என் பூமியின் புழுதிக் குளியலிலேயே
பூப்பின் புனிதம் ஆனது என் தேகம்.
இப்போ...
கந்தக பூமியாய் அது
சுடுகாடாய் அது
மனிதன் வாழமுடியா மண்மேடாய் அது.
பிணக்காடு கடந்து
இரத்த ஆறு தாண்டியே
விலங்கிட்ட என் தமிழ்த்தாயை
தூர நின்று தரிசிக்கிறேன்.
கண்ணீர் கூட வற்றியவளாய்
பேதலித்துப் பிதற்றியபடி.
தோழா கொஞ்சம் நில்...கவனி
பறக்கும் நிலை தவிர்.
உன் சிறகு முறி.
அல்லது மடக்கி வை.
எங்களுக்கான இறுதி மணித்துளிகளின்
எல்லையில்தான் இன்றைய எம் பயணம்.
தனியாகப் பறக்கும் சக்தியைக்
சற்றுப் புறம் தள்ளு.
உனக்கு....இன்று
தனித்துப் பறத்தல் அவசியமற்றது.
கை கோர்த்துக்கொள்.
நடப்பது ஒன்றே
இப்போதைக்கு எமக்குத் தேவையானது.
கொடு உன் தோழமைக் கரத்தை !!!
ஹேமா(சுவிஸ்)
மனதின் வலிகளையல்லாம் வரிகளாக்கி
ReplyDeleteவழிதேடும் வார்த்தைகள்...
எங்கள் தோழமைக் கரம் எப்போதும் உங்களுக்கு உண்டு ஹேமா...
ENGAL UDAVI ENTRAIKKUME UNDU HEMA.
ReplyDeleteTHOLAMAI KARAM UNGALUKKU UNDU
ReplyDeleteஇந்த மாதிரி கவிதைகள் எழுதுவதற்கும் கஷ்டம்தான்.. நினைக்கவாவது செய்கிறோமே!
ReplyDeleteபோரிட்டு மடிதல் என்பது வீரம்.
கோரத்தால் கொல்லுதல் கோழைத்தனம்.
இலங்கை அரசு செய்வது கையாலாகாத் தனம்.!!!
என்றும் எங்கள் கரம் உங்களை நோக்கியே..
ReplyDeleteவரி வடிவில் வலி.
ReplyDelete|பறக்கும் நிலை தவிர்.
உன் சிறகு முறி.
அல்லது மடக்கி வை.|
ஒவ்வொரு தமிழனும் செய்!
மனதின் வலி வார்த்தைகளில் தெரிகிறது தோழி.. நாங்கள் உங்களோடு இருக்கிறோம்..
ReplyDeleteஉலகில் உள்ள அணைத்து தமிழர்களும் உங்களுடன் உண்டு.
ReplyDelete//தனித்துப் பறத்தல் அவசியமற்றது.
ReplyDeleteகை கோர்த்துக்கொள்.
நடப்பது ஒன்றே
இப்போதைக்கு எமக்குத் தேவையானது.
கொடு உன் தோழமைக் கரத்தை !!!//
உலக தமிழ்ர்களே!....
ஒன்றுபடுங்கள்....
கொடு உன் தோழமைக் கரத்தை !!!
சிறகு ஓடிந்த பறவைகளாக
ReplyDeleteதமிழ்நாட்டின் இதயங்கள் உங்களுக்காக பிராத்திக்கொண்டு தான் இருக்கிறது.
பறக்கும் நிலை தவிர்.
ReplyDeleteஉன் சிறகு முறி.
அல்லது மடக்கி வை.|
நச் ஒவ்வொரு வரியும் வலி
ஒட்டு மொத்த தோழமைக் கரங்கள் எப்போதும் உங்களுக்காக
ReplyDeleteபிணந்திண்ணி கழுகுகளுக்கு மந்தியில வாழும் நாம் .. ஒருபோதும் தளராமல் ஒட்டு மொத்த தோழமைக் கரங்களையும் வழுபடுத்துவோம்..
மனித பினகுழியில் சுகம் கானும் மாமிச மிருகங்களிடமிருந்து நம் இனத்தை காக்க தோழமைக் கரங்களை ஒன்றுபடுத்துவோம்...
நாங்கள் உங்களோடு இருக்கிறோம் ஹேமா..
ReplyDeleteEvery tamilian across the globe is for it,our hands & heart are for it Hema.
ReplyDeleteவார்த்தை ஜாலத்துக்காக சொல்லலை ஹேமா....இந்த மாதிரி ஈழத்து கொடுமைகளை படிக்கும் பொது...ஐயோ நம்மால ஒண்ணுமே பண்ண முடியலையேங்குர கையாலாகத் தனம் நினச்சு வெக்கமா தான் இருக்கு
ReplyDeleteஎன்ன பண்ணலாம்னு யாரவது சொன்னா கண்டிப்பா I'm in
முடிந்தால் சொகுசு வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு போய் இலங்கைக்கு சண்டை போடவும். சும்மா அடுத்தவனை உசுப்பு விட்டு சொறிந்து கொள்ளவதில் என்னதான் உங்களுக்கு இன்பமோ?
ReplyDeleteபிரபாகரன் என்ற கொடுங்ககோலனிடம் மக்களை காப்பாற்ற பேச துப்பில்லை
ReplyDeleteவிடுதலைப் புலிகளின் அவசர கோரிக்கை.
ReplyDeletehttp://www.ponmaalai.com/2009/04/blog-post_3907.html
புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்தால் தமிழரின் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்ற அறியாமையை எண்ணி வியக்கிறேன். ஏன்? நீங்கள் இல்லையா? உங்களால் முடியாதா?
ReplyDeleteவன்னியில் இருப்பவர்களுக்கு யுத்தம் வெறுத்து விட்டது. எத்தனை நாளைக்கு தான் செத்து பிழைப்பார்கள்? அவர்கள் சாகிறார்கள், உங்கள் குடும்பம் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறது. அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு வெளிநாட்டில் இருப்பவர்கள் போய் போராடி இருக்கலாம் தானே? உண்மையை பேசினால் சிறி லங்கா அரசாங்கத்தின் ஆள் என்று அவதூறு சொல்வதை நிறுத்துங்கள். இது போன்ற முட்டாள்தனத்தால் தான் தமிழனுக்கு விடிவில்லை.
///விலங்கிட்ட என் தமிழ்த்தாயை
ReplyDeleteதூர நின்று தரிசிக்கிறேன்.///
அனைவரின் நிலையும் இன்று இது தான்.
கவிதை அருமை
உயிருள்ள வரிகள்..........
ReplyDeleteசொறிப் புள்ளைக்கொரு பொம்பிளை தேவையோ?
ReplyDeleteஈழமாறன்,
தமிழீழப் போராட்டம் முல்லைத்தீவில் வந்து நிற்க உலக நாடுகளின் நெடுஞ்சாலைகளை மறித்து, தேம்ஸ் நதியில் குதித்து, சுவிஸ் ரயிலை மறித்து, பொலிஸ் குண்டித்தோல் உரிக்கும் நிலையில் வந்திருக்கும் இந்த வேளையில், இன்று வன்னி மக்கள் அனுபவிக்கும் அனர்த்தங்கள் அனைத்திற்கும் புலிகளைச் சாட்டி விட்டு வெறுமனே வியாக்கியானம் பேசுவதில் பலன் இருக்குமா என்பது இன்றைய கட்டாய கவனிப்புக்கு உரியதாகும்.
ஏப்ரல் 20, 21 நாட்களில் மட்டும் அண்ணளவாக அறுபதினாயிரம் வன்னிச் சனங்கள் தப்பி வெளியே வந்துள்ளார்கள். இந்தச் சனங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகவே நிற்கிறது. இன்றைக்கு ரோட்டில் இறங்கி வன்னி பூர்வீக மண் என்று முழங்கும் இந்த இளசுகள் இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த மக்களை மறந்துவிட்டு தங்கள் தங்கள் பாடுகளைப் பார்க்க போயிடுவினம். இருந்தாலும் இவர்கள் அந்த மக்களுக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அதை புலிப் பினாமி அமைப்புகள் தங்கள் நோக்கத்திற்காக ஹைஜாக் பண்ணி புலிக்கொடிக்கு புது விளக்கமும் குடுத்து வன்னிச் சனம் தங்கட இடத்திலைதான் இருக்க வேணும் என்று அண்ணையை காப்பாத்தும் நாடகமும் போடுகிற சுத்துமாத்தை வெட்டியோட்டத்தை புரிந்து கொள்ள இளசுகளுக்கு அனுபவமும் இல்லை. யாழ்ப்பாணத்திலை வளரவும் இல்லை. அது ஒரு புறம் இருக்க இன்றுவரை மௌனமாக இருக்கும் புலியை மட்டும் எதிர்க்கும் கூட்டம் அரசாங்கத்தோடு நிற்கும் கூட்டம் கால்களையும் கைகளையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கும் அந்த வன்னிச் சனங்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள். சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக இல்லாமல் அந்த மக்கள் நியாயமான உரிமைகளோடு வாழ என்ன வழி?
மகிந்தவுக்கு ஜனநாயக போறம் காறரின்ரை பாசையில் சொல்வதானால் அண்கொண்டிசினல் சப்போட் குடுக்கும் முத்துக்கிருஸ்ணன் சர்வானந்தவைக் கூப்பிட்டு மகிந்தவுக்கு நாதஸ்வரக் கச்சேரி வைக்கும் இந்தப் புலத்து மக்கள் அமைப்புக்கள் புலியை அழிப்பதற்க்கு மகிந்த சொல்லும் விளக்கத்தை ஆதரிக்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு எண்டதையும் ஒருக்கா சொல்லுங்கோ எண்டு கேட்கக்கூட மனமில்லாதது எதற்காக. ஒரு வேளை 95 வீதத்திற்கும் மேலானவர்கள் (இந்த அமைப்புக்களில் இருப்பவர்கள்) வன்னி அல்லாதோர் என்றபடியினால் வன்னி மக்களை அழிக்க ஏதேனும் அவையின்ர மொழியிலேயே ஹிடின் அஜெண்டா ஏதேனும் வைத்திருக்கினமோ?
1958ல் நூற்றுக்கணக்கான தமிழர்களின் உயிரைக் காவு கொண்டு தொடங்கிய சிங்கள இனவெறியை இரும்புத் தமிழன் மரத்தமிழன் என்று எல்லாம் ஜடத்தைப் பற்றியே பேசி, அரிவு வெட்டி, ஜயநாருக்கு படைத்து விட்டு சிவனே என்று கிடந்த சனத்தையெல்லாம் சீறி எழ வைத்து, தரப்படுத்தல் முறை ஏதோ கறிப்பட்ட முறிப்பு கந்தசாமியின்ரை மகனுக்கு மெடிசின் கிடைப்பதை தடை செய்யும் சட்டம் போல, பூச்சாண்டி காட்டி தொடங்கப்பட்ட போரில் மீண்டும் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் வன்னி மக்கள். தமிழீழப் போராட்டத்திற்கான நியாயப்பாடுக்ள அத்தனையும் தரப்படுத்தலில் இருந்து தொடங்கவில்லை என்றாலும் மேற் சொன்னதே உண்மை. நான் பேசுவது பச்ச பிரதேசவாதமாக இருந்தால்…… அதைப் பேசியதற்காக நான் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை என்பதையும் இங்கு கூறிக் கொள்ள வேண்டும்.
என்ன தலைப்புக்கும் இவன் பேசுபொருளுக்கும் சம்பந்தம் இல்லை என்று எண்ண வேண்டாம். விடயத்திற்கு வருகிறேன். புலிகளிடம் இருந்து ஏகப் பிரதிநிதித்துவத்தை புடுங்கி எடுத்து முதலமைச்சர் நாற்காலியில் இருந்து சொகுசனுபவிக்கும் கனவில் இருக்கும் சக அரசியல் அமைப்புக்கள், தலைவர்களுக்கும் இந்தத் தலைப்புக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
கதையின் சுருக்கம் இதுதான். ஒரு நரி ஆற்றின் மறு பக்கத்தில் செத்துக்கிடக்கும் ஒரு மானைச் சாப்பிடுவதற்காக காத்திருக்கிறது. நரிக்கோ நீந்தத் தெரியாது. அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கும் நரியைப் பார்த்து ஆற்றில் இருந்த முதலை கேட்டது. என்ன பிரச்சனை என்று. நரி சொல்லிற்று “அந்தக் கரையில் உனக்கு ஒரு பொம்பிளை பாத்திருக்கிறன். அதுதான் யோசிக்கிறன்” என்று.
முதலைக்கு உச்சி வரைக்கும் மகிழ்ச்சி. “அதற்காக ஏன் யோசிக்கிறாய்” என்றது முதலை. “இல்லை நீந்த……..” என்று விசயத்தை சொல்லி முடிக்க முதலே ‘முதுகில் ஏறு நான் உன்னை மறுகரைக்கு ஏற்றிச் செல்கிறேனே’ என்றது முதலை.
முதலையின் முதுகில் சவாரி செய்த நரி மான் இறைச்சியை சாப்பிட்ட பின் திரும்பி வந்தது. இன்னும் பாக்கி இறைச்சி இருப்பதால் வருகிற வழியில் “எல்லாம் சரி பெட்டையின்ரை தகப்பன் வெளியிலையாம். அவர் வந்தவுடனை பேசி முடிச்சிடலாம் என்று சொன்னது நரி. மறுநாள் மீண்டும் சவாரி. முதலைக்கும் ஒரே கிழுகிழுப்பு. (கொழும்புக் குழுவிலை மனிசிமாரைப் பற்றிக் கதைச்சவருக்கு மாதிரி) நாள் நெருங்க நெருங்க சும்மாவா பின்னே…
மிகுதி இறைச்சியையும் தின்று விட்டு திரும்பிய நரி கரை சேரும் வரைக்கும் கதை கொடுத்து விட்டு கரையிலை ஏறியவுடன் முதலையைப் பார்த்து “சொறிப் புள்ளைக்கு ஒரு பொம்பிளை கேட்குதோ” என்று விட்டு போய் விட்டதாம். சிங்களப் படைகளின் மூர்க்கத்தனத்திற்கு பலியாகிப் போன எனது ஊர்ப் பெரியவர் சொன்ன கதை இது. இனி விடயத்திற்கு வருவோம்.
இன்று வன்னி மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திக் கொண்டிருப்பது யுத்தம் அல்ல. தமிழ் மக்களை கூண்டோடு முடித்துக் கட்ட மகிந்த சிந்தனை போட்டிருக்கும் இந்திய சிந்தனைக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கும் ஒரு இன அழிப்பின் முதல் அத்தியாயம். அது என்னவோ அழிவு என்று வரும்போது பண்டார வன்னியன் என்ற முட்டாள் ஆகட்டும் இப்போ முடிசூட்டி வைத்திருக்கும் கரிகாலன் ஆகட்டும் இந்த வன்னி மக்கள் பலிகடா ஆக்கப்படுவது வெறும் வருடங்கள் கொண்ட வரலாறல்ல. பழைய மாணவர் சங்கம் வைத்து தொகை தொகையா காசு சேர்த்து யாழ்ப்பாணத்திலை இருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிப் போட்டு வன்னி மண், அடங்கா மண், பூர்வீக மண், புடுங்கா மண் என்று உசுப்பேத்தி அந்த மக்களை கொன்று தொலைத்து, சின்னா பின்னமாக்கி ஒரு சந்ததியை அழித்துக் கொண்டிருக்கும் யாழ் மையவாத சிந்தனையாளர்களின் சூட்சுமம் புரியாமல் செத்து மடியும் அந்த மக்களின் வரலாறு இன்று நேற்றுத் தொடங்கியதல்ல.
எடுத்ததற்கெல்லாம் கடிதம் எழுதும் சங்கரியாகட்டும் சூழைமேட்டில் சுழட்டிச் சுட்ட டக்ளஸ் ஆகட்டும் மகிந்வின் முன் மானம் கெட்டுப்போய் நிற்க்கும் அம்மான் ஆகட்டும் கிடந்த மிச்ச ஆயுதத்தையும் கொடுத்து விட்டு சிறுபிள்ளைத்தனமா பேசிக் கொண்டிருக்கும் பிள்ளையான் ஆகட்டும் அந்த்தப் புள்ளையானுக்கும் அம்மானுக்கும் விலக்குப் பிடிக்கும் தலித் முன்ணியாகட்டும், டெல்லிக்கும் கொழும்புக்கும் ஆலாய்ப் பறக்கும் ஜனநாயகக்காறர் ஆகட்டும், உல்லாசக் கப்பலில டிஸ்கஸன் நடத்துகின்ற ஜேர்மனி என்ஜிஓ க்கள் ஆகட்டும் அதுக்கையும் இதுக்கையும் எண்டு நிற்கும் தமிழ் போறம் காறர் ஆகட்டும் லண்டனிலை இருந்து ஆலாப் பறக்கும் அக்காமார் ஆகட்டும் (இந்த லிஸ்டில யாராவது விடுபட்டு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். அடுத்த கட்டுரைகளில் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன்.) வன்னி மக்களின் அழிவுக்கெல்லாம் பிரபாகரன் மேல் பழி போட்டு விட்டு தங்கள் அரசியல் அபிலாசைகளுக்காக அப்பாவித் தழிழர்களின் இன அழிப்பை மௌனமாக இருந்து போற்றிக் கொண்டிருக்கும் இந்த தமிழின விரோதிகளின் அரசியலுக்கு தமிழ் பேசும் மக்கள் தகுந்த பாடம் புகட்டும் நேரம் வெகு தூரத்தில் இல்லை.
புலிகள் அராஜகவாதிகள் என்று வாய் கிழிய பேசிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பானத்திலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டபின் செய்து முடித்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை உதிரம் உறைந்து போகும் செய்தி. புலியைக் கண்டவனை, கண்டவனைப் பற்றிச் சொன்னதை, கேட்டவனை, கேட்டுக்கொண்டு நின்றததைக் கண்டவனை, பக்கத்தில் நிண்டவனை என்று சுட்டுத் தள்ளப்படும் அப்பாவி மக்களின் பிணங்களை சிலவேளை நாம் எண்ண மறந்திருக்கலாம். மகிந்தவும் பிரபாவும் சுட்டுக் குவிக்கின்ற பிணங்களின் எண்ணிக்கை அதை விட கூட என்பதாலும் கொல்லப் படப்போபவர்களில் அண்ணையும் ஒருவர் என்றதாலும் தமிழ் போறம் காறருக்கு இந்தக் கணக்கு ஒன்றும் பெரிதாகப் பட்டிருக்காது.
தீவுப் பகுதியில் சின்னஞ் சிறு பிள்ளைகள் உட்பட தாய் தகப்பன் என்று ஒரு குடும்பத்தையே படுக்கையில் வைத்து சுட்டுப் பொசுக்கியது மாத்திரமல்லாமல் உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டு, புலி ஆதரவாளர்களுக்கு கெலிவரச்செய்ததை யாரும் வெகு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. பின் வளவில், தெரு முனையில் கடற்கரையில் பள்ளிக்கூட மைதானத்தில் என்று சுட்டுத் தள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களின் எண்ணிக்கை, புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது சுட்டுப் பொசுக்கிய மக்கள், போராளிகளின் எண்ணிக்கையை விட அதிகமானது என்பது ஒரு அப்பட்டமான உண்மை. புலிகள் அல்லது ஆதரவாளர்கள் என்று ஈபிடிபி சுடுவது நியாயம் என்றால், நீங்கள் புலிகளை அராஜகவாதிகள் என்று சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது.
கிளிநொச்சியில் வளைத்துப் போட்ட காணியெல்லாம் பறிபோய் விட்டது என்ற ஏக்கத்தில் கடிதம் கடிதமாயே எழுதிக் கொண்டிருக்கும் சங்கரிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி டக்ளசுக்கு போய்விடும் என்று தெரிந்ததும் தான் கொத்துக் குண்டு போடுற விசயமும் வன்னிச் சனம் சாகிற விசயமும் தெரியவந்தது போல. ஏதோ இருபதுக்கு இருபது கிறிக்கெற் விளையாட்டில் நாடுகளின் ஓட்டங்களைச் சொல்வது போல் புலிகள் 200, 300, இப்ப 1500 என்று தினம் அறிவிக்கும் பிணங்கள் எல்லாம் உங்களைப் போல சொகுசாகச் சாப்பிட்டு மகிந்தவின் விருந்திலே திளைத்துப் போய் உறங்கிக் கிடக்கும் ஈனர்களது அல்ல. பதிலே போடமாட்டார் என்பது தெரிந்திருந்தும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் ஜயா பக்கத்திலை இருக்கும் மகிந்தவுக்கு ஒரு போஸ்ற் காட் போடுவதற்கு அப்ப உமக்கு நேரம் கிடைக்கவில்லையா? இப்பதான் நேரமும் காலமும் கூடி வந்திருக்குப் போல. கூட்டணியில் எம்பியாக இருந்த காலத்தில் அங்கிருந்த வறிய தமிழர்களின் காணிகளை வளைத்துப் போட்டு ராசதானியம் நடத்திய ஜயா, அந்த காணி பறிகொடுத்த மக்களையே புலிகள் இன்று கேடயமாக வைத்திருப்பதும், சிங்கள இனவெறி இராணுவம் தினம் தினம் சுட்டு விழுத்துவதும் இப்பவாவது உங்களுக்குத் தெரிய வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே? பிரபாகரன் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதிலும் கடிதம் போடுவதிலும் காலத்தைக் கழிக்காமல், பறிபோன காணியெல்லாம் மீட்டெடுக்கும் கனவில் மிதக்காமல், வன்னி மக்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது (காகத்திற்கு எப்பவும் …………..) நல்லது என்று நினைக்கிறேன்.
டக்ளசை விட்டுவிடுங்கள். வெளிப்படையாகவே எனக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை கிடையாது. அதிலும் வன்னி மக்களைக் கொல்வதற்கு எனக்கு நேரம் இல்லை. யாழ்ப்பாணத்து மக்களைச் சுடுவதற்கே எனக்கு ஆள் பத்தாது. இதிலை வன்னி மாடுகளை சுடுவதற்கு எனக்கு எங்கே நேரம் இருக்கிறது என்று சொல்லி மகிந்த ஜயா நீங்கள் எத்தினை பேரைச் சுடுகிறீர்கள் என்பதல்ல முக்கியம், வடக்கு மாகாண சபை எனக்குத் தான், பிறகு கருணாவை கொண்டு போய் முதலமைச்சர் ஆக்கிப் போடவேண்டாம் என்று முதலமைச்சர் பதவிக்காக அணில் ஏறவிட்ட நாய் போல மகிந்த மரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர் கொலைகளை நிறுத்தும்படி கேட்க முடியாது. முதலைமைச்சர் பதவிக்காக மகிந்த அரசை முதுகில் சுமக்கும் டக்கிளஸ் முதலைக்கு வடக்கு மாகாண பொம்பிளைக் கனவு என்பது வன்னி மக்களின் அதி உயர் எண்ணிக்கையில் நடந்து கொண்டிருக்கும் மரணங்களில அல்லவா தங்கியிருக்கிறது.
சங்கரி முதலை டக்ளஸ் முதலைக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதை நிருபிப்பதற்காக மக்களின் கொலைகளை எல்லாம் பிரபாகரன் தான் செய்கிறார், இராணுவம் ஆகாயத்தைப் பார்த்துதான் சுடுகிறது என்பது போன்று கதைவிட்டவர் கடிதம் போட்டவர். ஒரு நாளைக்கு கிளிநொச்சிக்கு போவியள் தானை குறைஞ்சது பறிபோன காணிகளுக்கு எல்லை போடுறதுக்காவது.. அப்ப தெரியும் மக்களின் பலம் என்பது என்ன என்று.
நான் போடச்சொன்ன கடிதம் தமிழ் மக்களை அழித்தொழிக்க நடக்கிற திட்டத்தை நிறுத்தும்படி கேட்டு எழுதச் சொன்ன கடிதம். அதென்ன கடிதம், காலையும் மாலையும் பிஸ்கற் அதோட தேத்தண்ணி. சங்கரி ஜயா நீங்கள் காணி புடிப்பியள். வால் புடிப்பியள். மன்மோகன் சிங்கனுக்கு…… புடிப்பியள் எண்டு தெரியும். ஜோக் அடிப்பியள் எண்டு சடவன்குளத்து ஜயனாணை எனக்குத் தெரியாது. அதுவும் அடிபட்டு நொந்து உறவிழந்து உடுத்த உடைகூட தங்கள் மானத்தின் பாதிமறைத்த நிலையில் தப்பி வந்திருக்கும் அப்பாவி வன்னி மக்களை வைத்து நீங்கள் ஜோக் அடிப்பீர்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
தழிழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் 70களில் எப்படி இருந்ததோ அதை விட பத்து மடங்கு தேவை இப்போது இருக்கிறது. எத்தனை பேர் சாகிறார்கள். எத்தனை பேர் அங்கவீனர்களாகிறார்கள் என்பது எமக்கு முக்கியமில்லை. புலிகள் அழியவேண்டும் என்று சொல்கிற இனவெறி அரசு, அதற்கு முண்டு கொடுப்பதற்கும் முண்டி அடித்துக் கொண்டு போய் கோப்பத்தாயாவுக்கு விசுவாசிகள் என்று காட்டி பேப்பருக்கு பேட்டியும் கொடுக்கிற டொக்டர் மாரும் இருக்கிற வரையில் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் இருந்து கொண்டேதான் இருக்கப் போகிறது.
கொழும்புக்குப் போய் என்ரை மனிசி படிச்சவா. நல்லா சமைப்பா. மினுக்கிக் கொண்டுதான் வேலைக்குப் போவா என்று இலங்கை வானொலி சக்கடத்தார் பாணியில் அவவுக்கு பாசிலைப் பிடிக்கும். கிரிபத்தும் கட்டச் சம்பலும் தொட்டுத் தொட்டுச் சாப்பிட மனிசிக்கு விருப்பம். என்று தன்னைப் பற்றியும் தன் மனிசியைப் பற்றியும் பேசியிருக்கும் இந்த டொக்டர்மாரும் அக்காமாரும் எப்படி தமிழ் மக்களின் பிரச்சனை பற்றிப் பேசப் போனார்கள் என்று எண்ணும் போதே வெட்கமாக இருக்கிறது. இந்தப் போராட்டம் தொடங்க முன்னரே வெளிநாட்டுக்கு வந்து படிப்பு பிறகு வேலை குடும்பம் குட்டி …… மண்ணாங்கட்டி என்று அத்தனையும் முடிஞ்சு, புலி பலமாக இருக்கும் போது எதுக்கு வீண் வம்பு என்று எலிகளாக இருந்த இந்த புலம்பெயர் மக்கள் கொழும்புக்குப் போய் நடாத்தி வந்திருப்பது கொமடி சோ.
அட அதிலை ஒரு டொக்டருக்கு ஜயின்ஸ்ரைனின் தியறி வேறை. டொக்டர் ஜயா இதென்ன சக்கரை வியாதிக்கு ஊசி போடுற விளையாட்டா தமிழ் மக்களின் பிரச்சனை. ஆரப்பா உங்களை எல்லாம் தெரிவு செய்தது. சத்தியமா சன் ரிவி அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குனர் கண்ணிலை பட்டிருந்தா எல்லாரையும் அந்தாள் இந்தியாவுக்கு கொண்டு போயிருக்கும். மனிசியைப் பற்றி ஒருவன் ஜோக் அடிக்கிறான். பேட்டி குடுக்கிறன் என்று ஒராள் ஜோக்கடிக்கிறா. தியறி சொல்லிறார் ஒருவர். சில வேளை வன்னி மக்களுக்கு இப்ப தேவை சிரிப்புத்தான் என்று சிம்போலிக்கா சொல்லியிருப்பாங்களோ. கொன்ஸ்ரன்ரைன் நீங்கள்தான் மீண்டும் ஒரு ஆக்கத்தில் சொல்ல வேண்டும். ஆனா அடுத்த விசிற்றில உங்கட சீற் காலி என்றது மட்டும் எனக்கு தெளிவாத் தெரியுது.
வன்னியில் சிங்கம் அண்ணேன்ரை ஆக்களின்ரை அடி ஒரு பக்கம். புலி அண்ணையின்ரை ஆக்களின்ரை அடி இன்னொரு பக்கம். பசி பிணி நோய் மறுபக்கம் என்று மத்தளத்திலும் மோசமான நிலையில் வன்னி மக்கள் இருக்க கொழும்புக்கு போனவைக்கு மனிசி புராணம் பாடுவதற்கும் மகிந்த புராணம் பாடுவதற்க்குமே நேரம் இருந்திருக்கிதென்றால் அதிலும் ஒராளுக்கு பிளேனிலை ஏறினதிலிருந்து 25 பவுண் ரிக்கற்றுக்கு காணாது என்று கேட்டதிலிருந்து, போய் இறங்கின கையோட சாப்பிட்டது, மற்றது போட்டதிலிருந்து கூட்டம் எப்படா முடியும் பேட்டி எப்படா கொடுப்பன் என்ற அக்கறையிலை திரிஞ்சது வரையிலை யாருக்கும் வன்னி மக்கள் என்ற ஒரு துன்பியல் (அண்ணையின்ரை துன்பியல் கிடையாது) நிகழ்வே அவர்களின் அக்கறைக்கு வரவில்லை என்றால் சிங்கள அரசுகள் எமது பிரச்சனையை தீர்ப்தில் அக்கறையீனம் கொண்டிருப்பதை எப்படி சாடுவது.
லண்டனில இருந்து ஆலாய் பறந்து போனனீங்கள் கதைக்கிறதுக்கு தன்னும் நேர காலத்திற்கு போறியளே. விடிய கூட்டத்திற்கு மதியானம் எழும்பிப் போறியள். அதுசரி ரைம்க்குப் போயும் என்னத்தை கிழிக்கப் போறியள். டொக்டர் ஜயாவுக்கு படுத்துக்கிடுத்து போனாத்தான் தியறி எல்லாம் கிளியராய் வருமோ என்னவோ.
அம்பாறையில் 11 வயதுச் சிறுமியை பாலியல் வண்புணர்ச்சிக்கு உட்படுத்திய கொடூரத்தைச் சொன்ன தாயிடம் பிள்ளையான் சொல்கிறார் எனக்குப் பவர் இல்லை. அம்மானிட்டைப் போங்கோ என்று. இரண்டு கிழமை களித்து அம்மான் அம்மணமாய் போய் நின்று பதவிப் பிரமாணம் செய்கிறார். பத்திரிகைகள் சொல்கின்றன மாண்பு மிகு அமைச்சர் என்று. எக்கோணமிக்ஸ் பத்திரிகையின் ஓடியோ பேட்டியில் மக்களுக்கு பொலிஸ் பவர் தேவை இல்லை காசிருந்தா போதும் என்று தமிழ் மக்களின் 30 வருட போராட்டத்திற்க்கு காசையும் வேலுப்பிள்ளையிரை மகனையும் சாட்டிவிட்டு பிள்ளையானுக்கு அறிவில்லை என்று யாழ்ப்பாணத் திமிரில் பேட்டி கொடுத்திருக்கும் இந்த முதலை மகிந்தவை சுமப்பதற்க்கும் கிழக்கு முதலமைச்சர் போஸ்ற் தான் காரணம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
இவைக்கு முண்டு குடுத்த தலித்தியம் கிழக்கியம் குலுக்கிற சங்கங்களை என்ன என்றது. லண்டன் கிருஸ்ணணோடு கருணாவுக்கு மதியுரைஞர் வேலைபார்த்து களைத்துப் போய் இப்ப பிளையானுக்கு மதியுரைஞரா இருக்கினம். பிரான்ஸ் லண்டன் என்று தலித்திய மாநாடு வைச்சு வாய் கிழிய தலித்தியம் பேசியன எல்லாரும் இப்ப மகிந்தவுக்கு அண்கொண்டிசனல் சப்போட்டாம். யாழ் மையவாதத்தால் வேளாள மேலாதிக்கத்தால் எண்ணிலடங்காத் துன்பங்களை அனுபவித்த தலித் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த போன நீங்கள், இதே யாழ் மேலாதிக்கத்தால் படு மோசமாகப் பாதிக்கப்பட்டு கல்லி இழந்து இன்று மிஞ்சியிருந்த கோவணமும் இழந்து நிங்க்கும் மக்களின் மரணங்களை உங்கள் கொள்கைகளை விற்கும் ஆயுதமாகப் பயன் படுத்துகிறீர்களே ஒடுக்கு முறை பற்றிப் பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஜனநாயகக்காறரோட சேர்ந்து திஸ்ஸ விதாரணவுக்கு புரப்போசல் கொடுத்ததோட தலித் பிரச்சினை முடிஞ்சுது என்று நினைப்புப் போல. அன்றைக்கு நிசாம் காரியப்பர் சொன்னவர் நல்ல காலம் ஹெல உருமயாக்காரன்கள் வரேல்லை வந்திருந்தா தலித் முன்னணிக்காரரையும் ஜனநாயகக்காறரையும் கட்டி அணைத்து கூட்டுக்கலவியே செய்திருப்பாங்கள் என்று. அன்றைக்கு சொன்னாங்கள் இன்று போராடிக் கொண்டிருப்பவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் தலித் மக்கள் என்று. இன்று நீங்கள் சொன்ன தலித் மக்களும்தான் பெருமளவில் கொல்லப்படுகிறார்கள். ஏன் வாயடைத்துப் போய் நிற்கிறீர்கள். துக்கம் தாங்க முடியவில்லை என்று ரீல் விடுகிற பிளானோ. அதென்ன பிரதீபனின் குறும்படத்தில் இலங்கை இராணுவத்தை மோசமாகச் சொல்லியாச்சு என்று வேற பீல் பண்ணுறீங்களாம் உண்மையோ?
முதலை என்று சொல்ல முடியாது. வேண்டும் என்றால் கபறக் கொய்யா என்று சொல்லலாம். வேறுயாருமல்ல. சிறீ ரெலோதான். அட அங்கை இருக்கிறவங்களுக்குத்தான் விட்ட காணியைப் பிடிக்கிறதும் பட்டென்று போடுறதையும் தவிர வேறு தெரியாது விட்டுவிடலாம். ஜயா சிறீ ரெலோ தலைவரே வெளிநாட்டிலை இருந்து ஊருக்குப் போனனீங்கள் கொஞ்சம் காசு உளைச்சுக் கொண்டு போயிருப்பிள். போன கையோட வன்னி மக்களுக்கு அள்ளிக் கொடுத்து அரசியல் செய்யப் போறியளாக்கும் எண்டு பாத்தா. போறியள். வெள்ளை வான் ஒண்டு வாங்கிறியள். வாங்கின கையோட வங்கி மனேச்சரைக் கடத்திறியள். காசும் கேக்கிறியள். கேட்டா புலிகள் சாட்டு. லண்டனிலை அவங்கள் வணங்கா மண் என்று பேரை வைச்சு வெளிநாட்டிலை சுருட்ட நீர் வெளிநாட்டிலை ஒரு கோயிலைத் திறந்திருக்கலாம். வெண்புறா மாதிரி ஒரு சரிற்றியை தொடங்கியிருக்கலாம். அல்லது இளையோர் முதியோர் கன்னி கழியாதோர். சாமத்தியவீடு செய்தோர். செய்வதற்காக எப்ப மகளுக்கு மாதவிடாய் வரும் என்று பாத்துக் கொண்டிருப்போர் என்று ஏதாவது ஒரு அமைப்பைத் தெடங்கி உண்டியலைக் குலுக்கி காசு சேத்திருக்கலாம். அதெல்லாத்தையும் விட்டுப் போட்டு வெறும் கோவணத்தோடு மட்டும் நிற்க்கும் மக்களைக் கடத்தி உது என்ன விளையாட்டு. உருப்படுமோ உந்த அரசியல். அட கோதாரி விழுவார் என்ன செய்தாலும் இந்த வன்னிச் சனத்தை அல்லவா சாகடிக்கிறியள்.
சுகு அணி - சித்தர் அணி என்று அறுபத்தெட்டு அணிகளா பிரிந்திருக்கும் இந்தக் கட்சிகள் குறைந்த பட்சம் ஒரு கூட்டறிக்கை. அணிய எதுவும் இல்லாத வன்னி மக்களைச் சுடாதையுங்கோ என்று ஒரு அறிக்கை. புலிகளை அழிப்பதற்க்கு எங்கள் பூரண ஆதரவு உண்டு. ஆனா புலியின் பெயரில் ஒரு சந்ததியையே அழிப்பது ஏற்றுக்ககொள்ள முடியாது. என்று. உடல் சிதறி ஊனம் பட்டு இறந்த சிசுவைக்கூட புதைக்க நேரம் இன்றி ஓடி ஓடி மடிந்து கொண்டிருக்கும் இந்த வன்னி மக்கள் உங்கள் அக்கறைக்குள் வரவில்லை என்றால் நீங்கள் பிரபாகரன் இருப்பதற்கான நியாயத்தை இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கே வழிகோலுகிறீர்கள் என்ற வரலாற்று உண்மையை மறந்து விடவேண்டாம்.
சரி ஸ்ரீறிலங்காவில் இருக்கிற அணிகள் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்க வேண்டும். ஏதாவது கதைத்தால் மகிந்த பாதுகாப்பை தளர்த்துவார் அவையின்ர வெள்ளை வானிலை வந்தே அவைய போடுவாங்கள்;. அதனால அவை வாய் திறக்கிறதேயில்லை. ஆனால் இந்த புலத்தில உள்ள புலிக்கு எதிரான அரசுக்கு ஆதரவான சங்கங்கள் போறங்கள் எல்லாம்? லண்டன் பாரிஸ் ஸ்ருட்காட் என்று கூட்டத்திற்கு மேல் கூட்டம் போட்டு போன் மேல் போன் போட்டு உலகத்தில உள்ள எல்லாரையும் திரட்டி கையெழுத்து வேட்டையும் நடத்துகின்ற பலம் இருக்கிற உங்களுக்கு வன்னிச் சனங்களுக்காக ஏன் வாயே திறக்க முடியவில்லை? இந்த இளவு விழந்த வன்னிச் சனங்களுக்கு இங்கிலுசும் தெரியாது. மேல்தட்டு பழக்கவழக்கங்களும் தெரியாது. ஆதாலை போறங் காறற்ரை மொழி விளங்காது எண்டு விட்டுட்டியளாக்கும்.
