Wednesday, February 10, 2010

வீணாய்ப்போன...

பெயரிட முடியா
உறவுகளின் பெயரில்

இரு கருவிழிப்பாம்புகள்
மாயக்குகை விட்டு

மண்தடவி
மரம் தடவி
பூவுக்குள் ஒளிந்துகொள்ள

சூரிய விந்தில் பிறந்த குழந்தைக்கு
பெயர் மாற

பெயர் சொல்லப் பிடிக்காத
கூத்தியாளின்
கூம்பிய காம்பில்
கள்ளிப் பால் வடியவிட்டு

குண்டுணி காணமுன்
குறி மூடி

பின் ஊழ் திணித்து
அல்லது அகற்றி

இருளில் நகரும்
பறையில்லா சவ ஊர்வலம் !!!

ஹேமா(சுவிஸ்)

51 comments:

  1. வந்திட்டேன்... ஆனாலும்...

    இன்னும் கொஞ்சநேரம் கழித்தும் வருகிறேன்...

    ReplyDelete
  2. வரிகள் அருமை..
    ஆனாலும் :((

    ReplyDelete
  3. //குண்டுணி காணமுன்
    குறி மூடி

    பின் ஊழ் திணித்து
    அல்லது அகற்றி

    இருளில் நகரும்
    பறையில்லா சவ ஊர்வலம் !!!//

    உங்கள் வரிகள்... எப்படி சொல்வது...? அருமை.........

    ReplyDelete
  4. ஹேமா, இன்னும் ஒரு வாரத்திற்கு காதல் கவிதை மட்டும்தான் எழுதணும்.

    ReplyDelete
  5. Unga blog romba nalla iruku
    (`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

    Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

    Download Youtube Videos free Click here

    தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

    ReplyDelete
  6. கள்ளிப்பால் கண்ணில் தெறிக்கிறது

    ம்ம் சில பிரயோகங்களை தவிர்த்திருக்கலாம்

    ReplyDelete
  7. சில வரிகள் நல்லாவே வந்திருக்கு.. என்ன சொல்லவரிங்கன்னுதான் என் எளிய மனதுக்கு புரிஞ்சிக்கமுடியல ஹேமா :)

    ReplyDelete
  8. சில வரிகள் கடினமா இருந்தாலும், அற்புதமக இருக்கு

    ReplyDelete
  9. ஆமாங்க ..... பெண் பிள்ளைகளை ஏன் இன்னும் சுமையாய் பார்க்கிறார்கள் என்று தான் தெரியல ..... போற போக்கை பார்த்தால் தமிழ்படத்தில் வருகிற மாதிரி BRANDED வருங்கலத்தில் கள்ளி பால் வந்தாலும் வரும்

    ReplyDelete
  10. வார்த்தைகளை கையாண்டு இருக்கும் விதம் அருமை ...... இரண்டு வரிகளில் உணர்வுகளின் விளிம்பு நிலை தெரிகிறது .....

    ReplyDelete
  11. நாங்க எல்லாம் யாரு ...எம்ஜியார் படத்தை டிவி ல பர்துவங்க எப்புடி கவிதை எழுதினாலும் அர்த்தத்தை கண்டு பிடிசுருவோம் ....


    இலக்கியவாதி ஆகிட்டா எப்புடி எல்லாம் கஷ்ட பட வேண்டி இருக்கு

    ReplyDelete
  12. முந்தைய இரண்டு மூன்று கவிதைகளுக்கு நான் யாருக்கும் பதில் சொல்லவேயில்லையாம்.அது பெரிய குறைதான்.நேரமில்லாமல் போச்சு.நேரமிருந்தா சொல்லுவேன் தானே !சரி ...சரி இன்னும் நிறைய எழுதலாம்.நிறையப் பேசலாம்தானே.மன்னிச்சுக்கோங்க எல்லாரும்.

    யாராச்சும் என்னைக் காப்பாத்துங்க மேவீக்கிட்ட இருந்து முதல்ல.
    அரட்டை அடிக்க யாரும் கிடைக்கலன்ன நான் தான் மேவீக்கு கிடைக்கிறேன்.அப்போதான் பதில் சொல்லலன்னு திட்டுறார்.அதுவும் நடு சாமத்தில தூங்காம இருக்கார்.
    ராக்கோழி.கேட்டா நான் தானே உங்க கவிதைக்கு ஆரம்பகால ரசிகன்னு சொல்றார்.

    ReplyDelete
  13. ஹ்ம்ம்! உங்க கவிதைங்களெல்லாம் ரசிச்சு படிப்பேன்.. இது கொஞ்சம் விளங்கேல்ல..கள்ளிப்பால் குடுத்து பொம்பிளைப்பிள்ளையள கொல்லுறதை பற்றி சொல்லுறீங்களா? உது இலங்கையில நடக்கிறதா? இங்கின பொம்பிள ப்பிள்ள பிறந்தா தேப்பனமார் டான்செல்லா ஆடுறாங்கள்..?

    ReplyDelete
  14. பாலாஜி...எங்க ஓடிப்போய்ட்டீங்க.கவிதை சரியா புரியலயா ?

    ராதாகிருஷ்ணன் ...நீங்களுமா ?

    சங்கவி....க்குக் கொஞ்சமா புரிஞ்சிருக்குபோல !

    ராஜா ....காதல் கவிதை போடுறேன்.இந்தக் கவிதை போட்டதே ஒரு வேடிக்கையாத்தான்.
    2-3 பேர்கிட்ட திட்டு வாங்குறேன்.
    எப்பவும் ஒரே மாதிரி இருக்காம்.சரி...பெரிசா இருக்காம்.சரி....ஒரே காதல் கவிதையா இருக்காம்.இப்போ என்னான்னா புரியாம இருக்காம்.பாருங்க யாரும் வரவுமில்ல.ஓட்டுப் போடவும் இல்ல.

    ஹென்ரி ...உங்கள் வரவுக்கும் சொன்ன செய்திக்கும் நன்றி.

    நேசன்...நல்லது இனிக் கவனமா எழுதறேன்.என்றாலும் சில இடங்களில் தேவையாய் இருக்கிறதே !உங்களுக்குச் சரியாப் புரிஞ்சுதா ?ஏன் கேக்கிறேன்னா நான் சரியா எழுதியிருக்கேனான்னு அறியணும்ல்ல.

    அஷோக்..எப்பவும் எனக்கு கிலுகிலுப்பை வாங்கித் தரன்னு என்னைச் சின்னப்பிள்ளையா நினைச்சிட்டு இருந்தா இப்பிடித்தான்.
    என்ன சொல்ல வரேன்னு புரியாம இருக்கும்.

    பெண்சிசுக் கொலைதான்
    கவிதையின் கரு.

    ReplyDelete
  15. ஹேமா எனக்கும் முதல் சரியா புரியவில்லை.இரண்டு மூன்று தடவை கவிதையை படித்தேன்.பெண் சிசுக் கொலையாகத் தான் இருக்கும் எனப்புரிந்தது. அது தான் நீங்களே சொல்லி விட்டீர்கள் பெண் சிசுக்கொலையை பற்றியது என்று.அர்த்ததை கண்டு பிடிக்க கடினமாக இருந்தாலும் அழகான வரிகள். வாழ்த்துக்கள்***

    ReplyDelete
  16. நன்றி அண்ணாமலை பிடிக்குதோ பிடிக்கலையோ எழுத ஊக்கம் தருபவர்களில் நீங்களும் ஒருவர்.


    //டம்பி மேவீ ...
    நாங்க எல்லாம் யாரு ...எம்ஜியார் படத்தை டிவி ல பர்துவங்க எப்புடி கவிதை எழுதினாலும் அர்த்தத்தை கண்டு பிடிசுருவோம் ....//

    எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்.என் கழுத்தில கத்தி வச்சு என்னை மிரட்டி இனிமே எனக்கு பின்னூட்டம் போடமாட்டேன்னு ...இப்பிடி என்னவெல்லாமோ சொல்லித்தான் என்ன கவிதைன்னு கேட்டுத் தெரிஞ்சுகிட்டார்.

    எனக்கு எப்பவும் உற்சாகம் தரும் ஆனா அவங்க அம்மாவுக்கு பயப்படும் சின்னப்பொடியன் மேவீக்கு நன்றி.

    ReplyDelete
  17. கவிதை அருமை... கண்களில் தான்... கண்ணீர்ப்பூக்கள் மட்டுமே என்னால்

    ReplyDelete
  18. வழக்கம் போலவே அருமையான கவிதை ஹேமா.

    ReplyDelete
  19. புல்லட் அடடா...எங்கட புல்லட்.வாங்கோ வாங்கோ.நல்ல கோவமாத்தான் இருக்கிறன்.
    எண்டாலும் எங்கட பொடியளோட கோவப்பட்டு எதுக்கு !யாராச்சும் வாறீங்களோ என்ர பக்கம்.எங்கட ஊரவையள் எண்டு இங்க வாறது சரியான குறைவு.எத்தினை பேர் கேட்டிச்சினம்.ஏன் உங்கட ஊர் ஆக்கள் வாறதில்ல.தமிழ்மணம் விருது நேரத்திலகூட காணேல்ல.
    கானா பிரபா வந்திருந்தார்.சரி சரி இருங்கோ !

    புல்லட்..எங்கட ஊர்ல நாட்டில பெண்சிசுக்கொலை இல்லாட்டிலும் நாங்கள் கேள்விப்படுறோமே.
    கவலையா இருகெல்லோ !நீங்கள் என் கவிதைகள் வாசிக்கிறீங்கள் எண்டு சொல்லியிருக்கிறதைப் பாத்து அளவு கடந்த சந்தோஷம்.

    ReplyDelete
  20. வாழ்க்கைய போல கரடுமுரடா இருக்கு கவிதை ஹேமா

    ReplyDelete
  21. தாங்கள் கூறவருவது ஒன்றுமே புரியவில்லை.. மீண்டும் விளக்குவீர்களா..

    ReplyDelete
  22. உணர்ந்து எழுதியதாங்க?

    எனக்கு விளங்கல்லே...

    ReplyDelete
  23. எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். நல்ல கவிதை ஹேமா, கள்ளிப்பால் கடையில் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete
  24. சிசு கொலை புரியுது ஹேமா.. நல்லா படிச்சுபாரு.. உன் கவிதையை... எங்க கோட்டை விட்டுயிருக்கன்னு புரியும் :)

    இப்படிக்கு
    அன்பு அஷோக்

    ReplyDelete
  25. முதல் உயிர்திரவமே
    விஷமாகும்போது
    என்ன செய்ய ஹேமா

    பெண்சிசுவதை அவசியம் தடுக்கப்படவேண்டிய ஒன்று

    விஜய்

    ReplyDelete
  26. nalla varikal . thotarattum pataippukal . enrum niraivaaka anaivarukkum pitiththa maathiri eluthukerirkal. makilchchi

    ReplyDelete
  27. கள்ளிப்பால் லிட்டர் 10௦ ரூபா

    ReplyDelete
  28. கொடுமையா இருக்கே ஹேமா

    ReplyDelete
  29. என்னக் கொடுமை ஹேமா இது..

    ReplyDelete
  30. புரியுது ஆனா புரியல...
    அட உங்க பின்னூட்டம் பிறகு புரியுது.

    ReplyDelete
  31. ஜெயா...வாங்க.எங்க ஊர்ல இப்பிடி ஒரு சம்பவம் இருக்காட்டியும் வேறு எங்கேயோ நடக்கிறப்போ பெண்ணாய்ப் பிறந்த எஙக்ளுக்கும் கவலைதானே !வானொலி.பத்திரிகையில் பாத்த பாதிப்புத்தான் வரிகள்.

    வாங்க றமேஸ்.சுகம்தானே.

    நன்றி அக்பர்.இந்தக் கவிதை கொஞ்சம் அல்லாட வைக்குதோ !என் மனசில பட்டது.சின்னதா வேற விஷயமா எழுத நினைச்சு இப்பிடி ஆயிடிச்சோ !

    தமிழ் ...வாழ்க்கையே கரடு முரடுதான்.பாத்து கவனமா நடப்போம்.ஆனாலும் இப்பிடித்தான் !

    யாருங்க நீங்க சிறுத்தை.
    பயமாத்தான் இருக்கு.நாங்க உங்களைவிட பெரியவங்களோடா வாழ்ந்திட்டோம்.பயமில்ல.அதான் சொல்லிட்டேனே இதான்ன்னு.சரியா வரலயா ?குண்டுணி = கோள் சொல்றவங்க.சரியா !

    ம்க்கும்....வசந்து எல்லாரும் எல்லாத்தையும் உணர்ந்துதான் எழுதணும்ன்னா இறப்பு ,மரணம்ன்னு கவிதைகள் எழுத முடியாது சாமி.செத்துப் பாத்திட்டு எழுதணும்.

