எப்படி இணைந்தாய்
என்னோடு நீ
உறவின் பாதையை செப்பனிடும்
ஒரு கைதேர்ந்த ஊழியக்காரனாய்.
கை கோர்த்து
எத்தனை பக்குவமாய்
வழிநடத்த முடிகிறதுன்னால்
பாதை மாறாமலும்
தடுமாறாமலும்.
கொஞ்சம் பிசகினாலும்
உறவின் அர்த்தமே
மாறுமென
ஆதி மனிதன்
கதைசொல்கிறாய்.
உன்னை
சந்திப்பதற்காகத்தானோ என்னவோ
சில துரோகங்களை
நானே உண்டாக்கியிருப்பதாக
நம்பிக்கை மனிதர்கள்
சொல்கிறார்கள்.
உடைத்தெறிய
நமக்கான காரணங்கள்
கிடைக்கும்வரை
ஒத்த உணர்வலைகள்
உயிரைச் சுற்றும்.
நரமிருகங்களறிவதில்லை
ஒருமுனையும்
மறுமுனையும்
பிரிவையறியாதென்று...!!!
ஹேமா(சுவிஸ்)
என்னோடு நீ
உறவின் பாதையை செப்பனிடும்
ஒரு கைதேர்ந்த ஊழியக்காரனாய்.
கை கோர்த்து
எத்தனை பக்குவமாய்
வழிநடத்த முடிகிறதுன்னால்
பாதை மாறாமலும்
தடுமாறாமலும்.
கொஞ்சம் பிசகினாலும்
உறவின் அர்த்தமே
மாறுமென
ஆதி மனிதன்
கதைசொல்கிறாய்.
உன்னை
சந்திப்பதற்காகத்தானோ என்னவோ
சில துரோகங்களை
நானே உண்டாக்கியிருப்பதாக
நம்பிக்கை மனிதர்கள்
சொல்கிறார்கள்.
உடைத்தெறிய
நமக்கான காரணங்கள்
கிடைக்கும்வரை
ஒத்த உணர்வலைகள்
உயிரைச் சுற்றும்.
நரமிருகங்களறிவதில்லை
ஒருமுனையும்
மறுமுனையும்
பிரிவையறியாதென்று...!!!
ஹேமா(சுவிஸ்)
நரமிருகங்களறிவதில்லை எதையுமே...
ReplyDeleteமிருகங்கள் எங்கே அறியும் தூய அன்பை.
ReplyDeleteபொருள் புதைந்த வரிகள்!///உடைத்தெறிய
ReplyDeleteநமக்கான காரணங்கள்
கிடைக்கும்வரை..........................உம்....உம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
// உன்னை
ReplyDeleteசந்திப்பதற்காகத்தானோ என்னவோ
சில துரோகங்களை
நானே உண்டாக்கியிருப்பதாக
நம்பிக்கை மனிதர்கள்
சொல்கிறார்கள்.//
போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
பொருட்படுத்தாமல்
போனாலே சிறக்கும்
மேலும் மேலும்
சிறகடித்து பறக்கும்
நாம் கொண்ட நட்பு...
அருமை ஹேம்ஸ்..
ReplyDeleteஉள்ளத்தில் ஊரும் உணர்வின் வெளிப்பாடு! சோகம் மின்னினாலும் கவிதையின் வேகம் குறையவில்லை!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎப்போதும்போலவே நீயும்
ReplyDeleteஎப்போதும்போலவே நானும்
மனசு மட்டும்தான்...
கவிதையில் சோகம் இழையோடினாலும் ”முத்து” வரிகள்தான் அவைகள்..