கேதீஸ்க்கு நினைவுக் கூட்டம் வைக்கிறியள். நல்ல விசயம். லசந்தாவுக்கும் போராட்டம் நடத்தினியள். கட்டாயம் செய்யத்தான் வேணும். ஆனால் வன்னிச் சனத்திக்காக ஒரு கூட்டமும் இல்லை. ஒரு போராட்டமும் இல்லை. வன்னி மாடுகளுக்கு படிக்கவும் தெரியாது அதைவிட சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது என்றதாலையோ? அது மட்டுமே லசந்தாவுக்கு போராட்டம் நடத்தினியல். உலகப் புரட்சிக்காரரும் வந்தாங்கள். பெரும்பாலும் இலங்கையை உலகப்படத்தில தான் பார்த்திருப்பாங்கள். ஆனாலும் ஒரு சொலிடாரிட்டிக்காக அவங்களும் குரல் கொடுக்கிறாங்கள். உலகப் புரட்சியை வெல்லுறாங்களோ இல்லையோ அவங்கள் பனரைக் கொண்டு வந்து கட்டினா ஜனநாயகத் தலைவி புலி மாதிரிப் பாய்ஞ்சு பனரை அவுக்கிறா? ஜனநாயகத் தலைவர் கொண்டுவந்து வீசிட்டு போறார். நீங்கள் நுனி நாக்கில டெமோகிரசி கதைச்சுக் கொண்டு இன்னும் உந்த இயக்கப் பறியலை காவிக்கொண்டு தான் திரியிறியள். நாங்கள் முன்னாள் உறுப்பினர்கள் என்று சொல்லாட்டி உங்களுக்கு அரசியல்ல இடமில்லைப் போலத்தான் கிடக்கு. ஆனால் கொழும்புக்கு போன கொமடி கோஸ்டி ஒரு பெக்கோக்கள். உங்க மீடியாவில தங்கட விலாசத்தை காட்டேக்க வேட்டி அவிழிறதும் தெரியாம உளறிப் போடுவினம். ஆனால் நீங்கள் ஆபத்தான பேர் வழிகள். சிமிக்கிடாம போய் வந்து காதும் காதும் வைச்சமாதிரி உங்கட கிச்சினிலயே எல்லாம் முடிஞ்சிடும். நீங்கள் மஹிந்தவுக்கு பின்னுக்கோ ரணிலுக்குப் பின்னுக்கோ இல்லை சந்திரிகாக்குப் பின்னுகோ என்றது எல்லாம் அந்தக் கதிர்காமத்தானுக்குத்தான் வெளிச்சம். இந்த முதலைகள் ஒன்றும் அந்த முதலைகளுக்கு குறைந்தவர்களில்லை.
அது இருக்க, தப்பி வந்த மக்களை அரசாங்கம் நன்றாக நடத்துகிறதாம் என்று ரிபிசி வானொலியில் கொமடிக் குழுவில் பங்கு பற்றிய அறிவிப்பாளர் சொல்கிறார். இவர் மாற்றுக் கருத்து, ஜனநாயகம், தலித்தியம் பெண்ணியம் இலக்கியச் சந்திப்பு என்று ஐரோப்பாவில எங்காவது கூட்டம் நடந்தால் அங்க இவரைச் சந்திக்கலாம். வன்னியில் மாடுகளைக் கூட கம்பி வேலி போட்டு அடைத்து வைத்தது கிடையாது. கூடாரங்களை அடித்து சுத்தி கம்பி வேலி போட்டு வைத்திருப்பதை பற்றி புகழ்ந்து பேசும் இந்த முன்னாள் போராளியை என்ன சொல்வது. 80 களின் நடுப்பகுதியில் பூசா முகாமில் படு மோசமாக அடைத்து வைக்கப்பட்ட கைதிகளில் நானும் ஒருவன். திறந்தவெளி கட்டடத்தில் சுற்றிலும் கம்பி வேலியிட்டு எம்மை அடைத்து வைத்திருந்தர்கள். (எனது சகோதரி அப்போது ஒரு கடிதம் போட்டிருந்தார். கடவுள்தான் உன்னைக் காப்பாற்றி வைத்திருக்கிறார் என்று. நான் எழுதிய பதில் கடவுள் கம்பிவேலி போட்டுத்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டுமா என்று. கம்பி வேலிக்கு வெளியே நின்று சேறு படாமல் பிஸ்கற் கிடைக்கிறதா என்று கேட்டு விட்டு வந்த கொமடிக் குழுவுக்கு மனிதர்களை அடைத்து வைத்திருக்கும் போது ஏற்படும் வலியை உணர்கிற பக்குவம் இல்லாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.) அதற்கு சற்றும் குறையாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த முகாம்களை பார்வையிட்ட இந்த கொமடிக் கிங் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக பேசப் போயிருக்கிறார்கள் என்றால் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்டுவதை சிங்கள அரசுகள் இழுத்தடிக்க வேறு என்ன ஆயுதம் வேண்டிக்கிடக்கிறது.
வன்னித் தேர்தல் கனவில் மிதக்கும் இவர் வவுனியா போய் பத்திரிகையாளர் மாநாடு வேறு நடத்தி இருக்கிறார். அரசாங்கத்திடம் வாங்கிற பணம் போதாது என்று வன்னி மக்களிட்டை புளொட் அடிக்கிற கொள்ளை ஒன்றும் பரம ரகசியமல்ல. தங்கள் முன்னாள் போராளிக் குடும்ப உறுப்பினர்களையே கடத்தி அட்டகாசம் பண்ணும் இவர்கள் சாதாரணமானவர்களை எவ்வாறு நடத்துவார்கள். அவர்களிடமே சில ஆயிரத்திற்கு டில் போட்ட சிங்கன் இவர். இவருக்கு ஒரு சின்ன அட்வைஸ். லெக்சன் கேக்க வன்னிக்கு போகேக்க அண்டவெயாரை சொஞ்சம் இறுக்கிப் போட்டுக் கொண்டு போங்கோ. வன்னி மக்கள் இருக்கிற கொதிக்கு என்ன நடக்கும் எண்டு என்னாலை ஆருடம் கூற முடியாது.
இவற்றை இன்னும்மொரு தோஸ்துவும் உந்த கொமடி கோஸ்டியோட போனவராம். அவர் பசிலோட தோள்ள கைபோட்டுத் தானாம் கதைப்பார் அவ்வளவு குளோஸ். உங்களுக்கு கொழும்பிலை யாரையாவது தூக்கோணுமெண்டா அவருக்கு போன் போட்ட போதுமாம். இந்த அறுவார் அந்த அறுவாரோடு சேர்ந்து தாஜ்சமுத்திராவில சாப்பிட்டு மற்றதையும் போட்டுட்டு வன்னிச் சனத்தை துலைக்கிறது என்றே முடிவெடுத்திட்டாங்கள்.
