உதவிக்காய்
மூன்றாவது கரமொன்று
தேவையில்லை உனக்கு
என் தலைமுடி பிடித்து
இறுக்கிக் கட்டு
நான்...
நிமிர்ந்தே நிற்கிறேன்.
தருவேன்
ஒரு சிலுவை
அறையத் தேவையான
ஆணிகள் சில.
கொஞ்சம் பொறு
உன் ஒற்றைச் சிறகில்
ஒரு முத்தம்
பச்சை விளக்கொளி
சின்னதாய்
தனிமையில் சேர்த்த
ஞாபகக் குடுவை
இதில்....
பலதும் பத்தும்.
இப்போ தொடங்கு
என்னைக் கொல்ல
இறுதி ஆசை
என்னவென்று
கேட்கமாட்டாயா ?
கேளேன்....
எனக்கு
நீ
எழுதிய கடிதங்களில்
சில வரிகள்
உன் குரலில்
போதும்!!!
குழந்தைநில ஹேமா(சுவிஸ்)
மூன்றாவது கரமொன்று
தேவையில்லை உனக்கு
என் தலைமுடி பிடித்து
இறுக்கிக் கட்டு
நான்...
நிமிர்ந்தே நிற்கிறேன்.
தருவேன்
ஒரு சிலுவை
அறையத் தேவையான
ஆணிகள் சில.
கொஞ்சம் பொறு
உன் ஒற்றைச் சிறகில்
ஒரு முத்தம்
பச்சை விளக்கொளி
சின்னதாய்
தனிமையில் சேர்த்த
ஞாபகக் குடுவை
இதில்....
பலதும் பத்தும்.
இப்போ தொடங்கு
என்னைக் கொல்ல
இறுதி ஆசை
என்னவென்று
கேட்கமாட்டாயா ?
கேளேன்....
எனக்கு
நீ
எழுதிய கடிதங்களில்
சில வரிகள்
உன் குரலில்
போதும்!!!
குழந்தைநில ஹேமா(சுவிஸ்)
ஐயோ...
ReplyDeleteஇதென்ன கொடுமை ஹேமா...
ஆனாலும் அசத்தல்.
உன் குரல் என் காதுகளில் எப்போதுமே ஒலித்துக்கொண்டிருக்கும்
ReplyDeleteநான் சாவதற்கு பல நூற்றாண்டுகளுமாகலாம்
காதலின் கடைசி ஆசை மரணமா?
ReplyDeleteஎனக்கு
ReplyDeleteநீ
எழுதிய கடிதங்களில்
சில வரிகள்
உன் குரலில்
போதும்!!!
முடிவில் வெளிப்பட்டே விட்டது ஆழ்மனம் !
முழுக் கவிதையும் கிளாஸ் !
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! உண்மையிலேயே அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete