Sunday, January 04, 2015

முகவரி தேடும் முத்தங்கள்...

பெறுநரற்று
அந்தரத்தில் அலைகிறது
வான் மண்டலமெங்கும்
மெல்லிய முத்தங்கள்.

விசும்பலை
வேட்கையை
அன்பை
ஆசையை அடக்கிய
அட்டைப் பொதிகளுடன்.

காதலன் காதலியின்
பூர்த்தியற்ற வார்த்தைகளை
ஒரு தாயின்
அடிவயிற்றுப் பிரார்த்தனையை
ஒரு முதுமையின் அதீத அன்பை
ஒரு சிறுவனின் வேண்டுதலை
ஒரு இளம்பெண்ணின் இயலாமையை
ஒரு கடிதத்தின் அழுகையை
ஒரு கடவுளின் ஆற்றாமையையும்கூட
முத்தமாக்கி
உருட்டிவிட்டிருக்கலாம்.

ஆதூரத் தழும்புகளடைக்க
ஆதங்கங்கள் தேற்ற
இம்முத்தங்கள் களிம்பாகலாம்.

தனக்கான முகவரியடைய
வேண்டிக்கொள்வதைத் தவிர
வேறென்னதான் செய்யலாம்.

கேட்கிறதா
வெறும் கலயம் துளாவும்
ஒரு குழந்தையின்
அகப்பைச் சத்தமாய்
அலையும்
அம்முத்தங்களின் விம்மல்கள்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. முத்தங்கள் உரியவரை தேடி அடையட்டும்.அன்பு ஆதங்கம் நிரந்த கவிதை. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    ி விரைவில் மகிழ்ச்சி மலரட்டும்.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. முகவரி சரியாக இருந்தால் முத்தங்கள் உரியவரை சென்றடையும் வாழ்த்துக்கள் ஹேமா. சூப்பர்..

    ReplyDelete