Friday, January 02, 2015

இன்னும் ஒரு வருடம்...

வீலென்றழற
பிரசவித்துக்கொண்டது காலம்
இன்னொரு வருடத்தை.

பிரார்த்திக்கிறது
தனிமையும்
அறையின் மௌனமும்
பேரிரைச்சலும்.

பிறழ்வான ஒருவர்
கடலறியா மீன்
நெகிழிமரப் பறவை
உபவாசமிருக்கும் ஏழை
தீராந்திச் சுவரொட்டி
துருவேறிய அக்காலத்தை
விரட்டியடித்திருக்கலாம்.

புது வருடத்தின்
அலுவல்கள் கையழுந்த
நெளிகிறது ரேகைகள்.

இறுதியாய்
கசிந்த வார்த்தைகளில்
உடைபட்டுக் கிடக்கிறது
வாசல்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

  1. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. கவிதை அருமை..வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  3. வீலென்றழற
    பிரசவித்துக்கொண்டது காலம்
    இன்னொரு வருடத்தை// உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் எப்படி தோணுது. நினைக்கும்போதே ஆச்சரியமாக உள்ளது. உங்கள் கற்பனைத்திறனுக்கு என் வணக்கமும் மரியாதையும்..

    ReplyDelete