கொந்துதல்
கொஞ்சுதல்
கௌவுதல் போல
அன்பின் ஆரத்தழுவல்
ஒரு முத்தம்.
ஆர்ப்பரித்து
ஆகாசத்தில் பறக்க
ஏதுமில்லை நமக்கு
கொஞ்சிக்கொள்ளும்
இருவர் தவிர.
தயவு செய்து
எட்டிப் பார்க்காதீர்கள்.
உறையும் குளிரில்
மழை நீர்போல்
இறுகும் இரு தேகத்தில்
ஒரு முத்தம்.
முலை சுரக்கும் தாயின்
முந்தானை
துளைத்துப் பார்ப்பதுபோல்...
கலவியின் உச்சத்தில்
கதவு தட்டி
அழைப்பதுபோல்...
உடை மாற்றும் தனியறையில்
ஒளிந்திருந்து பார்ப்பதுபோல்...
அந்தரங்கமாய்
அனிச்சையாய்
பேசுமொரு மொழியை
அப்பட்டமாய்
போட்டியென்று ஆக்கையில்
கொஞ்சம் அசூசைதான்.
நாகரிகமென்று
நாம் விரும்பும்
ஆங்கில மோகத்தின்
நிட்டூரமது.
முத்தம் தீட்டல்ல திட்ட
ஊட்ட ஊட்ட உயருமன்பின்
ஊட்டச்சத்தது.
முத்தம் தராத் துணையின்
முகம் நிமிர்த்திப் பாருங்கள்
சிலிம்பியிருக்கும்
அல்லது
முறிந்திருக்கும்
முத்தமொன்றங்கு!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
கொஞ்சுதல்
கௌவுதல் போல
அன்பின் ஆரத்தழுவல்
ஒரு முத்தம்.
ஆர்ப்பரித்து
ஆகாசத்தில் பறக்க
ஏதுமில்லை நமக்கு
கொஞ்சிக்கொள்ளும்
இருவர் தவிர.
தயவு செய்து
எட்டிப் பார்க்காதீர்கள்.
உறையும் குளிரில்
மழை நீர்போல்
இறுகும் இரு தேகத்தில்
ஒரு முத்தம்.
முலை சுரக்கும் தாயின்
முந்தானை
துளைத்துப் பார்ப்பதுபோல்...
கலவியின் உச்சத்தில்
கதவு தட்டி
அழைப்பதுபோல்...
உடை மாற்றும் தனியறையில்
ஒளிந்திருந்து பார்ப்பதுபோல்...
அந்தரங்கமாய்
அனிச்சையாய்
பேசுமொரு மொழியை
அப்பட்டமாய்
போட்டியென்று ஆக்கையில்
கொஞ்சம் அசூசைதான்.
நாகரிகமென்று
நாம் விரும்பும்
ஆங்கில மோகத்தின்
நிட்டூரமது.
முத்தம் தீட்டல்ல திட்ட
ஊட்ட ஊட்ட உயருமன்பின்
ஊட்டச்சத்தது.
முத்தம் தராத் துணையின்
முகம் நிமிர்த்திப் பாருங்கள்
சிலிம்பியிருக்கும்
அல்லது
முறிந்திருக்கும்
முத்தமொன்றங்கு!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
முத்தம் தீட்டல்ல திட்ட
ReplyDeleteஊட்ட ஊட்ட உயருமன்பின்
ஊட்டச்சத்தது.
வரிக்கு வரி கலக்கலாய்...
முறிந்திருக்கும் முத்தமொன்றங்கு ... " நச் "
ReplyDeleteஅக்கா நீண்ட நாட்களுக்கு பின் வந்த என்னை ,சிறந்த கவிதையினால் கட்டி போட்டுவிட்டீர்கள் ....