Monday, April 13, 2009

இல்லாத ஒன்றைத் தேடி...

சோர்ந்து போனதாய் நினைவில்லை.
மனிதம் தேடும் பொழுதுகளில்
சுயநலம்
துரோகம்
களவு
வறுமை
நோய்
காமம்
சபலம்
ஏமாற்றம் இன்னும் இன்னும்...
சுற்றிய திசையெல்லாம் எதிர்கொள்கிறேனோ.

நேர்மையாய்...உண்மையாய்
ஒரு மனிதம் தேடி
பல நேரங்களில்
பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
முகத்தில் புன்னகை
முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.

என்றாலும்...என்றாலும்
ஒருபோதும் தேடுதல் இல்லா
கணங்கள் இல்லை.
உமி சலித்து அரிசி தேடி
கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல.

புறம் கூறா ஒரு மனிதனையும்
பசிக்கு இரங்கி,
பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
நிச்சயமாய் சந்திப்பேன்.
நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
என்னால் மனிதம்
தேடாமல் புறம் தள்ளி
குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!

ஹேமா(சுவிஸ்)

படம் தந்தது-கடையம் ஆனந்த்

45 comments:

  1. //நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
    என்னால் மனிதம்
    தேடாமல் புறம் தள்ளி
    குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!//

    நல்ல தேடல் ஹேமா
    இது மனிதத்தின் தேடல்...
    இல்லாத ஒன்றின் தேடல் இல்லை...
    தவறவிடப் பட்ட ஒன்றின் தேடல்
    மனிதத்தை தொலைத்து விட்டுத் தான்
    நம்மில் பலர் மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...கவிதையில் அதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  2. தேடல் தொடங்கிவிட்டது

    (மீண்டும் மீண்டும்)

    ReplyDelete
  3. வரிகள் அனைத்தும் அருமை

    மீண்டும் தேடல்... இது உண்மையான மனிதனை தேடி

    நல்லாயிருக்கு

    உங்கள் தேடல் கிடைத்திட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இல்லாத ஒன்றைத் தேடி மனிதன் எங்கேயோ அலைகின்றான்... நல்ல தேடல் ஹேமா...

    //நேர்மையாய்...உண்மையாய்
    ஒரு மனிதம் தேடி
    பல நேரங்களில்
    பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
    முகத்தில் புன்னகை
    முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்//

    அருமையான வரிகள்

    ReplyDelete
  5. //புறம் கூறா ஒரு மனிதனையும்
    பசிக்கு இரங்கி,
    பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
    நிச்சயமாய் சந்திப்பேன்.
    நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
    என்னால் மனிதம்
    தேடாமல் புறம் தள்ளி
    குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!//

    உங்கள் நம்பிக்கை வீண்போகாது ..

    வாழ்த்துகளுடன் ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  6. இந்த கவிதையிலும் என்னைக் கவர்ந்தது அந்த இறுதி பத்திதான்.
    யார் எப்படிப் போனால் என்ன, நான் இப்படித்தான் இருப்பேன் எனும் சுயநலம்... ஒருபக்கம்.
    யார் எப்படிவேண்டுமானாலும் இருங்கள், என்னால் தேடும் வேட்கையின்றி இருக்கவியலாது எனும் தத்துவஞானம் ஒருபக்கம்..

    ஆனா, பிரதிபலன் இல்லாத மனிதரை நீங்கள் சந்திக்கவே முடியாது. ஏனெனில் அப்படியொருவர் இன்னும் பிறந்திருக்க முடியாது. பிரதிபலன் என்பது தேவையில்லாத அல்லது மனிதன் ஒதுக்கவேண்டிய செக்ஷன் இல்லை. ஆசையில்லாத மனிதனைத் தேடுவது போல இருக்கிறது இதுவும்.!!!

    அருமையாக இருக்கிறது. வார்த்தைகளை நறுக்கி, பத்திகளைக் குறுக்கி, தத்துவத்தோடு முறுக்காக வந்த கவிதை!!

