete///முளைத்தலும்
ReplyDeleteபடர்தலும்
வளைதலும்...வளைத்தலும்
மொட்டும் பூவும்
என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!//
அற்புதமான வரிகள் ஹேமா..
வித்தியாசமான நல்ல வரிகளும் உணர்வுகளும்..
வாழ்த்துக்கள்
//என்னால்...என்னால்
ReplyDeleteஎன்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!//
கிரகண காலத்து சூரியனை பார்க்கக் கூடும் குளிர் கண்ணாடி வழியே
அதனதன் மாற்றம் அதனதன் பின்புலத்துடன்
திசைகள் ,அட்ச தீர்க ரேகைகள் யாவும் மானுட கற்பனை
நேரம் என்பதே பொருந்திப் போகிறதா தேசத்திற்கு தேசம் ?
சிருஷ்டித்துக் கொண்ட உலகிலிருந்து வெளியேற காலம் காரணமாகச் சொல்ல ஏற்றதல்ல
சென்ற நொடி வரலாறு .நாளையதுயர் என்பது
நேற்றால் நாளையை பார்க்கும் துர்கனா
கடந்து வெளியேற நேயங்கள் பலம்தரும் என்ற வாழ்வின் மீதான தீராத நம்பிக்கைதான் செலுத்திக் கொண்டிருக்கிறது நம் அனைவரையும்
//என்னால்...என்னால்
ReplyDeleteஎன்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!//
நிஜமான வரிகள்.
அருமையான கவிதை ஹேமா.
இயற்கையை இவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள் போங்கள்...
ReplyDeletesimply superb...
ReplyDeleteவெய்யல் இல்லையேன்னு உங்க ஊர்ல புலம்புறீங்க,
ReplyDeleteஎங்க ஊர்(பாலைவனத்து)ல வெய்யல் மட்டுமே...
இதான் சொல்லுவாங்களோ.. கல்லு கண்டா நாய காணும்ன்னு...
என்ன இருக்கிறது என் கையில் !
ReplyDeleteஎல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!
.....அருமையான வரிகள், ஹேமா. பாராட்டுக்கள்!
முளைத்தலும்
ReplyDeleteபடர்தலும்
வளைதலும்...வளைத்தலும்
மொட்டும் பூவும்
என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில்!
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!
அழகான கவி வரிகள் ஹேமா. வாழ்த்துக்கள்.
ஜேர்மனியில் பனி போய் இப்போது தூக்கத்துக்கு ஏற்ற இதமான காலநிலை.சுவிஸ்லயும் அப்படித்தானே இருக்கிறது.பயணக்களைப்பு தீர தூங்கி விட்டு அந்த பயண அனுபவத்தை உப்புமடச்சந்தியில் பதிவு போடுங்கள்.ஜேர்மன் வாழ்க்கை சலிப்பு தான். ஆனால் பழகி விட்டது ஹேமா.....அன்புடன்..
Nice tyribute to The Sun Hema.
ReplyDelete/என்னால்...என்னால்
ReplyDeleteஎன்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!/
அருமை
வணக்கம் ஹேமா,..
ReplyDeleteநல்ல ஒரு கவிதையை வாசித்த உணர்வு
ஹேமூ மிக நல்ல கவிதை. அழகாய் உள்ளது. நல்ல கற்பனை.
ReplyDeleteசூரியனுக்காக ரொம்ப ஏங்குது கவிதை.
ReplyDeleteநல்லா இருக்குங்க.
வந்தாச்சா தோழி.
ReplyDeleteமிக அருமை கவி பனிக்குள் பூபாளம்போல்..
//காலநில கனிய
ReplyDeleteசூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது.//
ஏக்கம் புரிகிறது இதற்கு ஏங்கும் மனசும் பிடிக்கிறது இதை கவிதையாக்கிய திறமை வியக்கவும் வைக்கிறது...
கவிதை மிக அருமை..... வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteநல்ல கவிதை ஹேமா..
ReplyDeleteஇடைவெளியின் பின்னர் வந்த வேறுபட்ட கவிதை ஹேமா. ரசித்தேன்.
ReplyDeleteசூரியனை எதிர்பார்த்து பல விதைகள் முளைக்கக் காத்திருக்கின்றன ...இரட்டை அர்த்தத்தில் எழுதினீர்களோ என்னமோ.....எனக்கு அப்படி விளங்கியது.
என்ன இருக்கிறது என் கையில் !
ReplyDeleteஎல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!
மனதை கொள்ளை கொண்டு விட்டீர்கள்
காலநில கனிய
ReplyDeleteசூரிய அணைப்பில் முளைக்கும்\\\\\\\
ஒரு ஆண் மகனால்.....வந்த
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே\\\\\\
வெள்ளை மனதுடன்,விருப்பத்துடன்
வந்த காதலை
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது.\\\\\
வாழ்க்கைப் பூங்காவில் அல்ல....
மொட்டையாய் {வெறுமையாய்}
இருந்த என் மனதில் ஒரு மூலையில்தான்
வைக்க முடிந்தது
காதலும் வளரும்,படரும்,பூத்தும்
குலுங்கும்.......
காத்திரு{ப்பில்}க்கும் போது\\\\\
இதற்குள் நடக்கும் சில
விவாதங்களின்...கண்கள்தான்\\
அழுதழுது...
கண்டல் கண்டு
நீலமாய் மாறியபடி.\\\
இரத்தோட்டம் இல்லாமல்...
{இயங்கும் சக்தி இல்லாமல்}
அடிபட்டு கன்றிஅதன் இயல்பு
நிலையிலிருந்து நீலமாய் மாறியபடி...
முளைத்தலும்
படர்தலும்
வளைதலும்...வளைத்தலும்
மொட்டும் பூவும்\\\\\
ஒரு பெண்ணிடம்தான்!காதல்
முளைப்பதும்,வளர்வதும்,படர்வதும்....
அதற்காக...ஒரு ஆண்மகன் என்னை
வளைத்தலும்,நான் வளைந்து கொடுப்பதும்,
என் காதல் அரும்பாய் இருப்பதா?இல்லை
மலர்வதா?எல்லாம் என்னால்தான்....{என் பேச்சால்}
என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!\\\\
என்னால் எதுவும் இல்லை
நகரும் நாட்களின்,நியதியில்!!
என் விதியில்....{விதித்தது}
வாழ்கைக்கு...வெளிச்சமா?இருளா?என்பது!!
ஹேமா இது என்{நோக்கு} பார்வைப்
ReplyDeleteபின்னோட்டம்.
மிக நன்றாய் இருக்கின்றது
நன்றி ஹேமா.
kavithai arumai hema:)
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு ஹேமா. காளானை விட மாட்டீங்க போல. பெரும்பாலும் உங்கள் க்விதைகளில் காளான் வந்துருது..வாழ்த்துக்கள்
ReplyDeleteசிவாஜி வாங்க.எங்க ரொம்ப நாளாக் காணோம்.உங்க கவிதை அளவுக்கு இல்லன்னாலும் வந்து குறை நிறை அடிக்கடி சொல்லிட்டுப் போகலாம்தானே.நன்றி சிவாஜி.
ReplyDeleteம்ம்ம்...வாங்க விஜய்.காலநிலை மாற மொட்டைமாடியில் பூக்கன்றுகள் நட்டு வைத்தேன்.அப்போது வந்த கற்பனைதான் !
ஷங்கர்....பனிக்காலம் முடிஞ்சாச்சு.
ஆனாலும் குளிர் இன்னும் இருக்கு.நல்ல வெயிலுக்கு இன்னும் ஒரு மாதமாவது காத்திருக்கணும்.
விதை போட்டிருக்கேன்.சூரியனின் சூடு சரியாக் கிடைச்சாத்தானே
பூக்கள் பார்க்கலாம் !
ஜமால்...தெளிவா இருந்தாலும் குழப்பன்னே இருக்காங்க இங்க சிலபேர் !
அஷோக்...நான் எங்கயும் போகல.இங்கதானே இருக்கேன்.
என்னாச்சு உங்களுக்கு !
மாதேவி...ஓ...வெப்பம் கக்கிய சமயத்தில் இப்படி ஒரு கவிதை வந்திருக்கக்கூடாதோ !
சங்கவி...எப்பிடி இருக்கீங்க.
நன்றி அன்புக்கு.
நன்றி பாலா.ஏதோ படத்துக்கு இங்க விளம்பரமா!சரி சரி.
இர்ஷாத்...வாங்க.அன்பான கருத்துக்கு நன்றி.வாங்க அடிக்கடி.
ராஜா...ஒரு நம்பிக்கைதான் சூரியன்கிட்டயும் !
ஸ்டார்ஜன்...வாங்க வாங்க.
வலைச்சரத்தில கலக்கின களைப்போட இந்தப்பக்கம்.
சந்தோஷமாயிருக்கு.
சந்திப்போம் இன்னும்.
ஜீவன் - தமிழ் அமுதன்.ரொம்ப ரொம்ப அழகான பெயர்.ரொம்பக் காலமா சொல்ல நினைச்சிருந்தேன்.
சந்தர்ப்பம் இல்லை.என்னென்னமோ எல்லாம் செய்றோம்.சூரியனைப் பொசுக்க மாட்டோமா என்ன !
மதுமிதா...முதல் வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி தோழரே.இன்னும் வாருங்கள்.
றமேஸ்...உங்கட சமூக அக்கறையோடான பதிவுகளுக்கு பாராட்டுகிறேன்.அந்தளவுக்கு என் கவிதைகள் இல்லையே !
