நம்பிக்கைகளை நெரித்துக் கொன்று
தின்றுவிட்டு ஏப்பம் விடும் உலகம்
தின்னும் உணவென சமைத்தெடுக்கிறான்
மனிதன் மனிதத்தை !
பெயர் குறித்த மரங்களிடை
பெயரில்லாப் பெருவெளியில்
பெயரற்று வருகிறோம்
பெயர்களுக்குள் நுழைந்துகொள்கிறோம்
பெயர்களை விட்டுச் செல்கிறோம்
பறவைகளுக்கும்
பாம்புகளுக்கும்
பூச்சிகளுக்கும்
பெயரிருக்குமா என்ன?!
சில நிமிடங்களில்
நடந்தேவிடுகின்றன
நாமறியா நிகழ்வுகள்
பின்வரும் விளைவறியாமல்
எதிரியின் துப்பாக்கியை
செயலிழக்க வைத்த
துருப்பிடிக்கா
துப்பாக்கி இவள்
என்னிடமும் உண்டு
ஒன்று
அவர்களிடமும்
ஜனநாயகம் வாழ
வாழ்த்துங்கள் ! (பெண்போராளி தமிழினிக்காக)
''ம்'' ல் தொடங்கி
''ம்'' முடிகிறது
காதலும் வாழ்க்கையும் !
கூடுகளோடு சில பறவைகள்
மரங்களைத் தேடியபடி !
அசையும்
சுவர் மணிக்கூட்டின்
பெண்டிலம்கூட
எரிச்சலாயிருக்கிறது
கருவறை அமைதி
தேவையெனக்கிப்போ !
இழப்புக்களின் பின்
மனம் போதுமென வறண்டாலும்
இன்னொரு அன்பால் ஈரமாகிக்கொள்கிறது
அடுத்த இழப்பிற்கான ஆயத்தத்தோடு
இதயமும் வாழ்வும் !
ஹேமா(சுவிஸ்)
vaarthaikal!
ReplyDeletevarudalaiyum-
valikalaiyum-
tharukirathu...!
மனதை பிசையும் கவிதை வரிகள்...!
ReplyDelete''ம்'' ல் தொடங்கி
ReplyDelete''ம்'' முடிகிறது
காதலும் வாழ்க்கையும் !//நிதர்சனமான வரிகள் கவிதாயினி.
கூடுகளோடு சில பறவைகள்
ReplyDeleteமரங்களைத் தேடியபடி ! Nice,,,