    ReplyDelete
  7. தேடுங்கள்.. தேடுங்கள்..
    ஆனால் ஆதவன் சொன்னது போல் கிடைக்கமாட்டார்கள், ஆனால் தேடுதலை விட்டுவிடாதீர்கள்!
    பிரதிபலன் நோக்காத ஒன்று மரத்தை தவிரை ஒன்றுமில்லை என்று நினைக்கின்றேன்.
    அதே போல் தேடல் எவரும் மனிதரில்லை.

    கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  8. தேடல் கவிதையா? தேடுங்க... தேடுங்க. ஆதவன் சொன்ன கருத்துக்கள் ஏற்புடையது. கவிதையின் கருவும் வார்த்தை வடிவும் மிகவும் அருமையாக இருக்கிறது அக்கா.

    ReplyDelete
  9. மீண்டும் தேடல் ஆரம்பம். எனினும் மிக சிக்கலான தேடல்.

    இத்தகைய ஒருவர் கிடைப்பது அரிது. அடுத்தவரைப் பற்றி புறம் பேசுவது உடன் பிறந்தவரின் மாமிசத்தை சாப்பிடுவது போன்று இழிவானது. இந்த உலகில் மனிதரின் பற்களிடையில் மாமிசத் துண்டுகள் இல்லாதவர் எவரேனும் உண்டோ.

    ReplyDelete
  10. தேடுதல் அருமை... அதிலும் மனித நேயம் தேடுதல் அருமை. மிகவும் பிடித்த வரிகள்...

    //புறம் கூறா ஒரு மனிதனையும்
    பசிக்கு இரங்கி,
    பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
    நிச்சயமாய் சந்திப்பேன்.
    நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
    என்னால் மனிதம்
    தேடாமல் புறம் தள்ளி
    குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!
    //

    ReplyDelete
  11. "சோர்ந்து போனதாய் நினைவில்லை.
    மனிதம் தேடும் பொழுதுகளில்
    சுயநலம்
    துரோகம்
    களவு
    வறுமை
    நோய்
    காமம்
    சபலம்
    ஏமாற்றம் இன்னும் இன்னும்...
    சுற்றிய திசையெல்லாம் எதிர்கொள்கிறேனோ."

    அப்படி இல்லை .....
    எல்லோரும் நல்லவர்களே ....
    சமயம் சந்தர்பம் தான் அவங்களை அப்படி செய்ய வைக்கிறது....
    நீங்கள் தேடுவது ஒரு சமுக மற்றதை....
    அதை ஏன் தனி மனிதனிடம் எதிர் பார்க்கிறிங்க

    "நேர்மையாய்...உண்மையாய்
    ஒரு மனிதம் தேடி
    பல நேரங்களில்
    பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
    முகத்தில் புன்னகை
    முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்."

    என்ன செய்வது .....
    சமுகமே அதற்க்கு வழி வகை செய்துவிட்டது

    "என்றாலும்...என்றாலும்
    ஒருபோதும் தேடுதல் இல்லா
    கணங்கள் இல்லை.
    உமி சலித்து அரிசி தேடி
    கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல."

    நீங்கள் அரிசியை பதபடுதுவது போல ...
    ஏன் மனிதர்களை நீங்கள் மாற்ற கூடாது????

    "புறம் கூறா ஒரு மனிதனையும்
    பசிக்கு இரங்கி,
    பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
    நிச்சயமாய் சந்திப்பேன்.
    நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
    என்னால் மனிதம்
    தேடாமல் புறம் தள்ளி
    குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!"

    மற்றவர்கள் தேடி சலித்து விட்டார்கள் .....
    நீங்க தொடர்ந்து தேடுங்க .......

    ReplyDelete
  12. மனிதர்கள் மனிதமோடு சிலர் இருக்கிறார்கள் ; நாம் தான் அவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் ......

    ReplyDelete
  13. உங்கள் தேடலில் சிறிது மாற்றம் செய்து கொண்டால் ; வெற்றி உண்டு.....

    ReplyDelete
  14. ////நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
    என்னால் மனிதம்
    தேடாமல் புறம் தள்ளி
    குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!//
    வாழ்த்துக்கள்.. எனக்கென்னவோ அது கஷ்டம் போல் தெரிகிறது...
    கவிதையில் படம் காட்டிய ஹேமாவுக்கும்,
    படத்தில் கவிதை வடித்த கடையம் ஆனந்திற்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. இருப்பதை இல்லாத ஒன்றாக நினைத்தால் - இல்லாதது இருப்பதாகிவிடாது.

    எனக்கு ஒரு பாடல் நினைவிற்கு வருகின்றது ...
    "இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ......"

    http://www.youtube.com/watch?v=eTF-Ko8m19Q

    ReplyDelete
  16. வாங்க புதியவன்.முதலாவதாய் ஓடி வந்திட்டீங்க.என்னவோ மனம் பாதித்த வரிகள் எனக்குள்.மனிதம் என்கிற ஒன்று இல்லாமலே போய்விட்டதா என்கிற கவலை எனக்குள்.நானும் ஒரு மனிதன் தான்.எனக்குள் இருக்கிறதா?மற்றவர் கண்களுக்கு நான் எப்படி?மனிதத்தை நேசிப்பதால் நான் கண்ட கஸ்டம் என்று எனக்குள் ஆயிரம் பாதிப்பு.

    ReplyDelete
  17. வாங்க ஜமால்,என்னா ஆச்சு உங்களுக்கு?கண்ணூறு பட்டமாதிரி உங்க வரவும் பின்னூட்டங்களும் குறைஞ்சுபோச்சே!உப்புமடச் சந்திலயும் உங்களைக் காணோம்.என்ன ஆச்சு ஜமால்?

    ReplyDelete
  18. அபு,உங்களையும்தான் இப்போ அடிக்கடி காணமுடிவதில்லை.
    உப்புமடச் சந்தியில் சுவாரஸ்யமான பதிவுகள் போட்டும் வரலியே நீங்க.

    ReplyDelete
  19. //ஆ.ஞானசேகரன் ...
    இல்லாத ஒன்றைத் தேடி மனிதன் எங்கேயோ அலைகின்றான்... நல்ல தேடல் ஹேமா...//

    ஞானசேகரன்,நீங்களும் நினைக்கிறீர்களா இல்லாத ஒன்று என்று.இருக்கிறது மனிதம்.சுயநலம் கூடி நிற்பதால் ஒளிந்து கிடக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. Manitham thedi,illaatha onrai thedu kavithai nalla irukku.

    ReplyDelete
  21. மனிதமும், மனிதநேயமும் இல்லாத ஒன்று அல்ல.. காணாமல் போனவை.. நல்ல தேடல் தோழி.. கவிதையும், குறிப்பாக படமும் அருமை..

    ReplyDelete
  22. காய்த்ரீ,வாங்கோ.முதன் முதலா வந்து நல்லாயிருக்கு சொன்னதுக்கு நன்றி.

    ReplyDelete
  23. //ஆதவா, பிரதிபலன் இல்லாத மனிதரை நீங்கள் சந்திக்கவே முடியாது. ஏனெனில் அப்படியொருவர் இன்னும் பிறந்திருக்க முடியாது. பிரதிபலன் என்பது தேவையில்லாத அல்லது மனிதன் ஒதுக்கவேண்டிய செக்ஷன் இல்லை. ஆசையில்லாத மனிதனைத் தேடுவது போல இருக்கிறது இதுவும்.!!!//

    ஏன் ஆதவா,நீங்கள் சொன்னதுபோல ஆசையில்லாத மனிதன் இல்லையென்றாலும் அந்த ஆசை அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவரை அவனால் பிரச்சனையில்லை.அடுத்து பிரதிபலன் எதிர்பார்க்காத மனிதர்களைக் காணலாம் ஆதவா.இருக்கிறார்கள்.

    ReplyDelete
  24. வாங்க முத்துராமலிங்கம்.கருத்துக்கு நன்றி.இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. நன்றிஆனந்த்.உங்ககிட்ட சுட்ட போட்டோதானே.ரொம்பநாளா அதுக்கு ஒரு கவிதை எழுதன்னு நினைச்சு எழுதிட்டேன்.உண்மையில் கதை சொல்லும் அருமையான நிழல்.

    இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. //செய்ய்து அகமது...மீண்டும் தேடல் ஆரம்பம். எனினும் மிக சிக்கலான தேடல்.

    இத்தகைய ஒருவர் கிடைப்பது அரிது. அடுத்தவரைப் பற்றி புறம் பேசுவது உடன் பிறந்தவரின் மாமிசத்தை சாப்பிடுவது போன்று இழிவானது. இந்த உலகில் மனிதரின் பற்களிடையில் மாமிசத் துண்டுகள் இல்லாதவர் எவரேனும் உண்டோ.//

    ஏன் கஸ்டம்.மற்றவர்களை விடுத்து நாம் அப்படி வாழத்தொடங்கி விட்டால்....!

    ReplyDelete
  27. இராகவன்,ஏன் இப்போ அடிக்கடி வாறதில்ல?கருத்துக்கு நன்றி.இனிய நல்நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. //மேவி...அப்படி இல்லை .....
    எல்லோரும் நல்லவர்களே ....
    சமயம் சந்தர்பம் தான் அவங்களை அப்படி செய்ய வைக்கிறது....
    நீங்கள் தேடுவது ஒரு சமுக மற்றதை....
    அதை ஏன் தனி மனிதனிடம் எதிர் பார்க்கிறிங்க//

    மேவி,ஒவ்வொருவரது சுயநலமும் மற்றவர்களின் சந்தோஷத்தைக் கெடுக்கிறதே.வாழ்வையே அழிக்கிறதே.ஒரு தனி மனிதனும் சேர்வதுதான் சமூகம்.தனி மனிதன் தன்னைச் சரி செய்தாலே சமூகம் திருந்தின மாதிரித்தானே !

    ReplyDelete
  29. //மேவி ... மனிதர்கள் மனிதமோடு சிலர் இருக்கிறார்கள் ; நாம் தான் அவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் //

    இது சொன்னது சரி.

    //உங்கள் தேடலில் சிறிது மாற்றம் செய்து கொண்டால் ; வெற்றி உண்டு//

    என்ன மாற்றம்?எம்மை நாம் முதலில் மனிதம் நிறைந்தவர்களாய் மாற்றிக் கொள்வோம்.சரியா.

    //எழுச்சி மிஸ்ஸிங்//

    என்ன ?என் முழு ஆவேசமும் இருக்கு மேவி.

    படம் ஆனந்துக்குத்தான் நன்றி.இந்தக் கவிதையில் பாதிப் பாராட்டுக்கள் அவருக்கும்.

    ReplyDelete
  30. //(இரவீ )... இருப்பதை இல்லாத ஒன்றாக நினைத்தால் - இல்லாதது இருப்பதாகிவிடாது.

    எனக்கு ஒரு பாடல் நினைவிற்கு வருகின்றது ...
    "இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ......"

    http://www.youtube.com/watch?v=eTF-Ko8m19Q//

    இரவீ இல்லை என்று எதுவுமே இல்லை.இருக்கிறது.இடம்தான் அறியவில்லை.சிலசமயம் எமக்குள்ளே கூட இருக்கிறது.
    தெரியாமல் வாழ்கிறோம்.அதுதான் தேடல்.நீங்கள் தந்த பாடல் கேட்டேன்.எனக்குப் பிடித்த சீர்காழி கோவிந்தராஜன் பாடல் அது.நன்றி உங்கள் அக்கறைக்கு.

    ReplyDelete
  31. //தமிழ்ப்பறவை...வாழ்த்துக்கள்.. எனக்கென்னவோ அது கஷ்டம் போல் தெரிகிறது...
    கவிதையில் படம் காட்டிய ஹேமாவுக்கும்,
    படத்தில் கவிதை வடித்த கடையம் ஆனந்திற்கும் வாழ்த்துக்கள்...//

    மனிதம் அப்படி விலையாகிப்போய்விட்டதா !இல்லாமலே போய்விட்டதா ?அப்படிப் பார்த்தால் நாங்கள் கூட மனிதம் தொலைத்தவ்ர்களா !

