புத்தனின் போதனைகளை
ஒன்றொன்றாய்
சொல்லிக்கொண்டிருந்த உன்னிடம்
ஒரு மாற்றம் திடீரென்று.
அவகாசம் கேட்ட நீ....
போதனைகளில் இல்லாத ஒன்றை
உனக்காகவும் எனக்காகவும்
ஒப்புவிப்பதாய்ச் சொன்னாய்.
ஆசைகளே இல்லாத
வாழ்வைச் சொன்ன
புத்தனின் எதிர்மறையாய் இருந்தது
நீ உரியும் உடை.
வாழ்வை
அனுபவிக்கத் தெரியாத புத்தனென
முணுமுணுத்துக்கொண்டே...... !!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
ஒன்றொன்றாய்
சொல்லிக்கொண்டிருந்த உன்னிடம்
ஒரு மாற்றம் திடீரென்று.
அவகாசம் கேட்ட நீ....
போதனைகளில் இல்லாத ஒன்றை
உனக்காகவும் எனக்காகவும்
ஒப்புவிப்பதாய்ச் சொன்னாய்.
ஆசைகளே இல்லாத
வாழ்வைச் சொன்ன
புத்தனின் எதிர்மறையாய் இருந்தது
நீ உரியும் உடை.
வாழ்வை
அனுபவிக்கத் தெரியாத புத்தனென
முணுமுணுத்துக்கொண்டே...... !!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
அட்டகாசம்.
ReplyDeleteபாவம் புத்தன் வாழ்வை தொலைத்தவன் தான்.
ReplyDeleteவாழ்வை
ReplyDeleteஅனுபவிக்கத் தெரியாத புத்தனென // wow !
புத்தனைச்சாடலா?
ReplyDeleteகாமுகனைச்சாடலா??
புரியவில்லை?
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
படித்தேன்..
இல்லை இல்லை
புத்தரைப்போல் நடிக்கும்
கொத்துகின்ற வேடதாரி பாம்புகளைச்சாடுகிறீர்கள்
என்று புரிகிறது
சரியோ??
DrBALA SUBRA MANIAN .....புரிதல் உங்களைப் பொறுத்ததே டாக்டர் !
ReplyDelete