நேசமித்ரன்...//சென்ற நொடி வரலாறு .நாளையதுயர் என்பது
ReplyDeleteநேற்றால் நாளையை பார்க்கும் துர்கனா//
நேசன் என் கவிதையைவிட உங்கள் பின்னூட்டத்தில் ஆயிரம் அர்த்தங்கள்.
இதம் தரும் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் மனதோடு !
அம்பிகா வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி தோழி.
புலவரே...எப்பிடி இருக்கீங்க.
இயற்கையே அழகுதானே !
தமிழ்ப்பறவை அண்ணா பதிவுகள் ஒண்ணும் போடலியா ?சின்னதா சுருக்கமாக் கருத்துச் சொல்லித் தப்பிட்டீங்க !
ரவி...அட..கொய்யால (இது நீங்க சொல்லித் தந்த வார்த்தை )வெய்யல் இல்லை.வெ-யி-ல்.இப்பிடி சத்தமா சொல்லி சொல்லிப் பாடமாகுங்க ! தப்பமாட்டீங்க !
சித்ரா...அட்டகாசமான உங்கள் பதிவுகளை விடவா கவிதை
அருமை !
ஜெயா...உப்புமடசந்தியை நான் கொஞ்சம் மறந்திருந்தாலும் நீங்க விடமாட்டீங்கபோல.பதிவு ஏதாவது போடவேணும் ஜெயா.போடுறேன் !
டாக்டர்...உங்கள் அன்புக்கு நன்றி.வேலைப்பழுவுக்குள்ளும் ஒரு தரமாச்சும் ஓடி வருவீங்க !
திகழ்...எவ்ளோ காலம் உங்கள் பாராட்டு எனக்குக் கிடைச்சு !
ஞானம்..நிறையா நாளாச்சு.
சுகம்தானே.அன்புக்கு நன்றி ஞானம்.
வாங்க சுதாகர்.சுவாமிகளே கலக்கிவிட்டீங்களே ஒரு தத்துவமாய் ஒரு கவிதையோட.அருமையான கவிதை.மிகவும் ரசித்தேன்.
நன்றி சே.குமார்.எப்பாச்சும் இப்பிடி வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போனா சந்தோஷமாயிருக்கும் எனக்கும்.
மல்லிக் .....பனிக் குளிர்ல நடுங்கிறதே ஒரு கவிதைதான் தோழி.பாக்கணுமே நீங்க அந்த நேரத்தில !
வாங்க தமிழரசி.ஏக்கமெல்லாம் வெயில் காலத்துக்குத்தான் தோழி.
குளிர் தாங்கல !
கவிதன் வாங்கோ...வாங்கோ.
அன்பான முதல் வருகைக்கு நன்றி.என் 2- 3 கவிதைகளுக்கு உங்கள் கருத்துக் கண்டு சந்தோஷம்.
ஆறுதலான வார்த்தை கண்டு மனம் நெகிழ்ந்தேன்.அன்போடு இணையுங்கள் என் பதிவுகளோடு.
சந்திப்போம் அடிக்கடி.
ஸ்ரீராம்....என்னாச்சு.
கவிதை புரியலயா !
ஜெஸி....ம்ம்ம்ம்....கவிதைகள் அவரவர் உள்வாங்கிக் கொண்ட விதத்தில்தான் அர்த்தங்கள் வெளிப்படும்.உங்கள் கருத்து உங்களுக்குச் சொந்தம் !நன்றி தோழி.
தமிழ்...உங்கள் பதிவுகளும் எங்களைக் கொள்ளை கொண்டு போய்த்தானிருக்கு.அன்புக்கும் தொடர்ந்த கருத்துப் பாராட்டுக்கும் நன்றி தமிழ்.இந்தக் கவிதையின் பாராட்டு அடுத்த கவிதைக்கான உற்சாக ஊற்று !
ReplyDeleteகலா....கலா பயமாயிருக்கு உங்கட பின்னூட்டம் பார்த்து.எல்லாம் பிச்சுப் பிச்சு வைபடுது.எங்காச்சும் என்னைக் காட்டிக் குடுக்கப்போறீங்க.அவ்வளவு ரசனை உங்களுக்கு !
ஹாய் பூர்ணிமா உண்மையா நீங்கதானா ? சுகமாய் இருக்கிறீர்களா?நீங்கள்தானா என்று உங்கள் பக்கம் வந்து பார்த்து உறுதிப்படுத்திக்
கொண்டேன்.பதிவுகள் எழுதுவதில்லையா இப்போ ?உண்மையிலேயே கண்டதில் மிக மிகச் சந்தோஷம்.
கோபி..கிண்டலு...உங்களுக்கும்.
காத்திருந்து கண்ணில காளான் முளைச்சா அதைச் சொல்ல
வேணாமோ!(இங்க அடிக்கடி காளான் சூப் குடிக்கிறதால இப்பிடி வருமோ!)
அருமையான விசாரிப்பு
ReplyDelete