    நன்றி அண்ணா.ஆனந்திற்கும் வாழ்த்துப் போய்ச்சேரும்.

    ReplyDelete
  32. முனியப்பன் இன்றைய நிலைமையில் மனிதத்தைத் தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்கு.நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  33. //கார்த்திகைப் பாண்டியன் ...
    மனிதமும், மனிதநேயமும் இல்லாத ஒன்று அல்ல.. காணாமல் போனவை.. நல்ல தேடல் தோழி.. கவிதையும், குறிப்பாக படமும் அருமை..//

    நன்றி பாண்டியன்.
    தேடுவோம்.
    இல்லையேல் நாம் அதுவாக இருப்போம்.படம் ஆனந்திடம் சுட்டது.அவருக்குத்தான் நன்றி.

    ReplyDelete
  34. \\நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
    என்னால் மனிதம்
    தேடாமல் புறம் தள்ளி
    குப்புறப் படுத்திருக்க முடியவில்லை \\

    பேசும் பேச்சுகளை முதலில் புறம் தள்ளுங்கள் ...

    ReplyDelete
  35. நேர்மையாய்...உண்மையாய்
    ஒரு மனிதம் தேடி
    பல நேரங்களில்
    பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
    முகத்தில் புன்னகை
    முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்//

    நல்ல தேடல்...
    தங்களின் தேடல் நிச்சயம் ஒரு நாள் கிட்டும்...
    கவிதை அருமை ஹேமா...
    திரும்ப திரும்ப படிக்க தோன்றுகிறது!!

    ReplyDelete
  36. புறம் கூறா ஒரு மனிதனையும்
    பசிக்கு இரங்கி,
    பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
    நிச்சயமாய் சந்திப்பேன்.

    nalla thedal

    aanal appadi oruvan erukindrana???

    erunthal enaku kuda

    arimugapaduthungal

    nanum nallayitru nalla manithanai

    kandu

    ReplyDelete
  37. என்றாலும்...என்றாலும்
    ஒருபோதும் தேடுதல் இல்லா
    கணங்கள் இல்லை.
    உமி சலித்து அரிசி தேடி
    கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல.

    arumai intha uvamai

    silaruku mattume thondrum ithu

    pondra varigal hema

    valiyudun kudiya kavithai

    manathai vittu agalathu

    pic is also so nice

    ReplyDelete
  38. நேர்மையாய்...உண்மையாய்
    ஒரு மனிதம் தேடி
    பல நேரங்களில்
    பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
    முகத்தில் புன்னகை
    முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.

    nanum thedukindren

    aanal intha varthaikaluke palaruku

    artham theriyavilai

    enna seyya???

    ReplyDelete
  39. தேடல் மனிதர்களின் வளர்ச்சிக்கு வித்து.............

    ReplyDelete
  40. நேர்மையாய்...உண்மையாய்
    ஒரு மனிதம் தேடி
    பல நேரங்களில்
    பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
    முகத்தில் புன்னகை
    முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.
    ///
    உண்மை!!
    உங்கள் சொற்களில்
    அனுபவம்
    தெறிக்கிறது!!

    ReplyDelete
  41. /*என்னால் மனிதம்
    தேடாமல் புறம் தள்ளி
    குப்புறப் படுத்திருக்க முடியவில்லை */
    நம்பிக்கை வீண் போகாது..

    ReplyDelete
  42. ///நேர்மையாய்...உண்மையாய்
    ஒரு மனிதம் தேடி
    பல நேரங்களில்
    பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
    முகத்தில் புன்னகை
    முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.////

    சூப்பரான வரிகள் அக்கா! நானும் காத்திருக்கிறேன் மனிதம் தேடி

    ReplyDelete