Wednesday, April 14, 2010

நிலவோடு சித்திரைப் புத்தாண்டு...

வந்திருக்கேன் குழந்தைநிலா
நிறைய நாளாக் காணாத
உங்களையெல்லாம்
பாத்துக்கொண்டு
தமிழ்
புத்தாண்டுக்கு
வாழ்த்தும் சொல்லி
வாழ்த்துக் கேட்டும்.

மறந்தே போனீங்க என்னை !
போன வருஷம் பிறந்த நாளில
கண்டபிறகு.
இப்போ...சுகம் கேட்டு
கை விஷேசம் வாங்கவும்தான்.
நான் இப்போ தாயகத்தில்.
பாட்டி சொல்றா
கை விஷேசக் காசை வாங்கி
மண்ணுக்குள்ள புதைச்சு
தண்ணியும் விட்டா
காசுமரம் முளைக்குமாம்.

ம்...
இல்லைவே இல்லை
அஸ்க்கு...புஸ்க்கு
ஏமாறமாட்டேன்
இவங்களைப்போல.
ஏமாந்த இவங்களாலதானே
இழந்துபோனேன்
என் தாயகத்தை!!!

அத்தனை அன்புள்ளங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

33 comments:

  1. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா :)

    ReplyDelete
  2. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா .... welcome back

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், யாரு குழந்தை? நன்னாயிருக்கா? என்ன படிக்கிறா?

    ReplyDelete
  5. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. குழந்தை கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்.பிறந்தநாள் சுட்டி தாருங்கள் ஹேமா.

    ReplyDelete
  7. அழகான குழந்தை நிலாவுக்கு இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. //கை விஷேசக் காசை வாங்கி
    மண்ணுக்குள்ள புதைச்சு
    தண்ணியும் விட்டா
    காசுமரம் முளைக்குமாம்.

    ம்...//

    அஸக்கு...

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ஹேமா,
    இந்த பிறை நிலா...?

    ReplyDelete
  10. வானம் வெளித்த பின்னும் போட்டோஷாப் எழுத்துமாற்று நன்றாக இருக்கிறது.

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அன்பு நிலாவை கண்டதில் மிக்க சந்தோஷம்.

    ஏமாளியாக இல்லாமல் இருத்தல் சந்தோஷமே!

    ReplyDelete
  13. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  14. புத்தாண்டு வாழ்த்துக்கள்...போஸ் கொடுக்கும் சுட்டிக் குட்டி யாரோ?

    ReplyDelete
  15. சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் ஹேமா !!!

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  18. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா... குழந்தை(நிலா) க்யூட்...

    ReplyDelete
  20. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பாப்பாவுக்கும், ஹேமாவுக்கும்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்களுங்க...குழந்தை நல்லாயிருக்கே.. புஜ்ஜிகுட்டி :)

    ReplyDelete
  22. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஹேமா மறுபடியும் கடையை திறந்தாச்சா!!!!

    என்னை மாதிரி கும்மி வாசகர்களுக்கு ஊரிலே இருந்து ஏதும் வாங்கி வந்தீங்களா?

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  25. ம்...
    இல்லைவே இல்லை
    அஸ்க்கு...புஸ்க்கு
    ஏமாறமாட்டேன்

    "இவங்களைப்போல".

    ஏமாந்த இவங்களாலதானே
    இழந்துபோனேன்
    என் தாயகத்தை!!!\\\\\\\\

    ஹேமா இவ்வளவு வரிகளும் சொல்கின்றன
    எவ்வளவோ கதைகள் ......!!!!!??????


    குட்டி,சுட்டி நிலா கொள்ளை அழகு
    கொண்ட தாய்க்கு ஒரு நிலவு
    சீராட்டும் பாட்டிக்கு_அவள்
    தெவிட்டாத தேன் நிலவு

    ReplyDelete
  26. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா....

    ReplyDelete
  27. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி..
    படங்கள் கொள்ளை அழகு.

    ReplyDelete
  28. நெஞ்சார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  29. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா,நிலா!

    //பாட்டி சொல்றா
    கை விஷேசக் காசை வாங்கி
    மண்ணுக்குள்ள புதைச்சு
    தண்ணியும் விட்டா
    காசுமரம் முளைக்குமாம்.//

    எவ்வளவு பாந்தமான வரிகள்,ஹேமா!

    வா..வா..

    புதுசா இருக்கட்டும்,வருடம்,வாழ்வு.

    ReplyDelete
  30. ஆயில்யன்...நன்றி ஆயில்யன்.
    எங்கே ரொம்பநாளாக் காணோம் இந்தப் பக்கம் சுகம்தானே நீங்கள்.

    கடையம் ஆனந்த்...ஆனந்த் உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி.

    டம்பி மேவீ...மேவீ எப்பிடி இருக்கீங்க !உங்கள் பதிவுகளின் வரவர மெருகேருகிறது.வாழ்த்துக்கள்.

    பித்தனின் வாக்கு...வாங்க சுதாகர்.உங்க அட்டகாசம் தாங்கல.குழந்தை கனடால இருக்கா.அவ பேர்லதான் என் புளொக்கர்.இன்னும் பாடசாலை போகத்தொடங்கவில்லை.படு சுட்டிச் செல்லம்.

