சிலசமயங்களில்
என்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !
மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !
பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
பட்டென்று கட்டவிழ்த்து,
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு,
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !
சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !
தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.
கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!
ஹேமா(சுவிஸ்)
ஹேமா...தலைப்பு ரொம்ப வித்தியாசமா இருக்கு...
ReplyDelete'யாகாவாராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
ReplyDeleteகவிதையை படித்து முடித்ததும் இந்தக் குறள் தான் நினைவுக்கு வந்தது..
//பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
"பட்" என்று கட்டவிழ்த்து
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !//
இந்த வரிகளில் வார்த்தைகளில் அருமையாக விளையாடியிருக்கிறீர்கள்...
/*மின்னலின் வேகத்தோடு
ReplyDeleteமனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.*/
ம்... யாகாவாராயினும் நாகாக்க... ஆனால் எத்தனை சிரமம் மின்னலின் வேகத்தோடு... அருமையாகக் கூறினீர்கள். சொல்லைக் கொட்டிவிட்டு அள்ள முடியாத துயரை...
பார்வைகளில்
ReplyDeleteபட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
"பட்" என்று கட்டவிழ்த்து
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !
hema really nice ma
தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
ReplyDeleteகாவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.
கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!
varthaigal vilayadi erukindrathu
vithyasamana sinthanai
valthukkal
தலைப்பும் அதன் கவியும் அருமை தோழி
ReplyDelete..மின்னலின் வேகத்தோடு
ReplyDeleteமனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !..
நச்
//சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !///
பிண்ணிட்டிங்க தோழி
தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
ReplyDeleteகாவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.
நிரைய பிரச்சனைகளுக்கு இந்த நாக்குதான் காரணமாயிருக்கு,
நச்சுன்னு எழுதியிருக்கீங்க.
கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!
வசவும் நல்லா தான் இருக்கு.
///"நாசமாய்ப் போக..."///
ReplyDeleteஎதிர்வினை தலைப்பு??
அருமை...
ReplyDelete(வழக்கம் போலவே)
சொற்களை விட மனதினை காயப்படுத்தும் ஆயுதங்கள் இல்லை.. அருமையான பதிவு தோழி..
ReplyDelete//..மின்னலின் வேகத்தோடு
ReplyDeleteமனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !..
//
சூப்பர்
//சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !//
அருமையான வரிகள்!
மிகவும் அருமையாக இருந்தது அக்கா,
அப்புறம் இன்னுமொரு விடயம், நான் உங்களுக்கு மிகவும் பக்கத்தில் - கொக்குவில்!
புகைப்படமும், தலைப்பும் அருமையா இருக்கு ஹேமா...
ReplyDelete//காறித் துப்பும் அளவிற்கு
ReplyDeleteகாழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !//
நல்ல வரிகள்தான்..
//தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
ReplyDeleteகாவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.
கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!//
நல்லதா போச்சு,,,, நல்லாவே காவல் இருக்கின்றீர்கள்
//தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
ReplyDeleteகாவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.//
ஹேமா,
இந்த வரிகளில் கவிதையின்
முழு ஆழமும் பொருளாகிறது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுத நல்வாழ்த்துக்கள்.
அது என்ன ‘பட்‘ என்று ‘பட்டென்று‘ என்றே எழுதியிருக்கலாமே ?
- “அகநாழிகை“ பொன். வாசுதேவன்
தலைப்பை பார்த்தும் நமக்கே பயம் வருகிறது? வாசிக்கும் போது நம்மை அறியாமலே தலைப்பை உச்சரிக்க வேண்டியிருக்கிறது.
ReplyDeleteசரி அது இருக்கட்டும். ஏன் இந்த தடிமனான வார்த்தை யார் மீது கோபம்? படமும் படு பயங்கரமாக இருக்கிறது.
Kadaisiyai varum vaarthai Naasamai po.It shows how hurt u r in ur heart.
ReplyDeleteவணக்கம் புதியவன்.இப்போ எல்லாம் ஜமாலை முந்தி வந்து பின்னூட்டம் தாறீங்க.சந்தோஷம்.
ReplyDeleteஇந்த நாக்கு இருக்கே...ரொம்பப் பொல்லாதது.கத்தியை விடக் கொடுமையானது.சில அனுபவங்களின் பாதிப்பே வரிகளாகின.நன்றி.
தலைப்பை "நாசமாய்ப் போக"ன்னு வைக்க கொஞ்சம் மனசுக்குச் சங்கடமாகவே இருந்தது.ஆனாலும் பொருத்தமாயிருக்கும் என்று நம்பியே வைத்துவிட்டேன்.எனக்கும் யாராச்சும் திட்டுவாங்களோ தெரியல.
நன்றி அமுதா.நாக்கினால் எத்தனை மனத் தெறிப்புக்கள்.குடும்பப் பிளவுகள்.அதுவும் எங்கள் தமிழர்கள் மத்தியில் இன்னும் அதிகம் இந்த நாக்கின் ஆட்சி.
ReplyDeleteசக்தி,நாக்கின் அநியாயம் சிந்தனை அல்ல...அனுபவமே.கண்டது கேட்டது.
ReplyDeleteவாங்க சுரேஷ்.ஏன் இப்பிடி ஒரு தலைப்புன்னு என்னைத் திட்டாம நச் ன்னு கருத்து சொல்லிட்டுப் போறீங்களே.நன்றி.
ReplyDeleteவாங்க முத்துராமலிங்கம்.நாக்கை நமக்குள் அடக்கினால் சரி.நாக்கிற்குள் நாங்கள் அடங்கினால் நம்கதி அதோகதிதான்.
ReplyDelete//வசவும் நல்லா தான் இருக்கு.//
என்னை நீங்க வசவல தானே !
வாங்க...வாங்க உருப்படாதவன்.
ReplyDeleteஎங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்.
கிளிய-ஒட்ட ஒண்ணும் கிடைக்கலியா?புதுசா பதிவுகளையும் காணோம்ன்னு இருந்தேன்.அழகா பின்பகுதி அறிய ஒரு பதிவு கண்டேன்.அசத்திட்டீங்க போங்க.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி உருப்படாதவன்.
தீயினால் சுட்டபுண் ஆறிடும் ஆறாதே
ReplyDeleteநாவினால் சுட்ட வடு.
இதற்கு இந்த பதிவைவிட கவிதை நடையில் ஒரு சிறந்த விளக்கம் இருக்க முடியாது.
வழக்கம் போல் வரிகல் அனைத்தும் அற்புதம்
ReplyDelete//
ReplyDeleteசொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !
//
தலைப்ப பாத்து பயந்து போயிட்டேன்! ஆனா சுய கழிவிரக்கத்தோட வார்த்தைப் படிவுகள் ரொம்ப அழகாயிருக்கு!
"சிலசமயங்களில்
ReplyDeleteஎன்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !"
ஹேமா . நான் ஒரு மருத்துவ குறிப்பில் என்ன படித்தேன் என்றால் நாம் வளரும் சுழ்நிலை தான் நாமக்கு இந்த மாதிரி வார்த்தைகளை கற்று தருகிறது. இதை ஒரு மனதின் வடிவுகால் யாக பார்க்கிறார்கள். இதை காடுபடுத்த தியானம் தான் ஒரே வழி
"மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !"
ஆமம். ஒரு வித ஆசுவாசம் கிடைப்பது உறுதி யாரையது திட்டிய பின்.......
அனால் அதன் பின் வரும் குற்ற உணர்ச்சியை நாமால் தங்க முடியாது
"பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
பட்டென்று கட்டவிழ்த்து,
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு,
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !"
அந்த சாத்தானை அடக்குவது ரொம்ப கஷ்டம். இந்த ஒரு ஆயுதம் தான் எய்தவனையே பதம் பார்க்கும் .
"சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !"
கவலைப்பட கூடாது...... அவர்கள் எல்லாம் சொன்னால் புரிந்து கொள்ள்வர்கள்.
"தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு."
ஹேமா அந்த குரங்குக்கு காவல் காப்பதற்கு பதில்.... அதை கொன்று விடுங்கள்.
உங்க மனதின் உள்ளே தானே இருக்கிறது. அதுவும் உங்கள் சுயத்தின் ஒரு அங்கம் தானே. உயிரை கொள்ள துடிக்கும் அங்கம் தேவையா ????
"கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!"
சுவைகளையும் சுவைப்பது அந்த நாக்கு தான்.
"எய்தவன் இருக்க அம்பை நோவதேன்."
உங்கள் நாவு அம்பு தான்....
நெல்லைக் கொட்டினா அள்ளிடலாம்; ஆனா சொல்லைக் கொட்டினா அள்ளமுடியாதுனு சொல்வாங்க.
ReplyDeleteரொம்ப தெளிவா நாவடக்கம் வேணுங்கிறதை சொல்லிருக்கீங்க. அருமை.
ஹேமா .....
ReplyDeleteஇதெல்லாம் வாழ்வை சுவைக்காதவர்களின் பேச்சு
ஹேமா....
ReplyDeleteஇதுவரைக்கும் நான் யாரையும் திட்டியதில்லை....
ஆனால் நிறைய திட்டு வங்கி இருக்கிறேன்
வந்ததுமே கண்ணில்ப்பட்டது இந்த "நாசமாய்ப் போக" என்பது தான்! அக்காவிற்கு என்னாடா நடந்தது இந்த விரோதி வருஷத்திலனு ஓடி வந்து பார்த்தா இந்த பாலாபோன நாக்கை போட்டு தாக்கிட்டிங்களே!
ReplyDelete///மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ///
ம்ம்ம்ம் அறுத்து எறிதல் நல்லதே!
thalaippu sema nachunnu irukku
ReplyDeleteவாங்க பாண்டியன்.நாக்கைப்போல நம்மோடு கூட இருக்கும்
ReplyDeleteஎதிரி வேறு யார்?
வாங்கோ சுபாங்கன்.முதல் வரவுக்கு முதல் நன்றி.
ReplyDeleteநீங்கள் சாதாரணமா உங்கட ஊருக்குப் பக்கதிலதான் நான் எண்டு சொல்லிட்டுப் போய்ட்டீங்க.எனக்கு கண் கலங்கிப்போச்சு சுபாங்கன்.
இதுதான் உறவின் வலிமையோ !இன்னும் வாங்கோ சந்திப்போம்.
//ஞானசேகரன் ... நல்லதா போச்சு,,,, நல்லாவே காவல் இருக்கின்றீர்கள்.//
ReplyDeleteகாவல் இருந்தாலும் தாண்டிப் போகும் ஒரு சாத்தான் இந்த நாக்கு.கவனம்.
வாசு அண்ணா...பட்டென்று மாத்திட்டேன்.நன்றி.
ReplyDelete//கடையம் ஆனந்த்...சரி அது இருக்கட்டும். ஏன் இந்த தடிமனான வார்த்தை யார் மீது கோபம்? படமும் படு பயங்கரமாக இருக்கிறது.//
ReplyDeleteஆனந்த்,சத்தியமா உங்களோட இல்லை.
//Muniappan Pakkangal said...
ReplyDeleteKadaisiyai varum vaarthai Naasamai po.It shows how hurt u r in ur heart.//
முனியப்பன்,மன்னிச்சுக்கொள்ளுங்க.
இப்பிடித் திட்டியும் இந்த நாக்குத் திருந்திற மாதிரி இல்லையே !
மிக அசத்தலாக உள்ளது வரிகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஹேமா!
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteஅண்மையில் ஒரு பின்னூட்டத்தில்,
//பேனாவோ பெருநாவோ, அவற்றின் முனையில் தான் புதைந்திருக்கின்றன பாற்கடலும் ஆலகாலமும்// என்று நான் எழுதியதிருந்ததும் நினைவுக்கு வந்தது.
நவாஸ் பெயர் மாத்திட்டீங்க.நான் வேற யாரோன்னு நினைச்சேன்.
ReplyDeleteநீங்கதானா?வாங்க...வாங்க.உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி.
அபு...என்ன சின்னதாக் கருத்து.பயந்திட்டீங்களா ?
ReplyDelete//கயல்...தலைப்ப பாத்து பயந்து போயிட்டேன்! ஆனா சுய கழிவிரக்கத்தோட வார்த்தைப் படிவுகள் ரொம்ப அழகாயிருக்கு!//
ReplyDeleteவாங்க கயல்.அழகான பெயர் உங்களுக்கு.முதன் முதலா வாறீங்க.இனியும் எப்பவும் வரணும்.சந்தோஷம்.இந்தத் தலைப்பு வைக்க மனசுக்கு சரில்ல.
அசிங்கமாத்தான் இருக்கு.ஆனாலும் இதுதான் சரி.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
//மேவி...ஹேமா . நான் ஒரு மருத்துவ குறிப்பில் என்ன படித்தேன் என்றால் நாம் வளரும் சுழ்நிலை தான் நாமக்கு இந்த மாதிரி வார்த்தைகளை கற்று தருகிறது. இதை ஒரு மனதின் வடிவுகால் யாக பார்க்கிறார்கள். இதை காடுபடுத்த தியானம் தான் ஒரே வழி//
ReplyDeleteமேவீ,உதை விழும் உங்களுக்கு.என்னமோ...என் நாகுத்தான் பேசிச்சுன்னு சொன்ன மாதிரி !நான் கொஞ்சம் அதிகம் பேசுவேந்தான்.என்றாலும் எனக்குப் பிடிக்காவிட்டால் ஒதுங்கிக் கொள்வேன்.நாக்குக்கு முன்னிடம் கொடுக்க மாட்டேன்.கவிதை வரிகள் அனுபவம்.கண்டதும் கேட்டதும்தான்.என் நாக்கு இல்லை.
மேவீ,கவிதை வரிகளை மிகவுமே ரசிக்கிறீர்கள்.நன்றி.நாக்கால் கெட்ட நல்விஷயங்கள் நிறையவே !
ReplyDeleteநாக்குப் பொல்லாதது.
உழவன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.அடிக்கடி வாருங்கள்.நானும் வருகிறேன் உங்கள் இல்லம் தேடி.
ReplyDeleteகலை அக்கா சுகம்.ஆனா நாக்கை அறுத்து எறியச் சொல்லிட்டீங்க.பிறகு என்ன செய்யலாம் !
ReplyDeleteஷீ-நிசி...சுகமா !கருத்துக்கு நன்றி.
ReplyDeleteநன்றி இப்னு.உங்கள் பாராட்டுக்கள் மனதுக்குச் சந்தோஷமாய் இருக்கு.
ReplyDeleteஎன்ன ஹேமா .....
ReplyDeleteஇப்படி சுருக்கமா reply????
தற்கால அடிமைகள் ன்னு ஒரு விஷயத்தை எழுதி இருக்கேன் ...... வந்து பாருங்க
//
ReplyDeleteபிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
//
ஆஹா.....
மிகச்சிறப்பான அழுத்தமான தமிழ்!
எனக்கு வைரமுத்து ஞாபகம் வருகிறது....
ஹேமா வார்த்தைகளில் அமிலம் தெறிக்கிறது...சூப்பர்...
ReplyDelete