Thursday, May 22, 2014

குட்டிப் ‘பூ’...

விலகி வழிவிடுங்கள்
வேலைகளுண்டு எனக்கும்.

பூக்கள் வளர்க்கிறேன்...

வண்ணம் தீட்ட
கடனாய் தந்தான்
இறைவன்
இரண்டு பென்சில்.

சீவிக்குறைத்த
பென்சிலுக்காய் கோபித்து
சண்டையிட்டு
பின்னிருந்து கண்கட்டி
சொல்லு நான் யாரெனக் கேட்கும்
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
முத்தம் கொடுத்து...

பூக்கள் எடுக்கலாம்
முத்தம் போட்டு
எச்சில் உண்டியலுக்குள்
முட்டும் பூக்களின்
வண்ணம் ஒட்டினால்
பொறுப்பும் நானில்லை.

வேகமோடும் தெருச்சூரியனாய்
இறப்பும் பிறப்பும் ஒன்றாய்
கையேந்தும் கைகளுக்கு
சில்லறை எறியக்கூட
நேரமற்ற உங்களுக்கு
நானும் பூக்களும் ....??? !!!

Photo Barbara Graf-Weinland's Son from Germeny

ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. சில்லறை எறியக்கூட
    நேரமற்ற உங்களுக்கு
    நானும் பூக்களும் .../ஹீ இப்ப சில்லறைகூட மதிப்புக்கூடியநிலை கவிதாயினி!

    ReplyDelete
  2. அவசர உலகத்தின் இழப்புக்களின் ரசனைபாடும் கவிதை அழகு குட்டிப்பையன் போல!

    ReplyDelete
  3. வணக்கம்
    ரசிக்கவைக்கும் வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஒரு பூவே பூவளர்க்க புறப்பட்டதே..!

    ReplyDelete