    துபாய் ராஜா...போன வருடத்தின் பிறந்தநாள் உங்களோடுதான் கொண்டாடினாள் நிலா.இந்த வருடன் என்னோடு ஊரில் இருந்தாள்.போன வருடத்தின் சுட்டி.இது >>> http://kuzhanthainila.blogspot.com/2009/03/blog-post_07.html

    ஜெயா...ஜெயா நன்றியம்மா.

    சத்ரியன்...இந்தப் பிறைநிலா எங்கள் குடும்ப வெளிச்சம் !

    ராஜ நடராஜன்...நன்றி உங்கள்முதல் வருகைக்கு நடராஜன்.நான்"வானம் வெளித்த பின்னும்" எழுத்தை மாற்றலாம் என்றிருக்க நீங்கள் வேண்டாம் என்கிற மாதிரி யோசிக்க வைத்துவிட்டீர்கள்.பார்க்கலாம்.

    சின்ன அம்மிணி...நன்றி அம்மிணி.அன்புக்கு நன்றி.

    நட்புடன் ஜமால்...ஜமால் சுகம்தானே.நீங்கள்தான் அடிக்கடி நிலாவை நினைப்பீர்கள்.
    வந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜமால்.கொஞ்சம் கொஞ்சம் வாசிக்கத் தெரியும் பார்த்துக்கொள்வாள்.

    மாதேவி...தோழி சுகம்தானே.உங்கள் பக்கம் வந்து நாளாயிற்று.
    சமையுங்கள் வருகிறேன்.

    ஸ்ரீராம்...வாங்க ஸ்ரீராம்.அவள் எங்கள் குடும்ப விளக்கு.கனடா பிரஜை.ஆனாலும் தாய் மண்ணில் பற்றுதல் அதிகம்.

    அத்திரி...அத்திரி வாங்கோ வாங்கோ.எங்கே ரொம்ப நாளா பதிவுகள் காணோம் ?

    நேசமித்ரன்...நன்றி நேசன்.உங்களுக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய வருடத்தில் எல்லாமே நல்லபடியாய் ஆசைகள் நிறைவேறட்டும் நேசன்.

    ரிஷபன்...நன்றி அன்புக்கு ரிஷபன்.

    சித்ரா...சித்ரா சிரித்தபடி உங்கள் வாழ்த்துக் கிடைத்திருக்கிறது.நன்றி தோழி.

    தமிழ்ப்பறவை...அண்ணா சுகம்தானே.
    அண்ணி வந்தாச்சா!இந்த வருஷமாவது சந்தோஷ வருஷமாய் அமையட்டும் உங்களுக்கு.

    தமிழ் உதயம்...நன்றி தமிழ்.உங்கள் வாழ்த்துக்கள் என்றும் என்னைத் தாங்கி வளரவைக்கும்.

    அஷோக்...வாங்க அன்பான அஷோக்.உங்க லோகி மாதிரி ஒரு சுட்டி எங்க குடும்பத்திலயும்!

    இரவீ...உங்களுக்கும் புது வருஷம் இனித்திருக்கும்தானே !

    நசரேயன்...ஹாய் நசர் எப்பிடி இருக்கீங்க.சுகம்தானே !ஏன் என்கிட்ட ஏதாச்சும் வாங்கிட்டு வரச் சொன்னீங்களா.இல்லையே.பரவாயில்ல கும்மியடிக்கக் கம்பு காட்டில வெட்டிக்கலாம்!

    கோபிநாத்...நன்றி கோபி அன்புக்கும் வருகைக்கும்.

    கலா...கலா சொன்னேன் தொலைபேசியில் நிலாவிடம் உனக்கு இன்னொரு பாட்டி சிங்கப்பூர்ல இருக்கிறாவெண்டு.நிறைய யோசிக்கிறாள்.

    தமிழரசி...தமிழ் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    அம்பிகா...அம்பிகா நன்றியம்மா.
    படம் அழகோ என்னமோ என் நிலா அழகு !

    விஜய்...விஜய் உங்கள் சின்னக்குட்டிகளும் நீங்களும் சுகம்தானே !உங்களிடமும் இரண்டு சூரியக்குஞ்சுகள்தானே !

    பா.ரா.ராஜாராம்...அண்ணா உங்கள் வாழ்த்து அவளைப் போய்ச் சேர்ந்துவிட்டது.சந்தோஷமும்கூட.

    ReplyDelete
  31. கடைசி வரிகளில் ஹேமா.
    பு.வா.

    ReplyDelete
  32. Wishing you a Happy Tamil New Year Hema,the child is nice & convey my greetings to h8er.

    ReplyDelete
  33. //கை விஷேசக் காசை வாங்கி
    மண்ணுக்குள்ள புதைச்சு
    தண்ணியும் விட்டா
    காசுமரம் முளைக்குமாம்...// அழகா இருக்கு.....


    //ம்...
    இல்லைவே இல்லை
    அஸ்க்கு...புஸ்க்கு
    ஏமாறமாட்டேன்
    இவங்களைப்போல.
    ஏமாந்த இவங்களாலதானே
    இழந்துபோனேன்
    என் தாயகத்தை!!! //

    குட்டி ரொம்ப சமத்தா இருக்கு.... இவங்கள நம்பக்கூடாது... புதிய தலைமுறையேனும் சரியா வழிவகுத்துச் செல்லட்டும்.!

    தாமதமான புது வருட வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete