என் பற்கள் பிடுங்பட்ட நிலையில்
என் தமிழைக் காவுகிறது
பெருங்கடலொன்று
உன்னை நீயே காத்துக்கொள்ளெனவும்
உன் இருப்புக்களை
நான் விட்டு வைத்திருக்கிறேனெனவும்
சொல்லிக் கடக்கிறது
ஈவு இரக்கமில்லாமல்.
என் இருப்பு என்னைச் சாகடிக்க
என் தமிழை
காவிச் செல்லும் கடலை
தீராச் சாபக் கற்கள்
கொண்டெறிந்துகொண்டிருந்தோம்
பலர் கூடி.
அலைகள் கண்டறியும்
இருள் சுமக்கும் இரவுமறியும்
கடலின் நாவுகள் ஓர் நாள் சிதையும்
என் வதையில் நான் தோற்கமாட்டேன்
கடலும் வதையும்
பக்குவப்படாயிற்று எனக்கு !
ஹேமா(சுவிஸ்)
என் தமிழைக் காவுகிறது
பெருங்கடலொன்று
உன்னை நீயே காத்துக்கொள்ளெனவும்
உன் இருப்புக்களை
நான் விட்டு வைத்திருக்கிறேனெனவும்
சொல்லிக் கடக்கிறது
ஈவு இரக்கமில்லாமல்.
என் இருப்பு என்னைச் சாகடிக்க
என் தமிழை
காவிச் செல்லும் கடலை
தீராச் சாபக் கற்கள்
கொண்டெறிந்துகொண்டிருந்தோம்
பலர் கூடி.
அலைகள் கண்டறியும்
இருள் சுமக்கும் இரவுமறியும்
கடலின் நாவுகள் ஓர் நாள் சிதையும்
என் வதையில் நான் தோற்கமாட்டேன்
கடலும் வதையும்
பக்குவப்படாயிற்று எனக்கு !
ஹேமா(சுவிஸ்)
வணக்கம்
ReplyDeleteகவிதை வரிகள் சூப்பர்....வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇருள் சுமக்கும் இரவுமறியும்
ReplyDeleteகடலின் நாவுகள் ஓர் நாள் சிதையும் //சிதைய வேண்டும் நம் தமிழ் வாழ !!கத்திரமான சொல்லீடு கவிதையில் வாழ்த்துக்கள்!