Friday, June 20, 2014

கரையா வண்ணம்...

இப்போ...
சிறகுகளை ஒடுக்கி
வண்ணம் ஊற்றப்பட்டாலும்
வானவில்லாய்த்தான் இருந்தேன்
வாழ்வு எப்படியாயிருந்தாலும்.

பெண்ணைப்போற்றும்
பேச்சுக்களை மட்டுமே
நாடகமாய் வைத்திருக்கும்
என்னிடம்
நிலாவும் மழையும்
கோபம் கொண்டிருக்கிறது.

இனி
நான் உதிர்வதை
என் திசைக்காற்றே
அறிந்துவைத்திருக்கிறது.

இப்போதைக்கு
உயிரிறுக்கி வைத்திருக்கும்
இவ்வண்ணப்பூச்சின் இறுக்கம்
சிறையானாலும் கவசமாய்.

அதுவரை கவிதையோ
கதையோ எழுதுங்கள்
என் வாழ்வின்
பாவம் தீர.

உயிரை உறுதிப்படுத்த
உரையாடிக்கொண்டிருப்பேன்
நானும் அவ்வப்போது!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

  1. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
    http://blogintamil.blogspot.in/2014/06/kadal-kanthum-valarum-thamizh.html

    ReplyDelete
  2. வாழ்க்கை அனுபவத்தை கவிதையாக்கிய விதம் சிறப்பு..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..

    http://pandianinpakkangal.blogspot.com

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...!
    அழகிய கவிதை ரசித்தேன் ...!

    ReplyDelete