தமிழ் மக்களுக்கு பிரச்சனை ஒன்று இருந்ததே கிடையாது. இந்த வன்னி படிப்பறிவில்லாததுகள் தான் சும்மா சுட்டுத் திரியிறாங்கள் என்பது போல் எத்தனை பேர் செத்தாலும் மகிந்த செய்வதெல்லாம் சரி என்று தம்பட்டம் அடிக்கும் இவர்கள் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முனைகிறார்கள் என்றால் இவர்கள் பற்றி விழிப்பாக இருக்க வேண்டிய கடமை தமிழ் பேசும் மக்களுக்கு உண்டு. இல்லை தூங்கும் போது கோவணத்தை உருவிக் கொண்டுபோய் மகிந்த சகோதரர்களுக்கு பரிசாக் கொடுக்கவும் இந்த முதலைகள் தயங்க மாட்டார்கள்.
இதுக்குள்ள சில வட்டன்கள் தகப்பன்ர பொலிற்றிக்கல் இன்புலவன்சில கொமடிக்குழுவில சேர்க்கப்பட்டவை. அவை அங்க வந்த செக்கிற்றரி பொம்பிளையளுக்கு கிஸ் அடிக்க முயற்சியாம். தமிழனைக் கொண்டே அடகு வைக்கிறதுக்கு என்றே திரியுறாங்கள்.
பொம்பிளைக் கனவில் முதுகில் சுமந்த முதலை போல தங்கள் முதலமைச்சர் பதவிக்காக மகிந்த அரசை முதுகில் சுமக்கும் டக்கிளஸ் முதலையாகட்டும் சங்கரிப் பேயாகட்டும் சித்தாத்தப் பிசாசாகட்டும் இல்லை வெளிநாடுகளில் இருந்து சென்ற கொமடிக் குழுவாகட்டும் ஒன்றரை இலட்சம் மக்களைக் காவு கொடுத்து முல்லைத்தீவின் ஒரு மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் இந்தப் போராட்டம் வெறும் வன்முறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் ஏற்பட்ட போராட்டமல்ல. அந்தப் போராட்டத்திற்கான நியாயத் தன்மைகளை ஏகபிரதிநிதித்துவத்துக்குள் குழிதோண்டிப் புதைத்த புலிகளும் புதினம் பாத்துக் கொண்டிருந்த இந்த முதலைகளும் சேர்ந்து விட்ட வரலாற்றுத் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். புலிகளை ஒழித்துக் கட்டிய கையோடு மகிந்த அரசு சொல்லும் சொறிப்புள்ளைக்கு முதலமைச்சர் பதவி வேண்டிக் கிடக்கோ என்று. இது பெரிய அரசியல் ஆய்வுகளை செய்து நான் கண்ட முடிவல்ல. இலங்கையின் சரித்திரத்தில். தமிழ்பேசும் மக்களின் உரிமை மறுப்புக்காக சிங்கள அரசுகள் தமிழர்களையே பயன்படுத்திய வரலாறுகளை கண்டதும் கேட்டதாலும் கண்டுகொண்ட முடிவு. இன்று எமக்கு முன்னால் இருக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றே ஒன்றுதான். புலிகள் பலம் இழந்திருக்கும் இந்த வேளையில் தமிழர்களி;ன உரிமைகளை நசுக்குவதற்கான திட்டங்கள் தயாராகவே இருக்கும். இலங்கையில் எல்லா இன மக்களும் மீண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் அதற்கான அடிப்படையாக இருக்கும் ஒரு அரசியல் தீர்வு வென்றெடுக்கப் பட வேண்டும். சிங்களவர்களை தமிழர்கள் நம்புவதற்க்கும். தமிழர்களை முஸ்லீம்கள் நம்புவதற்கும் என்று பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப இந்த்த தீர்வு மிக மிக அவசியம். அந்தத் தீர்வை இன்று இருக்கும் எந்தத் தலமையும் வென்றெடுக்காது என்பதே நிஜம். அந்தத் தீர்வுக்காக குரல் கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதே இன்றைய அவசர அவசியமாகும்.
இவ்வளவு பிணங்களையும் நேரில் பார்த்தும்..தானும் ஒரு காரணம் என்று உணர்ந்தும்..கல்லுளி மங்கனாக இருக்கும் பிரபாகரன் அரக்கனா? அல்லது இராணுவம் சொல்லுவதையும், காட்டுவதையும் நம்பும் ராஜபக்ச அரக்கனா?
ReplyDeleteஇவ்வளவு துயரத்திற்கும் காரணம் பிரபாசுரனே..
ஒரு அறிவுமில்லாமல் இந்தியாவை பகைத்தும்.. உலக நடப்புகள் தெரியாமல் துப்பாக்கியை பிடித்தும்.. மக்களை மந்தைகளாக்கியும்..இன்று அதே மக்கள் மிருகங்களை விட கேவலமாக கொள்ள படும் போது..எதுவும் செய்ய முடியாத பொண்ணையாக .. அதே மக்களின் சாவில் தன்னுயிரை காக்க ஒழித்து கொண்டிருக்கும் பிரபாவை தான் இந்த கேள்விகள் கேட்க பட வேண்டும்..
என் அனைத்து இணைய நண்பர்களுக்கும் வணக்கம்.உங்கள் ஆதரவிற்கு நன்றியும் கூட.உடலும் உள்ளமும் சோர்ந்தே போய்விட்டது.
ReplyDeleteஎப்படி என்னைச் சமாதானப்படுத்தி ஒரு நிலைக்கு வர என்று தெரியாமல் தத்தளிக்கிறேன்.முடியாமல் இருக்கிறது.அரசியல்...நடக்கிறது.
அதில் இழப்புக்களும் ஏமாற்றங்களும் இயல்பு.ஆனால் என்று அது நிரந்தரம் இல்லை.மீண்டும் ஏதோ ஒரு பாதை திறக்கும் என்று மனம் நினைத்தாலும் என் மக்களின் நிலை தமிழனின் எதிர்காலம் கேள்விக்
குறியாய் நின்று பயமுறுத்துகிறது.
மனம் ஓய்வெடுத்துக்கொள்ள நானும் ஓய்ந்துவிட்டேன்.இப்படியே ஓய்ந்தால் என்னாவது ?மீண்டும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.
நன்றியோடும் அன்போடும் ஹேமா.
Hi kuzhanthainila,
ReplyDeleteCongrats!
Your story titled 'உலகத் தமிழா ஒன்று சேர்...ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st April 2009 06:20:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/54940
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team