வண்தமிழ் விறலோன்
கொற்றத்து மாறா
புண்கொண்ட மனதோள்
பறைதட்டி வேண்டுவது....
பூந்தண் பொறைப்புகழ் வேண்டா
நண்ணார் வானுரை வேண்டா
விண்கடல் விடர்ச்சிலை வேண்டா
வெண்குடை சாமரம் வேண்டா
உண்ணத் தமிழ் தா
பண்ணொடு பாக்கள் தா
கொண்ட நன்கல உலகு தா
நாண்டு சாவும் நேர்மை தா
கண்புகும் ரௌத்திரம் தா
விண்ணேகும் வரமும் தா
நீலமேனி வாலிழை பாகத்து
பனிமுல்லை மலரோனே
அருள் தா எனக்கு
நின் நிழற்கீழ் திருவடி நீழலில்
இருதாள் அமர!!!
ஹேமா(சுவிஸ்)
யாரங்கே.. ஹேமாவுக்கு ஒரு லிடர் அருள் பார்சல்..
ReplyDeleteஹாஹாஹா.... அப்பாஜி.... நானே ஒரு சவாலுக்காக கஸ்டப்படு முதல்முறையா எழுதினது..... கலாய்க்காதேங்கோ :)
ReplyDeleteவேண்டும் வரத்தை முருகன் தரட்டும்!
ReplyDeleteஅட...................இறவன் தாள் பணிந்து...முதல் பா....வெண்பா....அருட்பா........இன்னுமென்ன பா?
ReplyDelete