Monday, April 20, 2009

எம் தேசம்...

தேசம்...
எம் தேசம்
அது என்னவாய்...?

மனிதம் செத்து
மானுடம் மடிந்த படி.
புத்தன் வாழ்ந்த
சத்திய பூமியா-இல்லை
பேய் பிசாசுகளின
சுதந்திர தீவா.
மயிர் கொட்டியின்
உயிரை விடக்
கேவலமாய்...

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
என்றானே பாரதி.

இன்று...
என் தேசத்தில்
பட்டினிச் சாவு
நித்தமும்...
நச்சு பூச்சியை
நசிக்கக் கூட
நெஞ்சில் வலி,
எம் தேசத்தில்-இன்று
எத்தனை உயிர்கள்
எத்தனை விதமாய்.

புத்தனும் போதித்திருக்க
மாட்டான்
பதவிக்காக
பட்டினிக் கொலையும்,
மண்ணுக்காக
மனித படு கொலையுமாய்
அஃறினையாய்
உயர்தினையாய்
எத்தனை உயிர்கள்.
எம் தேசத்தில் மாத்திரம்
எழுதினானா
ஒரே நாளில்
உயிர் பறிக்க
பிரமன்.

சொறிந்த புண்ணையே
சொறிந்து சொறிந்து
சீழ் வடிய வடிய
மூடிக் கட்டிய
வேட்டியும் சால்வையுமாய்
சிம்மாசனத்தில்...
மாறிய உருவங்களும்
மாறாத மனங்களுமாய்
அரக்க வம்சங்கள்
எம் தேசத்தில்.

தாயே...
என் தேசத்துத் தாயே
உன் கை ஒடித்து,
கால் முறித்து,
உன்
பிஞ்சுக் குழந்தை
குரல்வளை நெரித்து,
உன்
நெஞ்சு மிதித்தே
நடக்கிறார்கள்.

மனிதம் தொலைந்து
ஒளிந்து கொண்டது
புத்தனின்
முதுகிற்குப் பின்னால்.
பொறுமைக்குப்
பொருள் தெரியா
அகராதி அவர்களது.

காலங்கள் எத்தனை
அவலங்கள்
பார்த்தபடி...
பேச்சு வார்த்தை...
பேச்சு வார்த்தை...
யார் யாரோடு ???
"சப்" என்று
காதுக்குள் வலியெடுக்கும்
பொய் வாய்ப்பாடுகள்
வெளி நாடுகளுகளோடு.

வயோதிபர் மடங்கள் போல
விதவை மடங்கள்...
அநாதை மடங்கள்...
மடங்காய்...
இரு மடங்காய்...
மும் மடங்காய்...
முட்டி வழியமுன்
முடிவெடு தாயே
முடிவெடு
காப்பாற்று
உன் தேசத்தை !!!

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

ஹேமா(சுவிஸ்)

24 comments:

  1. படத்தை பார்க்கும்போது, உங்கள் கவிதையை வாசிக்கும்போது, கொடூரமாக கொல்லப்பட்ட நம் மக்களை பற்றிய செய்தியை படிக்கும்போது, உள்ளம் கொதிக்கிறது தோழி.. ஒன்றும் செய்ய முடியாத பேடிகளாய் உள்ளோமே என்று நெஞ்சம் வலிக்கிறது.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. :-(

    ReplyDelete
  2. //
    புத்தனும் போதித்திருக்க
    மாட்டான்
    பதவிக்காக
    பட்டினிக் கொலையும்,
    மண்ணுக்காக
    மனித படு கொலையுமாய்
    அஃறினையாய்
    உயர்தினையாய்
    எத்தனை உயிர்கள்.
    எம் தேசத்தில் மாத்திரம்
    எழுதினானா
    ஒரே நாளில்
    உயிர் பறிக்க
    பிரமன்.
    //

    ”சுறுக்” வார்த்தகள். வலி தீர வழி என்னவோ :(

    ReplyDelete
  3. தர்மத்தின் வாழ்வுதனை சோனியா கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்

    ReplyDelete
  4. சொல்லுவதற்கு வார்த்தை ஒன்றும் எழவில்லை. வலிதான் மிஞ்சுகின்றது.

    ReplyDelete
  5. 30000 ஆயிரம் மக்களை மீட்டுவிட்டதாகவும் இது மிகப்பெரிய வெற்றியாகும் என பட்டாசு சந்தங்களோடு செய்தியை இப்போது பார்த்துவிட்டு வருகின்றேன்.!!!

    இந்த பொய் பித்தலாட்டங்களுக்கு விடிவு கிட்டுமா? எத்தனை காலம் தான் காலத்தின் மேல் பழியைப்போட்டு ஏமாந்து போவோமோ தெரியவில்லை!!!

    ///புத்தனும் போதித்திருக்க
    மாட்டான்
    பதவிக்காக
    பட்டினிக் கொலையும்,
    மண்ணுக்காக
    மனித படு கொலையுமாய்
    அஃறினையாய்
    உயர்தினையாய்
    எத்தனை உயிர்கள்.
    எம் தேசத்தில் மாத்திரம்
    எழுதினானா
    ஒரே நாளில்
    உயிர் பறிக்க
    பிரமன்.////

    நிச்சியமாக இவர்கள் புத்தன் வழி வந்த‌வர்கள் அல்ல!!! பிணம் தின்னி கழுகு, நரி கூட்டத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க கூடும்.

    ReplyDelete
  6. ஹேமா, படத்தை பார்த்த பின் கவிதையின் முலம் என் இனமக்களின் வலி என்னை வதைக்கிறது. ஏன் எதற்கு என்று தெரியாமல் பலி கூடுக்கும் ஆடுகளாய் என் மக்கள்.

    ஏன் இப்படி செய்றாங்க...
    முளை என்பதே இல்லையா அவங்களுக்கு.....
    சரியான பாடுயாக இருப்பாங்க போல் இருக்கு

    ReplyDelete
  7. ச்சே....... இப்படி அவங்க செய்வதினால் எனக்கு சிங்கள இனம் மீதே கோபம் வருகிறது

    ReplyDelete
  8. ஹேமா எதாவது செய்னும் ......

    ReplyDelete
  9. இன்று...
    என் தேசத்தில்
    பட்டினிச் சாவு
    நித்தமும்...
    நச்சு பூச்சியை
    நசிக்கக் கூட
    நெஞ்சில் வலி,
    எம் தேசத்தில்-இன்று
    எத்தனை உயிர்கள்
    எத்தனை விதமாய்

    மன்னியுங்கள் ஹேமா நாங்கள்
    கோழைகள்
    எங்களால் வாய்சவடால் தான் விட முடியும்

    ReplyDelete
  10. //மேவி...ச்சே....... இப்படி அவங்க செய்வதினால் எனக்கு சிங்கள இனம் மீதே கோபம் வருகிறது.ஹேமா எதாவது செய்னும் ...//

    இப்போ சொல்லுங்கள் மேவி.நான் இலங்கைன்னு போட்டு இனியும் எழுதமுடியுமா ?

    ReplyDelete
  11. Em Thesam,onnum seyya maudiyaathaa?

    ReplyDelete
  12. கவிதையை படித்த உடன் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற குற்றவுணர்வு தான் ஹேமா எழுகிறது...

    ReplyDelete
  13. சொல்லுவதற்கு வார்த்தை எழவில்லை. கண்ணீர் தான் வருகிறது.

    ReplyDelete
  14. ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துயர் கேட்டும் கண்டும் மனம் வலிக்கிறது. ஐயோ!!! சீக்கிரம் ஒரு விடிவு வரட்டும் என்ற வேண்டுதல் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை

    ReplyDelete
  15. சத்யமா முடியாது......
    சரியான கேகூ இருக்கு இலங்கையும் இலங்கை அரசும்.....
    அரசு முண்டம்களுக்கு மனச்சாட்சிஎ இல்லையா.....
    இவங்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் தானே சண்டை....
    இதில் அப்பாவி மக்கள் என்ன தவறு செய்தாங்க....
    ஏன் அவர்களை கொல்ல வேண்டும்

    ReplyDelete
  16. மிகவும் வலிக்கிறது ஹேமா

    வல்ல இறைவா!
    இலங்கை அரசால் அழிந்துகொண்டிருக்கும் என் இனத்தை காப்பாற்றுவாயாக

    ReplyDelete
  17. புத்தனும் போதித்திருக்க
    மாட்டான்
    பதவிக்காக
    பட்டினிக் கொலையும்,
    மண்ணுக்காக
    மனித படு கொலையுமாய்
    அஃறினையாய்
    உயர்தினையாய்
    எத்தனை உயிர்கள்.
    எம் தேசத்தில் மாத்திரம்
    எழுதினானா
    ஒரே நாளில்
    உயிர் பறிக்க
    பிரமன்.
    //


    வலிகளை சுமந்துள்ளவரிகள்!

    ReplyDelete
  18. இன்று தான் நீங்கள் வெளியே வந்து உள்ளிர்கள், ஆம் புலிகளே எங்கள் பிரதிநிதி என்று இன்னும் உரக்க சொல்லுங்கள் தயக்கம் வேண்டாம். கருங்காலிகளுக்கு பயந்தது போதும்

    ReplyDelete
  19. விடுதலைப் புலிகளின் அவசர கோரிக்கை.
    http://www.ponmaalai.com/2009/04/blog-post_3907.html

    ReplyDelete
  20. என் தேசம் என்று உரக்கக்கூவும் உங்கள் குரலை மதிக்கிறேன்!!
    விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுகிறேன்!

    ReplyDelete
  21. வார்த்தைகளில்லையம்மா. வலிகள். இயலாமையோடு கூடிய வலிகள். இறப்பதே மேல் என தினம் வதைபடும் இதயத்தின் அழுகை.

    ReplyDelete
  22. Hi kuzhanthainila,

    Congrats!

    Your story titled 'எம் தேசம்...ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st April 2009 06:00:07 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/54677

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  23. வார்த்தைகளால் வலியை சொல்ல முடியாத பேதையாகிவிட்டேன்.. வழித் தெரியாமலும் தவிற்கின்றேன்..

    ReplyDelete
  24. //சொறிந்த புண்ணையே
    சொறிந்து சொறிந்து
    சீழ் வடிய வடிய
    மூடிக் கட்டிய
    வேட்டியும் சால்வையுமாய்
    சிம்மாசனத்தில்...
    மாறிய உருவங்களும்
    மாறாத மனங்களுமாய்
    அரக்க வம்சங்கள்
    எம் தேசத்தில்//

    இனவெறி கொண்டு கொலைவெறியாய் அலையும் சிங்கள பேயரசுகள்...அருமையா சொன்னிங்க

    ReplyDelete