    நன்றி கும்மாச்சி.என்றாலும் அன்றைய காலகட்டத்தை விட இன்று இந்த நிலைமை குறைந்துதானே இருக்கிறது !இல்லையா ?

    ReplyDelete
  32. //அஷோக்...
    சிசு கொலை புரியுது ஹேமா.. நல்லா படிச்சுபாரு.. உன் கவிதையை... எங்க கோட்டை விட்டுயிருக்கன்னு புரியும் :)//

    என்னன்னு மெயில்லயாவது சொன்னதானே என் தப்பு எனக்கு தெரியும்.திட்டிடுவேன் !

    கார்த்தி....என்ன சொல்லிட்டுப் போறீங்க.வெறும் கோடுதான் வருது.

    நன்றி விஜய்.உண்மையா புரிஞ்சுதான் சொல்றீங்களா !

    வாங்க சரவணன்.உங்க பாராட்டுக்கு சந்தோஷம்.அப்பா...டி நீங்க திட்டல !

    நசர் ...எங்கே கள்ளிப்பால் 10 ரூபா?அமெரிக்காவுலயுமா !காலம், நாடு எல்லாமே கெட்டுப்போச்சு !

    தேனு...இந்தக் கொடுமை காலாகாலமாத்தானே நடக்குது.அப்பப்போ கிறளிக்கிட்டு இருக்கோம்.அவ்ளோதான்.

    வாங்க கோபி...சுகம்தானே.
    கொடுமை என்பதைவிட வேதனைதான் இந்தக் கவிதை.

    வரணும் ரவி.இருக்கு இல்லன்னு சொல்றமாதிரிதான் நீங்க !

    ReplyDelete
  33. அன்பை எல்லோரும் நினைத்திருக்கும் வாரத்தில், அன்பின்றி அழிக்கப்பட்ட உயிர்களையும் நினைக்க வைத்தது, ஹேமாவின் கவிதை.

    ReplyDelete
  34. முறை தவறிய காமத்தின் சிசுக்கொலை என்று புரியற மாதிரி இருக்கு ஆனாப் புரியலை. நன்றி ஹேமு.

    ReplyDelete
  35. ஆமாம்தோழி
    வீரியங்கள் வீரிட்டுஎழும்போது
    வரிகளின் வழியே பிரவேசமாகிறது
    அது சில நேரத்தில் வருத்தையும் தருகிறது..

    ReplyDelete
  36. வித்தியாசமான கவிதைதான்.

    //சூரிய விந்தில் பிறந்த//

    புதிய கற்பனை. வாழ்த்துகள்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  37. அட ஹேமா.. சூப்பர் கவிதை.. பிரமாதம்.. பிச்சுட்டப்போ... (எனது மத்தப்பின்னூட்டங்கள் சும்மா லுல்லாய்க்கு)

    ReplyDelete
  38. நேசன் கூறியது சரியென்றுபடுகிறது.
    எதுக்கும் கலா மேடத்தோட உரையைப் படிச்சிட்டா நல்லாயிருக்கும்னு​தோணுது.

    இன்னும் வரலே??

    ReplyDelete
  39. பெண் குழந்தையின் முதலும் கடைசி திரவமாக கள்ளிப்பால் தரப்படுகிறது. அதை முற்றிலும் எதிர்ப்பதாக கூறியுள்ளேன் ஹேமா. நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    விஜய்

    ReplyDelete
  40. அழுத்தமான வரிகள் நெஞ்சு கனக்குது

    ReplyDelete
  41. தமிழ்ப்படத்துல பி.ஆர்.எஸ் கள்ளிப்பால், சுத்தமானது சுகாதாரமானதுன்னு வரும் அத நெனச்சி சிரிச்சவன் இதப்படிச்சி கலங்கிட்டேன்.

    ReplyDelete
  42. இருளில் நகரும்
    பறையில்லா சவ ஊர்வலம்

    மனம் அதிரும் நேரம்..

    ReplyDelete
  43. Varihal nice hema.What is the content ?

    ReplyDelete
  44. வார்த்தைகள் நல்லா வந்திருக்கு..

    ReplyDelete
  45. வாங்க சித்ரா.இதுவும் ஒரு அன்புதானே.அன்பேதான் வாழ்வு.

    வாங்க வாங்க சுதானந்த சாமிகளே.
    வார்த்தைகள் குழப்பமா இருக்கா?அதான் அப்பிடி.
    நல்லா வாசிச்சா விளங்கிடும்.

    வாங்க...மல்லிக்கா.ம்ம்ம். நீங்க சொல்றது சரிதான்.என்றாலும்...ஏன் என்கிற கேள்வியும் கூடவே !

    வாங்க வாசு அண்ணா.ரொம்பக் காலத்துக்கு அப்புறம்.உங்கள் வருகை சந்தோஷமாயிருக்கு.

    அஷோக்க்கு....லுல்லாய் காட்ட என்ன நான் என்ன சின்னப்பிள்ளையா ?ஆளைப்பாருங்க.எங்க உங்க சித்தப்ஸ்.அவரை பெஞ்சில ஏத்தறேன்.வரட்டும் வரட்டும்.

    ஜே...வாங்கோ வாங்கோ.கவிதை எப்பிடின்னு சொலவேயில்லை.
    சரி...நேசன் சொல்றதையும் நீங்க சொல்றதையும் ஒத்துக்கிறேன்.
    இதில் //பெயர் சொல்லப் பிடிக்காத
    கூத்தியாளின்
    கூம்பிய காம்பில்
    கள்ளிப் பால் வடியவிட்டு//இந்தப் பந்தியோ வார்த்தையோ கொஞ்சம் சரில்லாம இருக்கு.மனதின் கோபம்தான் அப்படி வந்தது.ஏன் ஆண்கள் எழுதும் கவிதைகளில் இதைவிட மோசமான வார்த்தைகளைக் கண்டிருக்கிறேன்.
    ஏன் கடவுளையே கூத்தாடி என்கிறோம்.சில உண்மையான உணர்வுகளை அப்படியே சொல்லமுடியாமல் இருக்கிறது.சில கவிதைகள் முடங்கிக் கிடக்கிறது இதனாலேயே.இது கோபம் இல்லை.ஆதங்கம் மட்டுமே.
    நேசனிடம் உங்களிடம்போல சொல்ல முடியவில்லை.அவரிடம் இருக்கும் மதிப்போ மரியாதயோ !
    அதான் உங்களிடம் புலம்பிவிட்டேன்.

    கலாவை நானும் எதிர்பார்த்தேன்.
    வந்து போன அடையாளம் கண்டேன்.ஏனோ பின்னூட்டம் தரவில்லை.சங்கடம் புரியவில்லை.
    வருவா என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  46. விஜய்...அப்பிடி ஒண்ணுமே இல்ல.கவிதை சரியாகப் புரிகிறதா.நான் சரியாக உணர்ந்திருக்கிறேனா என்று அறியவே அப்படிக் கேட்டிருந்தேன்.
    குறையொன்றும் இல்லை விஜய்.

    நன்றியும் சந்தோஷமும் சக்தி.உங்கள் வருகை தொடரட்டும்.

    நன்றி புலவரே.உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நினைச்சிருந்தேன்.

    வாங்க ரிஷபன்.அந்த நிகழ்வே மனதை அறுத்துச் செல்லும் ஒரு விஷயம்தானே.

    வாங்க டாகடர்.சுகம்தானே !
    கவிதை கருத்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே.புரிந்துகொள்ளக் கஸ்டமாயிருக்கா?ம்ம்ம்..கொஞ்சம் திசை மாற்றிப் பார்த்தேன்.
    அவ்வளவுதான்.இடைக்கிடை இப்படித்தான்.முயற்சிதானே !

    ReplyDelete
  47. வரிகள் கிழித்து தொங்க விடுகின்றது மனிதனின் இயலாமை என்னும் கயமைத்தனத்தை ...

    ReplyDelete
  48. வெளியூர் சென்று வந்ததில் தாமதம் ஹேமா.
    கவிதை அருமை.
    பின்னூட்டத்தில் 'பிட்' அடித்து விட்டு பாராட்டுகிறேன்.
    சமூகப் பிரச்னைகளை அவ்வப்போதும், இயற்கையையும், காதலையும் அடிக்கடி கவி பாடவும்.

    ReplyDelete
  49. அப்பாடி ஒருவழியா புரிஞ்சிகிட்டேன்..... அதனாலத்தான் அப்பாலிக்கா வர்ரேன்னு சொன்னேன்....நல்ல கருத்தாழமிகு கவிதை...

    ReplyDelete
  50. Keep REocking..
    best கவிதைகள்..

    ReplyDelete