Thursday, October 30, 2014

பற்று...

இன்னும் திட்டியே
முடிக்கவில்லை
ஏன் முறைக்கிறாய்
கை ஓங்குகிறாய்.

எண்ணத்தைச் சொல்வதற்கும்
உன்னைத் திட்டுவதற்கும்
உரிமையில்லாமல்
ஏன் நான் உன்னோடு
போறேன்.... போடா
போ.......

ம்......ம்
போகமாட்டேன்
உன்னையும் விடமாட்டேன்
வாடகை மனைவியல்ல
நான்..........
இப்படித்தான்.

என்னோடு இரு
என் வார்த்தைகளை
இதுதான்
இதுதானென
கணக்கிலெடுத்து
இரவில் கேட்டு வை
முத்தமாய்த் தீர்த்துவிடலாம்.

இறுதியென முடிவெடுத்தால்
என் முட்டாள் மூதேவி
நீ....தான்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

7 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ம்......ம்
    போகமாட்டேன்
    உன்னையும் விடமாட்டேன் // ஜென்ம பந்தம்

    ReplyDelete
  3. மூன்றாவது கண்
    என்னில் ..... நீ
    உன்னை எப்படி விடமுடியும் ....

    ReplyDelete
  4. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ம்...ம். எப்படி விடமுடியும்?

    ReplyDelete
  6. முட்டாள்,மூதேவி........ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete