Saturday, February 08, 2014

பிரயணம்...

உன்னால்...
நேற்றிரவு விதைக்கப்பட்ட
விதைகளின் பலன்களை
இப்பகலில்
பிடுங்கிக்கொண்டிருக்கிறேன்.

நேற்று நீ...
விதைத்தபோது
உன் விரல்களைப்
பற்றிக்கொண்டிருந்தது
நம் காதலும்
களைப்பும்.

முளைத்த
செங்காந்தள் பூவிதழிலின்
தேன் சொட்டுக்களை
பருகிக்கொண்டிருந்தாய்
உயிர் கிழித்து.

மிண்டி மிகுந்த
மேண்டலின் இசையில்
மோகத்திமிர் ஸ்வரங்களை
மீட்டவும்
பின் பசியடக்கவும்
கற்றிருக்கிறாய்.

திக்கற்றுத் தவித்த
இவ்வுயிரின் வாதை
இப்போ
யாரோடுமில்லை
ஆனால் தனித்துமில்லை!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. திக்கற்றுத் தவித்த
    இவ்வுயிரின் வாதை
    இப்போ
    யாரோடுமில்லை
    ஆனால் தனித்துமில்லை!!!//ம்ம் காதல் சேர்ந்தே இருக்கும்.

    ReplyDelete
  2. நேற்று நீ...
    விதைத்தபோது
    உன் விரல்களைப்
    பற்றிக்கொண்டிருந்தது
    நம் காதலும்
    களைப்பும். //வரிகள் தேடிப்பிடிக்க கவிதாயினி ஹேமா போல யார்.

    ReplyDelete
  3. அப்பப்பா..
    என்ன ஒரு வார்த்தை விளையாட்டு..
    மிகவும் அருமை சகோதரி..

    ReplyDelete
  4. அருமையான கவிதை.
    //உன் விரல்களைப்
    பற்றிக்கொண்டிருந்தது
    நம் காதலும்
    களைப்பும்//


    மிகவும் ரசித்த வார்த்தைகள்

    ReplyDelete